Tuesday, August 19, 2008

மீண்டும் நடக்க பழகினான்

அமெரிக்கா வரும் ஆர்வத்தில் சென்னையிலிருந்து சிகரெட் வாங்க மறந்த நடேசனும் அவனது நண்பனும் அலுவலகம் அருகில் உள்ள 7/11 க்கு சென்று சென்னையில் கொடுக்கபட்ட $50 ஐ கொடுத்து சிகரெட் வாங்கினார்கள்.

கொடுதத சில்லரையை எண்ணிப் பார்த்த நண்பனிடம் நடேசன் கேட்டான்,
உனக்கு அமெரிக்க சில்லரை காசுகளை எண்ணத் தெரியுமா?
இல்லடா கடைகாரன் நமக்கு தெரியாதுன்னு நெனச்சுட கூடாதில்லயா அதான் அப்படி….

சிரித்துவிட்டு சிகரெட் புகைத்து விட்டு அலுவலகத்துக்கு சென்ற நடேசன் தனது மேசையில் வைக்கபட்டிருந்த தனக்கான மருத்துவ காப்பீட்டு அட்டையை எடுத்து வைத்துக்கொண்டான்.

ஒரு சில வாரம் ஓடியிருக்கும், திடீரென நடேசனின் முதுகு வலி பெரிதாக வலிக்க ஆரம்பித்தது, ஏற்கனவே தனது தண்டுவட பிரச்சினை பற்றி அறிந்ததால். மருத்துவரிடம் செல்லவேண்டாம் என முடிவெடுத்து நண்பர்களின் உதவியோடு வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான்.ஆனால் வலி விடுவதாக இல்லை.

அவனது நண்பர்கள் 911 க்கு அழைத்து emergency க்கு ambulance மூலம் சென்று, அங்கு முதல் பெயர், கடைசிப்பெயர் எல்லாம் சொல்லிவிட்டு எனக்கு தண்டுவடத்தில் L4-L5 ல் பிரச்சினை , நடேசனின் கூற்றை ஏற்று சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் மருத்துவரிடம் கான்பிக்க அறிவுரை கூறினர்.நடேசன் அமெரிக்க மருத்துவ வசதிகள் கண்டு பிரமித்து
போனான்.

15 வயதில் இருந்து வரும் இந்த முதுகு வலிக்கு, அமெரிக்காவில் நல்ல மருத்துவம் செய்ய கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அவன்.

நடேசனின் அலுவலக நண்பர் ஒருவர் தனது எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். மருத்துவரும் நடேசனின் கூற்றை ஏற்று சில மாத்திரை மற்றும் MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார். Copay $10 ஐ எடுத்து டாக்டரிடம் நீட்டினான்.
டாக்டர் ஒரு மாதிரியாக பார்த்து “Please give it in the front desk” என்று சொன்னார்.

பிரபல மருந்து கடையில் டாக்டர் கொடுத்த மருந்தை வாங்கிகொண்டு வீட்டுக்கு சென்று பார்த்தான். மொத்தம் ஒரு வாரம் சாப்பிடவேண்டும்.முதல் நாள் 7 மாத்திரைகள் அடுத்தடுத்து 6,5,4,3,2,1 என சாப்பிடவேண்டும்.

இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.

முதுகு வலி முழுவதுமாக மறைந்த மாதிரி இருந்தது.MRI results வந்தது, L4-L5 ல் சிறிய பிரச்சினை உள்ளது, வலி இன்னமும் இருக்கிறதா எனக் கேட்டார் டாக்டர். இல்லை என்றான் நடேசன். வலி மீண்டும் வந்தால் இதே மாத்திரையை 2 or 3 dose எடுக்கலாம் என்றார்.

காலம் வேகமாக ஓடியது, திருமணம் நடந்து மனைவி இப்போது நிறைமாத கர்ப்பினி. திடீரென ஒருநாள் மீண்டும் அதே வலி. Emergency room. வலது பக்க இடுப்பு மிகவும் வலிக்கிறது என்றான். வலிக்கும் இடத்தை பார்த்தால் kidney stone ஆக இருக்கும் என்றார்.
இல்லை இல்லை எனக்கு L4-L5 இல் பிரச்சினை என்றான் நடேசன்.ஆமோதித்த டாக்டர்கள் சில வலி நிவாரணிகள் கொடுத்து எலும்பியல் டாக்டரை பார்க்க அறிவுரை செய்தனர்.

மீண்டும் அதே எலும்பியல் டாக்டர் அதே மாத்திரை.வாரம் கடந்தது
ஆனால் இம்முறை வலி நிற்கவில்லை, மாறாக அவனுடைய அனைத்து joint லும் வலி வந்தது. மீண்டும் அதே டாக்டர், இது முதுகு வலி அல்ல என கூறி வேறு மருத்துவரை அனுகும்படி கூறினார்.

PCP said it could be Poly arthritis. அவர் சில மாத்திரைகள் கொடுத்தார். ஆனால் வலி விடுவதாக இல்லை.அன்றிரவே மீண்டும் Emergency room. இம்முறை எதற்கும் kidney stone test செய்து விடுங்கள் என்றான்.

