Sunday, January 4, 2009

கல்லூரி சாலை:புளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வும் நானும்

முதலாண்டு தேர்வு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள், மூன்றாம் பருவத்தேர்வு வந்துவிட்டது,வழக்கம் போல தேர்வுக்கு முன்பான விடுமுறை நாட்கள் படிக்காமல் காலம் கடத்தியாச்சு.மூன்றாவது பருவத்தில் முதல் தேர்வு கணக்கு அதில் வந்த லாப்லாஸ் கணக்கு கமல்ஹாசன் பேசறது மாதிரி, படிக்கிறப்ப புரியுர மாதிரியே இருந்துச்சு, பரிட்சை எழுதினப்பதான் தெரிஞ்சது, கமல் படம் மாதிரி நாளஞ்சு வாட்டி எழுதி(பாத்து)தான் புரியும் போல ஆச்சு.கால மேல கால் போட்டு படுத்துக்கிட்டே கணக்கு புத்தகத்தை படிச்சா வேலைக்காவதுன்னும் தெரிஞ்சுச்சு.

இரண்டாவது தேர்வு அடுத்த நாள், கணக்கு புட்டுகிச்சி அடுத்து புளூயிட்ஸ் ஈஸி பேப்பர், இன்னைக்கு நைட் படிச்சு தூக்கிரலாம்கிற எண்ணத்தில மெஸ்ஸுல போடுற சைவ பூச்சி உணவ சாப்பிட்டு படிக்க உட்கார்ந்தேன்.வந்தாங்க நம்ம புராஜக்ட் கும்பல் .டேய் கணக்கே போச்சி சோகத்தை போக்கறதுக்கு நாம எல்லாம் படத்துக்கு போறோம்.வாசல் வழியா இனி போகமுடியாது வெள்ளையந்தான் வாட்ச்மேன் அவன் கண்ணுல படாம எப்படியாவது வேலியேறி குதிச்சு சின்னமாயாகுளத்துல பஸ் ஏறிருவோம் காலேஜ் பஸ் ஸ்டாப்ல ஏறுனா வெள்ளையன் பாத்து பிரின்சிபால்கிட்ட போட்டுகுடுத்துருவான்.அப்படியே எதாவது ஒரு படத்தை பாத்திட்டு வருவோம் அப்படின்னாங்க.

சரி திட்டப்படி எல்லாருமா சேந்து வேலியேறி குதிச்சாச்சு, பொதுவா இரவில் நாங்க பயன்படுத்துற வேலி முள்ளுவாடி பக்கம் இருக்கும், இந்த முறை எதிர் திசையில் உள்ள சின்னமாயகுளம் பக்கம் போனோம்,பயங்கரமான மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வயல்களில் வரப்புகளை கண்டு நடப்பதே சிரமமா இருந்தது. செருப்பு வேற தண்ணில போச்சு.

டேய் இப்படி சிரமப்பட்டு படத்துக்கு போறதுக்கு படிச்சிருக்கலாம்டா,

டேய் குகு சும்மா பினாத்தாம வாடா - பாரிஸ்

ஒரு வழியா பஸ் பிடிச்சி வந்தாச்சி, சரிடா எதாவது ஒரு தெலுங்கு டப்பிங் படம் போவோமா.

வாய மூடுறா வேற எதுக்காவதும் போவோம்,அப்படின்னு எதோ ஒரு சரத்குமார் படம் போனோம், படத்தின் தரம் ஒழுங்கா படிச்சிருக்கலாம் அப்படின்னு இன்னொரு முறை மணியடித்ததது.

மீண்டும் ஹாஸ்டல் முக்கால் வாசி பேர் தூங்கிவிட்டிருந்தனர், தேர்வுக்கு முதல் இரவில் மட்டுமே படிக்கும் சில மாணவர்கள் படித்த படி இருந்தனர்.அப்படியே பேசியபடி படிக்காத குற்ற உணர்ச்சியில் அரைகுறையாய் தூங்கினேன்.

அடுத்த நாள் மதியம் தேர்வு, படத்துக்கு போன எல்லாரும் தேர்வுக்கு தயார்,பாடத்து பேரத்தவிர வேற எதுவும் தெரியாம கெளம்பிட்டாங்க பாரிஸ் மட்டும் படுத்தே இருந்தான். ஏண்டா நீயும் தேர்வுக்கு போறியா?

