கிரீமி லேயர் பற்றின கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பதிவுகள் இருக்கும்போது நான் இங்கே சற்றே புதிதான கிரீமீ லேயர்.
பற்றி முன் வைக்கலாம் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் இட ஒதுக்கீடு 69% சதவீதம் உள்ளது, கிட்டதட்ட, அப்பா முதல் பேரன் வரை இந்த பலன் அனுபவிக்கப்பட்டு வருகிறது இதன் பலனை கல்வி / மற்றும் வேலை வாய்ப்பில் தற்போது பெரும்பாலும் ஏற்கனவே பலன் அடைந்தவர்களின் வாரிசுகளே அதிகம் பலன் பெறும் நிலை கண்கூடு.
குறிப்பாக எனது அப்பா, நான் ஆகியோர் இட ஒதுக்கீட்டீன் மூலம்
பயனடைந்தோம், எனது வாரிசுகளுக்கும் நான் இட ஒதுக்கீட்டை பயன் படுத்த முடியும். இதனால் பாதிக்கப்படுவது யார்? இதுவரை இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்காத இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க ஆசைப்படும் ஒருவன்.
இவன் ஏற்கனவே அதே சமுதாயத்தில் முன்னேறிய ஒரு வர்க்கத்துடன் போட்டி போட்டு தோல்வியை அடைகிறான்.
அவர்களுக்கு விட்டுக்கொடுப்பது யார் கடமை? ஏற்கனவே பலன் அடைந்தவர்கள் உடையது. ஆனால் நானகவே இருந்தாலும் எனக்கு கிடைக்கும் அந்த பலனை விட்டுத்தர மனமிருக்காது.
தற்போது உள்ள கிரீமி லேயர் , பொருளாதார அடிப்படையை உள்ளே கொண்டு வந்து காலியிடங்களாக்கி பொதுப்பிரிவின் கீழ் கொண்டு வந்து உயர் சாதியினர் பலனடைய நடக்கும் சதி என கூறி கூடாது என்கிறோம்.
எனது எண்ணத்தில் தோன்றும் கிரீமி லேயர் இதுதான்.
இப்போதுள்ள 69% சதவீத இட ஒதுக்கீட்டை குறைக்காமல், ஒரு முறை இட ஒதுக்கீட்டின் பலன் அடைந்தவரின் வாரிசுகள் இந்த 69% சதவீதத்தில் பின் வரிசையில் இருக்கட்டும். இதனை அமல்படுத்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
உதாரணத்திற்கு 50 சதவீத இடம் முதல் முறை பயனாளிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டால், மீதி உள்ள 19 சதவீத இடத்தை வாரிசு பயனாளிகள் அனுபவிக்கட்டும். கிடைக்காத வாரிசுகள் பொதுப்பிரிவில் போட்டி போடட்டும். இதில் உயர் சாதியினர் சதி என் கூற வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.
இதை விடுத்து மீண்டும் மீண்டும் அனுபவித்தவர்களே அனுபவித்தால் , பிற்படுத்தபட்ட /தாழ்த்தப்பட்ட வகுப்பில் மற்றுமொறு உயர்சாதி வர்க்கம் உருவாகுவதை தடுக்க முடியாதென்றே தோன்றுகிறது
சமூக நீதி வெற்றி பெற வெற்றி பெற்றவர்கள் வழி விட்டு நிற்பதே அதன் முதற்படி என நான் நினைக்கிறேன்.

34 comments:
:)
Dr Bruno, Please answer !
:))))))
//உதாரணத்திற்கு 50 சதவீத இடம் முதல் முறை பயனாளிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டால், மீதி உள்ள 19 சதவீத இடத்தை வாரிசு பயனாளிகள் அனுபவிக்கட்டும். கிடைக்காத வாரிசுகள் பொதுப்பிரிவில் போட்டி போடட்டும்//
69 சதவிதத்தையும் ஏழை பிற்படுத்தப்பட்டவருக்கு தருவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை
ஆனால்
அந்த இடங்களுக்கு ஏழை பிற்பட்ட மாணவர்களிடமிருந்து போதிய மாணவர்கள் இல்லையென்றா
அந்த இடங்களை
அனைத்து பிற்பட்ட மாணவர்களை வைத்து நிரப்ப சம்மதமா
--
இந்த கேள்விக்கு பதிலளியுங்கள்
Dr. Bruno,
இங்கே ஏழை பிற்பட்டவர் பற்றி பேசப்படவேயில்லை.. முதல் தலைமுறைக்கு first prioritity.. என்றே சொல்லியிருக்கிறார்.. யோசனை நன்றாகத்தான் உள்ளது.. செயல்முறை எவ்வளவு கடினம் என்பது புரிந்துக்கொள்ளவேண்டிய விஷயம்.. நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் நன்மையைவிட தீமையே உண்டாகும் கிறுத்தவர்களுக்கு கொடுத்த 3.5% உள் ஓதுக்கீடு போல..
