Tuesday, November 23, 2010

பஞ்சரான பஸ்கள்.

லிவிங் -டுகெதர் இருவரின் உரிமை அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பவர்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம். அது கலாச்சார சீரழிவு தடுத்தே ஆகவேண்டும் என்பவர்கள் எப்படி தடுப்பார்கள். சும்மா டவுட்டுதான்.

கலாச்சாரம்கிறது மென்பொருள் மாதிரி(software) வெர்சன் 1.0 .2.0 அப்படின்னு வந்துகிட்டே இருக்கும். திடீர்னு ஹாட்டுவேர் இந்த சாப்ட்வேரையெல்லாம் சப்போர்ட் பண்ணாது , அப்புறம் புது சாப்ட்வேர், டெஸ்டிங் வெர்சனிங்க் இப்படி தொடர்ந்து தன்னை மாற்றியபடியே வலுவூட்டிக்கொண்டிருக்கும். சில பேரு திடீர் அந்தக்காலத்து மெயின்பிரேம் அவ்ளோ பெரிசு கட்டாயம் ஏசி வேணும், இந்தக்காலத்த்து காட்ஜெட்லாம் வாய்க்கா வரப்புல வெச்சுக்கிட்டு கட்டுப்பாடு இல்லாம திரியுது சீக்கிரம் கெட்டுரும் அப்படின்னு விமர்சனம் பண்ணுவாங்க, அதையும் உள்வாங்கி அடுத்த வெர்சன் சாப்டுவேர எழுதித்தானே ஆகனும்.

பார்ப்பானீயம் ஒரு சாதியைப் பற்றி பேசுவதில்லை என்றால் மற்ற மொழிகளில் அதன் பெயர் என்ன? பதிவா போடலாமா?

முட்டைகள் கூமுட்டைகள் ஆவதைத் தடுக்க, பீரோவால் முட்டை உற்பத்தி தடை செய்யப்பட்டதன் மூலம் கூமுட்டைகள் ஒழிக்கப்பட்ட புரட்சி நடந்தது, இப்போது எழும் முட்டையின் வடிவம் என்ன என்ற வரலாற்றுக் கேள்விக்கு விரைவில் பீரோவால் முடிவு செய்யப்படும்.

பிகு: பீரோ செவ்வக வடிவத்தில் இருக்கும் என்று நினைத்தால் அதற்கு இந்த பஸ் பொறுப்பல்ல.

நான் கலாச்சாரத்தை விட நினைச்சாலும் கலாச்சாரம் என்னை விடமாட்டேங்குது.இதில சில பஸ் பொருந்தாத் திருமணம் மாதிரி இருக்கும், கலாச்சாரத்துக்கு உட்பட்டு அவைகள் இணைந்தே இருக்கின்றன.

11 comments:

ILA (a) இளா said...

ஓஹோ

ILA (a) இளா said...

பஞ்சரானா டிஞ்சர் போட முடியாதில்லெ.. #டவுட்டு

பழமைபேசி said...

கலி முத்திடுச்சுங்க மேய்ப்பர்...

வருண் said...

***பழமைபேசி said...

கலி முத்திடுச்சுங்க மேய்ப்பர்...

November 23, 2010 12:02 PM***

LOL!

வருண் said...

***லிவிங் -டுகெதர் இருவரின் உரிமை அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பவர்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம். ***

பொத்தப் பொத்தத்தான் பொங்கி வெளிய வருது.

உணர்வையும், உடலையும் மறைப்பது அந்தக்கால அசிங்க கலாச்சாரம்!

எதையாவது உளறிட்டு, வாய்கிழிய பேசினதுக்கு சம்மந்தமே இல்லாமல் வாழ்றது இந்தக்காலத்து அரைவேக்காடுகள் கலாச்சாரம்!

ஆமா பேருந்துல கட்டை சக்கரம்போட்டா பஞ்சராகதுல்ல? :)

குடுகுடுப்பை said...

இனி வருண் போல உளராமல் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள பழகவேண்டும்.

குடுகுடுப்பை said...

வருண் said...
***லிவிங் -டுகெதர் இருவரின் உரிமை அதில் தலையிட நமக்கு உரிமையில்லை என்பவர்கள் பொத்திக்கொண்டு இருக்கலாம். ***

பொத்தப் பொத்தத்தான் பொங்கி வெளிய வருது. //

சரி எப்படி தலையிடுவீர்கள் அதை மட்டும் சொல்லுங்கள் அரைவேக்காடுகளுக்கு புரியட்டும்.

