Monday, November 3, 2008

மன்னாரன் கம்பெனியின் கட்டை வண்டி லோன் மென்பொருள் உருவான விதம்.

பங்கேற்றவர்கள் :
மன்னார் ஒனர் மன்னாரன் கம்பெனி.
ராகவன் சீனியர் ஆர்க்கிடெக்ட் மன்னாரன் கம்பெனி.
ஸ்டெல்லா புராஜக்ட் மேனேஜர் மன்னாரன் கம்பெனி
மென்கூலி நெ 1 முதல் 10 வரை.

தேவை: மன்னாரான் கம்பெனியில் வேலை பார்ப்வர்களுக்கு வட்டியில்லாத கட்டை வண்டி லோன் தருவது ஒரு வாடிக்கை. இதனால லோனு வாங்குன எல்லாரும் மன்னாரன் கம்பெனில விசுவாசமா வேல பாக்கிறாங்க. ஆனா இந்த லோனு யாருக்கு குடுத்தோம் ,குடுக்கல திருப்பி கட்டுனாங்களா கட்டலயான்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப செரமமா இருக்குது,கடன் வாங்கினவங்க வேலைல இருக்காங்களா இல்ல விட்டுட்டு சன்னாரன் கம்பெனிக்கி தாவிட்டாங்களான்னு தெரியல அதனால இதுக்கு ஒரு மென்பொருள் எழுதி தாங்க.

ஸ்டெல்லா: பண்ணிரலாம் மன்னார், மொத்தமா வருடத்துக்கு எத்தனை பேருக்கு லோன் தருவீங்க, எவ்ளோ லோன் தருவீங்க.

மன்னார்: குத்து மதிப்பா ஒரு 100 பேருக்கு தலா 500 ரூபாய் தருவோம்.இது ஒரு பத்து வருசமா நடக்குதே, நீங்க இன்னும் வாங்கலியா.

ஸ்டெல்லா: இல்ல மன்னார், எனக்கு இப்படி லோன் இருக்கிறதே தெரியாது. ஆனா இப்போ நம்ம மென்பொருள் எழிதிட்டா என்ன மாதிரி நிறைய பேருக்கு
உதவியா இருக்கும். ஆக பத்து வருடத்தில ஒரு 5 லட்சம் லோன் தர்ரோம் அத
டிராக் பண்ண ஒரு மென்பொருள் வேணும் அவ்ளோதானே செஞ்சுராலாம்

மன்னார்: எல்லாம் புரிஞ்சுடுச்சுல்ல பண்ணி கொடுங்க.

ஸ்டெல்லா: மன்னார் இதுக்கு 10 பேரு உள்ள டீமு வேணும், மொத்த பட்ஜெட் ஒரு ஒரு கோடியே அம்பது லட்சம் ஆகும் சார். ஒரு வருடம் ஆகும் புராஜக்ட் முடிய.

ராகவன்: லோன் அமவுண்டே வருசத்துக்கு அம்பதாயிரம் தான் ஆகுது, இதுக்கு ஒன்னரை கோடி எப்படி செலவு பண்றது.

மன்னார்: இப்ப இத மெயிண்டெய்ன் பண்ண அதோட கூட ஆகுது, பரவாயில்ல பண்ணிருங்க
-----------------------------------------------------------------------------------------------------------------------

ராகவன்: ஸ்டெல்லா நீங்க மன்னாரன் கம்பெனியோட எம்ப்லாயி டேட்டாபேசு, மத்த காம்போனெண்ட்ஸ்லாம் உங்க புராஜக்ட்ல பயன்படுத்திக்கங்க.

ஸ்டெல்லா: ஸ்யூர்

------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெல்லா: டீம் உங்க எல்லாருக்கும் புராஜக்டோட தேவை என்னான்னு நல்லா புரிஞ்சுதா

கூலி 1-10: நல்லா புரிஞ்சது

ஸ்டெல்லா: எம்பிளாயீஸ் இந்த லோன் அப்பிளை பண்றதுன்னா அதுக்கு பக்காவா ஒரு லாகின் (login) ஸ்கீரீன் ரெடி பண்ணனும். ஒகேவா. நீங்க என்ன பண்றீங்க இண்டர்னெட்ல தேடி எந்த லாகின் ஸ்கீரீன் நல்லா இருக்குன்னு சொல்லுங்க, யாரு நல்லா தேடுவா?

