கல்லூரியில் படிக்கும் போது விடுதி வாழ்க்கை, வழக்கம் போல வீட்ல வாங்கிட்டு வந்த காசு தீந்துபோச்சி. வாத்தியார் கடைக்கும்,சுருட்டண்ணன் கடைக்கும் போகனும்னா காசு வேணும், அடுத்த கட்ட நடவடிக்கையா உடனே ஊருக்கு போக விடுதி நண்பர்கள்கிட்ட கடன் வாங்கிட்டு வீட்ல போய் பணம் வாங்கிட்டு வரனும்.
அந்த பச்ச ஜீன்ஸ்காரன் வந்தான் டேய் நானும் வறேன்,திருச்சி வானொலி நிலையத்தில வேலை பாக்கிற அக்காகிட்ட எதையாவது பொய் சொல்லி காசு வாங்கனும்.
ஏன் காசு வாங்கி இந்த ஜீன்ஸ தொவக்கனுமா, இல்ல வேற ஜீன்ஸ் எடுக்கனுமா?
ராமநாட் (இராமநாதபுரம்)பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கோ/ திருச்சிக்கோ காரைக்குடி வழியாக செல்லலாம் செலவு குறைவு ஆனால் மிக மோசமான சாலை. இருவரும் மதுரை வழியாக திருச்சி செல்வது என்று முடிவு செய்து கையில் இருந்த காசும் போதுமானதாக இருந்ததால் மதுரை நோக்கி பயணம்.
அண்ணா நிலையத்தில இறங்கினோம், பச்ச ஜீன்ஸ் சொன்னான், அமெரிக்கன் காலேஜ் வரைக்கும் போயிட்டு வருவோம்னான். நடக்க ஆரம்பித்தோம், எங்களோட போதாத காலம் பார்க்க சென்ற நண்பன் இல்லை. திரும்பி நடந்து வந்தோம். பச்ச ஜீன்ஸ் திடீர்னு வழியில போன ஒரு ரிக்சா புடிச்சு அண்ணா நிலையம் போகச்சொன்னான். இறங்கியவுடன் ரிக்சாகாரன் கேட்ட 20 ரூபாயை கொடுக்கசொன்னான். அப்படியே ஒரு ரூபாய் கொடுன்னு வாங்கிட்டு, நீ வெயிட் பண்ணு நான் வரேன்னான்.
கொஞ்சம் நேரம் கழிச்சுட்டு வந்தான்.
எங்கடா போன,என்கிட்ட காசு முடிஞ்சு போச்சு 3 ரூபாய் தான் இருக்கு, உன்கிட்ட எவ்வளவுடா இருக்கு.நடந்தே வந்திருக்கலாமேடா 20 ரூபாய் வேஸ்ட்.ரிக்சா புடிச்சி வர்ற அளவுக்கு என்னடா அவசரம்.
சரி அதை விடு இப்ப ஒன்னும் இல்லடா. எல்லாம் காலி. அந்த 3 ரூபாய குடு நம்ம மதுரை வீரனுக்கு போன போட்டு 25 ரூபாய் வாங்கி திருச்சி போய் சேருவோம் அப்புறம் அக்காகிட்ட வாங்கி உனக்கு தரேன் நீ தஞ்சாவூர் போயிடலாம்.
போன் பண்ணான் ரெண்டாவது முறை மதுரை வீரன் கெடச்சிட்டான்.
டேய் வீரா நானும், குடுகுடுப்பையும் இருக்கோம், திருச்சிக்கு போக காசு இல்லடா ஒரு 25 ரூபா தேத்திக் குட்றா.
மாப்பிள்ள எங்க இருக்க,
அண்ணா பஸ் ஸ்டேண்டு பக்கத்தில இருக்க காயின் பூத்ல இருந்து பேசரேண்டா, மறக்காம் 25 ரூபா…
அங்கியே இரு வந்துடறேன்.
மதுரை வீரன் வந்தான், டேய் மக்கா எவ்ளொ நாள் ஆச்சு பாத்து, காலேஜ் எப்படிடா இருக்கு இந்த செமஸ்ட்டர் எழுதலாம்னு இருக்கேன் மாப்பிள்ளை. எல்லா பேப்பரையும் இதுல தூக்கிட்டு ஒரு சல்லயை கொடுத்துருவோம்.
மொதல்ல நீ அந்தப்பக்கம் வா அதுக்கு அப்புறம் சல்லையை குடுக்கலாம். இப்ப துட்டைக்குடு நாங்க திருச்சிக்கு சாயந்தரதுக்குள்ள போகனும்.
பொருடா பத்து ரூபாதான் பாக்கெட்ல இருக்கு எங்க மாமாகிட்டதான் வாங்கனும், காளவாசல் போகனும் போலாம்.
வீரன் மாமாகிட்ட எங்கள காட்டி 500 ரூபா வாங்கினான். மக்கா 500 கெடச்சிருக்கு இன்னைக்கி வேட்டதான். வாங்க மொதல்ல போய் ஒரு ரவுண்டு உடுவோம்.
ரெண்டாவது ரவுண்டு விரைவில்.
17 comments:
ரெண்டாவது ரவுண்டா? நல்லாயிருக்கு தலைவரே.