இல்லடா மாப்பிள்ளை ராத்திரி மழையில நெனஞ்சதுனால ஒரே பீவர், சாதாரண பீவரா இருந்தா பரவாயில்லை இது சபரிங் பிரம் பீவர் அதுனால நான் லீவு போட்டுக்கிறேன் அப்படின்னான். எனக்கும் துணைக்கு ஒரு ஆள் இருக்கானேன்னு நானும் வரலடா நீங்க போங்கன்னேன்.

தேர்வு முடிவு வந்தபோது என்னையும் பாரிஸையும் தவிர அனைவரும் புளூயிட் மெக்கானிக்ஸ்ல பாஸாயிட்டாங்க.

நான் திரும்பவும் எழுதினேன்.புளூயிட் மெக்கானிக்ஸ் கைகூடியது, ஆனா லாப்லாஸ் கணக்கு கமலின் முயற்சி போல தொடர்ந்தது...

வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ

42 comments:

நட்புடன் ஜமால் said...

\\வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ\\

டாப்பு மெஸேஜூ ...

ஆளவந்தான் said...

//
கமல் படம் மாதிரி நாளஞ்சு வாட்டி எழுதி(பாத்து)தான் புரியும் போல ஆச்சு
//
அவ்ளோ கஷ்டமா என்ன?

வருண் said...

***நான் திரும்பவும் எழுதினேன்.புளூயிட் மெக்காணிக்ஸ் கைகூடியது, ஆனா லாப்லாஸ் கணக்கு கமலின் முயற்சி போல தொடர்ந்தது...***

இதுக்கு என்னங்க அர்த்தம்? :)

அ.மு.செய்யது said...

//வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ //

இது மேட்ரு !!!!!

ஆளவந்தான் said...

//
வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ
//
முயற்சிகள் தவறலாம். ஆனா முயற்சி செய்யா தவறக்கூடாது.. இது எப்டி இருக்கு :)

Mahesh said...

ஹய்ய்யோ.... என்னா மெசேஜு குடுக்குறீங்க?

இராகவன் நைஜிரியா said...

அடாது மழை பெய்தலும் விடாது படம் பார்க்கிற வழக்கம். தேர்வுக்காக இதெல்லாம் மாத்திக்க முடியுமான என்ன?

// முதலாண்டு தேர்வு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து //

என்ன அதிர்ச்சி... பாஸ்யிட்டீங்களா என்ன?

T.V.ராதாகிருஷ்ணன் said...

\\\நான் திரும்பவும் எழுதினேன்.புளூயிட் மெக்கானிக்ஸ் கைகூடியது,\\\

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

SPIDEY said...

எலே மக்கா நானும் உம்ம சாதி பய தான்லே! மெக்காநிக்கலு.

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் பின்னூட்டம் இட்டால் சரியான ரிப்ளை கிடைக்காததால் நான் உங்க கூட டூ

சந்தனமுல்லை said...

//வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ//

:-)

சந்தனமுல்லை said...

சுவாரசியமா நல்லா காமெடியா எழுதறீங்க..
//ஒரே பீவர், சாதாரண பீவரா இருந்தா பரவாயில்லை இது சபரிங் பிரம் பீவர் அதுனால நான் லீவு போட்டுக்கிறேன் அப்படின்னான். ///

:-)))

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

நான் பின்னூட்டம் இட்டால் சரியான ரிப்ளை கிடைக்காததால் நான் உங்க கூட டூ//

அண்ணே என்ன மன்னிச்சு விட்டுருங்க,நான் சரியாத்தானே ரிப்ளை பண்றேன்.

டூ விட்டா நைஜீரியா வரும்போது பாத்திரம்,பார்முலா எடுத்துட்டு வரமாட்டேன்.அப்புரம் வாங்கிதான் குடிக்கனும்.:)

குடுகுடுப்பை said...

அதிரை ஜமால் said...

\\வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ\\

டாப்பு மெஸேஜூ ...//

நன்றி அதிரை ஜமால்

குடுகுடுப்பை said...

ஆளவந்தான் said...

//
கமல் படம் மாதிரி நாளஞ்சு வாட்டி எழுதி(பாத்து)தான் புரியும் போல ஆச்சு
//
அவ்ளோ கஷ்டமா என்ன?/

தெரியல

நன்றி ஆளவந்தான்

குடுகுடுப்பை said...

வருண் said...