கூலிடு 2: நான் நல்லா தேடுவணண்டி.

------------------

4 மாதம் கடந்தது;

ஸ்டெல்லா: என்ன நீங்க கொடுத்த லாகின்,பாஸ்வோடு ஸ்கீரீன் புரோட்டோடைப் எதுவும் எனக்கு புடிக்கல இந்த ஸ்கீரின உடனே டெவலப் பண்ணுங்க மன்னார்கிட்டயும்,ராகவன் கிட்டயும் காமிச்சு நல்ல பேரு வாங்கனும். என்னோட புரமோசன் உங்களோட காண்டிராக்ட் எக்ஸ்டென்ஸன் எல்லாமே இதுல தான் இருக்கு. எவளோ நாள் ஆகும்.

கூலி 1-10 : ஒரு 4 மாதம் ஆகும் ஸ்டெல்லா.

ஸ்டெல்லா: சரி நாலு மாசத்துக்குள்ள நல்லா குவாலிட்டியா இந்த பீச்சரை டெவலப் பண்ணி கொடுக்கனும்.
------------------------------------

4 மாதம் கடந்தது;

ராகவன் : என்ன டெமோ காட்டுறீங்களா ஸ்டெல்லா?

ஸ்டெல்லா : ஆமாம் ராகவன் பசங்க ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. பாருங்க இந்த லாகின் ஸ்கீரீன

ராகவன் : லாகின் ஸ்கீரீனா. இது இண்டெனல் அப்பிளிக்கேசன் தானே, கம்பெனியோட இண்ரானெட் சிங்கிள் சைன் ஆன் தானே பயன்படுத்துவோம். இதத்தான் எட்டு மாதமா டெவலப் பண்ணீங்களா?

33 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல ..

நசரேயன் said...

எல்லா அலுவலகத்திலேயும் நடக்கிறது இதேதான்.
இப்படி வேலை பண்ணி தான் பாதி பேரு மஞ்ச நோட்டீஸ் கொடுத்தாங்களா?

பழமைபேசி said...

அந்தக் கொட்டாய்லயும் இதே படந்தானா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-)))))))

முரளிகண்ணன் said...

nalla irukku

விலெகா said...

அந்தக் கொட்டாய்லயும் இதே படந்தானா?

விலெகா said...

சூப்பரப்ப்ப்ப்ப்ப்பூ

RAMYA said...

Hi Mr. Kudukuduppaiyare,

Plese get me loan from Mannar and Company. i will give you some amount as a gift.

Nalla karpanai.


RAMYA

விஜய் ஆனந்த் said...

தொழில் ரகசியத்த இப்படி அம்பலப்படுத்திட்டீங்களே....

பழமைபேசி said...

//கூலிடு 2: நான் நல்லா தேடுவணண்டி.//

நூத்துக்கு நூறு; 100%

நசரேயன் said...

/*நான் நல்லா தேடுவணண்டி.*/
அந்த தேடுவண்டி இல்லனா என் வண்டி ஓடாது

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்

// நான் தான் முதல்ல //

கூலி நெ 1 ஆ

பழமைபேசி said...

வாக்களிப்பதை வாடிக்கையாகக் கொள்ளாத‌ வட அமெரிக்க வலைஞர் தளபதிக்குக் கண்டனங்கள்!

குடுகுடுப்பை said...

/நசரேயன் said...

எல்லா அலுவலகத்திலேயும் நடக்கிறது இதேதான்.
இப்படி வேலை பண்ணி தான் பாதி பேரு மஞ்ச நோட்டீஸ் கொடுத்தாங்களா?
/

இப்படியெல்லாம் நெஜமா நடக்குதா?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

அந்தக் கொட்டாய்லயும் இதே படந்தானா?


/
கொட்டயெல்லாம் இல்ல சும்மா படம் காட்டிரோம்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி முரளிகண்ணன்
/nalla irukku/
நன்றி

குடுகுடுப்பை said...

விலெகா said...

சூப்பரப்ப்ப்ப்ப்ப்பூ

நன்றி விலேகா

குடுகுடுப்பை said...

வாங்க RAMYA

/ Hi Mr. Kudukuduppaiyare,

Plese get me loan from Mannar and Company. i will give you some amount as a gift.

