Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, February 2, 2013

கதை மணிரத்தினம் கதை

கடல் படம் பின்வரும் பேட்டர்னில் வருகிறதா?

கதை 1: முதலில் பிடிக்கவில்லை, பிறகு பிடிக்கிறது, துணைக்கு ஆபத்து காப்பாற்றுகிறார்.


திரைக்கதை 1 – நாயகி கட்டாயத்தின் பேரில் ஒருவனை மணக்கிறார். பழைய நினைவுகள் மனதில் இருப்பதால் கணவனோடு ஒட்டவில்லை, டெல்லி செல்கிறார், பின்னர் கணவனை புரிந்து கொஞ்சம் கொஞ்சமாக லவ்வுகிறார்.இதனிடையே கணவனை குண்டர்கள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், டெல்லி பின்னனி , நேர்மை, குண்டர்கள், இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து மவுனராகம் ஆனது.


திரைக்கதை 2 – நாயகி கட்டாயத்தின் பேரில் அக்காவை பெண் பார்க்க வருபவரை மணந்து கொள்கிறார். நாயகிக்கு கணவனை ஆரம்பத்தில் பிடிக்கவில்லை.கணவனோடு காஷ்மீர் செல்கிறார். உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். இதனிடையே கணவனை தீவிரவாதிகள் கடதிக்கொண்டு சென்றுவிடுகின்றனர், அவரை மீட்க போராடுகிறாள் இந்த மனைவி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், காஷ்மீர் பின்னனி , தீவிரவாதம், தேசப்பற்று, ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து ரோஜா வானது.


திரைக்கதை 3 : இந்த படத்தையும் சற்றே மாற்றிய கதையின் மூலம் இந்த template ல் கொண்டு வரலாம். நாயகி பிடித்து திருமணம் செய்து கொள்கிறார்,பின்னர் பிடிக்காமல் போகிறது, உண்மை தெரிந்து கணவனை புரிந்து லவ்வுகிறார். அதற்குள் விபத்தில் சிக்குகிறார்.இங்கே ஒரு மாறுதலாக கணவன், மனைவியை காப்பாற்ற போராடுகிறார். இன்னொரு மாற்றம் குண்டர், தீவிரவாதிகளுக்கு பதிலாக குஷ்பு,அரவிந்தசாமி.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை பின்னனி , மென்பொருள், மிடில் கிளாஸ், ரகுமானின் இசை எல்லாம் சேர்ந்து அலைபாயுதே வானது.

கதை 2: ஒரு நல்ல மனசு கொண்ட தாதா, அவர் என்ன சொன்னாலும் நிறைவேற்றும் ஒரு அடியாள் நண்பர்.

திரைக்கதை 1 : ஒரு நல்ல மனசு உள்ள தாதா நாலு பேரு நல்லா இருக்க கடத்தல் அதன் மூலம் வரும் பிரச்சினைகளுக்கு அடிதடி மூலம் பதில். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ஜனகராஜ் நிறைவேற்றுகிறார். இந்த தாதாவை கைது செய்ய அவரின் போலிஸ் ஆபிசர் மருமகன் நாசர் மெனக்கடுகிறார். தாதாவின் மகள் தந்தையை நினைத்து கவலைப்படுவார்.

இந்த கதை, கொஞ்சமா வசனம், பம்பாய் குடிசை வாழ்க்கை பின்னனி, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து நாயகன் ஆனது.

திரைக்கதை 2: ஒரு நல்ல மனசு உள்ள தாதா அவரின் அல்லக்கை ஒருவரையே கொண்ற ஒருவரை காப்பாற்ற, அவர் , தாதாவின் தளபதி ஆகிறார். இந்த தாதா என்ன சொன்னாலும் நிறைவேற்ற அவரின் தளபதி யாக வரும் ரஜினி நிறைவேற்றுகிறார். தாதாவை கைது செய்ய அவரின் கலெக்டர் தம்பி அரவிந்தசாமி மெனக்கடுகிறார். தாதாவின் அம்மா மூத்த மகனை நினைத்து கவலைப்படுவார். கிளைக்கதையாக ஷோபனா, ரஜினி காதல்,ஷோபனா, அரவிந்தசாமி திருமணம் , ஷோபனா கணவன் தன் காதலால் காப்பாற்றப்படுவதை கதை 1 னோடு நீங்கள் ஒப்பிட்டால் அதற்கு குடுகுடுப்பை பொறுப்பல்ல.

இந்த கதை, கொஞ்சமா வசனம், சென்னை வாழ்க்கை பின்னனி, இலவச இணைப்பாக மகாபாரத உணர்வு, இளையராஜவின் இசை எல்லாம் சேர்ந்து தளபதி ஆனது.

காமெடி, டூயட்,இருட்டு,வெளிச்சம் எல்லாம் சேர்த்துக்கொள்ளுங்கள், பதிவில் எல்லாம் என்னால் அதை கொண்டு வர முடியாது.

இப்படியெல்லாம் சொன்னா அப்புறம் எப்படி தான் படம் எடுக்கிறது அப்படினு எல்லாம் எங்கிட்ட கேக்கக்கூடாது.

“முடியாது,கமெண்ட் போட முடியாது” அப்படியெல்லாம் சொல்லப்படாது
டிஸ்கி1 : முதல் இரண்டு திரைக்கதையும் நான் , ஜாம்பஜாரில் வாடை பிடித்துகொண்டிருந்தபோது கிடைத்த வாடை.

டிஸ்கி2 : 5 படங்களும் எனக்கு பிடித்து இருந்தது.

Saturday, January 14, 2012

த்ரீ இடியட்ஸூம் அவதாரும், டாலஸ் தமிழ்ச்சங்கத்தில் சிலப்பதிகாரமும்

இந்த வாரம் த்ரீ இடியட்ஸ் படம் பார்த்தாகிவிட்டது, வெகுசில இந்திப்படங்களே நான் பார்த்துள்ளேன், இந்தப்படத்தையும் மொழி தெரியாமல் ரசித்துப் பார்க்கமுடிந்தது, காரணம் இது ஒரு சாதாரண படமாக எடுக்கப்பட்டிருந்தது என்றே எனக்குத்தோன்றியது. படத்தில் 44 வயது அமீர்கானை இளமையாக காண்பிக்க கரினா கபூரை ஜோடியாக போட்டிருப்பார்களோ என்று ஒரு பயங்கர சந்தேகம். அமீர்கான் எந்தவித ஹீரோயிசமும் காண்பிக்காமல் ஒரு மாணவனாக அசத்தியிருக்கிறார்.இப்படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய முன்னாபாய் படத்தை டெம்ப்பிளேட்டாக வைத்தே இப்படத்தை தந்திருக்கிறார். தாரே சமீன் பர் படத்தில் ஒரு ஆசிரியர் மாணவனின் டிஸ்லேக்ஸியா கண்டுபிடித்து அவனின் தனித்திறமையும் கண்டுபிடித்து ஊக்குவிப்பார். இந்தந்தனித்திறமை என்ற கருவை எடுத்து, வழக்கமாக பெற்றோர்களின் இஞ்சினியர்/டாக்டர் கனவுகளோடு சேர்த்து முன்னாபாய் படத்தளத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அந்தப்பேராசிரியர் வேடம், அவரின் மகள் கரினா கபூரும் , வசூல்ராஜா படத்தில் வந்த பிரகாஷ்ராஜ் , சினேகா பாத்திரப்படைப்புகளின் வேறு மாதிரியான பிரதி, அமீர்,மாதவன் உள்ளிட்ட மூவர் கூட்டணி கமல் , பிரபு , கருணாஸ் கூட்டணியின் வேறு பிரதி. மூவர் கூட்டணியில் இயல்பான கல்லூரி கால வாழ்க்கை மூலம் வெகு அழகாக கதையை திரைக்கதை அமைத்து நகர்த்தி உள்ளார். குறிப்பாக கரீனாவின் அக்காவிற்கு அமீர் பிரசவம் பார்க்கும் காட்சி , வசூல்ராஜா கோமா கேரக்டருக்கு கமல் வைத்தியம் செய்து சிரிக்கை வைத்ததை போன்ற அதே உத்தி, அதே போல் கமலின் தேர்வுக்கு கிரேஸி உதவுவது போன்றதே, ராஜீ கேரக்டருக்கு அமீர் தேர்வுப்பேப்பரை கடத்தி உதவுவதும் மாட்டிக்கொள்வதும், இந்த இலகுவான உத்தியை வைத்து அதே அளவு நகைச்சுவையுடன் தெளிவான கருத்தை மொழி தெரியாதவனும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள். தமிழில் இப்படத்தை எடுத்தால் என்னுடைய தேர்வு நடிகர் விஜய். குருவி.வில்லு,வேட்டைக்காரன்,சுரா ஆகியவற்றை கலக்கி ஒரு இறா கொடுப்பதற்கு பதில் இப்படி ஒரு நல்லபடத்தை கொடுக்கலாம். விஜய் மீசையை மழித்துவிட்டு கொஞ்சம் முடிவெட்டிக்கொண்டால் மட்டும் போதும், வெகுஜன மக்களை எளிமையாக இப்படம் சென்றடையும்.

மீள்பதிவு.
----------------------------------------------------------------------------------------------------

அவதார் படம் பார்க்க என் மகள் அனுமதி கொடுக்கவில்லை,எப்படியோ அனுமதி பெற்று ,டாலஸில் இரண்டே இரண்டு ஐமேக்ஸ் தியேட்டரில்(?) ஒன்றான சினிமார்க் ஐமேக்ஸ் 3Dயில் பார்த்தேன் வெகு எளிமையான கதை அதன் பிரமாண்டம் பிரமிக்க வைத்தது, இயல்புடன் சேர்ந்த வாழ்க்கையை வலியுறுத்தும் இந்தப்படமும் எனக்கு மிகவும் பிடித்தது. தமிழ்ஹிந்து தளத்தில் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய இப்பட விமர்சனத்தில் இயற்கை வழிபாட்டோடு இணைத்து எழுதியிருந்தார்,பெரும்பகுதி அதில் எனக்கு உடன்பாடு உண்டு, இயற்கை வழிபாடு என்ற பெயரில் மூடநம்பிக்கையே / நம்பிக்கையோ எதுவாக இருப்பினும் மஞ்சள் கயிறு கட்டி சாமி மரமாகிய வேப்பமரம் அதிகநாள் உயிர்வாழ்கிறது, அதுபோல் கோவிலில் உள்ள ஸ்தல விருட்சங்கள். கிராமக்கோவில்களில் உள்ள அரசமரம் எதுவாக இருப்பினும் இயற்கை வழிபாடு நல்லதாகவே இருந்திருக்கிறது. அதே நேரத்தில் மூடநம்பிக்கையில் வீட்டு வாசலில் புளியமரம் நின்றால் வெட்டுவதும் நடக்கத்தான் செய்கிறது.

