Thursday, October 16, 2008

டீயுசன் டீச்சர் விமர்சனம்

பதிவுலகில் இதற்கு முன்னர் டியூசன் டீச்சர் பற்றிய பதிவுகள் இருக்கிறதா என தெரியவில்லை. ஆனாலும் இந்த விமர்சனம் எழுத வேண்டும் என தோன்றியதால்.

நான் கிராமத்தில் 10 வகுப்பு வரை படித்து வளர்ந்தவன்.மேல் நிலைப்பள்ளி படிப்பிற்கு பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு மிகப்பிரபலமான பள்ளிக்கு சென்றேன். நான் எடுத்தது கணிதப்பிரிவு.

+1 படிக்கும்போது இரண்டு மாதங்கள் கழித்து அங்குள்ள ஆசிரியர்கள் குறிப்பாக வேதியியல்,இயற்பியல் ஆசிரியர்கள் தங்களிடம் டியூசன் வைக்க சொல்லி மறைமுக வேண்டுகோள், அதுவும் +2 பாடத்திற்கு இப்போதே டியூசன் சேராவிட்டால் செயல்முறை தேர்வில் மதிப்பெண் குறைக்கப்படும் என்ற பயம் மாணவர்கள் மத்தியில் ஊட்டப்பட்டது. கணித ஆசிரியர்கள் மிரட்ட முடியாது, ஆனால் வகுப்பு ஆசிரியர் நன்றாகவே கணிதம் எடுத்தாலும் நகரில் உள்ள பிரபல கணித டியூட்டர்களிடம் கூட்டம் அதிகமே அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்.

இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கும் டியூசன் வைக்கப்பட்டேன். + 1 படிக்கும்போது +2 பாடம் நடத்துவார்கள். என்ன கொடுமை இது ?.

+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் எனக்கும் வேதியியல் ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தது, டியூசன் செல்வதை நிறுத்திவிட்டேன்.

தேர்வு நேரத்தில் டைபாய்டு வந்ததால் +2 பொதுத்தேர்வு எழுதவில்லை, பின்னர் தனித்தேர்வராக அதே பள்ளியில் வேதியியல் செயல்முறை தேர்வு எழுதும்போது டியூசன் காசெல்லாம் முழுசா கட்டினியா எனவும் கேட்டார். வந்தவரை கட்டினேன் என்றேன்.ஆனால் அதற்காக மதிப்பெண்ணெல்லாம் குறைத்ததாக தெரியவில்லை.

இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.

இதற்கு காரணம் யார்? நமது கல்வி முறையா? பெற்றோர்களா? எதற்காக பின்னர் பள்ளிக்கூடங்கள் ?

ஆசிரியர்கள் சமுதாயத்தின் ஒளி விளக்கு என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது. இந்த நேரத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

44 comments:

ஆயில்யன் said...

//இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.//

கண்டிப்பா விடை கண்டுதான் ஆகணும்!

ஒரு காலத்தில தம்பிள்ளைங்க நிறைய மார்க்கு வாங்கணும்ன்னு ஆரம்பிச்ச விசயமா எனக்கு இது புரிபடுது ஆனாஇன்னிக்கு நிலைமையில பசங்களுக்கு டியூசன் அப்படிங்கறது குழந்தைகள் காப்பகமாகிடுச்சு! :(

Anonymous said...

விட்டு தள்ளுங்க தலைவா. இதெல்லாம் காலம் காலமாக நடந்து தான் வருகிறது.

பழமைபேசி said...

PazamaiPesi is on transit... Tution is intended only for students who needs extra care.... It's been misused...

நசரேயன் said...

ஒரு வேளை வீட்டிலே நம்ம கொடுமை தாங்க முடியாம எங்கயாவது தொலைந்து போகட்டும்னு டியூஷன் அணுப்பி விடுறாங்களோ என்னவோ :):)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.//

டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.?

Anonymous said...

tution teacher padathukku vimarsanamnnu vanthaa ippadi aemaathitteenkalae

rapp said...

same blood:(:(:(

rapp said...

//+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார்//

அடப்பாவமே:(:(:( நான்கூட இதே மாதிரி ஒன்னு எழுதனும்னு நெனச்சிருந்தேன், நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்:):):)

rapp said...

//டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.?//

என் ரங்கமணிகிட்ட ஒருதரம் இந்த டியூஷன் மேனியா பத்தி சொன்னா அவரு நம்பவே இல்ல:(:(:( நம்ம ஊரில் கூட பரவாயில்லை, தில்லி மும்பையில் எல்லாம் இன்னும் ஜாஸ்தியாமே, கட்டணமும் எக்கச்சக்கமாமே:(:(:(

அது சரி said...