வருண் said...

***குடுகுடுப்பை said...

November 23, 2010 1:04 PM***

மொதல்ல நீங்க என்ன எழுதி இருக்கீங்கனு வாசிங்க. நீங்க எழுதியிருக்கதும், நீங்க சொல்ல வந்ததும் சரியா இருக்கானு பாருங்க!

அதுக்கப்புறம், எனக்கு ஜால்ரா பின்னூட்டமெல்லாம் இடத் தெரியாது. உங்களை ப்ளீஸ் பண்ணுவதைவிட என் கருத்தை சொல்வதில்தான் எனக்கு ஆர்வம் அதிகம்.

நான் ரெண்டு பேருக்கு இடையில் போய் நீங்க இப்படி வாழக்கூடாதுனு சொல்றதில்லை.

அதே சமயம் "லிவிங் டுகெதெர்" என்கிற கான்செப்ட் என்னவோ அப்படி வாழ்றவங்களுக்கு சொந்தமானதுனு நெறையப் பேரு தவறா புரிஞ்சுக்கிறாங்க! "லிவிங் டுகெதெர்" என்கிற கான்சப்ட்டை யாரு வேணா விமர்சிக்கலாம். ஏதோ "லிவிங் டுகெதெர்" பத்தி பேசினால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுவதுபோல ஒரு சிலர் தேவையில்லாமல் நெனச்சு நொத்துக்கிறாங்க. Nobody cares about your personal life. Just like people talking about "arranged marriage" "mistress" "prostitute" "love marriage", people talk about "living together".

லிவிங் டுகெதருக்கு கொடி பிடிக்கும் பலருக்கு இதை புரிந்து கொள்ற அளவுக்கு மூளை இல்லை என்பதே என் எண்ணம். யாரும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பேசவில்லை! புரிஞ்சுக்க சொல்லுங்க! நீங்களும் புரிஞ்சுக்கோங்க!

//
உங்களுடைய கருத்தைப் படிக்க தெகா பதிவிலிருந்து வரவேண்டும். என்னுடைய கருத்து அடுத்தவர் விசயத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லை என்பதே. அதுதான் என் நிலை. லிவிங் டுகெதருக்கு கொடி பிடித்தால் அவர்கள் பிடித்துக்கொள்ளட்டும்,நீங்களும் எதிர்கொடி பிடியுங்கள். யாரையும் please பண்ணவேண்டாம்.

"லிவிங் டுகெதெர்" என்கிற கான்செப்ட் என்னவோ அப்படி வாழ்றவங்களுக்கு சொந்தமானதுனு"
//
எனக்கும் அப்படித்தான் தோனுது. அதனாலதான் நான் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எப்படித்தோனுதோ அப்படியே செய்யுங்க, அதில் தலையிடவும் எனக்கு உரிமையில்லை.

//

"லிவிங் டுகெதெர்" பத்தி பேசினால் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுவதுபோல ஒரு சிலர் தேவையில்லாமல் நெனச்சு நொத்துக்கிறாங்க.//

தெகா பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டங்கள் இருக்கின்றன. தெகாவின் பதில்கள் மிகத்தெளிவாக இருக்கிறது.கலகலப்பிரியாவின் பின்னூட்டமும் அங்கே இருக்கிறது. அங்கே நடந்த பிரச்சினைகளுக்கு இந்தப்பதிவில் அவர்களை இழுக்கவேண்டிய அவசியம் என்ன? தனி மனித வம்பிழுத்தலை தவிர.

படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.

குடுகுடுப்பை said...

லிவிங் டுகெதருக்கு கொடி பிடிக்கும் பலருக்கு இதை புரிந்து கொள்ற அளவுக்கு மூளை இல்லை என்பதே என் எண்ணம். யாரும் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பேசவில்லை! புரிஞ்சுக்க சொல்லுங்க! நீங்களும் புரிஞ்சுக்கோங்க!
//
புரிஞ்சிக்க முயற்சி பண்றோம் இருக்கிற மூளைய வெச்சி

Anonymous said...

http://www.youtube.com/watch?v=umojiUlVAso&feature=related