நேற்று டாலஸ் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் பொங்கல் விழாவிற்கு சென்றேன். முன்னூறுக்கு மேற்பட்ட அளவிற்கு மக்கள் வந்திருந்தனர், ஆண்கள் வேட்டி சட்டையுடன், பெண்கள் பட்டுப்புடவை, குழந்தைகளும் தமிழக கலாச்சார உடை அணிந்து கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நன்றாக நடந்தது, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் நடித்து வழங்கிய சிலப்பதிகாரம் வெகுவாக என்னைக் கவர்ந்தது, பெரும்பாலான குழநதைகள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் ஆனாலும் மிகத்தெளிவாக தமிழ் உச்சரிப்பு இருந்தது, வீடியோ தொகுப்பு கிடைத்தால் அடுத்தடுத்த பதிவுகளில் இணைப்பு தருகிறேன்.


Wednesday, July 14, 2010

ராவணன் மணிரத்ணம்.

ராவணன் மட்டமான இதிகாச ரீமிக்ஸ் முதல் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராவணன் என்று கிழித்துப்போட்ட படம், கொடுத்த ஆறு டாலருக்கு நானும் ஒரு பதிவு போட்டு என் இருப்பை உறுதிப் படுத்திக்கொள்கிறேன்.

மணிரத்னம் மேட்டுக்குடிகளுக்கான இயக்குனர் , அவரின் படத்தின் பார்வையாளர்களுக்கு தான் சொல்ல வந்ததை அவருடைய பாணி சினிமாவில் சொல்லியிருக்கிறார்.

அனுமன் வேடத்தில் நடித்த கார்த்திக்/கோவிந்தாவை குரங்கு போலவே நடிக்க வைத்து எரிச்சல் ஆக்கிவிட்டார் என்பது ஒரு குற்றச்சாட்டு, மற்றும் பல இராமாயண கதா பாத்திரங்களை காட்ட வெளிப்படையான அடையாளத்தை வைத்து ராமனை சில வசனங்கள் செயல்கள் மூலம் விமர்சித்து இதிகாச ராவணன் நல்லவன் என மேட்டுக்குடி மக்களுக்கு புரியவைக்க முயன்றிருக்கிறார். இதற்கு ஏன் தூதுவனை குரங்கு போல் காட்டவேண்டும், காட்டாவிட்டாலும் புரியுமே என்பது பலரின் கேள்வி, ரோஜா சத்தியவான் சாவித்திரியின் ரீமேக், மவுனராகம் வேறு ஏதோ இதிகாச ரீமேக் என்று அறிவுஜீவிகள் எழுதுகிறார்கள், ஆனால் படம் பார்த்த மேட்டுக்குடிகளுக்கு இது தெரியாது, ஆனால் இங்கே இதிகாச ராவணனை நல்லவன் என்று காட்ட ராமாயண கதாபாத்திரங்களின் தோற்றங்கள் உதவும் என்று நினைத்திருக்கலாம்(ராவண் என்ற பெயர் ஒன்றே போதுமா என்று எனக்குத்தெரியவில்லை). குறிப்பாக வட இந்தியர்களுக்கு.

ராமனின் தந்திரங்களை காட்டிய அளவுக்கு, ராவணன் , ராமனின் மனைவியை கவர்வதற்கு இன்னும் அழுத்தமாக காரணம் காட்டியிருக்கலாம். மணிரத்தினம் பெரும்பாலும் கணவன் மனைவியை பிரிப்பதில்லை , அதே போல இந்தப்படத்திலும் ராமன் மனைவியை சந்தேகப்படுவதாக சதி செய்து ராவணனை கொல்வதாகக் காட்டியிருக்கிறார். பாலசந்தர் போல பயப்படாமல் சீதை ராமனை துறப்பதாக வைத்திருக்கலாம்.

தன்னுடைய பயத்தினால் / அல்லது வியாபார பயத்தினால் பதுங்கியதால்,ராவணன் சரியாக மேட்டுக்குடிகளிடம் சேரவில்லை, முயற்சியில் தோற்றிருந்தாலும் ராவணன் நல்லவன் என்று வட இந்தியர்களுக்கு காட்டந்துணிந்த மணிரத்ணம் பாராட்டுக்குறியவரே.

Saturday, June 12, 2010

வடிவேலுவும் கமலும் உரையாடல்:

முன் குறிப்பு: சும்மா ஒரு நகைசுவை உரையாடல், யாரையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்

வடிவேலு: வாங்கய்யா உங்கள பேட்டி எடுக்க சொல்லி வலை உலகத்தில கேட்டுக்கிட்டாக வந்து கொடுங்கய்யா கொடுங்க?

கமல்ஹாசன் : அய்யா என்று அழகு தமிழில் அழைத்தமைக்கு நன்றி, அய்யா என்றழைக்காமல் கமல்ஹாசன் என்றழைத்தாலே சந்தோசப்பட்டிருப்பேன்.அதற்காக நீங்கள் அய்யா என்று அழைத்ததற்கு மகிழ்ச்சி இல்லை என்று நான் சொல்லமாட்டேன்.கம்பராமாயணத்தை புரிந்துகொண்ட தமிழர்களுக்கு இது புரியாதா என்ன. நீங்கள் சொல்லும் வலை உலகம் அறிவியலின் குழந்தை அதை யாரும் தடுக்க முடியாது என்பதுதான் உண்மை.ஆனால் உலகமே ஒரு வலை அதை அறிவியலால் தடுக்கமுடியாது.

வடிவேலு: கம்பராமாயணம் நான் படிச்சதில்லை, ஆனா நீங்க சொல்றது எனக்கு புரிஞ்ச மாதிரியே இருக்கு, உங்க படம் மருதநாயகம் என்ன ஆச்சு?

கமல்ஹாசன் : தேவர் மகனில் நான் உங்களை நடிக்க அழைக்கும்போது உங்களை இசக்கியாக பார்த்தேன், மருதநாயகம் கண்டிப்பாக வரும், உங்களை பார்த்தவுடன் எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, 23ம் புலிகேசி, இந்திரலோகம் போன்ற படங்களில் நடித்த உங்களை ஹீரோவாக வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்றிருக்கிறேன், உங்களின் எட்டு வருட கால்ஷீட் அதற்கு தேவைப்படலாம். டைரக்டர் பாலாவும் நானும் இணைந்து இயக்கும் எண்ணமும் உள்ளது.

வடிவேலு: (மனதிற்குள்) இவருக்கு நம்ம மேல இவ்ளோ கோபம்.ஒருவேளை விஜயகாந்த் மூலமா எதுவும் சதி நடக்குதோ.

ரொம்ப நன்றி கமலய்யா ஆனா எனக்கு ஹீரோ வேசமெல்லாம் வேண்டாம்யா ஹீரோயினியோட ஒரேயொரு குத்து டான்ஸ் மட்டும் வெச்சு ஒரு காமெடி ரோல் மட்டும் போதும்யா சம்பளம் கூட வேண்டாம், அப்புறம் மருதநாயகம் படத்துல விஜயகாந்த ஹீரோவா போட்டு ஒரு பத்து வருடம் வெளிநாட்டுல சூட்டிங் வெச்சுக்கிட்டா உங்களுக்கு புண்ணியமா போகும்யா?

கமல்ஹாசன் : உங்களின் திறமையை நீங்கள் இன்னும் உணரவில்லை என்று நான் எண்ணவில்லை வியாபாரிகளின் சினிமாவில் நீங்கள் ஒரு விட்டில்பூச்சி, இதை நான் சொல்வதால் நான் விட்டில்பூச்சி இல்லை என்று அர்த்தம் கொண்டால் அது என்னுடைய தவறல்ல.

வடிவேலு: (மனதிற்குள்)பார்த்திபன் என்னை வேற மாதிரி குழப்புனாரு,ஆனா இவரு தெளிவா பாராட்டியே குழப்புறாரே.

அய்யா உங்களுக்கும் கவுதமிக்கும் பிரச்சினைன்னு?

கமல்ஹாசன் : நான் என் வீட்டில் ஜன்னல் வைத்திருப்பது நான் காற்று வாங்கவும், நான் வெளி உலகத்தையும் பார்க்கவுமே நீங்கள் எட்டிப்பார்ப்பதற்கு அல்ல, இப்படி என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய கேள்வி தேவையில்லாதது இது உங்களுக்கும் பொருந்தும் மற்றவர்களுக்கு பொருந்தாது என்று பொருள் அல்ல.வெளிநடப்பு செய்கிறார்.

வடிவேலு: அய்யா நான் தேவர்மகன் படத்துல உள்ள சீன பத்திதானே சொன்னேன் அதுக்கு ஏன்யா கோபபடுறீங்க, நான் ஒரு கைப்புள்ள அடித்தவங்க விசயத்திலெல்லாம் தலையிட மாட்டேன்யா..............

Sunday, June 6, 2010

லக்ஷ்மன் ஸ்ருதி இசை நிகழ்ச்சி அனுபவம், விரைவில் அட்லாண்டாவில்


வெள்ளி இரவு டாலஸ் மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்சங்கத்தால், தமிழ்நாடு பவுண்டேசன் என்ற தன்னார்வ கல்வி உதவி நிறுவனத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு நடத்தப்பட்டது. நானும் கலந்துகொண்டேன், லக்ஷ்மன் ஸ்ருதி குழுவில் பாடகர் கிரிஸ்,மகதி, டிஎம்ஸ் செல்வக்குமார் மற்றும் மாலதி கலந்து கொண்டனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் பார்த்த இசைநிகழ்ச்சி, மாலதி எப்போதும் போல் அருமை உற்சாகத்தோடு கிராமியப் பாடலான "சித்திர கோபுர கட்டவே " முதல் மன்மத ராசா வரை கலக்கினார்.