“You have a big kidney stone on your right kidney. It needs to be cleared using lithotripsy”. – Emergency Doctor.

கல் உடைக்க தேதி குறிக்கப்பட்டது.கூடவே அலைந்ததால் மனைவிக்கு அதே நாள் பிரசவ நாள். அழகான பெண் குழந்தை. அனைத்து பிர்ச்சினைகலும் ஒரு வழியாக முடிந்து குடும்பமே மகிழ்ச்சியை அனுபவத்தது.

ஒரு வருடம் ஓடியது, நடேசனுக்கு இம்முறை இட்து புற Hip joint ல் வலி வந்தது. இம்முறை PCP யின் அறிவுரைப்படி மற்றொரு எலும்பியல் டாக்டரை அனுகினான். அவரிடம் கடந்த இரு வருடங்கலாக நடந்ததை கூறினான் இரண்டு முறை Steroid medicine எடுததது உட்பட.

MRI எடுக்குமாறு பரிந்த்துரை செய்தார், MRI முடிவுகள் வந்த பிறகு என்ன மருத்துவம் செய்யலாம் என கூறினார்.

டாக்டர் அலைபேசியில் அழைத்தார். “Your both hips are affected by a condition called ‘AVASCULAR NECROSIS’ your left hip affected the most”. ஒன்றும் புரியவில்லை நடேசனுக்கு.

இது தானாகவும் வரலாம், Steroid medicine பக்க விளைவாலும் வரலாம், அதிக பட்ச alcohol உபயோகத்தாலும் வரலாம் என்றார்.

இதற்கான மருத்துவத்தை கூறிய போது அவன் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தான்.
“You are not old enough to have HIP REPLACEMENT”. 15 வருடம் வரும் உங்களுடைய வாழ்க்கையில் இரண்டு அலலது மூன்று முறை HIP REPLACEMENT தேவைப்படும் என்றார்.

மருத்துவத்தின் முதல் பகுதியாக you can walk with crutches, it may heal the necrosis by removing the weight from the hip joint, it will allow the body tries to resume blood supply to the bone and heal by itself. But your left hip is affected too much already, lets hope for the best.

குழந்தை நடக்க பழகியது , நடேசன் crutches வைத்து நடக்க பழகினான் எப்படியாவது HIP REPLACEMENT இல்லாமல் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்.

பி.கு :

நடேசன் மருத்துவரிடம் தனக்கு இருந்த முதுகு வலியை வலியுருத்தி சொல்லியிராவிட்டால் kidney stone கண்டுபிடிக்கப்ட்டிருக்கும், Steroid medicine இரண்டாவது முறை தவிர்க்கப்பட்டிருக்கும்.

இந்தியாவில் Steroid adulteration செய்கிற போலி சித்த மருத்துவர்களிடம்
எச்சரிக்கையாக இருக்கவும்.

20 களில் உள்ள ஒருவரின் முதுகு வலிக்கு, இது போன்ற மருந்து கொடுக்கலாமா?

எந்த நாட்டில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், நாம் என்ன மருந்து சாப்பிடுகிறோம் என்பதில் கவனம். குறிப்பாக உயிர் காக்கும் மருந்தான
Steroids.

பதிவர் டாக்டர் புருனோ அவர்கள் மேலும் பல அறிவுரைகள் கூற அழைக்கிறேன்.

Disclaimer: இது கவனக்குறைவை களைய ஒரு எச்சரிக்கை, யாரையும் குறை கூற அல்ல.

பதிவு தவறுதலாக நீக்கப்பட்டது. முடிந்த அளவு மீட்ட comments.

8 comments:

குடுகுடுப்பை said...

