கல்லூரி நான்காம் ஆண்டு வகுப்புகள் முடிந்து, தேர்வுக்கு முந்தைய விடுமுறை, இந்த விடுமுறையில் என்ன பாடம் இருக்கிறது என்று பெயர் தெரிந்து நோட்ஸ காப்பி எடுத்து படிக்கனும்.
பெரும்பாலான தேர்வு விடுமுறை நாட்களில் சிலர் விடுதியில் இருப்பது வழக்கம், அந்த நேரத்தில் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால்.அதில் நானும் ஒருவன். நண்பர் நெட்டையன் எந்தக்காலத்திலும் விடுதிக்கோ கல்லூரிக்கோ வந்து தொடர்ந்தார்போல் பத்து நாள் கூட தங்க மாட்டான்.
இந்த முறை திடீரென ஒருநாள் வந்தான்.இரவு எட்டு மணியளவில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் காமராஜ் கடையில் சாப்பிடும் முடிவோடு நின்றிருந்தோம், நெட்டையன் சொன்னான் டவுண்ல போய் மீன் சாப்பிட்டு வருவோம்.ஆனா காலேஜ் கேட்,ஹாஸ்டல் கேட் இரண்டுமே 9 மணிக்கு பூட்டிருவாங்க.அப்புரம் நேர்மையா சுவரேறியோ வேலியேறியோ குதிச்சுதான் போகனும். பாம்புகள் தொலலை வேற கூட்டமா இருந்தா துணிச்சல் வரும்,எங்க ரெண்டு பேருக்கும் அப்போ அந்த துணிச்சல் வரவில்லை.நெட்டையன் சொன்னான் முதல்வர் வீடு எதிர்லதான இருக்கு வா போய் கேட்டுட்டு போய் சாப்பிட்டு பத்து மணிக்கு வருவோம்னான்.
சரின்னு போயி முதல்வர் வீட்டு காலிங் பெல்ல அடிச்சேன், வெளில வந்தாரு உன் பேரெண்ணன்னு கேட்டாரு,சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது.என்னடா பேர சொன்ன உடனே அடிக்கிறாருன்னு ஒன்னுமே புரியல. நெட்டையன பாத்து இந்த நாய் கூட ஏன் சேருற அப்படின்னு வேற சொன்னார். ஓடிப்போயிருன்னார்.
நெட்டையன் கிட்ட கேட்டேன் எதுக்குடா மனுசன் அடிச்சார்னு, அதுக்கு அவன் பிரின்ஸி அடிக்கிரது சாதாரண விசயந்தானே ஆனா என்னப்பாத்து நல்லவன்னு சொல்லிட்டாரு உங்கூட சேரகூடாதுன்னு சொல்லிருக்காரு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடான்னு சிரிச்சான்.
விதிய நொந்து காமராஜ் கடைல காஞ்ச புரோட்டாவை இழுத்துக் கொண்டிருந்தோம்,கணேசனிடம் என்ன உங்கண்ணன் ஆர்சி கடை தொறக்கலயான்னு கேட்டப்ப அவன் கடை அடுப்புல பூனை தூங்கிட்டு இருக்குன்னு சொல்லிட்டுருக்கும்போதே வாட்ச்மேன் வெள்ளையன் எங்களை தேடி வந்தார், என்னப்பா பிரின்ஸி நீங்க உள்ள வந்துட்டீங்களான்னு கேட்டு பத்து வாட்டி போன் பண்ணிட்டாரு,சீக்கிரம் சாப்பிட்டிட்டு வாங்கண்ணார்.
அடுத்த நாள் 9 மணிக்கு என்னை மட்டும் பிரின்ஸி ரூமுக்கு வரச்சொல்லி ஹாஸ்டல் வார்டன் கூட்டிட்டு போனார். என்னை நிக்க வெச்சிட்டு சிவில் டிபார்ட்மெண்ட்ல புதுசா வந்திருந்த HOD ய கூப்பிட்டார்.
அவருகிட்ட என்னக்காட்டி இந்த நாய்தானே வேலியேறிக் குதிச்சதுன்னார். அவரு என்னப்பாத்து இல்ல இவரு சிவிலே இல்லண்ணார். அப்பதான் எனக்கும் புரிஞ்சது என் பேர்ல சிவில் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் இருந்தான் அவன் மேல இவரு புகார் கொடுத்திருக்கார்.அதுக்காகத்தான் நான் போய் காலிங் பெல் அடிச்சவுடன் பேர கேட்டிருக்கார்,சொன்னவுடன் அடிச்சிருக்காருன்னு.
உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.
நம்ப முடியாத மாதிரி இருக்குல்ல, ஆனா அப்படிதான் அவர். தேர்வுக்கட்டணம் எழுதாட்டியும் தேர்வு எழுதவும் விடுவார். இப்படி அடிக்கவும் செயவார். மொத்தத்தில அவர் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருக்கவேண்டும். அந்த முதல்வர் இப்போது உயிருடன் இல்லை.