கிரிஸ் மற்றும் மகதியும் மிகவும் உற்சாகத்துடனும் ரசித்தும் பாடினர், செய்யும் தொழிலை ரசித்துச் செய்யும்போது வெற்றி தானாகவே கிட்டும் என்பதை உணர்த்தினார்கள்.கிரிஸ் மற்றும் மகதி நிறைய ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்த பாடலகள் பாடினர்.

டிம்எஸ் செல்வக்குமார் தந்தையைப்போல அப்படியே பாடுகிறார், இந்தந்திறமையை மட்டுமே வளர்த்துக்கொண்டதால் அவருக்கு சினிமாவில் புதிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புரிதல் எனக்கு ஏற்பட்டது, மயக்கமென்ன என்ற வசந்தமாளிகை பாடலைப்பாடியபோதும் , உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜியாருக்கா பாடிய பாடலிலும் டிஎம்ஸ் காட்டிய வித்தியாசத்தை மகனாலும் தர முடிந்தது.

முத்தாய்ப்பாக டிரம்மர் பெயர் தெரியவில்லை, தனியாக பதினைந்து நிமிடம் தனித்திறமை காண்பித்தார், உண்மையிலேயே பறையோசையின் நீட்சியாகவே அதனை அனுபவிக்கமுடிந்தது, திறமைசாலி டிரம்மருக்கு என் பாரட்டுக்கள்.

நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் தொய்வு ஏற்படும் நிலையில் கிரிஸ் பார்வையாளர்களோடு இணைந்து நடனமாடி உற்சாகப்படுத்தினார். நடனமென்றால் என்னவென்றே தெரியாத நானும் கிரிஸ் பாடிய அண்ணாத்தே ஆடுறார் பாடலுக்கு கால் வலிக்க நடனமாடினேன்.

கிரிஸ் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவரைப்பார்த்தவுடன் எனக்கும் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை பீறிட்டு எழுந்தது.நாளைக்கு ஆட்டுக்கறி சாப்பிடும் ஆசையும் பீறிட்டு எழுந்துள்ளது என்ன மனிதனுக்கு நினைப்பதெல்லாம் நடப்பதில்லை, கண்டிப்பாக ஒரு ஆசையை நிறைவேற்றி திருப்தி அடைந்து கொள்வேன்.

டாலஸ் வாழ் தமிழர்களுக்கு இந்த நிகழ்ச்சி, நல்ல ஒரு பொழுது போக்காக அமைந்தது, வரும் ஆண்டிலும் மேலும் பல நிகழ்ச்சிகளில் நடத்தி மகிழ்வதுடன் மேலும் சிலரின் கல்விக்கு உதவுவோம் என்று நம்பி, வெறும் பார்வையாளனாக இல்லாமல் இனி தமிழ்ச்சங்க நடவடிக்ககளில் என்னுடைய பங்களிப்பையும் அளிக்கலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம் ஜூன் 12 ம் தேதி அட்லாண்டாவில் இதே இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது, வசூலாகும் தோகை தமிழ்நாடு பவுண்டேசனுக்கு செல்வதால் சிலரின் கல்விக்கு உதவுகிறது, அட்லாண்டா தமிழர்கள் யாரேனும் என் பதிவை படிக்க நேரிட்டால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுங்கள்.

Tuesday, January 26, 2010

ஆ.ஒ அல்லக்கை கார்த்தியும், சிக்கன் புளிசாதமும்.

ஆயிரத்தில் ஒருவனும் ஒரு வழியாக நானும் பார்த்துவிட்டேன், சந்தனமுல்லையின் பதிவின் சொன்னதுபோல் பிரபல தமிழ்/தெலுங்கு படங்களில் (கட்டிப்புடி , கட்டிப்புடிடா என்ற பாடலை விட ,ஒரு உதாரணத்துக்கு) உள்ள ஆபாசத்தை விட, இந்தப்படத்தில் எங்கே ஆபாசம் இருக்கிறது என்று எனக்குத்தெரியவில்லை, வன்முறை இருக்கிறது ஆனால் தேவைப்பட்டதாகத்தான் இருக்கிறது.தன் கழுத்தை தானே அறுத்து பலியிட்டுக்கொள்வதும் , அதனை ராஜாக்கள் ஏற்றுக்கொள்வதும் அந்தக்காலத்தில் இருந்திருக்கலாம், அதற்கேற்றப் புனைவு தான் இது எனவும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். பலருக்கு இந்த வன்முறை அதிகமாக தோன்றியிருப்பதில் ஒன்றும் வியப்பில்லை.இந்தப்படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம். இப்படத்தில் கார்த்திக் ஏற்று நடித்திருக்கும் வேடமான எடுபிடி வேலை செய்பவர்களின் தலைவன் வேடத்தில்(தலையாரி) சிறப்பாக செய்திருக்கிறார், தமிழ் சினிமாக்களில் வழக்கமாக நடிகைகளுக்கு வேலை இருக்காது, ஆனால் இந்தப்படத்தில் இரண்டு நடிகைகளுக்கும் வேலை இருக்கிறது, ரீமா சென்னுக்கு பழிவாங்கும் பாண்டியத்தி வேடமென்பதால் ஆதிக்கம் செலுத்துகிறார், சோழர்களுக்கு சேதி கொண்டு போக தலையாரியாக சென்ற அவருடைய வேடத்தை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார், ஹீரோயிசத்தையே பார்த்து பழகிவிட்ட நமக்கு , அல்லக்கை வேடம் என்றாலே வடிவேல் அல்லது, தாமு போன்றவர்கள் தமிழ் சினிமாவில் வருவது போல் ஹீரோவுக்கு சொம்பு தூக்கும் வேடம் நம் மனதில் நின்றுவிட்டதால் , கார்த்தி அல்லக்கை வேடத்தில் வீனடிக்கப்பட்டுவிட்டார் என்று நம் மனம் கருதுகிறது. படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தி தனி மனிதனாக சண்டை போட்டு ரீமாவைக்கொண்று, பார்த்திபனை காப்பாற்றி ஆண்டிரியாவை கைப்பிடித்திருந்தால், கார்த்தி கலக்கிவிட்டார் என்று விமர்சனம் வந்திருக்ககூடும்.அல்லக்கையோ , தலையாரி வேடமோ ஒரு ஹீரோவுக்கு உரிய கதாபாத்திரம் என்பதை நாம் என்றுக்கொள்ளும் போது இன்னும் நல்ல படங்கள் வரலாம். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார் நல்ல நடிகராக வலம் வருவார்.

சிக்கன் புளிசாதம்

அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு நானும் மனைவியும் வந்துகொண்டிருந்தோம் , என் வீட்டுக்கு வெகு அருகில் புதிதாக ருசி என்று ஒரு இந்திய உணவகம் திறந்திருந்தார்கள், இன்றுதான் என் கண்ணில் பட்டது, என் மனைவியிடம் சொன்னேன், அவரும் உடனடியாக இன்று இங்கேயே சாப்பிடுவோம் என்றார். மாலை ஆறரை மணிக்கு நாங்கள் மட்டுமே அங்கே இருந்தோம். சிக்கன் பிரியாணி, சில்லி சிக்கன் ஆர்டர் செய்தோம், சில்லி சிக்கன் என்ற பெயரில் வேகவைத்த சிக்கனுடன் ரெடிமேட் சில்லி சாஸை சிக்கனில் ஊற்றி வெங்காயமும் எலுமிச்சையும் வெட்டி வைத்து கொடுத்தனர். அடுத்து வந்தது சிக்கன் பிரியாணி, பாஸ்மதி அரிசியில் புளிசாதம் பொடியை கலந்து சிக்கனையும் சேர்த்து செய்தது போன்ற சுவையுடன், பக்கத்தில் உள்ள குரோசரி கடையில் நான்கு டாலருக்கு மட்டன் பிரியாணி பார்சல் கிடைக்கும் சுவையும் அருமை. இவன் புளிசாதத்தில் சிக்கனைப் போட்டு அதை வேற உட்காந்து சாப்பிட வெச்சிட்டான். ஆனாலும் ஒரு நன்மை என் மனைவிக்கு புளிசாதம் மிகவும் பிடிக்கும் என்பதால் நன்றாக சாப்பிட்டார். மிச்சமுள்ள சி.புளி சாதத்தை பார்சல் செய்து கொண்டோம் , நாளைக்கு என் மனைவிக்கு அதுதான் மதிய உணவு. எனக்கு ஞாயிறு அன்று வைத்த பழைய மீன் குழம்பு இருக்கிறது அதை வைத்தே அரைபடி அரிசி சோறு இறங்கும். வழக்கமாக என் மனைவிக்கு புளி சாதம் வாங்க வேண்டா வெறுப்பாக எட்டு மைல் தூரம் உள்ள கடைக்கு சென்று புளி சாதம் வாங்கி வருவேன்,(இதுவே மீன் வாங்கச்சொன்னா எவ்வளவு தூரம் வேணும்னாலும் சலிச்சிக்காம போவேன்) இனி அந்த சிரமம் இல்லை, நடந்தே சென்று ருசியில் சிக்கன் இல்லாத சிக்கன் பிரியாணி ஆர்டர் பண்ணினா போதும் அலைச்சல் மிச்சம்.

Wednesday, November 11, 2009

நாடோடிகள், பொக்கிஷம் மற்றும் கந்தசாமி.

சமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்
உருவான கந்தசாமி பார்த்தேன்.

நாடோடிகள்.

நாடோடிகள் படம் இயல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.

தன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்று.

இதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.

கருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.

காதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.

99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லும் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

யாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.

படம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.

மொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.

பொக்கிஷம்.

எம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் கையெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

எழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா? கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.

படத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

கந்தசாமி

இந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக்ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா? இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா?

பி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.

Tuesday, October 6, 2009

மலையாளப்படத்தினால் ஏற்படும் நன்மைகள்.

நான் கிராமத்திலேர்ந்து தஞ்சாவூருக்கு டவுன் பள்ளிக்கூடத்திலே மேல் படிப்பு படிக்க போனப்பதான் மலையாளப்படங்கள் பற்றிய அறிவு எனக்கு கிடைத்தது.+1 படிக்கும் போது ஒன்னும் பாத்ததா ஞாபகம் இல்லை, ஆனா + 2 படிக்கும் போது எங்க கிளாஸ்ல ஒரு பெரிய குரூப்பா இந்த படங்களுக்கு போவோம்.

