Friday, January 9, 2009

கல்லூரி சாலை : முதல்வரிடம் அடி வாங்கிய அனுபவம்.

நான் படித்த சுய நிதி பொறியியல் கல்லூரியில், ஏறத்தாழ அனைத்து கல்லூரி நிர்வாக முடிவுகளும் கல்லூரி முதல்வரேதான் எடுப்பார்.கல்லூரி நிர்வாகம் எனக்கு தெரிந்தவரையில் தலையிட்டதில்லை.விழாக்களுக்கு மட்டுமே வருவர்.உதாரணமாக அங்கே இருக்கும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் இறைப்பவர்க்கு சம்பளம் கொடுப்பது முதல் சரஸ்வதி பூஜைக்கு நூலகத்தில் சுண்டல் கொடுப்பது வரை.

இப்போ எனக்கும் கல்லூரி முதல்வருக்குமான பாசப்பிணைப்பை மட்டும் எழுதறேன். முதலாண்டு படிக்கையில் மாசம் ஒருமுறை லீவு கேக்க போவேன்,ஒரு நாளும் அவர் மறுத்ததில்லை ஆனால் நண்பர்கள் லீவு கேட்டு அறை வாங்கி வந்திருக்கிறார்கள்.நான் தப்பித்தே வந்தேன்.

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது காலேஜ் பக்கம் அவ்வளவா(சுத்தமான்னும் வெச்சுக்கலாம்) போறதில்லை,கொஞ்சம் பெரிய ஆளுன்னு மத்தவங்களா நெனச்சிக்கிட்டாங்க போல,நானும் நண்பர் பாரிசும் ஹிட் லிஸ்ட்ல சேர்க்கப்பட்டோம். இரண்டாமாண்டு நண்பர் ஒருநாள் முதலாண்டு மாணவர்களை ராகிங் பண்ணும் போது அவர்களோடு ஏதோ பிரச்சினை,கேள்விப்பட்ட இரண்டாமாண்டு மாணவர்கள் எல்லாம் ஒரு இரவில் முதலாண்டு மாணவர் விடுதி புகுந்து கட்டையால கணிசமான மக்களை அடிச்சிட்டு வெற்றிகரமா யாருக்கும் தெரியாம விடுதிக்கு திரும்பிட்டாங்க.இரவோடு இரவா முதல்வருக்கு செய்தி போயாச்சு.

அடுத்த நாள் காலைல நான் ஊருலேந்து விடுதிக்கு வரேன் பசங்க மேலே நடந்த விசயத்தை சொன்னாங்க, நான் ரொம்ப நொந்து போயிட்டேன் நாமளும் நம்ம வீரத்தை காண்பிக்க கிடைச்ச வாய்ப்பு காலி ஆயிடுச்சுன்னு.சோகத்தோட காலேஜுக்கு போனேன், முதல்வரிமிருந்து நோட்டீஸ் வந்தது அடித்தவர்கள் லிஸ்டல நானும் பாரிசும் இருந்தோம், அவனும் சம்பவம் நடந்தப்ப விடுதில இல்லை.

கண்ணாடி போட்டுட்டு போனா அடிக்க மாட்டாருன்னு ஒரு நம்பிக்கை, நான் ஒரு கண்ணாடி போட்டிருந்தேன் அத போட்டிட்டு போனேன். லிஸ்ட்ல உள்ள ஆறு பேரும் வரிசைல நின்னோம். அதுல என்னையும் பாரிசையும் தவிர மத்தவங்கெல்லாம் நல்ல பேரு உள்ள பசங்க, அவங்கள பாத்த முதல்வர் வெங்கட்ன்னு ஒரு நண்பர பாத்து நீயுமா அடிச்சன்னு சொல்லி எல்லாரையும் போகச்சொல்லிட்டார்.வெங்கட் புண்ணியத்துல அடி வாங்காம தப்பிச்சாச்சு ஆனாலும் ஒரு உறுத்தல் ஏன் தேவையில்லாம நம்ம பேர எழுதி கொடுங்கராங்கன்னு.

இன்னொரு சம்பவம் இறுதியாண்டு தேர்வு விடுமுறைக்கு முன் கடைசி வகுப்புக்கு முந்திய நாள். எல்லாரும் டவுணுக்கு போயி கொண்டாடிட்டு வந்தோம். கொண்டாட்டத்தின் உச்சத்தில் எங்களால் கடைசி வரை கட்டுப்படுத்த முடியாமல் போன ஒரு அப்பாவி நண்பர்,ஹாஸ்டல் நோட்டிஸ் போர்டு கண்ணாடிய உடைச்சிட்டான்,இந்த நேரத்திலேயும் நாங்க எல்லாரும் மெஸ்ல இருந்தோம்.இவன் தனியா வெறிபிடித்த மாதிரி போய் கண்ணாடிய உடைச்சிட்டான்.கையில பெரிய காயம். நாங்க எல்லாரும் பக்கத்து டவுணுக்கு ஓடிட்டோம்.
அப்புரம் நள்ளிரவில் திரும்பவும் ஹாஸ்டல் போயி முதல்வர்கிட்ட மன்னிப்பு கேக்கிற முடிவ இறுதியாண்டு நண்பர்கள் ஆலோசனைப்படி எடுத்தோம்.