ஆஹா, இதுக்கு எதுனா கருத்து சொல்ல போய் நம்மள பிரிச்சி மேஞ்சுடுவாங்க..
அதனால அப்பீட்டு
கிரீமி லேயர்
தமிழாக்கம் ப்ளீஸ்.
இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?
http://kuzhali.blogspot.com/2006/05/blog-post_21.html
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?
http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html
//அந்த இடங்களுக்கு ஏழை பிற்பட்ட மாணவர்களிடமிருந்து போதிய மாணவர்கள் இல்லையென்றா
அந்த இடங்களை
அனைத்து பிற்பட்ட மாணவர்களை வைத்து நிரப்ப சம்மதமா//
அதற்காகத்தான் பின் வரிசையில் முன்னமே பலன் பெற்றவர்கள்.கண்டிப்பாக 69% இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் இல்லை. பலனடைந்தவர்கள் விட்டுகொடுப்படன் மூலம் உண்மையான சமூக நீதியை இன்னும் சில ஆண்டுகளில் எட்ட முடியும்.
100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவில் எந்த சமூகமும் பாதிக்கப்படாமல் முன்னேற்றத்தை கொண்டுவருவது நாம் மனது வைத்தால் சாத்தியமே. 30 கோடிக்கு குறைவாக உள்ள அமெரிக்க மக்களுக்கு உள்ள டாக்டரின் எண்ணிக்கையை விட 100 கோடி உள்ள நம் நாட்டில் குறைவு. பொருளாதாரத்தில் முன்னேறினால் யாவர்க்கும் விரும்பும் வேலை சாத்தியமே.
அதைத்தான் கலைஞர் rural areas reservation, டிகிரீ படிக்காதவர் இருக்கும் வீட்டில் டீகிரீ படிக்க விரும்பும் மாணவனுக்கு சலுகை என்றெல்லாம் சொல்கிறார்.பல விஷயங்களில் கலைஞரின் செயல்பாடுகள் பிடிக்காத எனக்கு..ஒட ஒதுக்கீட்டில் அவர் அணுகுமுறைகள் பிடிக்கும்
//. இல்லையென்றால் நன்மையைவிட தீமையே உண்டாகும் கிறுத்தவர்களுக்கு கொடுத்த 3.5% உள் ஓதுக்கீடு போல..//
3.5 இடப்பங்கீடு கிருத்த்வர்களுக்கு நன்மையே.
அதை முறையாக அளிக்காததால் தான் கெடுதல் போன்ற தோற்றம் ஏற்பட்டது
அந்த இடப்பங்கீடு முறையாக அளிக்கப்படாத இடங்கள்
1. 2008 மருத்துவ பட்டமேற்படிப்பு நுழைவு தேர்வு
2. கன்னியாகுமரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம்
--
முதலாவது விஷயம் குறித்து என் பதிவில் எழுதியிருக்கிறேன். அந்த கலந்தாய்வு விதிமுறைகளின் படி நடக்காததே பிரச்சனை. அதை தவிர்க்க (அதாவது முறையாக அளிக்க) வழி உள்ளது.
--
இரண்டாவது பிரச்சனை கொஞ்சம் சிக்கலானது
அடுத்து வேலூர் மாவட்டத்தில் இதனால் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவார்கள்
அப்பொழுது என்ன நடக்கிறது என்று பார்ப்போம்
--
முறையாக, அரசு விதிகளின் படி கடைபிடிக்கப்பட்ட உள் இடப்பங்கீட்டினால் கிருத்தவர்களுக்கு நன்மையே எனபதற்கு ஆதாரம் 2008 மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் தேர்வாணவர்கள் பட்டியல்
இடஒதுக்கீட்டில் இந்த க்ரீமிலேயர் பிரச்சினையைப்போல குழப்பும் பிரச்சினை வேறெதுவும் இல்லை :(
எனக்கு சுத்தமா தெரியாது ....
//AMIRDHAVARSHINI AMMA said...
கிரீமி லேயர்
தமிழாக்கம் ப்ளீஸ்.//
வசதியுள்ள பிற்படுத்தப்பட்டோர் அடுக்கு!