காலைல பஸ்ஸில் வந்து இறங்கி , பஸ்ஸ்டாண்டு சுவத்துல பாத்தாலே தெரியும் , திருவள்ளுவர் தியேட்டர்ல படம் மாத்தியாச்சுன்னு,அறத்துப்பால் பள்ளிக்கூடத்திலேயும், பொருட்பால் வீட்லேயும் சொல்லிக்கொடுத்துருவாங்கல்ல அதுனால இந்த திருவள்ளுவர் ஒன்லி காமத்துப்பால் மட்டுமே நடத்துன நவீன நகராட்சி தியேட்டர்.

11 மணி காலைக்காட்சிக்கு முதல் பிரீயடு 10.45 க்கு முடியும் அந்த கேப்புல , நண்பர்கள் குழு படத்திற்கு கிளம்பிருவோம், முக்கியமா தஞ்சாவூர் சேப்பனவாரிலேந்து இரண்டு பேர், மேல வீதிலேந்து ஒருத்தன், அய்யம்பேட்டைலேந்து ஒருத்தன் மற்றும் நான். டிக்கெட் வாங்கி உள்ளே போகும் போது அத அப்படியே முழுசா வாங்கிப்பாங்க, கிழிச்சி தாங்கன்னு கேட்டா , உங்கள கிழிச்சி தந்துருவாங்க.

உள்ளே போய் இருட்டுக்குள்ளே கிழிஞ்சிபோன சீட்டில மூட்டையாரோட முக்கால் மணிநேரம் அம்பலக்கார பஞ்சாயத்து, பிடிக்கிட்டா புள்ளி போன்ற படங்களை பாத்தா பிட்டே போட்டிருக்கமாட்டான், இதுக்குதாண்டா முத நாள் முத ஷோவுக்கு வரக்கூடாது, ஆபிஸர் ரெய்டு வருவாங்கன்னு ஜாக்கிரதையா இருக்காங்க போலருக்குன்னு சொல்லி கிளம்பிருவோம். ஆனாலும் நாலாவது பிரியடு கிளாஸுக்கு திரும்ப போயிரலாம் , அங்கே பாட்டனி வாத்தியார் கல்யாண முருங்கை தடவி பாத்தா நல்லா மொழ மொழன்னு இருக்கும்னு சொல்றது கேட்டு கிறங்கிப்போகவேண்டியதுதான் ,நேரமும் மிச்சம்.

உதாரணத்துக்கு அஞ்சரைக்குள்ள வண்டி படத்தை மேட்னி ஷோ பாத்தா மூனு மணிக்கு 26 A (பஸ் நம்பர்தான் A )பஸ்ஸ பிடிச்சி அஞ்சரைக்குள்ள வீட்டுக்கு போயிரலாம், ஏண்டா சீக்கிரம் வந்துட்டேன்னு வீட்ல கேட்டா, சீக்கிரம் பள்ளிக்கூடம் மூடிட்டாங்க அதான் அப்படின்னு சொல்லிரலாம் , ஆஹா பய படமெல்லாம் பாக்காம வீட்டுக்கு வந்துட்டானேன்னு பஜ்ஜி கிடைக்க வாய்ப்பு இருக்கு.சினிமா டிக்கட்ட கிழிச்சி குடுக்காம அவங்களே வாங்கிக்கரதுனால, துவைக்கும் சட்டைப்பையில் இருந்து மாட்டிக்கவும் வாய்ப்பு இல்லை.

மலையாளப்படங்கள் தரமானவை நீங்க மம்பட்டியான் படமெல்லாம் பாத்ததில்லையான்னு நிறைய பேரு சொன்னாங்க , நானும் ஒன்னாவது பாத்திரனும்னு ஒரு நாள் தஞ்சாவூர் ராஜா கலையரங்கத்தில் DSP மம்மூட்டி ன்னு ஒரு படம் போட்டிருந்தான், நானும் கலைப்படம் பாக்கிற ஆவலோட போனேன், படத்திலே ரெய்டுக்காட்சிகள்ள DSP வந்தாரு ஆனா மம்முட்டி வரவேயில்லை. போஸ்டர் போட்டிருந்த படமே உள்ள ஓடலைன்னு படம் பாத்த பின்னாடிதான் தெரிஞ்சது.

மலையாளத்துல கலைப்படம் எடுக்கிறேன்னு ஒருத்தன் பல்லு விளக்குறதையும், உச்சா போறதையும் மூனு மணி நேரம் பாக்கிறது, பிசன் சிங் பேடின்னு ஒருத்தர் விக்கெட்டே எடுக்காம 125 ஓவர் ஒரு இன்னிங்ஸ் பவுலிங் போடுறத பாக்கிற மாதிரி போர் அடிக்கிற விசயம். இந்த முக்கா மணி நேர படங்கள் B.S சந்திரசேகர் பவுலிங் மாதிரி விழுந்தா விக்கெட் இல்லாட்டி ரண்.மாட்டிக்கிட்டா டின்னு.

காலேஜ் படிக்கும் போது தென்றல் அப்படின்னு ஒரு தியேட்டர் இருந்தது, அந்தக்கருமத்துக்கு கதவே கிடையாது அதுனால நாங்க போறது இல்லை, தஞ்சாவூர் வழியா ஊருக்கு போகிற நண்பர்கள் சிலர் திருவள்ளுவரின் அருமை அறிந்து ஒருநாள் தஞ்சை நகராட்சி தங்கும் விடுதியில் ரூம் போட்டு தங்கி மிஸ்.ஜானகின்னு ஒரு படம் பார்க்க போனோம், தியேட்டருக்கு கிட்ட போனா தியேட்டர் சீல் வெச்சிட்டாங்க அப்படின்னாங்க.

அதுக்கப்புறம் நானும் உண்மைத்தமிழன் , ஜாக்கி சேகர் மாதிரி திருந்தி நல்ல பிள்ளையா பொழப்ப பாக்க ஆரம்பிச்சாச்சி,பரங்கிமலை ஜோதி தியேட்டர் காரனும், திருவள்ளுவர் தியேட்டரும் திருந்தி உலகத்தரத்தில தமிழ்ப்படம் போட ஆரம்பிச்சிட்டாங்க.இந்தக்கலைப்படம் பாக்கிறோம்னு காலம் முழுவதும் பள்ளு வெளக்குறது வெறிச்சி வெறிச்சி பாத்துக்கிட்டே காலத்த ஓட்டறதுக்கு இது எவ்வளவோ மேல்.

தப்பு பண்றோம்னு ஒத்துக்கிட்டா திருந்திரலாம்கிறது உண்மைதானே, இது மலையாளப்படம் பாக்கிறதுக்கு மட்டும் இல்லை. இதுதான் பதிவோட மெஸேஜூ.

Saturday, April 4, 2009

அயன் - மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம்.

படம் பிடித்தவரின் விமர்சனம்
படம் பிடிக்காதவரின் மற்றொரு விமர்சனம்

குருவி,வில்லு வரிசையில் மீண்டும் ஒரு கொள்ளக்கூட்ட பாஸ் படம். மலேசியாவில் படம் எடுக்க குறைந்த செலவு ஆகும் போல அதனால் ஓசில பிளாக்ஸ்பாட் கெடக்கிறதுனால எழுதுற என்ன மாதிரி, மலேசியாவிக்கு விமானத்துல போற மாதிரி சினிமா எடுத்தா கொள்ளக்கூட்ட சினிமாதான் எடுப்பாங்க போல,காங்கோ சென்னை இங்கெல்லாம் படம் போகிறது.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே என் மகள் அப்பா பயமா இருக்கு ஒரே சத்தமா இருக்கு வீட்டுக்கு போகலாம் அப்படினு சொன்னா, சொன்னபடியே 20 நிமிடத்திற்கு முன்பாகவே அவங்கம்மாவும் அவளும் வீட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர்.நான் நண்பர்களின் காரில் வருகிறேன் எனறு முழுச்சத்தத்தையும் கேட்டேன். ஒன்று தியேட்டர் சரியில்லை அல்லது பின்னனி இசை தேவையில்லாத இரைச்சல் அல்லது என் காது சரியில்லை.

படத்தின் கதை என்னான்னா ரெண்டு நல்ல கொள்ளக்கூட்ட பாஸ் ஒருவர் பிரபு, இன்னொருவர் சேட்டு, சேட்டுவின் மகன் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு போதை மருந்தெல்லாம் கடத்துறார் அப்பா சேட்டையும் கொன்று விடுகிறார். இவருக்கு கோலங்கள் சீரியல் வருகிற ஆதி கேரக்டர் நடிகரின் குரல், ரொம்ப பயமா இருக்கு.சூர்யா, பிரபுவிற்காக கடத்தல் செய்யும் குருவி. மலேசியா காங்கோ இங்கெல்லாம் பறக்கிறார் ,வைரங்களை கடத்துகிறார். காங்கோவை அழகாக காட்டியிருக்கிறார்கள்.எல்லா முறையும் கஸ்டம்ஸிற்கு யாரோ தகவல் கொடுக்கிறார்கள். சூர்யாவும் அவரின் நண்பனும் எப்படியோ சமர்த்தியமாக தப்பிக்கிறார்கள். இந்த சூர்யாவின் நண்பனின் தங்கைதான் தமன்னா ஹீரோயினி.சூர்யா கூட லல் பண்ணுரார் டான்ஸ் ஆடுறார். இதுக்கெல்ல்லாம் அவங்க அண்ணன் சப்போட்டா இருக்கார்.

திடீரென்று இடைவேளையில் ஒரு திருப்பம், இந்த நண்பன் வில்லனோட ஆள். அப்புரம் மலேசியாவுக்கு ஹெராயின் வயித்துக்குள்ள வெச்சு தமன்னாவோட அண்ணன் வில்லனுக்காக கடத்துறாரு,அதே பிளைட்ல பிரபுவுக்கு சூர்யா தங்கம் கடத்துறாரு. நிறைய சண்டை போடுறாங்க,காது கிழியுது மியூசிக். நண்பன் வயித்திலேந்து ஹெராயின எடுக்க வில்லன் கோஷ்டி வயித்த கிளிச்சி எடுக்குறாங்க , தமன்னாவோட அண்ணனான இவர் சூர்யாகிட்ட சாகும் தருவாயில் சொல்றார் என்ன எரிச்சிருன்னு , அவரும் எரிக்கிறார்.