புருனோ Bruno said...
மேலும் சில இடுகைகள்1. The Ayurvedic Side Effect2. Misuse of Ayurveda
August 18, 2008 12:43 PM
புருனோ Bruno said...
//இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.//ஒரு மருத்துவர் கூறும் சிகிச்சை முறைக்கும் மற்றொருவர் கூறுவதற்கும் பெரிய்ய்ய்ய்யயய வித்தியாசம் இருந்தால் கண்டிப்பாக மூன்றாவது மருத்துவரிடம் கேட்கவும்-அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை தேவை என்று ஒருவர் கூறும் போது அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்துகிறேன் என்று மற்றொருவர் கூறினால் கண்டிப்பாக எச்சரிக்கை தேவை--
August 18, 2008 12:47 PM
புருனோ Bruno said...
ஒரு மருத்துவர் குணப்படுத்த முடியாது என்று கூறும் நோயை குணப்படுத்துகிறேன் என்று மற்றொருவர் கூறினாலும் எச்சரிக்கை !!!மற்றொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும் !!
August 18, 2008 12:50 PM
புருனோ Bruno said...
//எலும்பியல் மருத்துவரை பரிசீலனை செய்தார். //அந்த மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்ற orthopaedicianஆ அல்லது Chiropractic வகையைச் சேர்ந்த மருத்துவம் கற்காத மருத்துவரா ??
August 18, 2008 12:58 PM
புருனோ Bruno said...
அமெரிக்காவில் வசிக்கும் நண்பரிகளின் கவனத்திற்குஇந்த Chiropractic என்பது ராசிக்கல், சிட்டுகுருவி லேகியம் வகையைச்சார்ந்தது.அந்த பக்கம் சென்றால் உங்களின் பணப்பையுடன் எலும்பும் நரம்பும் கூட தேய வாய்ப்புள்ளது
August 18, 2008 1:01 PM
குடுகுடுப்பை said...
அந்த மருத்துவர் முறையாக மருத்துவம் பயின்ற orthopaedicianஆ அல்லது Chiropractic வகையைச் சேர்ந்த மருத்துவம் கற்காத மருத்துவரா ??M.S Ortho படித்த மருத்துவர்.
August 18, 2008 7:19 PM
குடுகுடுப்பை said...
//இந்தியாவில் இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே தீர்வு பிரபல சென்னை மருத்துவர் சொன்னது ஞாபகம் வந்தது. இந்த மாத்திரை அறுவை சிகிச்சை இல்லாமல் அல்லது தள்ளிப்போட செய்தால் நல்லது என நினைத்தான்.//பொதுவாக அறுவை சிகிச்சைக்கு இரண்டாவது கருத்து கேட்க தோன்றும், இது போன்ற steriod மாத்திரைகள் கொடுக்கும்போது இரண்டாவது கருத்து கேட்க தோன்றும் என எனக்கு தோனவில்லை
August 18, 2008 7:30 PM
புருனோ Bruno said...
//M.S Ortho படித்த மருத்துவர்.//அமெரிக்காவில் M.S Ortho என்ற படிப்போ பட்டமோ இருக்கிறதா.எனக்கு தெரிந்து பல Chiropractic நபர்கள் தங்களை எலும்பு முறிவு வைத்தியர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.விசாரித்தால் உண்மை தெரியும்
August 18, 2008 7:49 PM
குடுகுடுப்பை said...
Dear Brunoமன்னிக்கவும் , MD ortho படித்தவர். மிகப்பெரிய மருத்துவ மனையில் அறுவை சிச்சை எல்லாம் செய்பவர். chiropractioner எல்லாம் steroid prescription கொடுக்கா முடியுமா? எனக்கு தெரிந்த வரை இல்லை. அவருடைய நோக்கம் முதுகு வலியை சரி செய்வதுதான். ஆனால் நடந்தது வேறு.
August 18, 2008 8:05 PM

கயல்விழி said...

இது அமரிக்காவில் நடந்த கதையா?

இந்த பேஷண்ட், லா சூட் போடலாமே?

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை வச்சு 'நடக்க'ப் பழகலாம்!!!

ஆமாம். இந்த கைரோப்ராக்டர் மாதிரிதான் பொடியாட்ரி ஆளுகளுமா?

கால் வலின்னு போன எல்லாருக்கும் ஆர்தாடிக் பாத அளவெடுத்துச் சூடாக்கிச் செஞ்சுகொடுத்துடறாங்களே.

டாக்டர் ப்ருனோவைத்தான் கேக்கணும்.

குடுகுடுப்பை said...

இது அமரிக்காவில் நடந்த கதையா?

இந்த பேஷண்ட், லா சூட் போடலாமே?//
வருகைக்கு நன்றி கயல்விழி

நடேசன் லா சூட் போட நெரமில்லை என்கிறார், மேலும் இந்த மருந்து வழக்கத்தில் உள்ள ஒன்று தான். நாம்தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக மென்பொருள் துறையில் உள்ள நிறைய பேருக்கு முதுகு வலி உள்ளது அவர்களை
எச்சரிக்கும் நோக்கம் தான் இந்த பதிவு. உங்களால் முடிந்த வரை steroid மருந்து பற்றி நண்பர்களிடம் எச்சரியுங்கள்.

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி துளசி டீச்சர்.
கைர்ரோ பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் டாக்டர் புருனோ அவர்கள் சிட்டுக்குருவி லேகிய வகையில் கைரோவை சேர்க்கிறார்

குடுகுடுப்பை said...

மெதுவா நடகாமக் கொஞ்சம் அழுத்தமாக் காலை வச்சு 'நடக்க'ப் பழகலாம்!!!

பிழை திருத்தியமைக்கு நன்றி. ஒருவேளை ஊன்றுகோல் வைத்து நடப்பதால் நடகிறார் போல. 

நாநா said...

எனக்கென்னமோ நடேசனுக்கு வைத்தியம் பாத்த அந்த வைத்தியருக்கு கோர்ட்டுல கொஞ்சம் வைத்தியம் பாக்கணும்னு தோணுது.

குடந்தை அன்புமணி said...

//பொதுவாக மென்பொருள் துறையில் உள்ள நிறைய பேருக்கு முதுகு வலி உள்ளது அவர்களை
எச்சரிக்கும் நோக்கம் தான் இந்த பதிவு. உங்களால் முடிந்த வரை steroid மருந்து பற்றி நண்பர்களிடம் எச்சரியுங்கள்//
மீண்டும் அதை எடுத்துக்காட்டி உள்ளேன். கவனிச்சுக்கோங்கப்பா!