Sunday, November 16, 2008

வாரணம் ஆயிரமும் ஆவக்கா பிரியாணியும்

இந்த வாரம் நான் இருக்கிற Dallas,tx இருக்கிற இர்விங்கனூர் ஹாலிவுட் தியேட்டர்ல வாரணம் ஆயிரம் படம் போட்டிருந்தாங்க , ரிவீவ் எல்லாம் படிச்சதுக்கப்புறம் போகலாமா, வேண்டாமான்னு ஒரு குழப்பம்.

ஆனா கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போலாம்னு சொன்னப்போ பாப்பா இல்ல நாம தியேட்டருக்கு மூவி போகனும் , அங்கே ஸ்னாக்ஸ் சாப்பிடனும் அப்படின்னு சொல்லிட்டாங்க.

மாலை 5 மணிக்கு ஷோ கூட்டம் இருக்காதுன்னு நெனச்சேன், ஆனா போனப்ப முத ரோலதான் சீட் கெடச்சுது, முதல் பாதி வரை படம் எனக்கு பிடிச்சது, ரெண்டாவது பாதில ஹிந்திலேயெ பேசறது கொஞ்சம் வெறுப்பேத்துச்சு, ஒருவேளை அடுத்து கவுதம் எடுக்கப்போற ஹிந்திப்படத்தோட களம் சென்னைல இருந்தா அவங்க தமிழ்லயே பேசுவாங்களா இருக்குமோ என்னமோ.

தந்தை/மகன் பாசத்தை பிரமாண்டமாக காட்ட அமெரிக்கா ,ஆர்மி ரெண்டும் பயன்படுத்திருக்காருன்னு நெனக்கிறேன். சாதாரண களத்திலும் சொல்லமுடியும். மத்திய தர மக்களின் பாசம்/நம்பிக்கையை பிரமாண்டமா சொல்லிருக்காரோ என்னவோ.

என் மகள் பிரச்சனை பண்ணாம ரொம்ப ரசிச்சு பாத்தா. குருவில பயந்த மாதிரி பயப்படல.
--
தங்கமணி வேல பாக்கிற கம்பெனி பசங்க எல்லாமா சேந்து வாரணம் ஆயிரம் படம் போறதுக்கு முடிவு பண்ணி இண்டெர்னெட்ல டிக்கெட் புக் பண்ண முடிவு பண்ணிருக்காங்க, அதுல இருந்த ஒரு தெலுகுப்பையன் அந்த குரூப்புக்கு எங்க நமக்கும் வாரணம் ஆயிரம் புக் பண்ணிருவாங்களோன்னு பயந்து எனக்கு ஒரு ஆவக்கா பிரியாணி புக் பண்ணிருங்கன்னு ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.

33 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம

:))))))


குருவில பயந்த மாதிரி பயப்படல.
ஏன் குழந்தைய இப்படி டெர்ரர் படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க.

உருப்புடாதது_அணிமா said...

///ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.//////

அப்போ ஆவக்கா பிரியாணி கிடையாதா??

அவ்வ்வ்வ்வ்

உருப்புடாதது_அணிமா said...

///நாம தியேட்டருக்கு மூவி போகனும் , அங்கே ஸ்னாக்ஸ் சாப்பிடனும் ///

ஸ்நாக்ஸ் சாப்பிட எல்லாம் மூவியா??
பொண்ணு ரொம்ப சமர்த்து தான்

உருப்புடாதது_அணிமா said...

///ரெண்டாவது பாதில ஹிந்திலேயெ பேசறது கொஞ்சம் வெறுப்பேத்துச்சு, ////

நமக்கு புரியாத மொழியில பேசுனா வெறுப்பு வர தானே செய்யும் பிரதர்..
இதுக்கு எல்லாம் போய்....
அய்யோ அய்யோ..

உருப்புடாதது_அணிமா said...

///குருவில பயந்த மாதிரி பயப்படல.///

குருவிய பார்த்து நானே நாப்பது நாள் தூக்கம் வராம இருந்தேன் ..
பாப்பாவ அந்த மாதிரி ஹாரர் படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போகதீங்க..

rapp said...

நெஜமாவே, ஆவக்கா பிரியாணின்னு ஒரு படம் இருக்கா?