நீதான் எங்கண்ணன கொன்னேன்னு தமன்னா கோபப்டுறாங்க, கடைசில பாத்தா அவங்கண்னன் கையில உள்ள செல்போன்லேயெ யாரு கொண்ணதுன்னு படம் புடிச்சிருக்கு, அப்புரம் தமன்னாவுக்கு திரும்பி சூர்யாவை புடிச்சிருக்கு.

இடைவேளைக்கு அப்புரம் சூர்யா கஸ்டம்ஸ்க்கு அல்லக்கையாவுறாரு, வில்லன் பிரபுகிட்டேந்து கிழிச்ச காங்கோ நாட்டு பணத்தில பாதிய (கொள்ளகூட்ட நோட்டு மேட்சிங் டெக்னிக்) எடுத்துட்ட கொல்றார்.சூர்யா தப்பிக்கிறார் காங்கோ செல்கிறார்.வைரத்தை வில்லனிடமிருந்து பறித்துவிட்டு கொல்கிறார்.

இந்தியா வருகிறார், கஸ்டம்ஸ்ல அவங்கம்மா போட்டுக்கொடுத்திட்டாங்க , இனிமேலாவது திருந்தி வாழச்சொல்லி, நாங்களும் சொல்லிக்கிறோம் நீங்க நல்ல படம் நிறைய நடிக்கலாம்.அவங்கம்மாக்காக கஸ்டம்ஸ்ல அவர் தலைல வெச்சுக்கிற வைரத்தெல்லாம் குடுக்கிறார்.

உடனே அவருக்கு ஆபிஸர் என்னமோ ஒரு வேலை கொடுக்க்கிறார். வெறும் உடம்போட இருக்கிற சூர்யாவிற்கு பக்கத்தில இருக்க ஆபிஸர் சட்டையை உருவி குடுக்கிறார். அப்படியே நம்ம சட்டை பேண்டையும்தான்.

தமன்னா அழகாய் இருக்கிறார், ஒரு பாடல் காட்சியில் அவர் கட்டியிருக்கும் சேலை நன்றாக இருக்கிறது.பிரபு,சூர்யா நன்றாக நடித்திருக்கிறார்கள், ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ஆனால் படம்....

அய்யா படம் எடுக்குறவுங்களே நீங்களே இந்த படங்களை முதலில் உங்கள் குடும்பத்தோட குழந்தை குட்டிகளோட பாருங்க அப்புரமா காசு குடுத்து பாக்கிரவங்களை சோதனை பண்ணுங்கப்பா.

இந்தகொள்ளக்கோஷ்டிப்படம் எனக்கல்ல. பெரும்பாலனவர்களுக்கு பிடித்திருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.இந்த மாதிரி கதைக்களம் உள்ள படங்களை தமிழகம் உண்மையிலேயே ரசிக்கிறதா. சூர்யா,தமன்னா,பிரபு இவர்களை வைத்து கண்டிப்பாக ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் எடுத்திருக்க முடியும்.

பதிவில் எழுத்துப்பிழை நிறைய இருக்கும். காரணம் அயன் செய்யப்பட்ட விரல்கள் இன்னும் சுடுகிறது.

மொத்தத்தில் அயன் குடுகுடுப்பை எழுதிய ஒரு கவிதை.

Tuesday, March 10, 2009

வெண்ணிலா கபடிக்குழுவும் என் ஊர் கபடிக்குழுவும்.

குறைந்த செலவில் எடுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான சினிமா. கிராமத்திருவிழாக்காட்சி முதல் உள்ளூர் கபடி போட்டிகள் வரை நிறைய காட்சிகள் என் கிராம வாழ்க்கையோடு ஒத்துப்போனதால், ஒரு திருவிழா பார்க்கும் நினைப்பும்,உண்மையான கபடி போட்டி பார்க்கும் எண்ணத்தை விதைத்தது இந்த படம்.நீண்ட நாட்களுக்கு பிறகு ஊர் நினைவுகளை கொஞ்சம் அதிகமாவே கிளறியது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கபடி விளையாடுவதை காண்பிப்பது ,கபடி என்ற விளையாட்டு தெரியாதவர்களுக்கு இது சற்றே பிடிக்காமல் போகலாம். கிராமம் சார்ந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கு படம் கண்டிப்பாக பிடிக்கும், முற்றிலும் நகரத்தில் வாழ்ந்த சென்னை-28 மக்களுக்கு இந்தப்படம் மற்றொரு சென்னை-28, கிரிக்கெட்டுக்கு பதிலாக ஏதோ கபடி என்ற ஒரு விளையாட்டு.படத்தின் கதை, காட்சிகளுக்குள் நான் போக விரும்பவில்லை. முடிந்தால் திருட்டு டிவிடிலாவது படத்தை பாருங்கள்.

இப்போது எங்கள் ஊரின் கபடிக்குழுவிற்கு போவோம், மிகச்சிறிய ஊர் அதனால் ஒரு உருப்படியான கபடிக்குழு கூட கிடையாது, நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர் இளைஞர்கள் சேர்ந்து ஒரு குழு உருவாக்கி போட்டிகள் நடத்தினர்.பெரும்பாலும் 50 கிலோவுக்க்கு உட்பட்டவர் கபடி போட்டிகளையே எங்கள் ஊரில் நடத்துவோம்.இதற்காக போட்டியாளர்கள் பட்டினி கிடந்து,லாசிக்ஸ் என்ற மாத்திரையை சாப்பிட்டு எடை குறைத்து,எடை போட்ட அனுமதி சீல் வைக்கப்பட்ட பின் நன்றாக சாப்பிடுவார்கள்,நன்றாக விளையாடுவார்கள்.கிட்டத்தட்ட பத்து வருடம் தொடர்ந்து இந்தப்போட்டிகளை நடத்தினோம்.கடைசியாக கோப்பை வென்றவர்கள் 2004 சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டிணம் கீச்சங்க்குப்பம் அணியினர்.வெளியூர்களிலும் 50 கிலோ எடைப்பிரிவில் ஓரளவுக்கு பரிசுகளை வாங்கும் அணி எங்கள் ஊர் அணி.

அணியின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும், கில்லாடி சகோதரர்கள்,கலாட்டா சகோதரர்கள், ஆறுமுகம் நினைவு அணி ,ஒரு ஊர் அணியின் பெயர் தமிழீழ விடுதலை விரும்பிகள்.

ஒருமுறை எங்கள் பகுதிக்குள் சாதாராணமாக நடக்கும் ஒரு போட்டியில் குழுக்கள் இடையே நடந்த பங்காளிச்சண்டையில் இருவர் பிரிந்து தனி அணியாக போட்டி போட வந்தனர். அவர்கள் இருவரும் அணிக்கு வைத்த பெயர்கள் சிவப்பிரகாசம் நினைவு அணி, பரமசிவம் நினைவு அணி என உயிருடன் இருக்கும் தங்கள் அண்ணன்களின்(கோச்சுகள் கூட) பெயரில்.(அப்பகுதியில் நிறைய நினைவு அணிகள் இருக்கும்) புரியாமல் நினைவு அணிகளை உருவாக்கிய கூத்துகளும் நடந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கிரிக்கெட் முழுமையாக ஆக்கிரமித்ததால் கடைசியில் கபடி நின்றுபோனது.பின்னர் குடுகுடுப்பை இந்த அணியில் அவ்வப்போது விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறேன்.

ஆனால் கபடி விளையாட்டுக்காக நான் ஒருநாளும் எடை குறைத்தது இல்லை, ஏனென்றால் நான் கல்லூரி முடிக்கும் வரை 50 கிலோவை தாண்டியதில்லை, அது மட்டுமல்லாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் எடை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Sunday, March 8, 2009

முன்னணி நடிகர்கள் ஒரு கலந்துரையாடல்.

கார்த்திக்: வாங்க ழாக்டர் விஷய், எப்படி இருக்கீங்க

விஜய்: வணங்கங்கண்ணா? நீங்க எப் படி இருக் கீங்கண்ணா?அப்ப பாத்த மாதிரியே இளமையாவே ஜம்னு இருக்கீங்க.

கார்த்திக்: அது ஒன் ழும் இல்லை, பலவிதமான எக்ஷெச்ஷ் பண்ணி பாடி இப்படி வெஷ்சிருக்கேன்ஷ்.நீங்க கூட இப்ப என்ன மாதிழியே நல்லா பேசறீங்க உங்களுக்கு என்னை மாதிழியே நல்ல எழிர்காளம் இழுக்கு.

விஜய்: ?!?!#> இதெல்லாம் ரொம்ப ஓவருங்கண்ணா உங்க அளவுக்கு என் நால தெலிவா பேஷ முடியாது, ஆனாலும் சீக்கிரம் உங்கள மாதிரியே ஆயிடுவேன்.உங்க அரசியல் வால்க்கை எப்படி போகுது கார்த்திக் சார்.

கார்த்திக்: ரொம்ப நல்லா போகுது, நீங்க கூட கஷ்சி ஆரம்பிக்க போறதா பேஷிக்கிறாங்க, சினிமாவில மட்டும் இல்லை அரசியலேயும் என்னோட இடத்தை நீங்க அடையனும் என்னுடைய ஆஷிர்வாதம் எப்பயும் உண்ழ்டு.

விஜயகாந்த்: என்ன அரசியல் அப்படின்னு சத்தம் கேக்குது, என்னோட கூட்டனி மக்கள் கூடத்தான்.

கார்த்திக்: கவழைப்படாதே விஷயகாந்த், நான் உன் நண்பன் இருக்கேன்.காங்கிரஸ் துரத்தி விட்டாங்கன்னு யோஷுக்கவேண்டாம் என்னோட கூட்டனி வெச்சுக்கங்க 39 உங்களுக்கு ஒன்னு எனக்கு.

விஜயகாந்த்: நாற்பதும் நமக்கே.

சிரஞ்சீவி: நாந்தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர், இன்னும் திராவிட கணக்குல கொஞ்சம் மிச்சம் இருக்கு.

கார்த்திக்: ஷிரஞ்சீவீ நீங்க எடுத்துக்கோங்க, நாங்க டெல்லிக்கு குறி வைக்கிறோம்.40 எம்பி கொடுத்தா ஒரு தமிஷனை பிரதமரா ஆக்குரதா ஷுவாமி ஷொல்லிருக்கார்.அப்ப நாந்தான் அடுத்த பிரதமர். ஏன்னா நீங்க தெலுங்கர்னால பிரதமர் வாய்ப்பை இழக்குறீங்க.