29 comments:
பள்ளி முதல்வரா ...
இந்த பாகத்திலயாவது அடி வாங்குனீங்கனு நினைக்கும் போது.......
சந்தோஷம் மகிழ்ச்சி !!!!!!
//உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.//
என்ன ஒரு பெருந்தன்மை
உங்க ரெண்டு பேருக்கும் தான்...
//சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது//
எதிர்பாராத திருப்பம்.மக்கா செம ACTION SCENE .
உங்க சீனத்து அனுபவம் பாதியில தொங்குது அதையும் முடிச்சிருங்க
அவசரத்துல ஓடியாந்து வந்ததுல பதிவர் கிரி ன்னு நினைச்சேன்.மீண்டும் பார்த்தால் குடுகுடுப்பையார்:)
எனக்கெல்லாம் ஹாஸ்டல் வார்டனை கம்பளியப் போர்த்தி மின்சார விளக்கை அணைச்சு பசங்க மொத்துன அனுபவம் மட்டுமே இருக்கு:)
அடிக்கிற கை தான் அணைக்கும்
நட்புடன் ஜமால் said...
பள்ளி முதல்வரா ...//
:)))))))
அ.மு.செய்யது said...
இந்த பாகத்திலயாவது அடி வாங்குனீங்கனு நினைக்கும் போது.......
சந்தோஷம் மகிழ்ச்சி !!!!!//
இப்ப குளுகுளூன்னு இருக்கா தனியா போய் சிரிச்சி மகிழ்ச்சியா இருங்க..(சுவரில்லாத சித்திரங்கள் கவுண்டர்-காஜா வசனம்)
புதியவன் said...
//உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.//
என்ன ஒரு பெருந்தன்மை
உங்க ரெண்டு பேருக்கும் தான்...//
வருகைக்கு நன்றி புதியவன்
உங்க சீனத்து அனுபவம் பாதியில தொங்குது அதையும் முடிச்சிருங்க//
போட்டோ ரெக்கவர் மண்ணிட்டு போட்டுருவோம்.
ராஜ நடராஜன் said...
அவசரத்துல ஓடியாந்து வந்ததுல பதிவர் கிரி ன்னு நினைச்சேன்.மீண்டும் பார்த்தால் குடுகுடுப்பையார்:)
எனக்கெல்லாம் ஹாஸ்டல் வார்டனை கம்பளியப் போர்த்தி மின்சார விளக்கை அணைச்சு பசங்க மொத்துன அனுபவம் மட்டுமே இருக்கு:)
//
எங்களுக்கும் உண்டு. இந்த அனுபவம்.
//உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.//
லூசாப்பா நீ. நல்ல சான்ஸ் கெடச்சும் மிஸ் பண்ணிட்டியே. இது தான் சாக்குன்னு ரெண்டு அப்பு அப்பிட்டு வரத விட்டுட்டு சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டாராம். ரொம்ப தியாகின்னு நெனப்பு மனசுல.
//எதுக்குடா மனுசன் அடிச்சார்னு, அதுக்கு அவன் பிரின்ஸி அடிக்கிரது சாதாரண விசயந்தானே ஆனா என்னப்பாத்து நல்லவன்னு சொல்லிட்டாரு உங்கூட சேரகூடாதுன்னு சொல்லிருக்காரு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடான்னு சிரிச்சான்.//
ரொம்ப நல்ல நண்பன். எவளவோ மனசுல இருந்தா இப்படி சொல்லியிருப்பான். வளர்ந்தவர் உண்மைலேயே வளர்ந்தவர் தான். நிருபிட்சுட்டார்.
முக்கிய அறிவிப்பு -
கதையில் மாபெரும் திருப்பம்.
தற்போது வந்த செய்தியின்படி அடிவாங்கினது முதல்வர் அடித்தது குடுகுடுப்பை.
இஃகிஃகி!
//
சரின்னு போயி முதல்வர் வீட்டு காலிங் பெல்ல அடிச்சேன், வெளில வந்தாரு உன் பேரெண்ணன்னு கேட்டாரு,சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது.
//
என்னது அடிச்சாரா...நீங்க சொல்றது காலேஜ் பிரின்ஸிபலா இல்ல நர்சரி ஸ்கூல் அனுபவத்தை சொல்றீங்களா??
எந்த காலேஜ் பாஸூ அது?? ரொம்ப வித்தியாசமா இருக்கே....எங்க காலேஜூலெ எல்லாம் கைய வச்சா அப்புறம் அவருக்கு சாப்பிட கையிருக்காது...கழுவவும் கையிருக்காது...அரிசி வாங்க வேலையும் இருக்காது...குமுறிடுவோம் :0)))
//
அப்பதான் எனக்கும் புரிஞ்சது என் பேர்ல சிவில் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் இருந்தான்
//
யார் அந்த போலி குடுகுடுப்பை?? :0)))
-:)))))))))
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
இவை அனைத்தும் எனது கல்லூரி வாழ்கையிலும் நடந்தவை. நானும் கூட same year, same dept.தான். kudukuduppayin உண்மை முகத்தை அறிய ஆவலாக உள்ளேன். என்னோடு சேர்ந்து படித்தவனுக்கு இவ்வளவு எழுத்தாற்றல்?.
zain said...