முதல் ரவுண்டு தீப்பொறி
ரெண்டாவது ரவுண்டு அடிக்கபோகும் குடுகுப்பையார்க்கு வாழ்த்துக்கள்
மூணாவது போனி ஆஜர்..
கல்லூரி சாலை .. கல்லூரி சாலை...( என்ன ஆச்சு, கல்லூரி நினைவுகளா??)
///கல்லூரியில் படிக்கும் போது விடுதி வாழ்க்கை,////
நான் அப்பவே வெளியில வீடு எடுத்து தங்கி படிச்சேன்..
//அந்த பச்ச ஜீன்ஸ்காரன் வந்தான் ///
யாரு இது?? எதுக்கு இந்த சஸ்பென்ஸ் ??
வருகைக்கு நன்றி கடையம் ஆனந்த்
//ரெண்டாவது ரவுண்டா? நல்லாயிருக்கு தலைவரே.//
நெசந்தானே சொல்லுதீய.
வருகைக்கு நன்றி நசரேயன்
//முதல் ரவுண்டு தீப்பொறி
ரெண்டாவது ரவுண்டு அடிக்கபோகும் குடுகுப்பையார்க்கு வாழ்த்துக்கள்//
நான் தீப்பொறி,ரவுண்டெல்லாம் உட்டு ரொம்ப நாளாச்சுங்கோ.
வருகைக்கு நன்றி அணிமா
/
கல்லூரி சாலை .. கல்லூரி சாலை...( என்ன ஆச்சு, கல்லூரி நினைவுகளா??)
/
ஆமாம் ஆமாம்.
//நான் அப்பவே வெளியில வீடு எடுத்து தங்கி படிச்சேன்..//
எனக்கென்னவோ ஹாஸ்டல்தான் புடிச்சது.
/
யாரு இது?? எதுக்கு இந்த சஸ்பென்ஸ் ??
/
அவரும் படிக்கிறார். நிறைய மிகைப்படுத்தி எழுதுகிறேன் அதுனாலதான்
/*வருகைக்கு நன்றி நசரேயன்
//முதல் ரவுண்டு தீப்பொறி
ரெண்டாவது ரவுண்டு அடிக்கபோகும் குடுகுப்பையார்க்கு வாழ்த்துக்கள்//
நான் தீப்பொறி,ரவுண்டெல்லாம் உட்டு ரொம்ப நாளாச்சுங்கோ.*/
சூடா இருக்குனு சொல்ல வந்தேன் :)
//சூடா இருக்குனு சொல்ல வந்தேன் :)//
பயணம் /அனுபவம் ரசிக்கும்படி எழுத முயற்சி செய்கிறேன். நெசமாவே இது ரசிக்கும்படி இருக்கும் பட்சத்தில் என்னுடைய சீனப்பயண அனுபவத்தையும் எழுதுகிறேன்
ஊக்கத்திற்கு நன்றி நசரேயன்
குடுகுடுப்பை இல்லை, இது பெரிய தவில் மாதிரி இல்ல இருக்கு.... பல விதமான நன்வோடைகள் இருக்கு அண்ணன்கிட்ட... அண்ணா, நாங்க பாக்கியசாலிக.... ரெண்டாவது சுத்து எப்ப?
காளவாசலா?? அங்க எங்க ரவுண்டு விடுறது? அதுக்கு அப்பிடியே ஒரு பஸ்ஸை பிடிச்சி பெரியார் பஸ் ஸ்டாண்டு பக்கம் போனாலும் ரீகல்ல ஒரு படத்தை பாத்துட்டு, ஆத்தா காப்பத்தும்மான்னு சொல்லிட்டு எதுனா ஒரு பார் பக்கம் ஒதுங்கலாம்.. அப்பிடியே மதுர மல்லி, மணக்குது சொல்லின்னு கொஞ்சம் சைட்டடிக்கலாம். காளவாசல்ல ஒண்ணும் பெருசா இருக்கா மாதிரி தெரியலயே?
வருகைக்கு நன்றி பழமைபேசி
\குடுகுடுப்பை இல்லை, இது பெரிய தவில் மாதிரி இல்ல இருக்கு.... பல விதமான நன்வோடைகள் இருக்கு அண்ணன்கிட்ட... அண்ணா, நாங்க பாக்கியசாலிக.... ரெண்டாவது சுத்து எப்ப?\
உடனே வருது
வருகைக்கு நன்றி அது சரி
\\காளவாசலா?? அங்க எங்க ரவுண்டு விடுறது? அதுக்கு அப்பிடியே ஒரு பஸ்ஸை பிடிச்சி பெரியார் பஸ் ஸ்டாண்டு பக்கம் போனாலும் ரீகல்ல ஒரு படத்தை பாத்துட்டு, ஆத்தா காப்பத்தும்மான்னு சொல்லிட்டு எதுனா ஒரு பார் பக்கம் ஒதுங்கலாம்.. அப்பிடியே மதுர மல்லி, மணக்குது சொல்லின்னு கொஞ்சம் சைட்டடிக்கலாம். காளவாசல்ல ஒண்ணும் பெருசா இருக்கா மாதிரி தெரியலயே?\\
காளவாசல் போனது 500 ரூபா வாங்கதான், இனிமேதான் இருக்கு.
:-)))))))
வருகைக்கு நன்றி
AMIRDHAVARSHINI AMMA
Post a Comment