ட்யூசன் மேனியாவுக்கு முக்கிய காரணம் பெற்றவர்களின் அறியாமையே என்று எனக்கு தோன்றுகிறது. காலையில் எட்டு மணிக்கு பள்ளிக்கு சென்று வந்த பிள்ளை மாலை ஆறு மணிக்கு வீடு வந்து மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். வீட்ல இருந்தா எங்கியாவது விளையாட ஓடிருவான்(ள்) அப்பிடின்னு காசை வீண் பண்ணி எதுனா ட்யூஷன்ல சேத்துவிட்றாங்க!

காலைல எட்டு மணிலருந்து நைட்டு எட்டு மணி வரை படிப்பு, படிப்புன்னு படிச்சதையே படிச்சிட்டு இருந்தா படிப்புல எப்படி ஆர்வம் வரும்? இதுல 80 மார்க் எடுக்கிற பையனை நூறு எடுக்கணும்னு தொந்தரவு பண்ற பேராசை பெற்றோரும் உண்டு..

இந்தியாவில் பள்ளி செல்வது மிகக் கொடுமையான விஷயம். அஞ்சி சப்ஜெக்டுக்கு அஞ்சி டீச்சர். ஒவ்வொருத்தரும் ஹோம் வொர்க் கொடுத்தா, எப்பிடி செய்யறது?? அப்புறம் மறு நாளு அஞ்சி டீச்சரும் மொறை வச்சி நம்மளை சுளுக்கு எடுக்கிறது...

வேணாம்..ஸ்கூல் டேஸை பத்தி இதோட நிறுத்திக்கிறேன்.. இல்லாட்டி நான் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கொலை வெறியனா ஆயிரப்போறேன்..

குடுகுடுப்பை said...

வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்

கண்டிப்பா விடை கண்டுதான் ஆகணும்!

//ஒரு காலத்தில தம்பிள்ளைங்க நிறைய மார்க்கு வாங்கணும்ன்னு ஆரம்பிச்ச விசயமா எனக்கு இது புரிபடுது ஆனாஇன்னிக்கு நிலைமையில பசங்களுக்கு டியூசன் அப்படிங்கறது குழந்தைகள் காப்பகமாகிடுச்சு! :(//

ஆமாங்க

குடுகுடுப்பை said...

வ்ருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்
//விட்டு தள்ளுங்க தலைவா. இதெல்லாம் காலம் காலமாக நடந்து தான் வருகிறது.//

வேற நான் என்ன பண்ண போறேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

குடுகுடுப்பை said...

வாங்க பழமைபேசி
/
PazamaiPesi is on transit... Tution is intended only for students who needs extra care.... It's been misused...//

புதுமை பேசி ஆயிட்டீங்க

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
//
ஒரு வேளை வீட்டிலே நம்ம கொடுமை தாங்க முடியாம எங்கயாவது தொலைந்து போகட்டும்னு டியூஷன் அணுப்பி விடுறாங்களோ என்னவோ :):)//

இருக்கலாம். உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயா.நீங்கதான் குழந்தைய டியூசனுக்கு கூட்டிட்டு போகனும்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அய்யா T.V.Radhakrishnan

//இன்றைக்கு பாலர் பள்ளிக்கு கூட டியூசன் வைக்கிறாங்க. என்னுடைய ஆதங்கம் என்னவென்றால் டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.? என்னுடைய அனுபவத்தை எழுதி இந்த கேள்விக்கு விடை காண ஆசை.//

என்கிட்டயே கேக்கறீங்களே

டியூசன் என்ற ஒரு விசய

குடுகுடுப்பை said...

வாங்க அனானி

// tution teacher padathukku vimarsanamnnu vanthaa ippadi aemaathitteenkalae//

அப்படி ஒரு படம் வந்துச்சா என்ன?

குடுகுடுப்பை said...

வாங்க ராப்

same blood:(:(:(

ஒரே ரத்தம்.

குடுகுடுப்பை said...

//+2 படிக்கும்போது ஒரு மாணவன் வேதியியல் பாடத்திற்கு ஆங்கிலம் எடுக்கும் ஆனால் வேதியியலில் நல்ல புலமை கொண்ட ஆசிரியரிடம் டியூசன் வைத்த காரணத்திற்காக கடுமையாக மிரட்டப்பட்டார்//

அடப்பாவமே:(:(:( நான்கூட இதே மாதிரி ஒன்னு எழுதனும்னு நெனச்சிருந்தேன், நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்:):):)

ரொம்ப நன்றி அக்கா

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி அது சரி

/இந்தியாவில் பள்ளி செல்வது மிகக் கொடுமையான விஷயம். அஞ்சி சப்ஜெக்டுக்கு அஞ்சி டீச்சர். ஒவ்வொருத்தரும் ஹோம் வொர்க் கொடுத்தா, எப்பிடி செய்யறது?? அப்புறம் மறு நாளு அஞ்சி டீச்சரும் மொறை வச்சி நம்மளை சுளுக்கு எடுக்கிறது...

