Thursday, January 15, 2009

புதிய பறவை விமர்சனம்.

வில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் நண்பர் ஒருவர் சில சிவாஜி/கமல்ஹாசன் படங்களின் டிவிடி கொடுத்தார். அதில் புதியபறவையும் ஒன்று, நிறைய பேர் புதியபறவை நல்ல படம் என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் பார்த்ததில்லை.

இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது, ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை நிரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.

பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.

சரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.

மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.

வந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவி அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.

எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.

இந்த விமர்சனத்தை பதிவர் பழமை பேசிக்கு சமர்ப்பிக்கிறேன்.விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு புதிய குருவி என்ற பெயரில் வந்தால் மீண்டும் விமர்சனம் எழுதுவோம்.

28 comments:

நசரேயன் said...

அண்ணன் பழமைபேசி வாழ்க, விமர்சனம் அருமை.

நசரேயன் said...

புதிய குருவி க்கு நானும் விமர்சனம் எழுதுவேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தம் அடிக்கற ஸ்டைல்ல அவர்தாங்க ஃபர்ஸ்ட்.

அப்புறம்தான் குரு குருவி எல்லாம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு//


அது சிவாஜி பிக்சர்தான்........


நடந்தாலும் ஆச்சரிய பட ஒன்றும் இல்லை...........

துளசி கோபால் said...

அருமையான படம்.

பாடல்கள் எல்லாமே தெளிவாப் புரியும்:-)))

புதுக்குருவி வந்ததும் கட்டாயம் பதிவு போடுங்க. அதைப் படிச்சுட்டுத்தான் பார்க்கலாமா, வேணாமான்னு முடிவு செய்வேன்!

பழமைபேசி said...

Anne just miss and reached Charlotte safe. Glad I did not go to Ny.otherwise I aid have tasted Hudson water!

குடுகுடுப்பை said...

செய்தி பாத்தேன் வியாழன் அப்படின்னோட உங்க ஞாபகந்தான் வந்தது.நல்லவேளை உயிர் ஆபத்து ஒன்றும் இல்லை.

நசரேயன் said...

/*பழமைபேசி said...
Anne just miss and reached Charlotte safe. Glad I did not go to Ny.otherwise I aid have tasted Hudson water!
*/
அண்ணன் நிறைய தொண்டு செய்ய வேண்டிய இருக்கு, அவருக்கு ஏதும் ஆகாது

பழமைபேசி said...

//வில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் //

யார்ப்பா எங்க அண்ணனை உசுப்பி விட்டது?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
செய்தி பாத்தேன் வியாழன் அப்படின்னோட உங்க ஞாபகந்தான் வந்தது.நல்லவேளை உயிர் ஆபத்து ஒன்றும் இல்லை.//

//நசரேயன் said...
/*பழமைபேசி said...
Anne just miss and reached Charlotte safe. Glad I did not go to Ny.otherwise I aid have tasted Hudson water!
*/
அண்ணன் நிறைய தொண்டு செய்ய வேண்டிய இருக்கு, அவருக்கு ஏதும் ஆகாது
//

நன்றிங்க.... என்ன ஒரு திறமை? எல்லாரையும் பாராட்டியே ஆகணும். வீட்ல தங்கமணியோட புலம்பலை இனி இன்னும் அதிகமாகுமே?!

:-o(

Mahesh said...

ஆமா... ஆமா... வில்லு, ஏகன்னு பாக்கறதுக்கு சிவாஜியோட ஓவராக்டிங் பாக்கறது தப்பே இல்ல...அடுத்தது என்ன படம்? ஸ்ரீவள்ளியா, சாந்த ஜக்குபாயா?

முரளிகண்ணன் said...

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ஒன்று உண்டு.

“என்னை ஏமாற்ற எத்தனையோ வேடங்கள் இருக்கும் போது, புனிதமான காதலி வேடம் தான் கிடைத்ததா” என்று சிவாஜி, சரோஜா தேவியிடம் பேசும் வசனம்.

KarthigaVasudevan said...

//"புதிய பறவை விமர்சனம்."//

அப்படியே "அன்பே வா" படமும் பார்த்துடுங்க குடுகுடுப்பை.ஏன்னா சிவாஜி படம் பார்த்தா எம்.ஜி.ஆரையும் ஒருக்கா பார்த்துடணும் ,இல்லாங்காட்டி சிவாஜிக்கும்...எம்.ஜி.ஆருக்கும் சொர்க்கத்துல (!!!!!) சண்டை வந்தாலும் வந்துடும்...குடுகுடுப்பை என் படத்தை பார்க்கலை உன் படத்தை மட்டும் பார்த்துட்டார்னு!!!