நசரேயன் said...

என்னோட படத்தை எடுத்திருக்கலாம் போல தெரியுது

கபீஷ் said...

"வாரணம் ஆயிரமும் ஆவக்கா பிரியாணியும்" நல்லாருந்துச்சு

குடுகுடுப்பை said...

rapp said...

நெஜமாவே, ஆவக்கா பிரியாணின்னு ஒரு படம் இருக்கா?

ஆமாங்க நெஜமாவே இருக்கு,இங்கே பிரியாணி அதிரடியா மணக்குது

புதுகை.அப்துல்லா said...

ஒருவேளை அடுத்து கவுதம் எடுக்கப்போற ஹிந்திப்படத்தோட களம் சென்னைல இருந்தா அவங்க தமிழ்லயே பேசுவாங்களா இருக்குமோ என்னமோ.
//


குடுகுடுப்பையார் டச் :)))

ஜீவன் said...

//ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.//


ஆவக்கா ஊறுகா கேள்வி பட்டு இருக்கேன் அதென்னது ?
ஆவக்கா பிரியாணி ? தெலுங்குல ஆவக்கானா என்ன ?


''நல்ல காமடி பதிவு''

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அமித்து அம்மா.

/குருவில பயந்த மாதிரி பயப்படல.
ஏன் குழந்தைய இப்படி டெர்ரர் படத்துக்கெல்லாம் கூட்டிட்டு போறீங்க/

மொத ஷோ, போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது அணிமா.

அப்போ ஆவக்கா பிரியாணி கிடையாதா??//

எனக்கும் பக்கத்து தியேட்டர்ல பாத்தப்புறம் தெரியும் அப்படி ஒரு பட்ம் இருக்குன்னு

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

என்னோட படத்தை எடுத்திருக்கலாம் போல தெரியுது

//

உங்கள பத்தி தனியா ஒரு பதிவா, வ.முல போட்டுருவோம்

குடுகுடுப்பை said...

புதுகை.அப்துல்லா said...

ஒருவேளை அடுத்து கவுதம் எடுக்கப்போற ஹிந்திப்படத்தோட களம் சென்னைல இருந்தா அவங்க தமிழ்லயே பேசுவாங்களா இருக்குமோ என்னமோ.
//


குடுகுடுப்பையார் டச் :)))

நன்றி அப்துல்லா

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

//ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.//


ஆவக்கா ஊறுகா கேள்வி பட்டு இருக்கேன் அதென்னது ?
ஆவக்கா பிரியாணி ? தெலுங்குல ஆவக்கானா என்ன ?


''நல்ல காமடி பதிவு''//

ஆவக்காய் ஊறுகாய் விக்கிற பொண்ணும், பிரியாணி விக்கிற பையனுக்கும் லவ்ஸாம் படம். ஆ.ஊறுகாய் பொண்ணு கனவில கோங்குரா ஊறுகாய் பொண்ணும், பிரியாணிப்பையனும் எப்படியும் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பாங்க. ஊறுகாய் போடறதுக்கு ஆவக்காய கோடலி வெட்டுற சீனு எப்படியும் இருக்கும். தமிழ்ல டப்பாகி வரட்டும்

Dr. சாரதி said...

ஹா...ஹா....ஹா.. சூப்பர்

T.V.Radhakrishnan said...

ha..ha...haaa.

நாநா said...

ஆகா மக்களோட கலைத்தாகத்துக்கு தீனி போடறது நம்ம தெலுகு சினி உலகம் தான். என்ன ஒரு காவியத் தரமான பெயர் - ஆவக்காய் பிரியாணி.

நம்ம ஆளுங்க ஆம்கூர் பிரியாணி, தலப்பா கட்டு பிரியாணின்னெல்லாம் படம் எடுக்கப் போறாங்க.

சொல்லி வச்ச மாதிரி எல்லாரும் இடைவேளைக்கப்பறம் படம் தொங்குதுன்னு சொல்றாங்க.

Anonymous said...

அடியே கொல்லுதே பாட்டுல கதாநாயகி ரோட்டு பைப்புல தண்ணி குடிப்பாங்க. உங்க ஞாபகம் வந்துது

நசரேயன் said...