வேணாம்..ஸ்கூல் டேஸை பத்தி இதோட நிறுத்திக்கிறேன்.. இல்லாட்டி நான் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கொலை வெறியனா ஆயிரப்போறேன்../

இப்ப மட்டும் என்ன வாழுதாம்

குடுகுடுப்பை said...

வாங்க உருப்புடாதது_அணிமா

சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் )

போட்டுருவோம்

தமிழ் அமுதன் said...

நான் +2 படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர், வேதியல் பாடத்திற்கும் சேர்த்து டியூஷன் எடுத்தார்.இதை வேதியல் ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை.அவர் டியூஷன் ஏதும் எடுக்க மாட்டார். ஆனால் விலங்கியல்,மற்றும் தாவரவியல் பொதுவாக அதிகம் டியூஷன் யாரும் வைத்து கொள்வதில்லை.ஆனால் புதிதாக வந்த தாவரவியல்
ஆசிரியர் விலங்கியல் ஆசிரியரையும் கூட சேர்த்துக்கொண்டு,டியூஷன் வைத்தால்தான் பிரக்டிகல் மார்க் முழுவதும் கிடைக்கும் என்று மாணவர்களை மிரட்டியே சேர்த்து விட்டார்.

நையாண்டி நைனா said...

/*சனிக்கிழமை எனக்கு ( உண்மையிலே )

அப்ப்ரைசல் இருப்பதால்,

மேலும் இரண்டு நாட்களுக்கு நோ பின்னூட்டம்.. பொருத்துகொள்ளுங்கள்..

( நான் போட மாட்டேன்... பட் எனக்கு நீங்க போடலாம் ) */

அப்படின்னா... உங்க டேமேஜர்ஸ் உங்களுக்கு உண்மைலேயே பின்ணுட்டம் போட போறாங்களா....
வாழ்த்துக்கள்

நசரேயன் said...

/*இருக்கலாம். உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயா.நீங்கதான் குழந்தைய டியூசனுக்கு கூட்டிட்டு போகனும் */
நீங்க சொல்லுறதுதான் நடக்கும் போல தெரியுது

குடுகுடுப்பை said...

ராப் சொன்னது

//டியூசன் என்ற ஒரு விசயம் ஏன் வந்தது அதன் அவசியம் என்ன.?//

//என் ரங்கமணிகிட்ட ஒருதரம் இந்த டியூஷன் மேனியா பத்தி சொன்னா அவரு நம்பவே இல்ல:(:(:( //

நீங்க சொன்னா எப்படி நம்புவாரு?:)



நம்ம ஊரில் கூட பரவாயில்லை, தில்லி மும்பையில் எல்லாம் இன்னும் ஜாஸ்தியாமே, கட்டணமும் எக்கச்சக்கமாமே:(:(:(

இந்த ஊரெல்லாம் எங்க இருக்குண்ணே எனக்கு தெரியாதுக்கா

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்

//நான் +2 படிக்கும் போது இயற்பியல் ஆசிரியர், வேதியல் பாடத்திற்கும் சேர்த்து டியூஷன் எடுத்தார்.இதை வேதியல் ஆசிரியர் கண்டுகொள்ளவில்லை.அவர் டியூஷன் ஏதும் எடுக்க மாட்டார். ஆனால் விலங்கியல்,மற்றும் தாவரவியல் பொதுவாக அதிகம் டியூஷன் யாரும் வைத்து கொள்வதில்லை.ஆனால் புதிதாக வந்த தாவரவியல்
ஆசிரியர் விலங்கியல் ஆசிரியரையும் கூட சேர்த்துக்கொண்டு,டியூஷன் வைத்தால்தான் பிரக்டிகல் மார்க் முழுவதும் கிடைக்கும் என்று மாணவர்களை மிரட்டியே சேர்த்து விட்டார்.//

நல்ல யோசனை. என்னோட வேதியல் ஆசிரியர் இன்னோரு பள்ளி வேதியல் ஆசிரியரோட கூட்டு. ஆனா ரெண்டு பேரும் திறமைசாலிகள்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி நையாண்டி நைனா

அது சரி said...

