Friday, July 9, 2010

புரட்சிகர முதலாளி,தொழிலாளி

விவசாயி முருகேசன் வீட்டு வாசலில் கூலி கேட்டு தொழிலாளர்கள் கோஷமிட்டுக்கொண்டிருந்தனர்.

"கூலி எங்கள் பிறப்புரிமை, வேலை எங்கள் உரிமை"
"தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக", இன்குலாப் ஜிந்தாபாத்"

எல்லாம் சரிதான் தம்பிகளா, இந்த வருசம் ஆத்துல தண்ணியும் வரலை, மழையும் பேயலை, அதனாலே வேலையில்லை, செய்யாத வேலைக்கு நான் எப்படி தம்பி கூலி தரமுடியும்.

"கூலி இல்லாமல் நாங்க எப்படி சாப்பிடமுடியும்", முதலாளித்துவமே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே.

"நானே சாப்பாட்டுக்கு இல்லாம இருக்கேன் , நான் ஏம்பா உன் வயித்துல அடிக்கிறேன், நாம சேந்து யோசிச்சு எதவாது வயித்துப்பொழப்புக்கு பாப்போம்யா.அது சரி இந்த வெயில்ல கருப்புக்கொடைய பிடிச்சிக்கிட்டு இருக்கீங்க.வெயிலுக்கு கருப்புக்கலர் கொடை ஆகாதுப்பா"

"நெல்லு ஊர்ல மழை பேயுது அதுக்காக கொடை பிடிச்சிருக்கோம்", வர்க்கம் , புரட்சி, மாவு , மார்க்கு .................................

---------

"என்ன முருகேசன்னே என்ன பிரச்சினை"

ஒன்னுமில்லை முனியா, நம்ப ஊரு தம்பிகதான், இந்த வருசம் வெள்ளாமை இல்லாததினால், கூலி இல்லை அதுக்காக ஒரு அமைப்பா சேந்து கூலி கேக்கறாங்க"

"அது எப்படின்னே வேலையே இல்லாதப்ப முடியும்."

கேட்டா இல்லாத நெல்லுல அரிசி எடுத்து வருத்து மாவாக்கி மார்க் போட்டு எங்கேயோ கொட்டி எல்லாருக்கும் சோறு போடுற கம்பசூத்திரம் தெரியுதுங்கிறாங்க, நாமளும் அப்படியே பேசிட்டிருக்கமுடியாதே, லாபத்தை மட்டும் சிந்திக்கிற முதலாளிகளாலதான் இவங்கள மாதிரி இளைஞர்கள் உருவாகுறாங்க, உழைப்பை சரியாக பயன்படுத்தி எல்லோருமே உழைப்பாளி/முதலாளிங்கிற மாதிரி கொண்டுவர நாமதான் சிந்திக்கனும், தண்ணி இல்லைன்னு விதை நெல்லையும் அவிச்சி தின்னாச்சி, இனி அடுத்த வேலை சாப்பாட்டுக்கு என்ன வழின்னு நாம யோசிக்கனும் , நாமளும் இல்லாத நெல்லு வருக்கிற சிந்தனையில இருந்தா யாருக்கும் சோறு கெடக்காது, ஏதாவது மாற்றுப்பயிர் செஞ்சு வேலை வாய்ப்புகள உருவாக்குவோம்.

அது சரிண்ணே,, நம்ம காசா பாய் வராரு..

"என்ன பாய் இந்தப்பக்கம்"

"நம்ம ஊரு பசங்க வந்தாங்க, கூலி கொடுக்கலன்னு , ஒரே கலகம் பண்ணாங்க, வீட்டில பொம்பல சனம் இருக்காங்க அப்புறம் பேசிக்கலாம்னேன், உடனே , ஆனாதீக்க பார்ப்பனீயம்னு கூச்சல் போடுறாங்க, நான் பாய் என்ன ஏன் பாப்பான்னு திட்டுறீங்கன்னு கேட்டேன், அதுக்குள்ள எங்க வீட்டம்மா பால் பனியாரம் கேக்கிறாங்கன்னு நினைச்சு அதுல ரெண்ட தட்டுல வெச்சு எடுத்துட்டு வந்துட்டாங்க, ஆனாலும் எதையும் கேக்காம இருந்த கலப்பையையும் உடைச்சிப்போட்டிட்டு கிளம்பிட்டாங்க"

"ஏன் வீட்டுக்கலப்பையையும் உடைச்சிட்டாங்க பாய், அதுக்காக கவலைப்பட முடியாது மாத்தி யோசிப்போம்."