Nalla karpanai.


RAMYA//
லோன் வேணும்னா மன்னாரன் கம்பெனில வேல பாக்கனும். இல்லாட்டி கெடயாது

குடுகுடுப்பை said...

வாங்க விஜய் ஆனந்த்

// தொழில் ரகசியத்த இப்படி அம்பலப்படுத்திட்டீங்களே....//

இது எந்த ஊர்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

எனக்கு மருவாதியா அந்த 500 குடு..

பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எனக்கு மருவாதியா அந்த 500 (மில்லி) குடு..
//

இப்பெல்லாம் சாராயங் காச்சுறதே இல்லையாம் ஊர்ல... எல்லாம் சீமைச் சரக்குதானாம்.

புதுகை.அப்துல்லா said...

எல்லா அலுவலகத்திலேயும் நடக்கிறது இதேதான்.
இப்படி வேலை பண்ணி தான் பாதி பேரு மஞ்ச நோட்டீஸ் கொடுத்தாங்களா?

//

reppeeeettu

புதுகை.அப்துல்லா said...

annaa go and see here

http://blogintamil.blogspot.com/2008/11/blog-post_02.html

:))

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டுள்ளேன்..
வந்து நிதானமாக மாட்டிக்கொள்ளவும்..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பாருங்களேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

அண்ணே உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டுள்ளேன்..
வந்து நிதானமாக மாட்டிக்கொள்ளவும்..
விபரங்களுக்கு என்னுடைய பதிவை பாருங்களேன்..
http://urupudaathathu.blogspot.com/2008/11/blog-post.html

http://urupudaathathu.blogspot.com/ said...

///பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
எனக்கு மருவாதியா அந்த 500 (மில்லி) குடு..
//

இப்பெல்லாம் சாராயங் காச்சுறதே இல்லையாம் ஊர்ல... எல்லாம் சீமைச் சரக்குதானாம்.//////

எனக்கு சாராயம் தான் வேணும்...
அவ்வ்வ்வ்வ்

Mahesh said...

ஊட்டுக்கூடு வாசப்படி.... இங்கயும் அதே கெரகந்தே அங்கயுமு அதே கெரகந்தே... அய்யன் அப்ப‌ளையே சொல்லுச்சு... மாடுதானடா எங்க மேச்சா என்னன்னு... இல்லீங்கய்யா அந்தூரு மாடு முட்டாதாமான்னு சொன்னாங்க...

குடுகுடுப்பை said...

//உருப்புடாதது_அணிமா said...

எனக்கு மருவாதியா அந்த 500 குடு..//

மன்னாரன் கம்பெனில வேல பாக்கனுமுங்கோ.

குடுகுடுப்பை said...

//Mahesh said...

ஊட்டுக்கூடு வாசப்படி.... இங்கயும் அதே கெரகந்தே அங்கயுமு அதே கெரகந்தே... அய்யன் அப்ப‌ளையே சொல்லுச்சு... மாடுதானடா எங்க மேச்சா என்னன்னு... இல்லீங்கய்யா அந்தூரு மாடு முட்டாதாமான்னு சொன்னாங்க...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஷ்

நசரேயன் said...

/*
நசரேயன் said...

எல்லா அலுவலகத்திலேயும் நடக்கிறது இதேதான்.
இப்படி வேலை பண்ணி தான் பாதி பேரு மஞ்ச நோட்டீஸ் கொடுத்தாங்களா?
/

இப்படியெல்லாம் நெஜமா நடக்குதா?

*/
தெரியாதா உங்களுக்கு.. ஹும்ம்.. மாடு மேயக்கவருக்கு இதெல்லாம் எங்க தெரியும்

குடுகுடுப்பை said...

//தெரியாதா உங்களுக்கு.. ஹும்ம்.. மாடு மேயக்கவருக்கு இதெல்லாம் எங்க தெரியும்//
அப்ப ஒட்டகம் மேக்கிறவங்களுக்கு..

அண்ணன் வணங்காமுடி said...

இந்த மந்திரி ஒரு மென்பொருள் அமைப்பு kஉழுவை than நான் ரொம்ப காலமா தேடிகிட்டு eருந்தான். முகவரி சொலுங்க...