//
குடுகுடுப்பை said...

/இந்தியாவில் பள்ளி செல்வது மிகக் கொடுமையான விஷயம். அஞ்சி சப்ஜெக்டுக்கு அஞ்சி டீச்சர். ஒவ்வொருத்தரும் ஹோம் வொர்க் கொடுத்தா, எப்பிடி செய்யறது?? அப்புறம் மறு நாளு அஞ்சி டீச்சரும் மொறை வச்சி நம்மளை சுளுக்கு எடுக்கிறது...

வேணாம்..ஸ்கூல் டேஸை பத்தி இதோட நிறுத்திக்கிறேன்.. இல்லாட்டி நான் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கொலை வெறியனா ஆயிரப்போறேன்../

இப்ப மட்டும் என்ன வாழுதாம்

//

நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??

குடுகுடுப்பை said...

//நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??//

சுளுக்குதான் ஒருநாள் விட்டு ஒருநாள் எடுக்கிறாங்களே. அதுனாலதானெ கொலவெறி.
எப்பதான் இந்த மார்க்கெட் அடியைத்தொடும். தினம் ஒன்னு சொல்றார் பால்சன்.

அது சரி said...

//
குடுகுடுப்பை said...
//நீங்க நான் கொலைவெறியோட திரியறத சொல்றீங்களா இல்ல மக்கள் நமக்கு மொறை வச்சி சுளுக்கெடுக்கறத சொல்றீங்களா??//

சுளுக்குதான் ஒருநாள் விட்டு ஒருநாள் எடுக்கிறாங்களே. அதுனாலதானெ கொலவெறி.
எப்பதான் இந்த மார்க்கெட் அடியைத்தொடும். தினம் ஒன்னு சொல்றார் பால்சன்.

//

கவலைப்படாதீங்க தல,எப்ப பாட்டம் வருதோ அப்ப அடியை தொட்ரும் :0)

சீரியசா சொன்னா,

I think we are nearly there. It's unlikely it will further go down by a huge amount. But again, it won't pick up heavily. It's going to be plodding along for sometime, may be for the entire 2009. Mainly because the profits are going to be small, unlike the previous years. But the good thing is, expectations of a significant recession is already factored in share prices, so we are at the near bottom.

Again, I am not playing on long term. I am a short term player as I do only day trading. So, take my words with a pinch of salt. :0)

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம் பிள்ளைகள் நன்றாக படிப்பவர்களாகவே
இருந்தாலும்
பள்ளி ஆசிரியர்களின் மேல் வரும்படிக்கு (குறிப்பாக) ப்ரைவேட் பள்ளிகள் (அங்கெல்லாம் ஆசிரியர்களின் வருமானம் மிகக் குறைவு)
டியூசன் வைக்கிறார்கள்.

மேலும் டியூசன் படிக்கும் பிள்ளைகள் எல்லா சப்ஜெக்ட்டிலும் நல்ல மார்க் எடுப்பதாய் அல்லது தன்னிடம் டியூசன் படிக்கும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் நல்ல மார்க் போட்டு விடுவதாய் பள்ளி பிள்ளைகளிடம் ஒரு கருத்து நிலவுகிறது. இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை பள்ளி ஆசிரியர்கள் உருவாக்குகிறார்களா அல்லது மாணவர்கள் உருவாக்குகிறார்களா என்பது தெரியவில்லை.

இந்த பாஸ்மார்க் காரணத்தினாலே ஒரு வகுப்பில் 10 பேர் டியூசன் வைத்துக்கொண்டால் மீதம் அனைவருமே அந்த நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

எனக்கு கணக்கு மிகச் சுமாராய்தான் வரும். எங்கே 10ம் வகுப்பில் அவுட் ஆகிவிடுவோமோ என்று நினைத்தேன். டியூசன் பீஸ் கட்டும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லை. கடைசியாய் எனது கணக்காசிரியர் என் கணக்கு அறிவை பார்த்து பயந்து போய் எங்கே பிள்ளைகள் பெயில் ஆனால் அவருக்கு ஆவரேஜ் குறைந்துவிடுமோ என்று அஞ்சி(!) எனக்கும் என் போன்ற இன்னும் சிலருக்கும் ஃப்ரீ ட்யுசன் எடுத்தது ஒரு தனிக்கதை.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி AMIRDHAVARSHINI AMMA

//எனக்கு கணக்கு மிகச் சுமாராய்தான் வரும். எங்கே 10ம் வகுப்பில் அவுட் ஆகிவிடுவோமோ என்று நினைத்தேன். டியூசன் பீஸ் கட்டும் அளவிற்கு வீட்டில் வசதி இல்லை. கடைசியாய் எனது கணக்காசிரியர் என் கணக்கு அறிவை பார்த்து பயந்து போய் எங்கே பிள்ளைகள் பெயில் ஆனால் அவருக்கு ஆவரேஜ் குறைந்துவிடுமோ என்று அஞ்சி(!) எனக்கும் என் போன்ற இன்னும் சிலருக்கும் ஃப்ரீ ட்யுசன் எடுத்தது ஒரு தனிக்கதை.//

உங்கள் கணித ஆசிரியர் பாராட்டுக்குறியவரே

Anonymous said...