***நான் திரும்பவும் எழுதினேன்.புளூயிட் மெக்காணிக்ஸ் கைகூடியது, ஆனா லாப்லாஸ் கணக்கு கமலின் முயற்சி போல தொடர்ந்தது...***

இதுக்கு என்னங்க அர்த்தம்? :)//

தொடர்ந்து என் பதிவுகளை படிங்க புரிஞ்சாலும் புரியலாம்.

நன்றி வருண்.

குடுகுடுப்பை said...

ஆளவந்தான் said...

//
வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ
//
முயற்சிகள் தவறலாம். ஆனா முயற்சி செய்யா தவறக்கூடாது.. இது எப்டி இருக்கு :)//

படிக்க தவறலாம் ஆனால் பின்னூட்டம் தவறக்கூடாது:))))))))))

குடுகுடுப்பை said...

Blogger Mahesh said...

ஹய்ய்யோ.... என்னா மெசேஜு குடுக்குறீங்க?//

நன்றி மகேஷ்

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ //

இது மேட்ரு !!!!!//

நன்றி அ.மு.செய்யது

குடுகுடுப்பை said...

இராகவன் நைஜிரியா said...

அடாது மழை பெய்தலும் விடாது படம் பார்க்கிற வழக்கம். தேர்வுக்காக இதெல்லாம் மாத்திக்க முடியுமான என்ன?

// முதலாண்டு தேர்வு முடிவுகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து //

என்ன அதிர்ச்சி... பாஸ்யிட்டீங்களா என்ன?//

ஆஹா குசும்பு தாங்கலியே, அதெல்லாம் தனிப்பதிவா.

நன்றி ராகவன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
T.V.Radhakrishnan
SPIDEY
உருப்புடாதது_அணிமா
சந்தனமுல்லை.

நசரேயன் said...

நல்ல மெசஜ், சீனா மசாஜ் மாதிரி

RAMYA said...

\\வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ\\

Super Message Friend

RAMYA said...

ரொம்ப தமாஷா எழுதறீங்க
அப்படியே maintain பண்ணுங்க
வாழ்த்துக்கள் !!!

RAMYA said...

me 25th

ஆயில்யன் said...

பாஸ் நீங்களாச்சும் புளூயிட் மெக்கானிக்ஸ் ஒரு செமஸ்டரோட தட்டிடீங்க ஆனா நாங்க அதுல கதியா கிடந்து தவியாய் தவிச்சு மெல்ல தவழ்ந்து புரண்டு கிரண்டு வந்து சேர்ந்தாச்சு :) அந்த புக் இப்ப நினைச்சாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ன்ங்குது!

ஆர்.கே பன்சால்ன்னு ஒரு தெய்வம் எழுதுனது தலைகாணி மாதிரியே இருக்கும் அம்புட்டு பெருசு :)

S.R.Rajasekaran said...

சின்ன மாயகுளம் கீழக்கரை பக்கம் இருக்கிறதா

அது சரி(18185106603874041862) said...

எனக்கு ஒரு உம்ம தெரிஞ்சாகணும்....ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் பாஸ் பண்ணியாச்சா இல்ல ஆஸ்கர் அவார்டு மாதிரி முயற்சி தொடருதா :0))

ஆனா ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் செம கடி...அதுக்கு மேத்ஸே பரவாயில்ல...(FM லெக்சரருக்கும் எனக்கும் அடிதடி சண்டைங்கிறது இங்க பதிவுக்கு தேவையில்லாத விஷயம்...)

குடுகுடுப்பை said...

அது சரி said...

பாஸ் பண்ணாம எப்படி? அப்புரம் சேச்சி கிளாஸுக்கு நான் ரெண்டு நாள்தான் போயிருக்கேன்.அதுல ஒரு நாள வெளில போக சொல்லிட்டாங்க

குடுகுடுப்பை said...

S.R.ராஜசேகரன் said...

சின்ன மாயகுளம் கீழக்கரை பக்கம் இருக்கிறதா//

ஆமாங்க அங்கதான் இருக்கு, நான் படிச்ச காலேஜ் இருக்கிற ஊர் புது மாயகுளம்

குடுகுடுப்பை said...

ஆயில்யன் said...

