Monday, January 19, 2009

டியூசன் டீச்சர் விமர்சனம்

பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.

நான் கிராமத்தில் 10 வகுப்பு வரை படித்து வளர்ந்தவன்.மேல் நிலைப்பள்ளி படிப்பிற்கு பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு மிகப்பிரபலமான பள்ளிக்கு சென்றேன். நான் எடுத்தது கணிதப்பிரிவு.

+1 படிக்கும்போது இரண்டு மாதங்கள் கழித்து அங்குள்ள ஆசிரியர்கள் குறிப்பாக வேதியியல்,இயற்பியல் ஆசிரியர்கள் தங்களிடம் டியூசன் வைக்க சொல்லி மறைமுக வேண்டுகோள், அதுவும் +2 பாடத்திற்கு இப்போதே டியூசன் சேராவிட்டால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்ற பயம் மாணவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. கணித ஆசிரியர்கள் மிரட்ட முடியாது, ஆனால் வகுப்பு ஆசிரியர் நன்றாகவே கணிதம் எடுத்தாலும் நகரில் உள்ள பிரபல கணித டியூட்டர்களிடம் கூட்டம் அதிகமே அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும் டியூசன் வைக்கப்பட்டேன். + 1 படிக்கும்போது +2 பாடம் நடத்துவார்கள். என்ன கொடுமை இது ?.

+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எனக்கும் வேதியியல் ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தது, டியூசன் செல்வதை நிறுத்திவிட்டேன்.

தேர்வு நேரத்தில் டைபாய்டு வந்ததால் +2 பொதுத்தேர்வு எழுதவில்லை, பின்னர் தனித்தேர்வராக அதே பள்ளியில் வேதியியல் செயல்முறை தேர்வு எழுதும்போது டியூசன் காசெல்லாம் முழுசா கட்டினியா எனவும் கேட்டார். வந்தவரை கட்டினேன் என்றேன்.ஆனால் அதற்காக மதிப்பெண்ணெல்லாம் குறைத்ததாக தெரியவில்லை.

இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.

இதற்கு காரணம் யார்? நமது கல்வி முறையா? பெற்றோர்களா? எதற்காக பின்னர் பள்ளிக்கூடங்கள் ?

ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளி விளக்கு என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. இந்த நேரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

விமர்சன கால மறுபதிவு

28 comments:

நாமக்கல் சிபி said...

அது சரி!

நாமக்கல் சிபி said...

நினைச்சேன்!

நாமக்கல் சிபி said...

//பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.//

ஒரு வெயிட்டான விஷயத்துக்கு இப்படி ஒரு பில்ட் அப் அவசியமா?

பழமைபேசி said...

//விமர்சன கால மறுபதிவு //

:-o)

அது சரி(18185106603874041862) said...

அதுல பாருங்க...ஹிந்தி டான் படத்தை ரீமேக் பண்ணி ரஜினி நடிச்சி பில்லா வந்துச்சி...அப்புறம் ரஜினியோட பில்லா நடிச்சி அஜீத் நடிச்ச பில்லா வந்துச்சி...

அது மாதிரி மறு பதிவையே மறு பதிவு போட்றது நீங்க தாங்கோ...ஆனா எம்சியாரு படம் மாதிரி எப்ப ரீரிலீஸ் பண்ணாலும் நல்லா தான் இருக்கு :0))

குடுகுடுப்பை said...

Namakkal Shibi said...

//பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.//

ஒரு வெயிட்டான விஷயத்துக்கு இப்படி ஒரு பில்ட் அப் அவசியமா?//

நீங்க சொல்றது சரிதான்.ஆனாலும் ஹிஹீஈ

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

//விமர்சன கால மறுபதிவு //

:-o)
ஹிஹிஹ்

குடுகுடுப்பை said...

அது சரி said...

அதுல பாருங்க...ஹிந்தி டான் படத்தை ரீமேக் பண்ணி ரஜினி நடிச்சி பில்லா வந்துச்சி...அப்புறம் ரஜினியோட பில்லா நடிச்சி அஜீத் நடிச்ச பில்லா வந்துச்சி...

அது மாதிரி மறு பதிவையே மறு பதிவு போட்றது நீங்க தாங்கோ...ஆனா எம்சியாரு படம் மாதிரி எப்ப ரீரிலீஸ் பண்ணாலும் நல்லா தான் இருக்கு :0))//

நல்லாதான் வே இடித்துரைக்கிறீர். சும்மா மறுபதிவு நாலு பேரு படிச்சு பலன் அடையட்டும்னு..

வில்லன் said...

எல்லா டீச்சரும் அப்படி இல்ல சாமி. செல நல்லவங்களும் இருக்காங்க.

என்னோட ஸ்கூல்ல (எங்க கிராமத்துல) இன்னும் ஸ்கூல் முடிஞ்சப்புறமும் வச்சு நொங்க கலட்டிடுவாங்க. பன்னிரெண்டாவது வகுப்பு வர இருக்கு. காலேல எட்டு மணிக்கு வந்துடனும். எல்லா புள்ளைங்க டீச்சர்களும் கூட. கட்டாயம் அஞ்சற வர வகுப்பு நடக்கும். அப்புறம் பசங்க வீட்டுக்கு போயிட்டு ஆறரைக்கு ஸ்டடிக்கு வரணும். ஸ்டடி எட்டற வர. அப்புறம்தான் பசங்க எல்லாம் வீட்டுக்கு போக முடியும். பொண்ணுங்கலுக்கு ஆறு மணியோட சரி. அப்புறம் அவங்க வீட்டுக்கு போய்டலாம்.

பரீட்சை நேரம் தூங்க கூட விடமாட்டாங்க. ஆனா பரிட்ச அன்னைக்கு எல்லாரும் சீகிரமே படுதுரனும்.

