Friday, October 3, 2008

இந்த மதம் புதிய மதம்

முன் குறிப்பு: எழுத சரக்கு இல்லாத காரணத்தினால். எனது கோடானு கோடி ரசிகப் பெருமக்களை ஏமாற்ற விரும்பாததால் கவிதை மாதிரி ஒன்றை எழுதுகிறேன். தமிழ்மணத்தில் இதுவரைதான் தெரியும்.


இந்த புதிய மதத்தில்
கடவுள் இல்லை
கடவுளின் தூதனும் இல்லை.
வழிபாட்டு முறையும் இல்லை
வழிபாடும் இல்லை.
நீங்கள் சேர்ந்தாலும்
சேராவிட்டாலும்
தொல்லையுமில்லை.
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.

8 comments:

நசரேயன் said...

எழுத சரக்கு இல்லன்னு ஒரு நல்ல சரக்கை எழுதி இருக்கீங்க

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
நாம பண்ணாதத அடுத்தவங்களுக்கு சொல்றதுங்கிற விதிமுறைப்படி வந்தது தான் இந்த கவுஜ

நசரேயன் said...

அறிவுரையே அடுத்தவங்களுக்கு தானே :)

பழமைபேசி said...

மதமாற்றத் தடைச் சட்டம் இல்லைங்கிற தைரியம் அண்ணனுக்கு..... :-)

நல்லா இருக்கு....

அது சரி said...

இருக்கிற மதமெல்லாம் போறாதுன்னு நீங்க எதுனா புதுசா ஆரம்பிச்சிட்டீங்களான்னு ரொம்ப பயந்து போயிட்டேன்...

//
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.
//

இது ரொம்ப நல்லாருக்கு...

குடுகுடுப்பை said...

வாங்க பழமை பேசி
//மதமாற்றத் தடைச் சட்டம் இல்லைங்கிற தைரியம் அண்ணனுக்கு..... :-)//

கவிதைக்கு பேருதான் மதம் சும்மா கவர்ச்சியா மத்தபடி கவிதையின் கருவிற்கும் மதத்திற்கும் எந்த சம்மதமும் இல்லை

நல்லா இருக்கு....

நன்றிங்க

குடுகுடுப்பை said...

வாங்க அது சரி

இருக்கிற மதமெல்லாம் போறாதுன்னு நீங்க எதுனா புதுசா ஆரம்பிச்சிட்டீங்களான்னு ரொம்ப பயந்து போயிட்டேன்...

//
இதன் ஒரே தேவை
நேர்மையுடன்
சுய விமர்சனம்.
//

இது ரொம்ப நல்லாருக்கு...

இத சொல்ல ஒரு கவர்ச்சி கவசம் தான் மிச்ச வரிகள் மற்றும் தலைப்பு.
மொத்த்தில கருப்பையாவுக்கு போட்டியா நானும் இனிமே களத்துல இருப்பேன்

ulagam-oru-parvai said...

aka motham ithu mathamey illa