பாஸ் நீங்களாச்சும் புளூயிட் மெக்கானிக்ஸ் ஒரு செமஸ்டரோட தட்டிடீங்க ஆனா நாங்க அதுல கதியா கிடந்து தவியாய் தவிச்சு மெல்ல தவழ்ந்து புரண்டு கிரண்டு வந்து சேர்ந்தாச்சு :) அந்த புக் இப்ப நினைச்சாலே சும்மா கிர்ர்ர்ர்ர்ன்ங்குது!

ஆர்.கே பன்சால்ன்னு ஒரு தெய்வம் எழுதுனது தலைகாணி மாதிரியே இருக்கும் அம்புட்டு பெருசு :)//

அவரேதான். நினைக்காதீங்க, அதோட பாதிப்புதான் நான் பதிவே அரைபக்கத்துக்கு மேல எழுதறதில்லை

அது சரி(18185106603874041862) said...

//குடுகுடுப்பை said...
பாஸ் பண்ணாம எப்படி? அப்புரம் சேச்சி கிளாஸுக்கு நான் ரெண்டு நாள்தான் போயிருக்கேன்.அதுல ஒரு நாள வெளில போக சொல்லிட்டாங்க

//

உங்கள யாரு ரெண்டாவது நாளு போகச் சொன்னது??? மதியாதார் தலைவால் மிதியாதேன்னு இதுக்கு தான் சொல்லிருக்காங்க :0))

குடுகுடுப்பை said...

உருப்புடாதது_அணிமா said...

நான் பின்னூட்டம் இட்டால் சரியான ரிப்ளை கிடைக்காததால் நான் உங்க கூட டூ//

அணிமா அணிமா இப்ப பழமா?

கபீஷ் said...

தப்பு தப்பா மெசேஜ் குடுத்து மக்களைத் தவறாக வழிநடத்தும் உங்களைக் கண்டித்து உ-அ வைப் போல் வெளிநடப்பு செய்கிறேன்

Anonymous said...

\\வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ\\

இது ஏதோ விசு படம் தங்கமணி ரங்கமணி (சம்சாரம் அது மின்சாரம்) வசனம் "எழுதினான் எழுதுகிறான் இன்னும் எழுதுவான்" போல இருக்கு. நெசமாலுமா.

குடுகுடுப்பை said...

கபீஷ் said...

தப்பு தப்பா மெசேஜ் குடுத்து மக்களைத் தவறாக வழிநடத்தும் உங்களைக் கண்டித்து உ-அ வைப் போல் வெளிநடப்பு செய்கிறேன்
//
நீங்கெல்லாம் வெளிநடப்பு செஞ்சா நான் எப்படி கடை நடாத்துறது. கொஞ்சம் பாத்து தயவு பண்ணுங்க.

குடுகுடுப்பை said...

வில்லன் said...

\\வாய்ப்புகள் தவறவிடக்கூடாது, தவறினாலும் மீண்டும் கிடைக்கும். எப்படி மெஸேஜூ\\

இது ஏதோ விசு படம் தங்கமணி ரங்கமணி (சம்சாரம் அது மின்சாரம்) வசனம் "எழுதினான் எழுதுகிறான் இன்னும் எழுதுவான்" போல இருக்கு. நெசமாலுமா.//

நன்றி
வில்லன்

பழமைபேசி said...

நான் இருக்கிறன்! :-o)

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

நான் இருக்கிறன்! :-o)
//
ரொம்ப நன்றிங்கண்ணா

அமிர்தவர்ஷினி அம்மா said...

இல்லடா மாப்பிள்ளை ராத்திரி மழையில நெனஞ்சதுனால ஒரே பீவர், சாதாரண பீவரா இருந்தா பரவாயில்லை இது சபரிங் பிரம் பீவர் அதுனால நான் லீவு போட்டுக்கிறேன் அப்படின்னான். எனக்கும் துணைக்கு ஒரு ஆள் இருக்கானேன்னு நானும் வரலடா நீங்க போங்கன்னேன்.
:))))))

செய்யறது செஞ்சிட்டு மெசெஜ் சொல்றீங்களோ

joe vimal said...

சகா எல்லா இன்ஜினியரிங் மாணவர்களும் இப்படி தானா கிட்ட தட்ட என் கதையும் இதே தான் மெசேஜ் சூப்பர் போங்க காலம் தான் கடந்துவிட்டது .

Unknown said...

mr. kuDUKUdupai inha chinna mayakulam, Mulluvaadi engayo kelvi patathu maathiri irke.aam neenga MSEC ah ilai MSP ah