/*
அடியே கொல்லுதே பாட்டுல கதாநாயகி ரோட்டு பைப்புல தண்ணி குடிப்பாங்க. உங்க ஞாபகம் வந்துது
*/
அவரை நீங்க மாடுன்னு சொல்லுறீங்க அப்படித்தானே!!

கானா பிரபா said...

// தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம//

;-) kusumbu

தமிழ்ப்பறவை said...

//// தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம//

;-) kusumbu//
என்ன கொடுமை சார் இது...?!

Indian said...

//அடியே கொல்லுதே பாட்டுல கதாநாயகி ரோட்டு பைப்புல தண்ணி குடிப்பாங்க. உங்க ஞாபகம் வந்துது//

Repeat!!!!...

RAMYA said...

//
ஒரு முன்னெச்சரிக்கை மெயில் அனுப்பிருக்காரு, அந்த மெயில் லிஸ்ட்ல இருந்த தமிழ்ப்பையன் ஒருத்தரு எனக்கு ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம
//


இதென்னங்க சர்தார்ஜி ஜோக்ஸ் மாதிரி இருக்கு? தமிழ் பையன் சர்தார்ஜி ஆக இருந்து தமிழில் convert ஆனவரோ? சந்தேகமாகவே இருக்குதுப்பா. அப்போ வாரணம் ஆயிரம் சில விஷயங்களை தவிர நல்லா இருக்குன்னு Cerrtificate கொடுத்து இருக்கிங்கன்னு சொல்லுங்க. குடுகுடுப்பையாரே சினிமாவை விட உங்கள் ரசனை மற்றும் அலசி ஆராய்ந்த விதம் மிகவும் அருமையாக இருக்கிறது.

அருமை, அருமை, அருமை

ரம்யா

RAMYA said...

///ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.//////

அப்போ ஆவக்கா பிரியாணி கிடையாதா??

அவ்வ்வ்வ்வ்//

ஏன் ஏன் எப்படி, நல்லாவா இருக்கு, பிரியாணின்னு சொல்லோக்கூடதே, உடனேவா?

ரம்யா

RAMYA said...

///நாம தியேட்டருக்கு மூவி போகனும் , அங்கே ஸ்னாக்ஸ் சாப்பிடனும் ///

ஸ்நாக்ஸ் சாப்பிட எல்லாம் மூவியா??
பொண்ணு ரொம்ப சமர்த்து தான்
//

நீங்க அப்போ படம் பார்க்கத்தான் போவியளா? ராகவன் வேறே மாதிரி சொன்னாரே?

ரம்யா

RAMYA said...

///குருவில பயந்த மாதிரி பயப்படல.///

குருவிய பார்த்து நானே நாப்பது நாள் தூக்கம் வராம இருந்தேன் ..
பாப்பாவ அந்த மாதிரி ஹாரர் படத்துக்கு எல்லாம் கூட்டிட்டு போகதீங்க..
//

குருவிய பார்த்து 40 நாட்கள் உருப்படாதது அணிமா அவர்கள் துங்கலையாம். ஏன்ன அந்த குருவிய எப்படி சுடாம வந்தோம்ன்னு ஒரே கவலையாம். அதனால் தான்.....

ரம்யா

RAMYA said...

//ஒரு சிக்கன் பிரியாணி ஒன்னு அப்படின்னு ரிப்ளை பண்ணிட்டாரு,ஆவக்கா பிரியாணி ஒரு தெலுங்கு படம்னு தெரியாம.//


ஆவக்கா ஊறுகா கேள்வி பட்டு இருக்கேன் அதென்னது ?
ஆவக்கா பிரியாணி ? தெலுங்குல ஆவக்கானா என்ன ?


''நல்ல காமடி பதிவு''

//


ஜீவன் ஆவக்காய் என்றால் மாங்காய் தான். மாங்காயைத்தான் ஆந்திராவிலே ஆவக்காய் என்று கூறுவார்கள்.

ரம்யா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
Dr.சாரதி
டிவீஆர்
நாநா
சின்ன அம்மினி
கானாபிரபா
தமிழ்ப்பறவை
இண்டியன்
ரம்யா.

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!

r.selvakkumar said...

ஆவக்கா பிரியாணி மாதிரியே சுவையான பதிவு