இவை அனைத்தும் எனது கல்லூரி வாழ்கையிலும் நடந்தவை. நானும் கூட same year, same dept.தான். kudukuduppayin உண்மை முகத்தை அறிய ஆவலாக உள்ளேன். என்னோடு சேர்ந்து படித்தவனுக்கு இவ்வளவு எழுத்தாற்றல்?.//
மெயில் அனுப்புங்க சார்.kudukuduppai@gmail.com.
இவ்வளவு எழுத்தாற்றல்?//
ஒரு பரிட்சையா 5 வாட்டி எழுதி கத்துக்கிட்டது, உங்கள மாதிரியே.
சரியா அடி.. இது நெத்தி அடி இல்லை கன்னத்து அடி:)
வில்லன் said...
//உடனே பிரின்ஸி என்கிட்ட நான் தப்பு பண்ணிட்டேன், வேணும்னா என்ன இந்த செருப்பால அடிச்சிருன்னு அவரு போட்டிருந்த சிலிப்பர கழட்டி போட்டாரு சிரிச்சிகிட்டே நானும் சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டேன்.//
லூசாப்பா நீ. நல்ல சான்ஸ் கெடச்சும் மிஸ் பண்ணிட்டியே. இது தான் சாக்குன்னு ரெண்டு அப்பு அப்பிட்டு வரத விட்டுட்டு சிரிச்சிகிட்டே ஓடி வந்துட்டாராம். ரொம்ப தியாகின்னு நெனப்பு மனசுல.//
நீங்க ரொம்ப நல்லவருங்க.
ரொம்ப நல்ல நண்பன். எவளவோ மனசுல இருந்தா இப்படி சொல்லியிருப்பான். வளர்ந்தவர் உண்மைலேயே வளர்ந்தவர் தான். நிருபிட்சுட்டார்.//
அவரும் உங்க ஊருதான் ஆனா பழைய முன்னாடி இல்ல
அது சரி said...
//
சரின்னு போயி முதல்வர் வீட்டு காலிங் பெல்ல அடிச்சேன், வெளில வந்தாரு உன் பேரெண்ணன்னு கேட்டாரு,சொன்னேன் அடுத்த நிமிடம் கழுத்து பகுதியில் ஒரு நாளு அறை விழுந்தது.
//
என்னது அடிச்சாரா...நீங்க சொல்றது காலேஜ் பிரின்ஸிபலா இல்ல நர்சரி ஸ்கூல் அனுபவத்தை சொல்றீங்களா??
எந்த காலேஜ் பாஸூ அது?? ரொம்ப வித்தியாசமா இருக்கே....எங்க காலேஜூலெ எல்லாம் கைய வச்சா அப்புறம் அவருக்கு சாப்பிட கையிருக்காது...கழுவவும் கையிருக்காது...அரிசி வாங்க வேலையும் இருக்காது...குமுறிடுவோம் :0)))//
நாங்கெல்லாம் பயந்தாங்க்கொள்ளிங்க அது சரி
நன்றி
பழமைபேசி
டீவீஆர்
பூர்ணிமா சரண்
இதை படிப்பிங்களான்னு தெரியாது
இருந்தாலும் சொல்றேன்
சுஜாதாவோட ஸ்ரீரங்கத்து தேவதைகள் படிச்சிருக்கிங்களா...
அந்த மாதிரி ஒவ்வொருத்தரையும் characterise panni குனனலங்களோட விவரியுங்களேன்
நல்லா இருக்கும்...
உங்களோட narrative ஸ்டைல் நல்லா இருக்கு
சுரேஷ் said...
இதை படிப்பிங்களான்னு தெரியாது
இருந்தாலும் சொல்றேன்
சுஜாதாவோட ஸ்ரீரங்கத்து தேவதைகள் படிச்சிருக்கிங்களா...
அந்த மாதிரி ஒவ்வொருத்தரையும் characterise panni குனனலங்களோட விவரியுங்களேன்
நல்லா இருக்கும்...
உங்களோட narrative ஸ்டைல் நல்லா இருக்கு//
மிக்க நன்றி.
சுஜாதாவின் எழுத்துக்களை வாரப்பத்திரிகையில் படித்ததோடு சரி. நான் எழுத எந்த விதிமுறைகளையும் வைத்துக்கொள்வதில்லை, நீங்கள் சொல்வதை கவனத்தில் கொண்டு என்னை மேம்படுத்திக்கொள்கிறேன்.
தொடர்ந்து வருகை புரிந்து இடித்துரைக்க வேண்டுகிறேன்
hi kudukudupai,
i have become fan for ur writting keep it up
Post a Comment