//
இப்போதுள்ள 69% சதவீத இட ஒதுக்கீட்டை குறைக்காமல், ஒரு முறை இட ஒதுக்கீட்டின் பலன் அடைந்தவரின் வாரிசுகள் இந்த 69% சதவீதத்தில் பின் வரிசையில் இருக்கட்டும். இதனை அமல்படுத்துவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
//
இதையே தாங்க கோவி.கண்ணன் அண்ணாச்சி பதிவில நானும் சொல்லியிருந்தேன்.. ஜோசப் பால்ராஜ் அண்ணன் தெளிவா ஒரு பதிவே எழுதிருந்தாரு.
69% இட ஒதுக்கீடு அப்பிடியே இருக்கட்டும்..ஆனா, அதுல வறுமையில இருக்கற பிற்படுத்தப்பட்டவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே..வறுமையையும் ஒழிச்ச மாதிரி இருக்கும், இட ஒதுக்கீடும் கொடுத்த மாதிரியும் இருக்கும்...
ஆனா, க்ரீமி லேயர்னாலே ரொம்ப பேருக்கு கோவம் வந்துருது..இதுல முதல்வர் கருணாநிதியும் அடக்கம்..என்ன காரணம்னு அவர் இன்னும் தெளிவா சொல்லல... கேட்டா கிரீமி லேயர் ஒரு கிருமி லேயர்னு அடுக்கு மொழியில சூடு வைக்கிறாரே தவிர ஒண்ணும் வெளக்கம் சொன்ன மாதிரி தெரியல.
/*வசதியுள்ள பிற்படுத்தப்பட்டோர் அடுக்கு! */
ரெம்ப நாளா யோசிச்ச விஷயம். தகவலுக்கு நன்றி பழமை பேசி.
இந்த இட ஒதிக்கீடு பிரச்சனையை கி.பி 3000 குள்ளயாவது தீர்த்தா சரிதான்
// Dr. Bruno,
இங்கே ஏழை பிற்பட்டவர் பற்றி பேசப்படவேயில்லை.. முதல் தலைமுறைக்கு first prioritity.. என்றே சொல்லியிருக்கிறார்.. யோசனை நன்றாகத்தான் உள்ளது.. செயல்முறை எவ்வளவு கடினம் என்பது புரிந்துக்கொள்ளவேண்டிய விஷயம்.. நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.. இல்லையென்றால் நன்மையைவிட தீமையே உண்டாகும் கிறுத்தவர்களுக்கு கொடுத்த 3.5% உள் ஓதுக்கீடு போல..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாரத்
இதில் என்ன தீமை உண்டாகும், பலனடையும் அனைவரும் இந்த 69% இட ஒதுக்கீட்டில் உள்ள சாதியினரே. ஏற்கனவே பலனடைந்த இதே சாதியினர் பொதுப்பிரிவில் உயர் சாதியினரோடு போட்டி போட வேண்டிவரும்.
வருகைக்கு நன்றி உருப்புடாதது_அணிமா
/ ஆஹா, இதுக்கு எதுனா கருத்து சொல்ல போய் நம்மள பிரிச்சி மேஞ்சுடுவாங்க..
அதனால அப்பீட்டு//
உங்களின் பயம் நியாயமானதே
வாங்க கோவி.கண்ணன்
:)
Dr Bruno, Please answer !
உங்களிடம் நான் இந்த பதிவிற்கு பின்னூட்டம் நல்ல ஆலோசனை எதிர்பார்க்கிறேன்
வாங்க AMIRDHAVARSHINI AMMA
//கிரீமி லேயர்
தமிழாக்கம் ப்ளீஸ்.///
பழமைபேசி said...
எனக்கு சுத்தமா தெரியாது ....
//AMIRDHAVARSHINI AMMA said...
கிரீமி லேயர்
தமிழாக்கம் ப்ளீஸ்.//
வசதியுள்ள பிற்படுத்தப்பட்டோர் அடுக்கு!//
பழமை பேசி அண்ணன் சொல்வது இன்றைக்கு வழக்கில் கொண்டுவர நினைக்கும் கிரீமி லேயர்.
என்னுடைய பதிவின்படி கிரீமி லேயர், ஒருமுறையாவது இட ஒதுக்கீட்டின் மூலம் பலன் அடைந்தவர்கள், பொருளாதாரம் கணக்கில் இல்லை.
வாங்க Anonymous said...
இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?
http://kuzhali.blogspot.com/2006/05/blog-post_21.html
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?
http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html
கண்டிப்பாக படிக்கிறேன்
ஜோசப் பால்ராஜ் அண்ணன் தெளிவா ஒரு பதிவே எழுதிருந்தாரு.
//
ஜோசப் அண்னன் பதிவு எழுதுனாருன்னு சொல்லுங்க தெளிவா எழுதுனாரான்னு எல்லாரும் சொல்லனும் :)
அப்புறம் அந்த பதிவில் அந்தக் கருத்தை எதிர்த்து நான் பின்னோட்டம் போட்டு இருந்ததைப் பாராட்டி ஓரு அனானி என் பதிவிற்கு வந்து துலுக்கன்னு என்னை சாதி பேரச்சொல்லி அன்பா பாராட்டிட்டு போனாரு :)))
வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
// அதைத்தான் கலைஞர் rural areas reservation, டிகிரீ படிக்காதவர் இருக்கும் வீட்டில் டீகிரீ படிக்க விரும்பும் மாணவனுக்கு சலுகை என்றெல்லாம் சொல்கிறார்.பல விஷயங்களில் கலைஞரின் செயல்பாடுகள் பிடிக்காத எனக்கு..ஒட ஒதுக்கீட்டில் அவர் அணுகுமுறைகள் பிடிக்கும்//
கிராமப்புர இட ஒதுக்கீடு நல்ல விசயம். நான் கேட்பது இட ஒதுக்கீட்டின் மூலம் பலன் அடைந்த நாம், நமது பக்கத்து வீட்டுக்கு கிடைக்கும் நன்மையை விட்டுக்கொடுக்காமல் உயர்சாதிக்காரனை ஏன் குறை சொல்லவேண்டும்.
நான் கிராமத்தான் தான் ஆனாலும் என் தந்தை ஆசிரியர். என்னைப்போல சில ஆசிரியர்,மற்றும் மருத்துவரின் குழந்தைகளே எங்கள் ஊரில் இட ஒதுக்கீட்டின் பலனை அடைந்தோம், கிரீமீலேயர் இல்லாவிட்டால் அடுத்த முறையும் எங்களுக்குத்தான். இது நியாயமா?
வருகைக்கு நன்றி புருனோ
நிறைய புள்ளி விவரங்கள் வைத்துள்ளீர்கள். இட ஒதுக்கீட்டில் முதல் முறை பயனாளிகள் எவ்வளவு பேர் என ஒர் ஆய்வு செய்யுங்கள்.
ஒரு சுய விமர்சனம் இன்றைய அவசியத்தேவை
ஆஹா, இதுக்கு எதுனா கருத்து சொல்ல போய் நம்மள பிரிச்சி மேஞ்சுடுவாங்க..
அதனால அப்பீட்டு
//
என்னைய ஏற்கனவே மேஞ்சுட்டாங்க. நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது??
இங்க உங்கள மாதிரியே நோ கருத்து
:))))))))))))))))))))))
வாங்க கயல்விழி
// இடஒதுக்கீட்டில் இந்த க்ரீமிலேயர் பிரச்சினையைப்போல குழப்பும் பிரச்சினை வேறெதுவும் இல்லை :(//
குழப்பம் இன்றி தெளிவு இல்லை.
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
உயர்சாதியினர் இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் முன்னேற்றம் தடைபடவில்லை. காரணம் அடிப்படை வசதி/அறிவு அவனை காப்பற்றுகிறது. அதேபோல் நான் முன்வைக்கும் கிரீமீலேயர் முறையில் இவர்கள் பாதிக்கப்பட்டாலும் முன்னெற்றம் தடைபடாது
வருகைக்கு நன்றி பழமைபேசி
//எனக்கு சுத்தமா தெரியாது ....//
தெரிந்துகொள்வோம்
வாங்க அது சரி
/இதையே தாங்க கோவி.கண்ணன் அண்ணாச்சி பதிவில நானும் சொல்லியிருந்தேன்.. ஜோசப் பால்ராஜ் அண்ணன் தெளிவா ஒரு பதிவே எழுதிருந்தாரு.
69% இட ஒதுக்கீடு அப்பிடியே இருக்கட்டும்..ஆனா, அதுல வறுமையில இருக்கற பிற்படுத்தப்பட்டவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே..வறுமையையும் ஒழிச்ச மாதிரி இருக்கும், இட ஒதுக்கீடும் கொடுத்த மாதிரியும் இருக்கும்...