இப்போது முதல்வர் அறை, கண்ணாடி உடைத்தவரை கேட்டார் என்னத்த குடிச்சிட்டு உடைச்ச?

அப்பாவி: கள்ளு சார்.

முதல்வர் : கள்ளா? எவ்வளவுக்கு குடிச்ச?

அப்பாவி: ரெண்டு மட்டை சார் பத்து ரூபாய்க்கு.

முதல்வர் : ஏண்டா நாயே பத்து ரூபாய் கள்ள குடிச்சிபுட்டு பத்தாயிரம் ரூபாய் கண்ணாடியே உடைச்சிருக்க. are you proud of doing this?

அப்பாவி: யெஸ் சார்.

முதல்வர் : என்னது யெஸ் ஸாரா வெட்கமா இல்ல?உங்கப்பா என்ன பண்றார்?

அப்பாவி: நோ சார்,விவசாயம்

முதல்வர் : மாடு இருக்கா வீட்டில எத்தனை மாடு இருக்கு?

அப்பாவி: 5 மாடு இருக்கு சார்.

முதல்வர் : நீ ஒரு மாடு உன்னையும் சேத்து கட்டிப்போடச்சொல்லு, அந்தக்கயித்துல, வாட்ச்மேன் இவனுங்கள கட்ட நல்ல மாடு கட்டற கயிறு வாங்கிட்டு வா காலேஜ் கேட்ல கட்டிப்போடனும் இவனுங்கல.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

பாரிஸ் : மலேசியாவில இருக்கார்.

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்.

நான் : வாத்தியார்

முதல்வர் : உங்கப்பா கண்ணாடிய உடைச்ச பையன என்ன பண்ணுவார், சொல்லு நானும் அதையே பண்ணுரேன்.

நான் : மவுனம்

முதல்வர் : உங்கப்பா என்ன பண்ணுரார்

நெட்டையன் : இறந்துட்டார்.

முதல்வர் : அம்மா

நெட்டையன் : அவங்களும் இறந்துட்டாங்க.

முதல்வர் : உங்கப்பா?

டொல்பி : இரண்டு பேரும் இறந்துட்டாங்க..

சரி இனிமே செய்ய மாட்டேன்னு எல்லா கிளால் ரூம்லயும் போயி மன்னிப்பு கேக்கனும் அப்ப்டின்னாரு? முதல்ல எங்க கிளாஸ் எல்லாரையும் பாத்து வெற்றிப் புன்னகையோட சிரிச்சோம்.முதல்வரின் மருமகன் தான் வழிநடத்தி சென்றார். எங்கள் வகுப்பு முடிந்த உடன் ஜீனியர் வகுப்புக்கு போக முடியாதுன்னு நான் சொல்லிட்டேன்.அவரும் சரின்னு சொல்லி பிரச்சினையின் விபரீதம் புரிந்து முதல்வரிடம் திரும்ப போயி மன்னிப்பு கேட்டாங்கன்னு சொல்லிட்டார். இந்த முறையும் தப்பிச்சோம் அடிவாங்காம..

கவலைப்படாதீங்க அடுத்த பாகத்தில ...........

29 comments:

பழமைபேசி said...

I am in...

பழமைபேசி said...

And voted too.... sorry for English.... busy at work!

நசரேயன் said...

நானும் இருக்கேன், ஆனே வேலை தான் செய்யுறேன்

நசரேயன் said...

/*
முதல்வர் : ஏண்டா நாயே பத்து ரூபாய் கள்ள குடிச்சிபுட்டு பத்தாயிரம் ரூபாய் கண்ணாடியே உடைச்சிருக்க.
*/
நல்ல கேள்வி

நசரேயன் said...

/*முதல்வர் : உங்கப்பா கண்ணாடிய உடைச்ச பையன என்ன பண்ணுவார், சொல்லு நானும் அதையே பண்ணுரேன்*/
எங்க அப்பா கண்ணாடி அணிவதில்லை, மூ க்கு கண்ணாடி தான் அணிவார்னு சொல்ல வேண்டியதானே

அ.மு.செய்யது said...

//இப்போ எனக்கும் கல்லூரி முதல்வருக்குமான பாசப்பிணைப்பை மட்டும் எழுதறேன்//

வாய்க்கா தகராறு இங்க தான் ஆரம்பிச்சுதா......நல்ல நகைச்சுவை பதிவு...