விஜயகாந்த்: அடிச்சன்னா மதுரைல போயி விலுவ பாத்துக்க.நானும் தமிலந்தான்.

அஜித்: தல்லாகுளம்,மேலமாசிவீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல்,ஆரப்பாளையம்,கோரிப்பாளையம்,அனுப்பானடி,செல்லூர்.....

விஜய்: என்னடா இங்க நாராசமா ஒரு குரலு.ஒரே நாய்ஸா இருக்கு.

அஜித்: மதுரைன்னு ஒரு சத்தம் கேட்டுதே, நம்ம ஏரியாவாச்சே அதான்.

விஜய: ஏற்கனவே காணமப்போன அத்திப்பட்டி சிட்டிசன் தான் நீங்க

அஜித்: அதான் குருவி பறந்து போய் அத்திப்பட்டிய கண்டுபிடிச்சிருசே நண்பரே

விஜய்: நாம ரெண்டு பேரும் சண்டை போடறதுனால யாருக்கு லாபம், பேசமா நாம ரெண்டு பேரும் ஒரு படத்துல இணைந்து மிரட்டுவோம்.

அஜித்: நாம ரெண்டு பேரும் நடிக்கறதுனால, படம் பாக்கிறவங்களுக்குதான் நஷ்டம்,ஒரே கூட்டில ஏகனையும்,குருவியையும் யோசிச்சி பாத்தாலே மிரட்டுதுல்ல.

விசால்: சத்யம் மேல சத்தியமா சத்யம் மாபெரும் வெற்றிப்படம்.

அஜித்& விஜய்: தோ பாருடா இப்படி கூட முழு பூசணிக்காய மறைக்கலாம் போல.


ரஜினிகாந்த்: நான் வேணும்னா வாய்ஸ் கொடுக்கவா?

அனைவரும்: அண்ணா உங்க வாய்ஸ போயி இமயமலைப்பக்கமா நின்னு அப்படியே சீனாக்காரனுக்கு கொடுங்க.

ரஜினிகாந்த்: சீனாக்காரனுக்கு நான் வாய்ஸ் கொடுத்தா புரியாதேப்பா.

கமல்ஹாசன்: நான் பேசுவது மட்டும் தான் தமிழனுக்கு புரியவில்லை என்று நினைத்தீர்களா நண்பரே. ஃகாஃகாஃகாஃகா....

கருணாஸ்: என்னா ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள், நான் ஹீரோவா நடிக்கற படத்தில காமெடியன் ரோல் இருக்கு யாராச்சும் பண்றீங்களா?

கஞ்சா கருப்பு: 305 நம்பர் ரூம்காரரே ஒரு திண்டுக்கல் பூட்டு ஒன்னு கொடுங்க,ஒருத்தருக்கு வாய்ப்பூட்டு போடனும்..

ஒரு குரல்: எல்லாரும் கெளம்புங்க குறள் தொலக்காட்சிக்காரங்க குடும்பத்தோட இந்த கலந்துரையாடல்ல கலந்துக்க வராங்க.

அனைவரும் :யம்மாடி தப்பிச்சோம்டி.

குடுகுடுப்பையின் நலம் விரும்பிகள்: இப்படி எழுதுனா ரசிகர்கள் சண்டைக்கு வரமாட்டாங்களா?

குடுகுடுப்பை: அவங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லைன்னு அவங்களுக்கு தெரியும்.

Sunday, February 22, 2009

வாழ்த்துக்கள் ரகுமான்,பூக்குட்டி

வாழ்த்துக்கள் ரகுமான் மற்றும் பூக்குட்டி.

Saturday, January 17, 2009

நகைச்சுவை ஆடல்/பாடல்

பொதுவாக நான் ஒலி/ஒளிப்பதிவு இடுவதில்லை.ஆனாலும் இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களிடம் பகிராமல் இருக்கமுடியவில்லை.

Thursday, January 15, 2009

புதிய பறவை விமர்சனம்.

வில்லுவின் அம்பினால் தாக்கப்பட்ட கோபத்தில் வீட்டுக்கு வந்தேன் நண்பர் ஒருவர் சில சிவாஜி/கமல்ஹாசன் படங்களின் டிவிடி கொடுத்தார். அதில் புதியபறவையும் ஒன்று, நிறைய பேர் புதியபறவை நல்ல படம் என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்.ஆனால் பார்த்ததில்லை.

இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது, ஒரே வரிதான் கதை,அதனை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் எப்படி எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் வியப்பு. சிவாஜி மலேசியாவில் தன்னுடைய இதயம் பலஹீனமான குடிகார மனைவியை (சவுகார் ஜானகி) அறைந்ததில் இறந்து விடுகிறார். அதனை மறந்து இந்தியாவில் வேறோரு பெண்ணை திருமணம் செய்ய நினைக்கையில் மீண்டும் சவுகார் ஜானகி அத்தான் என்றபடி வீட்டுக்குள் நுழைகிறார்.இந்த தருணத்தில் சிவாஜி தான் செய்த கொலையை மறைத்து, வந்திருப்பவர் தன் மனைவி சவுகார் ஜானகி அல்ல என்பதை நிரூபிக்கவேண்டும்.இதனை அவரின் முகத்தில் கொண்டு வருவதுதான் இந்தபடம்.படத்தின் இறுதியில்தான் தான் மனைவியை கொலை செய்ததை சொல்வார். அதுவரை நடப்பதுதான் கதை.

பல இடங்களில் சிவாஜி தன்னுடைய முத்திரையை பதித்து இருப்பார். பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் போது சிகரெட் புகையுடன் சௌகார் ஜானகியை சேர்த்து ரசிக்கும்போது அவரின் நடிப்பு.கப்பலில் சந்தித்த வி.கே.ராமசாமி அவரது மகள் சரோஜாதேவிக்கும் ஊட்டியில் தன் இல்லத்தில் இடம் கொடுத்திருப்பார்.அப்போது மிரட்டல் தொணியில் வரும் எம்.ஆர்.ராதாவின் போனை கேட்டு முடித்தவுடன் முகத்தில் குழப்பமும்/கோபத்தையும் ஒருங்கே கொண்டு வந்த அந்த நடிப்பு இந்த மனிதருக்கு மட்டுமே வரும் போல.

சரோஜாதேவியுடன் காதல் வயப்பட்டு நிச்சயம் செய்யும் ஒரு நன்னாளில், மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வருகிறார்,அவருடைய சித்தப்பாவாக எம்.ஆர்.ராதாவும் நுழைகிறார்.நிச்சயம் தடைபடுகிறது.இந்த சௌகார் ஜானகி தன் மனைவி அல்ல என்று நிரூபிக்கிறேன் அதுவரை வீட்டில் இருக்கசொல்கிறார்.அவர்களும் இருக்கிறார்கள்.

மனைவி என்று சொல்லிக்கொண்டு சௌகார் ஜானகி வீட்டுக்கு வந்தவுடன். அவர் தன் மனைவி இல்லை என்று நிரூபிக்க அவர் படும் சிரமங்களை சில இடங்களில் ஆணவத்தோடும், பல இடங்களில் எப்படி எதிர்கொள்வது என்ற குழப்பத்துடனும் தந்திருப்பார். சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் உண்டு. சரோஜாதேவியும் அருமையாக நடித்திருப்பார்.நாகேஷ்,வி.கே.ராமசாமியின் பங்கு அவ்வளவு சுகம் என்று சொல்லமுடியாது ஒருவேளை 2009 ல் ரசிக்கமுடியவில்லையாகவும் இருக்கலாம்.எங்கே நிம்மதி பாட்டையும் நன்றாகவே படமாக்கியிருப்பார்கள்.உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்லவேண்டும் என்னை பாடச்சொன்னால் என்ன பாடத்தோன்றும் பாடலும் அருமை.

வந்திருப்பவர் தன் மனைவி அல்ல என்பதை நிரூபிக்க தன் போலிஸ் நண்பன், சிங்கப்பூர் நணபரை தொடர்பு கொள்ள முயற்சி,மனைவியின் அண்ணன் மூலம் இறுதி முயற்சி செய்கிறார்.கடைசியில் மனைவியின் அண்ணனும் தங்கச்சி,சித்தப்பா என்று சொன்னவுடன். எல்லா முயற்சியும் தோல்வியுற்ற நிலையில்,சிவாஜி தான் தான் அந்தக்கொலையை செய்தது என்பதை ஒரு நீண்ட விளக்கம் /பிளாஷ்பேக் மூலம் தருவார்.தந்து முடித்தவுடன் இப்போது தெரிந்ததா இவள் என் மனைவி அல்ல என்று கூறி சரோஜாதேவியை இப்போ என்னை நம்புகிறாயா எனக்கேட்கும் போது, சரோஜாதேவி இன்ஸ்பெக்டர் இவரை கைது செய்யுங்கள் என்று கூறூவார்.

எம்.ஆர்.ராதா, சரோஜாதேவி ஆகியோர் உண்மையைக்கண்டுபிடித்து சிவாஜியை கைது செய்ய வந்தவர் என்ற உண்மையை சொல்வார்.இதனைப்போல சில விஜயசாந்தி நடித்த டப்பிங் படம் மூலம் பார்த்துவிட்டதால் ஓரளவு யூகிக்கமுடிந்தது.ஆனாலும் அந்தக்காலத்தில் எடுத்த ஒரு திரில்லரை இப்போதும் ரசிக்கமுடிகிறது.

இந்த விமர்சனத்தை பதிவர் பழமை பேசிக்கு சமர்ப்பிக்கிறேன்.விரைவில் இந்தப்படம் பி.வாசுவால் ரீமேக் செய்யப்பட்டு புதிய குருவி என்ற பெயரில் வந்தால் மீண்டும் விமர்சனம் எழுதுவோம்.

Sunday, January 11, 2009

வில்லு - ஒரு முன் பழமைத்துவ காவியம்.

அயன் பார்த்த பின் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பதில்லை என்ற முடிவினால், வேட்டைக்காரன் திரைவிமர்சனம் இல்லை. அதனால் வில்லு விமர்சனம் மறுபதிவு.

வலையுலகில் முதன் முதலாக ஒரு திரைப்பட விமர்சனம் மீள்பதிவாகிறது.