ஆனா, க்ரீமி லேயர்னாலே ரொம்ப பேருக்கு கோவம் வந்துருது..இதுல முதல்வர் கருணாநிதியும் அடக்கம்..என்ன காரணம்னு அவர் இன்னும் தெளிவா சொல்லல... கேட்டா கிரீமி லேயர் ஒரு கிருமி லேயர்னு அடுக்கு மொழியில சூடு வைக்கிறாரே தவிர ஒண்ணும் வெளக்கம் சொன்ன மாதிரி தெரியல.//
நானும் அங்கெல்லாம் பின்னூட்டமிட்டேன். அவர்கள் குற்றச்சாட்டு, உயர் சாதியினர் எடுத்துகொள்வர் என்பதே. நான் வைக்கும் இந்த தீர்வில் அவர்கள் இல்லவே இல்லை.
இங்கே தேவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே
வாங்க புதுகை.அப்துல்லா
//
ஆஹா, இதுக்கு எதுனா கருத்து சொல்ல போய் நம்மள பிரிச்சி மேஞ்சுடுவாங்க..
அதனால அப்பீட்டு
//
என்னைய ஏற்கனவே மேஞ்சுட்டாங்க. நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது??
இங்க உங்கள மாதிரியே நோ கருத்து
:))))))))))))))))))))))
//
பரவாயில்லை விடுங்கள். நேரடியாக பேசிக்கொள்வோம்
வாங்க நசரேயன் said...
/*வசதியுள்ள பிற்படுத்தப்பட்டோர் அடுக்கு! */
ரெம்ப நாளா யோசிச்ச விஷயம். தகவலுக்கு நன்றி பழமை பேசி.
// இந்த இட ஒதிக்கீடு பிரச்சனையை கி.பி 3000 குள்ளயாவது தீர்த்தா சரிதான்
//
மனசு வெச்சா தீர்க்கலாம்.
குடுகுடுப்பை said...
பரவாயில்லை விடுங்கள். நேரடியாக பேசிக்கொள்வோம்
//
பேசலாம் கொஞ்சம் செலவாகும்...பரவாயில்லையா???
புதுகை.அப்துல்லா said...
ஆஹா, இதுக்கு எதுனா கருத்து சொல்ல போய் நம்மள பிரிச்சி மேஞ்சுடுவாங்க..
அதனால அப்பீட்டு
//
என்னைய ஏற்கனவே மேஞ்சுட்டாங்க. நானும் வலிக்காத மாதிரி எவ்வளவு நேரந்தான் நடிக்கிறது??
இங்க உங்கள மாதிரியே நோ கருத்து
:))))))))))))))))))))))
////////////
மேஞ்சுட்டாங்களா?? எங்க எப்போ??
ஐயகோ என்ன கொடுமை இது ??
நல்ல வேளை உண்மைய சொன்னீங்க..
நான் கூட எதாவது கருத்து சொல்லி வெக்கலாம்னு வந்தேன் ...
நல்ல வேளை காப்பாதிட்டீங்க ...
நன்றியோ நன்றி...
நன்றி சொல்ல உனக்கு , வார்த்தை இல்லை எனக்கு ... ( வாயில வெண்குழல்வத்தி , அதனால தான், வேற ஒன்னும் மேட்டர் இல்ல )
//புதுகை.அப்துல்லா said...
பேசலாம் கொஞ்சம் செலவாகும்...பரவாயில்லையா???//
செல்போன் நம்பர இமெயில் பண்ணுங்க பேசுவோம்.
இந்த பிரச்சனையப் பத்தி படிச்சலே தல சுத்துது.
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு கொக்கி போட்டிருக்கேன். வந்து பாருங்க.
என் விளக்கங்க்ளை படித்து ஆதாரங்களை பார்த்து ”இந்த கிரீமீலேயரை நான் ஆதரிக்கவில்லை,” என்று உங்கள் முடிவை மாற்றியதற்கு நன்றிகள் பல
//நான் நாயரை எதிர்க்கிறேன். கிரிமீ லேயர் மூலம் உயர் சாதியினர் உள்ளே வர அனுமதிக்க சொல்லவில்லை, பலனடையாத பிற்படுத்தப்பட்டவனை கொண்டு. வாருங்கள், தகுதி பாஸ் மார்க் கூட போதும்,80 கோடி மக்களில் ஆள் இல்லாவிட்டால் வாரிசு பலனாளிகள் எடுத்துக்கொள்வோம். கிரீம்லேயர் வேண்டாம் வேண்டுமானால் வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். //
நன்றி
Post a Comment