Sunday, October 5, 2008

மீதி பாட்டை நீங்க சொல்லுங்க

பள்ளிப் பருவத்தில் தமிழ்ப்பாடத்தில் படித்த ஒன்று

கம்பன் மாலை வேலையில் காற்று வாங்க வயல் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்த போது ஏற்றம் இறைக்கும் ஒரு உழவன் பாடிய பாட்டு இது

"மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே".

அடுத்த வரியை பாடுவதற்குள் இருட்டிவிட்டது, உழவன் பாடாமல் சென்றுவிட்டான்.

அடுத்த வரியை நீங்கள் சொல்லுங்கள்.

27 comments:

பழமைபேசி said...

தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே!

அடுத்தவங்க, அடுத்த வரியைத் தொடரலாம்......

அது சரி said...

நமக்கு கம்பர் பத்தில்லாம் ரொம்ப தெரியாது. குவாட்டர் பத்தி தான் தெரியும்.

இப்பு முழுசும் சொல்றீங்களா இல்ல நானே எழுதட்டுமா?? (அப்புறம் கொடும, கொடுமன்னு கோவிக்கப்படாது, சொல்லீட்டேன்!)

இது வேண்டுகோள் இல்ல, எச்சரிக்கை!

நசரேயன் said...

இப்படி எல்லாம் எழுதி என்னோட தமிழ் அறிவை சோதிகப்படாது, எதோ தெரிஞ்சதை வச்சி பொழப்பை ஓட்டிகிட்டு இருக்கேன்

குடுகுடுப்பை said...

நன்றி பழமைபேசி,அது சரி, நசரேயன்

"மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே".== இது பனி பெய்யும் மாலையில் உழவன் பாடியது.


தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே!
--- இது அதிகாலையில் அதே உழவன் பாடியது.நேரத்திற்கேற்ற பாடல் வரிகள்.
முழுப்பாடலை அது சரியின் எச்சரிக்கையை ஏற்று தமிழரிஞர் பழமைபேசி அவர்கள் வழங்குவார்

பழமைபேசி said...

மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே!
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே!!
ஈச்ச மணல் ஓடை,
இருபுறம் சம்போடை,
தாழை மணல் ஓடை,
தனிப்புறம் சம்போடை,
சம்போடைக் காட்டில்,
சமத்தி கொலுவிருக்க,
ஈப்புகுந்தால் இறகொடியும்!
இண்டம் புதர்க்காடு கொசுப்
புகுந்தால் இறகொடியும்!!
கொங்கின் இளங்காடு,
கரடி அலையும் வனம்,
காட்டானை தூங்கும் வனம்,
சிறுத்தை அலையும் வனம்,
சிறுநரி தூங்கும் வனம்,
ஓடிநிலம் பாய ஒருபதியா லொன்னு!


இது நல்லா இருக்கு, நுங்க நோண்டித் திங்கறது ஒருத்தர்! வெரல் சூப்புறது ஒருத்தர்!! :-)

எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்... நடத்துங்க! நடத்துங்க!!

இவன் said...

ஈச்ச மணல் ஓடை
இருபுறம் சம்போடை
தாழை மணல் ஓடை
தனிப்புறம் சம்போடை

மீதியை வேற யாராவது தோடருங்கள்

இவன் said...

அவசரப்பட்டுட்டீங்களே பழமைபேசி

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to

valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

பழமைபேசி said...

//இவன் said...
அவசரப்பட்டுட்டீங்களே பழமைபேசி
//
சபாசு!

அமிர்தவர்ஷினி அம்மா said...

முழு பாட்டும் தெரியாது.

ஆனா இப்ப தெரிஞ்சிகிட்டேன்.

நன்றி பழமை பேசி அவர்களுக்கு.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
இவன்,அமிர்தவர்ஷினி அம்மா

குடுகுடுப்பை said...

//இது நல்லா இருக்கு, நுங்க நோண்டித் திங்கறது ஒருத்தர்! வெரல் சூப்புறது ஒருத்தர்!! :-)

எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்... நடத்துங்க! நடத்துங்க!!//

நான் கூகில தேடி கண்டுபிடிச்சேன். ஆனா உங்களுக்கு முன்னமேயே தெரியும்னு தோனுச்சு. அதனால் அனைத்து நன்றியும் உங்களையே சாரும்.

சுருக்கமா சொன்னா ஒரு மொக்கை சொல்றத விட ஒரு சக்கை சொன்னா நல்லா இருகும்னுதான் உங்க கிட்ட விட்டாச்சு

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை

அண்ணே, நீங்க பெரிய பெரிய சொல்லு இந்த சின்னவனைப் பாத்து சொல்லுறீங்க... எனக்கு வெட்கமா இருக்கு...

பழமைபேசி said...

அண்ணே, 9000க்கு கீழ போயிடும் போல இருக்கே? :-(

குடுகுடுப்பை said...

தலக்கி மேலே வெள்ளம் போனால் சான் என்ன் முழம் என்ன நம்ம கதை முடிஞ்சு போச்சி

பழமைபேசி said...