சனிக்கிழமை இரவு எதிர்பாராமல் டாலஸில் கடுங்குளிர், கடுங்குளிரைவிட எதிர்பாராத முடிவு - இரவு 9:30 காட்சி வில்லுக்கு செல்வதென்று தீர்மானித்தது. ஏற்கனவே குருவியால் கொடூரமாக கொத்தப்பட்டிருந்தாலும் விதி வலியது என்பது நிரூபிக்கப்பட்டது.

படத்தில் நான் புரிந்து கொண்ட கதை இதுதான், கொள்ளை கூட்டக்காரர்கள் வழக்கம் போல எதையோ கடத்துகிறார்கள், வருகிறார் டாக்டர் வில்லு - நீரில் பறக்கும்/மூழ்கும் படகாய் வந்து கொள்ளை கோஷ்டியின் ஒரு தலையை சாய்க்கிறார்.

இப்போது கொள்ளை கூட்டத்தை விட்டு கிராமத்தில் ஒரு கல்யாணத்திற்கு போகிறார். அங்கே துணி பஞ்சத்தில் கஷ்டப்படும் அழகி நயன்தாராவுடன் கொஞ்சல், டான்ஸ், பாட்டு. இடையிடையே வடிவேலு வந்து அடி வாங்கிக் கொள்கிறார்.

நிற்க அனைவரும் எதிர்பார்த்தபடி டாக்டர் விஜயின் வித்தையில் சொத்தையாகிறார் நயன். இன்னோரு எதிர்பார்த்த திருப்பம் நயன்தாரா ஒரு கொள்ளை கூட்ட பாஸின் மகள்.

நமக்கு எதிர்பாராத ஒரு அதிர்ச்சி கொள்ளை கூட்ட பாஸ்கள் பிரகாஷ்ராஜும்,தேவராஜும் அறிமுகப்படுத்தப்படும் போது ஏற்படும் திருப்பங்கள். இரண்டு தெலுங்கு,கன்னட மசாலா படத்தை ஒரே நேரத்தில் பார்த்த திருப்தி. கொள்ளை கூட்டப் படம் அப்படித் தான் இருக்கும் போல. இது முன் பழமைத்துவத்தின் அடிப்படை.

கொள்ளை கூட்ட பாஸ் தேவராஜின் மகன் தான் விஜய் என்று மற்றொரு திருப்பம். அப்பனும்,மகனும் பூச்சி மருந்து அடிக்கும் விமானத்தில் பயணம் செய்யும் போது, தேவராஜை விமானத்திற்குள்ளேயே பறந்து, டைவ் அடித்து, சண்டை போட்டு, இறக்கையை பிடித்தி தொங்கி விமானத்தின் அடிப்பகுதி வழியாக விமானத்தின் உள்ளே இருக்கும் தேவராஜை கத்தியால் குத்தி கொல்கிறார் டாக்டர் விஜய். இப்போது விஜய் உண்மையிலேயே தேவராஜின் மகன் இல்லை என பயங்கர ஹேர்பின் திருப்பம் வேறு.

அப்படியே விமானத்தில் இருந்து சரியாக நயன்தாரா பயணம் செய்யும் படகில் பாராசூட் மூலம் குதிக்கிறார் டாக்டர். போடுறா பாட்டை- ஜிமுக்கு சிக்கும் ஜிமுக்கு சிக்கும். இப்படி ஒரு ஏழெட்டு பாட்டு, அதே அளவு சண்டை.

நயனின் தந்தையும், கொள்ளை கூட்ட பாஸ்களில் ஒருவருமான பிரகாஷ்ராஜ் மற்றும் விஜய் இருவரின் அதிரடி சந்திப்புகள், திருப்பங்கள் என போகிறது. அடுத்து டாக்டர் விஜய் கண்ணாடியை கழற்ற கொள்ளை கூட்ட பாஸில் ஒருவரான ஆனந்த்ராஜ் உட்பட பலர் சாகிறார்கள்.

நல்ல கொள்ளை கோஷ்டிப்படம் என்று நினைக்கையில் அடுத்த திருப்பம் விஜயின் அப்பா விஜய் ராணுவத்தில் மேஜராம்,மேற்கண்ட கொள்ளை கோஷ்டித்தலைவர்களாக இதுவரை நாம் நினைத்துக்கொண்டிருந்த அனைவரும் ராணுவத்தில் வேலை பார்த்தவர்களாம். இவர்கள் நேர்மையான மேஜரை கொன்றுவிட்டு அவரை தேசத்துரோகியாக்கிவிட்டனர், அவரது மனைவியின் நெத்தியில் தேசத்துரோகியின் மனைவி என்று பச்சை குத்திவிட்டனர். இவர்களை மகன் விஜய் பழிவாங்குறாராம் அதுதான் கதையாம்.இது சோல்ஜர் இந்திப்படத்தோட கதியாம் இன்னோரு பதிவில படிச்சேன்.

படம் ஜெர்மனி, ஸ்விஸ், சென்னை அப்படின்னு போகுது. திடீர்னு ஒரு புளுரே டிஸ்க் தேடுறாங்க, ரஜினியோட ஒரிஜினல் பில்லாவுல தேடுன டைரி, தலயோட பில்லாவில் தேடுன பென் டிரைவை விட லேட்டஸ்ட் டெக்னாலஜியா இருக்கணும்னு உத்தரவு போட்டது டாக்டர் விஜயா இல்லை தெலுங்கு சூப்பர் ஹிட் டைரக்டர் பிரபு தேவாவின் சுய மூளையான்னு சத்தியமா எனக்கு தெரியல.

கடைசில வில்லன் பிரகாஷ்ராஜ் என்னை விட்டுரு அப்படின்னு கத்துராரு, தியேட்டர்ல படம் பாத்த அவளோ பேரும் எங்களை விட்டிருன்னு கதருறாங்க.

ஆனாலும் குருவியை தாக்க புறப்பட்ட வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு தவறி படம் பார்த்தவர்களை பதம் பார்த்து விட்டது. ஆக இன்னும் குருவி தான் உயரத்தில் தான் பறக்கிறது. அடுத்த படத்திலாவது குருவியின் சாதனையை டாக்டர் விஜய் முறியடிப்பார் என நம்பலாம்.

படத்தின் ஒரே ஒரு குறை என்றால் கொள்ளை கோஷ்டித் தலைவர் ஆனந்தராஜுக்கு வைத்த மாதிரி தாடியை பிரகாஷ்ராஜ், தேவராஜ் மற்றும் சில அல்லக்கைகளுக்கும் ஒட்ட வைத்திருக்கலாம். படத்தின் நம்பகத்தன்மையாவது இன்னும் கொஞ்சம் கூடியிருக்கும்.

மேலும் பெட்டி மாற்றும் சீன், LIC க்கு எத்தனை மாடி, வாழைப்பழத்தை எப்படி சாப்பிடணும் போன்ற ரகசிய சொற்கள் வைத்திருந்தால் இன்னும் கொள்ளை கோஷ்டி கதையின் சுவை கூடியிருக்கும்.

இவ்வளவு திருப்பங்கள் நிறைந்த இந்த படத்தில் திருப்பவே முடியாத ஒன்றும் உண்டு, அது குஷ்பூவின் நடனம்.


S.Ve.சேகர் அவருடைய காதுல பூ நாடகத்தை தெலுங்கு டப்பிங் பட டைரக்டர்களுக்கு அர்ப்பணித்திருப்பார். அது போல நான் இந்த பட விமர்சனத்தை அவரோட "காதுல பூ" நாடகத்திற்கு அர்ப்பணிக்கிறேன்.

Wednesday, January 7, 2009

நடிகர் விவேக்குடன் விஜயகாந்த் பேட்டி

வழக்கம் போல ஒரு கற்பனை பேட்டி நகைச்சுவை பேட்டி.யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.

விவேக்: வணக்கம் கேப்டன், வலைத்தளத்திற்கு உங்களிடம் ஒரு கற்பனை பேட்டி எடுக்க சொல்லி குடுகுடுப்பையின் ஒரு கோடி ரசிகர்கள் உத்தரவு போட்டிருக்காங்க பேட்டிய தொடங்கலாமா விஜயகாந்த்.

வி.ரசிகர்கள்: கேப்டன பேரு சொல்லி கூப்புடதா அப்புரம் டப்பா டான்ஸ் ஆடிடும்.

விஜயகாந்த்: தொண்டர்களே நமது கட்சியில் வன்முறைக்கு இடமில்லை அதனை புரிந்து நீங்கள் நடந்துகொள்ளுங்கள் ,விவேக் வன்முறையை தூண்டும் வகையில் இனி பேசமாட்டார்.

விவேக்: (மனதினுள்)பேர சொல்றது வன்முறையை தூண்டுறதா?நான் வழக்கமா எல்லாரையும் மரியாதை இல்லாம பேசிதான் காமெடி பண்ணுவேன் அதுக்கே மக்கள் சிரிக்கதான் செஞ்சாங்க ,ஆனா நேர்ல ஒழுங்கா பேசினா வன்முறைங்கிறாங்க.

விவேக்: உங்களை கேப்டன்னு கூப்பிடனுமா புரட்சிக்கலைஞர்னு கூப்பிடனுமா?

விஜயகாந்த்: ரெண்டையும் சொல்லி கூப்பிட்டா என்ன தப்பு, புரட்சிகலைஞர்னு கூப்பிட்டா கலைஞர வம்புக்கிழுக்கிறேன் திமுககாரங்க சண்டைக்கு வருவாங்க வரட்டும். கேப்டன் புரட்சிக்கலைஞர்னு கூப்பிடறதான் மேடம் விரும்புறாங்க.

விவேக் :கேப்டன் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் என்ன பிரச்சினை,ஏன் எங்கள மாதிரி நகைச்சுவை நடிகர்கள் கூட உங்களுக்கு பிரச்சினை?

விஜயகாந்த்: முதல்ல நகைச்சுவை நடிகர்கள் உங்கள மட்டும் நீங்க சொல்லிக்கறதே தப்பு, என்னோட நடிப்ப பாத்து மக்கள் சிரிக்கலையா? நானும் நகைச்சுவை நடிகன் தான், வல்லரசு படத்த இந்த குடுகுடுப்பை அவரோட நண்பரோட உக்காந்து கிளைமாக்ஸ் சீன் வரைக்கும் சிரிச்சது உண்மையில்லயா? அவரோட நண்பர் அந்த படத்த அஞ்சு வாட்டி பாத்தது எதுக்காக? நகைச்சுவை நடிகர்களோட எனக்கு பிரச்சினை அப்படின்னா எனக்கே எங்கூட பிரச்சினைதான். இதில் பெரிய சூழ்ச்சி இருக்கு.