தொடரட்டும் உங்க சிரிப்பு வைத்தியம்...

வில்லன் said...

//ஆனாலும் ஒரு உறுத்தல் ஏன் தேவையில்லாம நம்ம பேர எழுதி கொடுங்கராங்கன்னு.//

நம்ம ஊரு போலீஸ்காரங்க கேச முடிக்கமுடியலன்ன தெரிஞ்ச, அடிக்கடி வந்துபோற ரவுடிய கைது பண்ணி கேச முடிசுருவங்க இன்வேச்டிகசொன் பண்ணாமலே. அந்த மாதிரி ஒருவேள அந்த லிஸ்ட் தயாரிச்சவரும் உங்கள எல்லாம் (நீங்க எல்லாம் ஒரு ரவுடின்னு நனைச்சி) லிஸ்ட்ல சேத்து கொடுத்தாரோ என்னமோ.

ரொம்ப வருதபடாதிங்க. பனமரத்து கீழே இருந்து பால குடிச்சாலும் கல்லுன்னுதான் சொல்லுவாங்க (கொஞ்சம் மோசமானவன்னு பேரு எடுத்திருந்தா - என்னமாதிரி). செலறு அப்பாவி மாதிரி இருப்பான் அவன் கள்ள குடிச்சாலும் பால்லுன்னு சொல்லிருவாங்க. அவன் நேரம் அப்படி என்ன பண்ண முடியும்.

எனக்கு இந்த அனுபவம் உண்டு. ஊருல ஒருநாள் சாராயம் விக்குற பையன் என் கூட படிச்சவன். அவன் கிட்ட பேசிட்டு இருந்தேன். எந்த பொறம்போக்கு நாயோ எங்க அப்பாட்ட போயி வாத்தியார உங்க பையன் சாராயம் குடிசான்னு சொல்லிபோட்டான். எங்க ஐயா வெளுத்து கட்டிட்டாரு. ரொம்ப நேரமா எனக்கே தெரியாது எதுக்கு அடிச்சாருன்னு. அப்புறமா தெரிஞ்சுகிட்டேன். தெரிஞ்சு என்ன பயன். பட்டது பட்டதுதானே. அப்புறமா ஒருநாள் அந்த போட்டு கொடுத்த நாய உண்டு இல்லன்னு பண்ணிட்டன் நாடு ரோடுலவச்சு.

வில்லன் said...

காலேஜ்ல அடிப்பாங்களா எந்த மட்டமான காலேஜ் அது.

குடுகுடுப்பை said...

வில்லன் said...

காலேஜ்ல அடிப்பாங்களா எந்த மட்டமான காலேஜ் அது.

//
principal is no more.வாரணம் ஆயிரம் மாதிரி ஒரு பீலிங்ஸ்க்காக ஆங்கிலம்.

சாரே அப்படியே தூத்துக்குடி பத்தி வ.மு ல எழுதுங்க

Anonymous said...

Hi I need a assistance in 'how to select or write in tamil in the blogs' - i cant find it... any piece of advise is appreciable

குடுகுடுப்பை said...

Anonymous said...

Hi I need a assistance in 'how to select or write in tamil in the blogs' - i cant find it... any piece of advise is appreciable

//
http://www.google.co.in/transliterate/indic/Tamil

மேலே உள்ளது எளிதான வழி.

பழமைபேசி said...

//நசரேயன் said...
நானும் இருக்கேன், ஆனே வேலை தான் செய்யுறேன்
//

நியூயார்க் இரயிலடிக்கு ஆள் அனுப்பவா?

கபீஷ் said...

அடுத்த பதிவிலாவது அடி வாங்குனது பத்தி எழுதிவீங்களா? இல்ல சும்மா பில்டப் ஆ? அடி வாங்கினீங்கன்னு கொஞ்சம் சந்தோஷமா வந்தேன். பொக்குன்னு போச்சு. இப்படி தலைப்பு வச்சு ஏமாத்தாதீங்க

புதியவன் said...

//கவலைப்படாதீங்க அடுத்த பாகத்தில ...........//

அடிவாங்கினத சொல்லப் போறீங்களா...?

ers said...

விரைவில் துவங்க உள்ள நெல்லைத்தமிழ் இணையத்தின் திரட்டியில் இணையலாமே...
சோதனை திரட்டியில் உங்கள் இடுகையை பதிய...
http://india.nellaitamil.com/

RAMYA said...

ஏங்க காலேஜ் போயி அடிக்காங்க
இதெல்லாம் ரொம்ப தப்புங்க
நீங்க எவ்வளவு அடி வாங்கினீங்க
மறைக்கமே சொல்லுங்க
அதுக்கும் சேர்த்து கண்டனம்
அறிவிக்கலாம்

RAMYA said...