401k எல்லாம் அப்பிடியே போச்சு..... நண்பன் சொன்னான் அப்பிடி இருந்தும்..... 3%க்கு மேல போடாதன்னு! :-(

அது சரி said...

ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க ரெண்டு பேரும்.. நீங்க சொல்லாட்டி, நம்ம செல்வ கருப்பையாவுக்கு ஒரு தந்தி அடிச்சி மீதிய எழுத சொல்லலாமுன்னு இருந்தேன்.. தப்பிச்சிட்டீங்க.

இந்த தடவை பொழச்சி போங்க..அடுத்த தடவை எங்க பஸ் பார்ட்டியோட வர்றேன்..

அது சரி said...

//
சமத்தி கொலுவிருக்க,
ஈப்புகுந்தால் இறகொடியும்!
இண்டம் புதர்க்காடு கொசுப்
புகுந்தால் இறகொடியும்!!
கொங்கின் இளங்காடு,
கரடி அலையும் வனம்,
காட்டானை தூங்கும் வனம்,
சிறுத்தை அலையும் வனம்,
சிறுநரி தூங்கும் வனம்,
//

இதுல பெரும் பொருள் குற்றம் இருக்க மேறி தெரியுதே...

ஏங்க, ஈ பூந்தா இறகொடியும், கொசு பூந்தா இறகொடியும்... அப்ப கரடி, காட்டனை பூந்தா காலொடியாதா?? சிறுத்தை, சிறு நரி ( நம்ம அரசியல் வியாதிங்களை சொல்றாரோ?) பூந்தா சின்னாபின்னமாயிடாது??

நாங்கெல்லாம் நக்கீரன் பரம்பரை. கவிதை தான் தெரியாது.. ஆனா, எவனாவது எளுதினா கொறையெல்லா ரொம்ப தெளிவா தெரியும்...

அது சரி said...

//
சமத்தி கொலுவிருக்க,
ஈப்புகுந்தால் இறகொடியும்!
இண்டம் புதர்க்காடு கொசுப்
புகுந்தால் இறகொடியும்!!
கொங்கின் இளங்காடு,
கரடி அலையும் வனம்,
காட்டானை தூங்கும் வனம்,
சிறுத்தை அலையும் வனம்,
சிறுநரி தூங்கும் வனம்,
//

இதுல பெரும் பொருள் குற்றம் இருக்க மேறி தெரியுதே...

ஏங்க, ஈ பூந்தா இறகொடியும், கொசு பூந்தா இறகொடியும்... அப்ப கரடி, காட்டனை பூந்தா காலொடியாதா?? சிறுத்தை, சிறு நரி ( நம்ம அரசியல் வியாதிங்களை சொல்றாரோ?) பூந்தா சின்னாபின்னமாயிடாது??

நாங்கெல்லாம் நக்கீரன் பரம்பரை. கவிதை தான் தெரியாது.. ஆனா, எவனாவது எளுதினா கொறையெல்லா ரொம்ப தெளிவா தெரியும்...

கயல்விழி said...

தெரிஞ்சா தானே எழுத முடியும்? :)

Unknown said...

அண்ணா நான் இப்ப தான் இப்படி ஒரு பாட்ட கேள்விப்படறேன்.. விளக்கம் சொல்லுங்க ப்ளீஸ்..!! :))

Unknown said...

//இவன் said...
ஈச்ச மணல் ஓடை
இருபுறம் சம்போடை
தாழை மணல் ஓடை
தனிப்புறம் சம்போடை

மீதியை வேற யாராவது தோடருங்கள்//

Wow!! Ivan anna u r really great..!! :))))

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி கயல்விழி

//தெரிஞ்சா தானே எழுத முடியும்? :)//

அதுக்குதான் பழமைபேசி எழுதிட்டாரு

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி ஸ்ரீமதி

நீங்க உங்க கவிதையை எழுதுங்க இப்போதைக்கு

குடுகுடுப்பை said...

//நாங்கெல்லாம் நக்கீரன் பரம்பரை. கவிதை தான் தெரியாது.. ஆனா, எவனாவது எளுதினா கொறையெல்லா ரொம்ப தெளிவா தெரியும்...//

அப்படியே கொற சொல்லி ஒரு கவுதைய எழுதுறது

Mahesh said...

அட... இது நல்லா இருக்கே... ஒரு 3 வாரம் லீவுல போனதுல உங்க கடைப் பக்கம் வர முடியல.... இப்பிடியே பழமைபேசிய அடிக்கடி உசுப்பேத்தி விடுங்க..

நீங்களும் நம்ம பக்கம் முடிஞ்சபோது வந்து போங்க...

குடுகுடுப்பை said...

வாங்க மகேஷ்

//அட... இது நல்லா இருக்கே... ஒரு 3 வாரம் லீவுல போனதுல உங்க கடைப் பக்கம் வர முடியல.... இப்பிடியே பழமைபேசிய அடிக்கடி உசுப்பேத்தி விடுங்க..//

அவரை வெச்சிதான் காலம் ஓடுது

நீங்களும் நம்ம பக்கம் முடிஞ்சபோது வந்து போங்க...

தினமும் வரோம்.