விவேக் : 10% கேக்குறீங்களே நீங்க என்ன தேமுதிகவான்னு செந்தழல் ரவி கேக்குறாரே? இந்தக்க்குற்றச்சாட்டுக்கு என்ன சொல்றீங்க?

விஜயகாந்த்: உலக அரசியல் தெரிஞ்சவரா இருந்தா 10 % கேக்கறீங்களே நீங்க என்ன ஆசிப் அலி சர்தாரியான்னு கேட்டிருப்பார், ஆனா தேமுதிக வில் அமைப்பு ரீதியா எல்லா பதவிகளும் சரியாகவே நடக்கிறது, அதற்கான புள்ளிவிவரங்கள் நான் கொடுப்பேன் நெனச்சுதான் நீங்க இந்த கேள்விய கேக்கறீங்க, சினிமான்னா லியாகத் அலிகான் நம்பர் சொல்வாரு வசனமா பேசிரலாம். அரசியலுக்கு பண்ருட்டியார்தான் இந்த வேலையை பண்றது, டாக்டர் பலாப்பழம் சாப்பிடவேணாம்னு சொன்ன ஒரே காரணத்திக்குகாக என் ஊரு பலாப்பழத்தை சாப்பிடக்கூடாதுன்னு சொல்றதுக்கு டாக்டர் யார்னு முழுசா சாப்பிட்டுட்டு இப்ப அவர் மருத்துவமனைல இருக்கார். அவரு வந்தவுடன் புள்ளிவிவரம் வங்கி கணக்குகள் எல்லாம் வலை மன்றத்தில வெக்கத்தான் போறேன்.அப்போ பாப்போம் அந்த செந்தழல் ரவியா இல்ல இந்த செங்கண்ணு விஜயகாந்தான்னு.

விவேக்: டாக்டர் சொன்னா கேட்டுக்கவேண்டியதுதானே? ஏன் அப்படி பண்ணார்?

விஜயகாந்த்: அவரு டாக்டர் ராமதாஸ் சொன்னார்னு நினைச்சு அப்படி பண்ணிட்டார்.

விவேக்: இப்பவே நிறைய குடும்ப அரசியல் பண்றீங்கன்னு குற்றச்சாட்டு இருக்கு,பதவிக்கு வந்தா உங்கள் குடும்பத்தின் தலையீடு ஆட்சியில் இருக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

விஜயகாந்த்: யாரு குடும்ப அரசியல் பண்ணலை, குடுகுடுப்பைக்கு பதிவு போட ஒன்னும் இல்லண்ணா என் மகளின் பதிவு,பெற்றோருக்கு பரிசு,ஓவியங்கள் ஒரு குடும்ப பதிவு போடலியா, பதிவர் வாசகர் சந்திப்புன்னு பதிவு போடலியா? அதையெல்லாம் நீங்க கேட்டீங்களா?எல்லாத்தையும் மக்கள் படிச்சிட்டுதான் இருக்காங்க.

விவேக் : கறுப்பு எம்ஜியார்?

விஜயகாந்த்: ஏன் கூப்பிடக்கூடாது, வடிவேல கறுப்பு நாகேஷ்னு கூப்பிடலாம் என்ன கறுப்பு எம்ஜியார்னு கூப்பிடக்கூடாதா?இதுல என்ன அரசியல் ஏன் காழ்ப்புணர்ச்சி.

விவேக் : சன் டிவி காரங்க திரும்ப திமுக வோட ஐக்கியமாயிட்டாங்க? நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?

விஜயகாந்த்: சன்னும்,கலைஞரும் சேந்தா மாதிரி நானும் திமுக கூட்டணில சேரலாம், ஆனா என்னை முதலவராக ஏற்றுக்கொள்ளவேண்டும் அப்படி நடந்தால் எந்தக்கட்சியும் எங்களுடன் கூட்டணி சேரலாம்.

விவேக்: தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் அப்படின்னு பேரு வெச்சிருக்கீங்க? அப்ப மத்த கட்சில உள்ளவங்கெல்லாம் பிற்போக்கு திராவிடர்களா?

விஜயகாந்த்: யாரு தூண்டிவிட்டு பேசறீங்கண்ணு எனக்கு நல்லாவே தெரியும், அடிச்சன்னா தெரியுமா?

விவேக்: அடிவாங்க நான் என்ன வடிவேலா? அதுக்கெல்லாம் நான் அல்லக்கை கொட்டாங்குச்சிய வெச்சிருக்கேன் அடிங்க?

விஜயகாந்த்: ஏய் கை வலிக்குதுப்பா?

விவேக்: பின்ன கொட்டாங்க்குச்சில அடிச்சா கை வலிக்கத்தான் செய்யும் கேப்டன்.எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்..

விஜயகாந்த்: எங்க போயிருவே ஒரு நாள் நீயும் கட்சி ஆரம்பிச்சி என்கிட்ட கூட்டணிக்கு வரத்தானே போற...அப்ப வெச்சுக்கறேன்.

நானும் ஒரு அரசியல் பதிவு போட்டிருக்கேன், அப்படியே இதையும் படிங்க
குடுகுடுப்பை: வி.பி.சிங் ஏற்படுத்திய பின்விளைவுகள்.

Tuesday, October 14, 2008

சினிமா - சில நினைவுகள் (தொடர் பதிவு)

அழைத்த துக்ளக் மகேஷ்க்கு நன்றி

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயது சரியாக ஞாபகம் இல்லை, என் தாத்தா வீட்டிற்கு ஏதோ ஒரு விடுமுறைக்கு சென்றிருந்த நேரம், என்னையும் என் சித்தி மகனையும் என்னுடைய சின்ன சித்தி இரண்டு படத்திற்கு ஒரே நாளில் கூட்டிச்சென்றார். முதல் ஏதோ புதிய படம் ,இரண்டாவது படம் பெயர் ஞாபகம் உள்ளது சங்கே முழங்கு,ஞாபகம் உள்ள படத்து பேர பாத்தீங்களா? படம் பாத்துட்டு வீட்டுக்கு வந்தா தாத்தாவிடம் நல்ல அடி கிடைத்தது, சித்தி திட்டுடன் தப்பித்தார்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம், தங்கமணியும்,பாப்பாவும் இந்தியா வந்துட்டாங்க, தனியா எந்த கேள்வியும் இல்லாம படம் பார்த்தேன்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

வேட்டையாடு விளையாடு, நல்லாதான் இருந்துச்சு, இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கு.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

குருவி,சிட்டிசன்,கேப்டன்,வால்டர் வெற்றிவேல் இன்னும் சில தெலுங்கு டப்பிங் படங்கள். ஆனாலும் குருவி தாக்கிய அளவிற்கு இனிமேலும் யாரும் தாக்குவார்களா என்று தெரியல.


மிகவும் பாதிச்ச படம்னா - தேவர்மகன் , இந்தப்படத்தில சிவாஜியுடைய நடிப்பு பாதித்தது.கமல் தேவர் இன மக்களின் தவறுகளை வஞ்சப்புகழ்ச்சியா காண்பித்த படம். சண்டை போடுவதை விட்டுவிட்டு திருந்த சொல்லி எடுத்த படம்.இந்த படத்தை பார்க்க இராமநாதபுரம் தங்கம் தியேட்டருக்கு தேவர் இன மக்கள் கைத்தடி போன்ற ஆயுதங்களோடு வந்து பார்த்தார்கள். படத்தின் கருத்து ஈர்த்ததோ இல்லையோ ஆனால் தலைப்பு ஈர்த்தது.

5.. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை அப்படி எதுவும் தாக்கவில்லை.என்னுடைய வருங்கால முதல்வர் ஆசை இந்த சினிமாக்காரர்களால் நிராசை ஆகிவிடுமோ என்ற பயம் உள்ளது.

எம்ஜியார் என்ற மந்திரச்சொல். எங்கள் ஊரில் உள்ள ஒரு விவாசாயக் கூலி ஒருவரின் ஆறு அல்லது ஏழு வயது மகன் தன்னுடைய 3 அல்லது 4 மாத தம்பியை 'எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு எம்ஜியார் சொல்லு' என்று கொஞ்சுவார். அப்போது கோபம் வரும். இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

அவ்வளவாக் எனக்கு இதில் அறிவு இல்லை.

வல்லரசு போன்ற படங்களில் விஜயகாந்த் போடும் தொழில் நுட்பம் மிகுந்த சண்டைக்காட்சிகள் மிகவும் தாக்கியது.:)

அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு தேவை என்ற அளவில் உறுத்தாமல் இருந்த குள்ள கமல்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

எல்லா கருமத்தையும் படிப்பது உண்டு. இப்போ தமிழ்மணம் என்னை பாதித்த காரணத்தால் நிறைய கிசுகிசுக்கள் தெரிவதில்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?

இளையராஜா.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பொதுவா சினிமா அதிகம் பார்ப்பதில்லை. தாக்கிய ஆங்கில படம். மேட்ரிக்ஸ் 2, சத்தம் தாங்க முடியாமல் பாதியோட ஓட்டம்.

தாரே ஜமீன் பர் - நல்ல படம் , என் மகள் படத்தின் இரண்டாவது பாதியை நிறைய முறை பார்த்தார். என் மகள் கேட்ட கேள்வி ஏன் பெண் மாணவர்களே இல்லை? இந்த கேள்வியை யாராவது அமீர்கானிடம் கேட்டு சொல்லுங்கள்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டிப்பாக இல்லை. ஒருவீளை இருந்திருந்தால் என் நீண்ட கால ஆசைக்கு உதவியாக இருந்திருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

படம் பாக்கிறது ரொம்ப குறைவு, ஆனாலும் உலகமயமாக்கள் பெரிய செலவில் வெளிநாட்டுப்படங்களை போன்று காப்பி அடிக்க உதவும். ஆனாலும் நல்ல படங்கள் வரும். என்னைவிட என் சந்ததி அறிவாளிகள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவார்கள், அடுத்து சினிமா நாடகம் வரும்வரை நான் உட்பட.


இப்ப கொக்கி படலம். நீங்களும் எழுதுங்க

அது சரி
நசரேயன்
அமிர்தவர்ஷினி
தமிழ் சினிமா
ஜீவன்