Friday, February 13, 2009

காதலர் தினம் இந்தியாவில் மாபெரும் வெற்றி.

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு பெரும் இடைஞ்சல் கொடுத்ததாக வந்த செய்தியையும் மீறி காதலர் தினம் மாபெரும் வெற்றி.

காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சேனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காதலர் தின ஆதரவாளர்கள் போட்டி போட்டு பிங்க ஜட்டி வாங்கினர்,பல இடங்களில் பிங்க் ஜட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.பிங்க ஜட்டியை வாங்கி சேனா தலைமையிடத்திற்கு அனுப்ப கூரியர் சர்வீஸ் நிறுவணங்கள் இரவு பகலாக வேலை செய்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.புடவை வியாபாரம் அமோகமாக இருக்கும் என ஜவுளிக்கடை அதிபர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஜட்டிக்கம்பெனி,கூரியர் சர்வீஸ் கம்பெனி,புடவைக்கம்பெனி ஸ்டாக்குகள் திங்கள் அன்று உச்சத்தில் பறக்கும் என ஸ்டாக் மார்க்கெட் ஜோசியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

மொத்தத்தில் காதலர் தினம் வெற்றி பெற்றதாக வியாபாரிகள் அறிவிப்பு.

20 comments:

நசரேயன் said...

உலகப்போருளாதாரத்தை தூக்கி நிறுத்திய காதலர் தினம் வாழ்க

இராகவன் நைஜிரியா said...

காதலர் தினத்தால் இப்படி எல்லாம் ஒரு பிரயோசனம் இருக்குங்களா?

உலகப் பொருளாதாரம் உச்சத்திற்கு போயிடப் போகுதுங்க..

வாழ்க காதலர் தினம், வளர்க காதல்

பழமைபேசி said...

காதலர் தினம் வாழ்க, வாழ்க, வாழ்க!!!

அது சரி(18185106603874041862) said...

என்ன ஒரு கோயின்ஸிடன்ஸ்....ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் பதிவு போடுறேன்...நீங்களும் ரெண்டு வாரமா காணாப் போயிட்டீங்க...இப்ப பதிவு எழுதி இருக்கீங்க...

அது சரி(18185106603874041862) said...

//
காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.
//

ஆண்களுக்கு புடவை குடுக்குறதுல்ல தப்பில்ல...அவங்க தங்கமணிங்களுக்கு குடுத்துரலாம்ல :0))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உலகப்போருளாதாரத்தை தூக்கி நிறுத்திய காதலர் தினம் வாழ்க//

repeateyyyyyyy

அத்திரி said...

பிங்க் ஜட்டி....!!!!!!!!!!!!!!1

சந்தனமுல்லை said...

எங்க காணாம போய்ட்டீங்க??

நாமக்கல் சிபி said...

பொருளாதார முன்னேற்றம்!

நல்ல விஷயம்தானே!

அமுதா said...

:-))

கொண்டாடப்படும் எல்லா தினங்களுமே வியாபாரிகளின் வெற்றிக்குதானே!!!

தமிழ் அமுதன் said...

காதலில்? வியாபாரம்? வெற்றி ?
நல்லது!!!

தாரணி பிரியா said...

அப்ப தினமும் கொண்டாடா சொல்லறீங்களா :)

Anonymous said...

Please sign this petition and FWD it

Appeal to Security Council to End the Humanitarian Crisis in Sri Lanka

http://www.petitiononline.com/sgsl159/petition.html

வேத்தியன் said...

ச்சே.. நாமளும் இந்த நேரத்துல ஒரு துணிக்கடையை ஆரம்பிச்சிருக்கலாம் போலிருக்கே !!!
:-)

புல்லட் said...

:)))))

ராஜ நடராஜன் said...

வாழ்க!வாழ்க! காதலர் தினம்.

வில்லன் said...

அது சரி said...
//
காதலர் தினத்தன்றும், மற்றும் ஜட்டி அனுப்புவர்களுக்கும் அவர்கள் ஆண்களாக இருந்தாலும் கூட புடவை வழங்கப்படும் என்ற சேனாவின் அறிவிப்பின் படி அவர்களும் புடவை கொள்முதலில் இறங்கியுள்ளனர்.
//
ஆண்களுக்கு புடவை குடுக்குறதுல்ல தப்பில்ல...அவங்க தங்கமணிங்களுக்கு குடுத்துரலாம்ல :0))//

ச!!!!!!!!!!!!!!!!!! இந்தியால இல்லாம போயிட்டேனே இல்லன்னா ஒரு பிங்க் கலர் ஜட்டி அனுப்பி ஒரு பொடவ வாங்கி ஏன் தங்கமணிக்கு கொடுதுருபேனே!!!! ஒரு பொடவ செலவு மிச்சம் ஆகியிருக்கும். எல்லாம் போச்சு.

வில்லன் said...

என்ன குடுகுடுப்பை ரொம்ப நாளா ஆள காணும். நல்லா தானா இருக்கீங்க. இல்ல எதாவது வீட்டுல கலவரம் நடந்து நசரேயன் மாதிரி ஆஸ்பத்திரிக்கு போயீ அதையே ஒரு பதிவ போடபோரிங்களா !!!!!!!!!!!!!!!!!!

குடுகுடுப்பை said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

உலகப்போருளாதாரத்தை தூக்கி நிறுத்திய காதலர் தினம் வாழ்க

நசரேயனை வழிமொழிகிறேன்.