Hmmm.. Brought my memories back.. I was the only student in my 10th class not going for tuition.. My class teacher is the tuition master for all students within the class and he indirectly forced everyone. My parents are against tuition, and I was the class first or second always!! :-)

குடுகுடுப்பை said...

வாங்க அனானி


//Hmmm.. Brought my memories back.. I was the only student in my 10th class not going for tuition.. My class teacher is the tuition master for all students within the class and he indirectly forced everyone. My parents are against tuition, and I was the class first or second always!! :-)//

10 வதுக்கு எங்கப்பாதான் என்க்கு வகுப்பு ஆசிரியர். டியூசன்/கையேடு போன்றவைக்கு மிகப்பெரிய எதிரி அவர்.வாழ்த்துக்கள் முதலித்திற்கு

அது சரி said...

என்னது, மூணு நாளா ஆளக் காணோம்? இப்பிடி திடீர்னு உடுக்கை அடிக்காம விட்டா என்ன அர்த்தம்னேன்??

நாநா said...

நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?

நாநா said...

நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?

நாநா said...

நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?

நசரேயன் said...

ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர் விமர்சனம் எப்ப வரும் ?

குடுகுடுப்பை said...

// அது சரி said...

என்னது, மூணு நாளா ஆளக் காணோம்? இப்பிடி திடீர்னு உடுக்கை அடிக்காம விட்டா என்ன அர்த்தம்னேன்??

//

கொஞ்சம் வேளை அதிகம். விரைவில் நண்டு குழம்பு வருது.

குடுகுடுப்பை said...

டேய் நாநா

//நான் கூட இது ட்யூசன் டீச்சர் பட விமர்சனம்னு வந்தா ரொப சீரியசா எழுதி இருக்கீகளே?//

இதென்னாப்பு வம்பா இருக்கு. அப்படியே நீங்க எதுன எழுதறது.

குடுகுடுப்பை said...

//நசரேயன் said...

ஆமா, உண்மையான டியூஷன் டீச்சர் விமர்சனம் எப்ப வரும் ?//

அடுத்து வரப்போற சகீலா பட்ம் விமர்சனம் உங்க கனவில தென்பட்ட அப்புரம்..

Anonymous said...

எனது மகன் இங்கு (நைஜிரியாவில்) 9 ஆம் வகுப்பு படிக்கின்றார். 9 ஆம் வகுப்பு இங்கு பொது தேர்வாகும். இந்த வருடம் தான் இங்கு வ்ந்தேன். இங்கு அவருக்கு பிரென்ஞ், ஹோசா என இரண்டு புதிய பாடங்கள். வகுப்பறையிலேயே தனிப்பட்ட கவனம் செலுத்துக்றார்கள். ட்யூசன் என்ற விஷயமே இங்கு இல்லை. ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 பேர் தான் ப்டிக்கின்றார்கள். மாதா மாதம் பெற்றோர்கள் அவசியம் ஆசிரியரை சந்திக்க வேண்டும் என கூறுகின்றனர்.

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Raghavan

// எனது மகன் இங்கு (நைஜிரியாவில்) 9 ஆம் வகுப்பு படிக்கின்றார். 9 ஆம் வகுப்பு இங்கு பொது தேர்வாகும். இந்த வருடம் தான் இங்கு வ்ந்தேன். இங்கு அவருக்கு பிரென்ஞ், ஹோசா என இரண்டு புதிய பாடங்கள். வகுப்பறையிலேயே தனிப்பட்ட கவனம் செலுத்துக்றார்கள். ட்யூசன் என்ற விஷயமே இங்கு இல்லை. ஒரு வகுப்பிற்கு அதிகபட்சமாக 20 பேர் தான் ப்டிக்கின்றார்கள். மாதா மாதம் பெற்றோர்கள் அவசியம் ஆசிரியரை சந்திக்க வேண்டும் என கூறுகின்றனர்.//

நல்ல செய்தி.