//
முதல்வர் : ஏண்டா நாயே பத்து ரூபாய் கள்ள குடிச்சிபுட்டு பத்தாயிரம் ரூபாய் கண்ணாடியே உடைச்சிருக்க
//

படிக்கும்போதேவா ????
பரவா இல்லையா?????
இப்போ தொடருதா ???

RAMYA said...

// புதியவன் said...
//கவலைப்படாதீங்க அடுத்த பாகத்தில ...........//

அடிவாங்கினத சொல்லப் போறீங்களா...?

//

Repeeeeeeeeeeeeeeetaaaaaaaaaaai

RAMYA said...

ஆனா ஒன்னு குடுகுடுப்பையாரே!!
நீங்க எது எழுதினாலும் அதில்
நகைச்சுவை கலந்து எழுதறீங்க
வாழ்த்துக்கள் !!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல நகைச்சுவை பதிவு...

வேத்தியன் said...

//அடுத்த நாள் காலைல நான் ஊருலேந்து விடுதிக்கு வரேன் பசங்க மேலே நடந்த விசயத்தை சொன்னாங்க, நான் ரொம்ப நொந்து போயிட்டேன் நாமளும் நம்ம வீரத்தை காண்பிக்க கிடைச்ச வாய்ப்பு காலி ஆயிடுச்சுன்னு.\\

ஆஹா நல்ல மனசுங்க உங்களுக்கு...
ஆனாலும் எல்லா மாணவர்களுக்கும் இப்பிடி ஒரு பீலிங்க இருக்கத்தான் செய்யும் இல்ல...
என்ன பண்ணுறது??? Studentன்னா அப்பிடித்தான்...
:)))

தாரணி பிரியா said...

அப்ப கடைசி வரைக்கும் நீங்க அடியே வாங்கலையா? என்ன இது இப்படி ஏமாத்திட்டிங்களே

தாரணி பிரியா said...

//உதாரணமாக அங்கே இருக்கும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் இறைப்பவர்க்கு சம்பளம் கொடுப்பது முதல் சரஸ்வதி பூஜைக்கு நூலகத்தில் சுண்டல் கொடுப்பது வரை.//

ஆஹா இந்த மாதிரி காலேஜ்லதான் எனக்கும் வேலை பாக்க ஆசை. ஆனா எங்க காலேஜ்ல ஒண்ணும் சொல்லற மாதிரியில்லை :(

தாரணி பிரியா said...

//இரண்டாம் ஆண்டு படிக்கும்போது காலேஜ் பக்கம் அவ்வளவா(சுத்தமான்னும் வெச்சுக்கலாம்) போறதில்லை, //

கொஞ்சம் அழுக்காவது போகதற்கு முயற்சி செஞ்சு இருக்கலாம்தானே

தாரணி பிரியா said...

// கண்ணாடி போட்டுட்டு போனா அடிக்க மாட்டாருன்னு ஒரு நம்பிக்கை, நான் ஒரு கண்ணாடி போட்டிருந்தேன் அத போட்டிட்டு போனேன்//

ஆமாங்க. இந்த கண்ணாடி போட்டிருக்கிறவங்க எல்லாம் நல்லா படிக்கறவங்க, ரொம்பவே அமைதின்னு மத்தவங்க எப்பவுமே தப்பா நினைச்சுகிட்டு விட்டுடறாங்க. எனக்கு இதுல பெரிய வருத்தமே இருக்கு (என் தம்பி கண்ணாடி போடுவான். அவனை நல்லவனு நம்ப ஒரு பெரிய கூட்டமே இருக்கு)

ரவி said...

காலேஜ்ல கூடவா அடிப்பாங்க ?

குடுகுடுப்பை said...

தாரணி பிரியா said...

//இரண்டாம் ஆண்டு படிக்கும்போது காலேஜ் பக்கம் அவ்வளவா(சுத்தமான்னும் வெச்சுக்கலாம்) போறதில்லை, //

கொஞ்சம் அழுக்காவது போகதற்கு முயற்சி செஞ்சு இருக்கலாம்தானே
//

நாங்க எப்போ தொவச்சோம்:)))))

குடுகுடுப்பை said...

அனைவரின்

வருகைக்கும் கருத்துக்கும்

நன்றி்

குகு

வில்லன் said...

//கபீஷ் said...
அடுத்த பதிவிலாவது அடி வாங்குனது பத்தி எழுதிவீங்களா? இல்ல சும்மா பில்டப் ஆ? அடி வாங்கினீங்கன்னு கொஞ்சம் சந்தோஷமா வந்தேன். பொக்குன்னு போச்சு. இப்படி தலைப்பு வச்சு ஏமாத்தாதீங்க//

நசரேயன் பாம்பே படத்த பாத்து காதல் கடிதம் போல இதுவும் ஒரு பீலா தான்.