பாபு said...

அடடா,நானும் போன வாரம் தான் இந்த படம் பார்த்தேன்,DVD புண்ணியத்தில்
ஸ்டைல் ,ஸ்டைல் அப்படின்னு இப்ப சொல்றதெல்லாம் ,தலைவர் அப்பவே செய்துள்ளார்.

அ.மு.செய்யது said...

//பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு//

நானும் பலமுறை பார்த்து வியந்திருக்கிறேன்...அப்பவே செம்ம ஸ்டைலு,,,அசத்தியிருப்பார்.

இராகவன் நைஜிரியா said...

வில்லு பார்த்து புண் பட்ட மனதுக்கு, புதிய பறவை நிச்சயம் இதமாகத்தான் இருந்திருக்கும்...

kajan said...

அண்ணாஅப்பிடி எண்ண நானும் இந்த படத்தை பாக்கனும்.ஹஜன்

Poornima Saravana kumar said...

// நசரேயன் said...
புதிய குருவி க்கு நானும் விமர்சனம் எழுதுவேன்

//

எழுதுங்க எழுதுங்க வந்து படிக்கறோம்..

Poornima Saravana kumar said...

//“என்னை ஏமாற்ற எத்தனையோ வேடங்கள் இருக்கும் போது, புனிதமான காதலி வேடம் தான் கிடைத்ததா”//

Super!

Poornima Saravana kumar said...

vimarsanam arumai:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த மாதிரி அடிக்கடி பழைய படமா டிவிடி பார்த்து விமர்சனம் எழுதுங்க
நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

ராஜ நடராஜன் said...

//பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.//

நான் சிகரெட் புகைப்பதில்லை.இருந்தாலும் சிவாஜி மாதிரி சிகரெட் புகை விடுவதற்கு இன்னொரு ஆள் இனி பிறந்துதான் வரணும்.

வீட்ட விட்டுப் போகும் போது நசரேயன் புதிய குருவிக்கு விமர்சனம் எழுதுவேன் ங்கிறார்.பழையதா இருந்தாலும் வில்லு,குருவிய விட புதிய பறவை விமர்சனம் நன்றாகவே இருக்குத

வில்லன் said...

//பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.//

இதெல்லாம் படத்துலதான் சரிப்பட்டு வரும். படத்த பாத்துட்டு நடைமுறைல ட்ரை பண்ணுனா ஆப்பு தான்.

நாஞ்சில் பிரதாப் said...

இந்தப் படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல்...படத்தின் பெயர் நினைவில்லை.

ஒரு பணக்கார திமிருடன் சராஜோ தேவியை லைன் விட்டுக்கொண்டே புகைவிடும் அந்த நடிப்பு...
உண்மையில் அவரால் மட்டுமே முடியும்...

நாஞ்சில் பிரதாப் said...

மன்னிக்கவும் செளகார் ஜானகியை....

ஷாஜி said...

//ஏன்னா சிவாஜி படம் பார்த்தா எம்.ஜி.ஆரையும் ஒருக்கா பார்த்துடணும் ,இல்லாங்காட்டி சிவாஜிக்கும்...எம்.ஜி.ஆருக்கும் சொர்க்கத்துல (!!!!!) சண்டை வந்தாலும் வந்துடும்...குடுகுடுப்பை என் படத்தை பார்க்கலை உன் படத்தை மட்டும் பார்த்துட்டார்னு!!!//

--ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

நீங்கள் எழுதிய விமர்சனம் அருமையாயிருந்தது. நானும் இந்த படத்தை தற்போதுதான் பார்த்தேன். வெளிநாட்டில் இருந்துகொண்டு பழைய தமிழ் படங்களை பார்ப்பதே ஒரு தனி சுகம்தான். இந்த படத்திலேயே எனக்கு பிடித்தது 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து'தான். இரவில் படுக்கும்போது கேட்பேன். தாலாட்டுவது போல இருக்கும். மிகவும் ரம்மியமாயிருக்கும். இதே போல் நான் ரசிக்கும் பழைய படம் ஆயிரத்தில் ஒருவன். பலமுறை பார்த்தும் அலுக்காத படம். விமர்சனம் எழுதுங்களேன்.