அப்புறம் பரிச்சைக்கு முன்னால (அதாங்க கடைசி நிமிஷம்) யாருமே படிக்ககுடது. ஏன்னா கடைசி நிமிசத்துல படிச்சா எல்லாமே கொளம்பி போகும்னு. நான் இத கடேசி (MCA) வர கடைபுடிசேன்.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...

நல்லாதான் வே இடித்துரைக்கிறீர். சும்மா மறுபதிவு நாலு பேரு படிச்சு பலன் அடையட்டும்னு..
//

ச்சேசே...அப்படில்லாம் இல்லீங்ணா...ச்சும்மா :0)))

அது சரி(18185106603874041862) said...

அத விடுங்க...அந்த புது டவுசர் பதிவு எங்க போச்சி??

நசரேயன் said...

மலையாள டியூஷன் டீச்சர் எப்ப வரும்?

நசரேயன் said...

டவுசர் பதிவை காக்க தூக்கிட்டு போயிடுச்சா?

வில்லன் said...

//டவுசர் பதிவை காக்க தூக்கிட்டு போயிடுச்சா??//

குடுகுடுப்பை உம்ம சும்மா விடமாட்டேன். ஏன்னா நான்தான் உம்மோட டவுசர் பதிவுக்கு மொத மற்றும் ரெண்டாவது பின்னுட்டம் போட்டேன். ஒழுங்கு மரியாதையா அத திரும்ப என்னோட பின்னுட்டதோட போட்டுரும் ஆமா. இல்ல நான் கொலைகாரனா மாறிடுவேன்.

வில்லன் said...

டவுசர் பதிவு திரும்ப வரும் வரை ஓவொரு அறை மணி நேரத்துக்கு ஒருமுறை குரல் எழுபிட்டே இருப்பேன்.

நீதி கேட்டு நெடும் கூவல்

கூவல் 1

வில்லன் said...

ஐயேய்யோ குடுகுடுப்பை டவுசர் பதிவு எங்கப்பா.

வில்லன் said...

we want டவுசர் பதிவு

வில்லன் said...

எங்கள் உணர்வுகளை ஏற்று மீண்டும் பதிவை அப்படியே போட்ட குடுகுடுப்பையாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//வில்லன் said...
we want டவுசர் பதிவு
//

சல்லடங் கிழிஞ்ச கதை வேணும்!

KarthigaVasudevan said...

//இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை//

டியூசன்னா என்ன குடுகுடுப்பை அண்ணா? இது ஏதோ பியூசன் மாதிரி இருக்குமோ?
நாங்கல்லாம் டியூசனே போனதில்லையாக்கும்!!!
உங்க விமர்சனத்துக்கு என்னோட நேர்மையான பதில் டியூசன் என்பது பத்தாம் வகுப்பிலிருந்து மரபாக்கப் பட்டு விட்ட ஒரு விஷயம்.கை விட முடியாது.புலி வால் கதை தான்.

கோவி.கண்ணன் said...

நான் தனிப்பயிற்சி (டுயுசன்) எடுத்துக் கொண்டதே இல்லை

தமிழன்-கறுப்பி... said...

அது சரி!...

சந்தனமுல்லை said...

உஙக ஆதங்கம் சரியே! எங்க பக்கத்துவீட்டு பையன் முதல் வகுப்புதான், ஆனா அதுக்கே ட்யூஷன்! நான் +2 படிக்கும்போது காலையிலே ரெண்டு ட்யூஷன், மாலயில் ஒரு ட்யூஷன். அதுவும் ஹோல் க்ளாசே ட்யூஷன் போகும்!!

சந்தனமுல்லை said...

உண்மையி, ட்யூஷந்னாலேதான், நான் இந்தளவிற்காவது மதிப்பென் எடுத்தேன்னு வைங்க..!! ஆனா, பள்ளியைவிட கூடதல் அக்கறையோடவும், அங்கே நடத்தறகுக்கு முன்னாடியே போர்ஷ்ன்கள் இங்கே முடிக்கறதானலும், நல்ல பயன் இருந்துச்சு! அந்த ஆசிரியர்களுக்கெல்லாம், இப்போ சல்யூட்!

ரவி said...

நான் பானுபிரியா நடித்த திரைக்காவியம்னு நினைச்சில்ல உள்ள வந்தேன்.. ??

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வில்லன்
நசரேயன்
பழமைபேசி
மிஸஸ்.டவுட்
கோவி.கண்ணன்
தமிழன் கருப்பி
சந்தனமுல்லை
தமிழிஷ்(செந்தழல்) ரவி

வில்லன் said...

// செந்தழல் ரவி said...
நான் பானுபிரியா நடித்த திரைக்காவியம்னு நினைச்சில்ல உள்ள வந்தேன்.. ??//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அதென்ன தொடர்பு பானுபிரியாவுக்கும் டியூசன் டீச்சர்ருக்கும். என்ன உள் அர்த்தம் தெரிஞ்சாவனும்

venkatx5 said...

தலைவா.. எனக்கும் இப்படித்தான் நடந்துச்சு.. +1,+2-ல டியூஷன் வர சொல்லி மிரட்டுனாங்க.. நானும் அப்படி போய்த்தான் படிச்சேன்.. ஸ்கூல்ல நடத்தறது புரியலைன்னா டியூஷன் போலாம் தப்பில்ல.. பள்ளி ஆசிரியர்கள் நல்லா பாடம் நடத்தினா யாருக்கும் டியூஷன் தேவை இல்ல..
உங்க கேள்விக்கு என்னோட "பதில் ஒழுங்காக பாடம் எடுக்காத பள்ளி ஆசிரியர்களே"..
ஒரு நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க மாப்பு..