ஆமா முருகேசு, விவசாயம் போச்சுன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன், அவங்க கலப்பையை உடைச்சோனதான் தோனுச்சு, பழைய இரும்பு யாவாரம் பண்ணலாமின்னு, எப்படியும் உங்க வீட்லயும் உடைஞ்ச கலப்பை இருக்கும்னு தெரியும், அத வாங்கிட்டுப் போகலாமின்னுதான் வந்தேன்.

21 comments:

vasu balaji said...

கலப்பைய உடைச்சாலும் வியாவாரந்தான்னா இது கார்ப்போரேட் சிந்தனையில்லையா? முதலாளித்துவ அடிவருடல் இல்லையான்னு கேப்பாங்களே. ஆமாம், பாய் நசுங்குன சொம்பெல்லாம் வாங்குவாரா தலைவரே:))

Unknown said...

மொத்தத்தில் இந்தப் பதிவு ஒரு ஆணாதிக்க முதலளித்துவ பார்ப்பனீய பூஷ்வா(ஐ வார்த்தை நல்லாருக்கு) பதிவு

Unknown said...

//ஆமாம், பாய் நசுங்குன சொம்பெல்லாம் வாங்குவாரா தலைவரே:))//

நார்வேக்குப் போனா அங்க நிறைய கிடைக்குதாம்.

பனித்துளி சங்கர் said...

கதை சிந்திக்க செய்கிறது . உண்மை நிலையை அப்பட்டமாக எடுத்து சொல்லி இருக்கிறிர்கள் . மிகவும் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

நசரேயன் said...

//நார்வேக்குப் போனா அங்க நிறைய கிடைக்குதாம்//

ஓ.. அப்படியா !!!

ஏழர said...

சற்றும் யதார்தத்தை பிரதிபலிக்காத ஒரு படைப்பு. Satire க்கு புத்திசாலித்தனம்தான் அடிப்படை, அதனால...

உடன்பிறப்பு said...

அண்ணே! நான் என் கடமையை ஆற்றிவிட்டேன்

ஏழர said...

உண்மை நிலையை அப்பட்டமாக எடுத்து சொல்லி இருக்கிறிர்கள்///

அப்படியா?

உங்களுக்கு சாணிப்பால், சவுக்கடி வரலாறு தெரியுமா?

குடுகுடுப்பை said...

Ezharai
nanri. Responsible capitallism may yield results
Communism won't take you anywhere

ஏழர said...

///Ezharai
nanri. Responsible capitallism may yield results
Communism won't take you anywhere///

Then write responsibly about the Responsible Capitalism. What you've written here has nothing to do with Captalism (responsible or not)

அது சரி(18185106603874041862) said...

//
ஏழர said...
///Ezharai
nanri. Responsible capitallism may yield results
Communism won't take you anywhere///

Then write responsibly about the Responsible Capitalism. What you've written here has nothing to do with Captalism (responsible or not)
//

Ezharai,

I would easily agree, Capitalism is flawed...So is everything else...But for a comparison, lets take the state of countries that followed capitalism with those countries that embraced communism..

Shall we start with USSR Vs USA? Or East Germany Vs West Germany? Poland? Romania? How about many other Eastern European countries that were occupied by Russia?

Where exactly communism led those people to? You say, its a dreamland, but why so many people are so eager to cross the border? Why so much of unemployment and so poor living standards?

Communism proclaims that it empowers people, but the funny thing is, people don't have a say on who could become the General Secretary of the communist party...Is there any public election to select General Secretary? Do people have any voting rights?

And leaving the politics aside, Capitalism has achieved so much more than communism can ever even dream of. Of course, its not always clean, there are so many crooks, but it still beats communism by miles...For example, how many people in USSR ever owned a car? At the same time, how many people in US had a second car? Now, all of those Americans are not royals or political commissars...they are general public too...

அது சரி(18185106603874041862) said...

//
ஏழர said...
உண்மை நிலையை அப்பட்டமாக எடுத்து சொல்லி இருக்கிறிர்கள்///

அப்படியா?

உங்களுக்கு சாணிப்பால், சவுக்கடி வரலாறு தெரியுமா?

//

ஏழர,

இதையே கொஞ்சம் மேலும் யோசித்து பார்க்கலாம்...சாணிப்பால், சவுக்கடிக்கு புகழ் பெற்றது தஞ்சை, கும்பகோணம் மாவட்டங்கள் தான் என்று நினைக்கிறேன்....கூலி அதிகம் கேட்டதற்காகத் தான் கீழ் வெண்மணியில் குடும்பத்துடன் கொளுத்திய கொடூரமும் நிகழ்ந்தது..(அதற்கு ஜாதி வெறியும் ஒரு மிக முக்கியமான அடிப்படை என்பது என் புரிதல்)...

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது...அது நடந்த கால கட்டத்திற்கும், இன்றைக்கும் கொஞ்சமாவது வேறுபாடு இருக்கிறதா இல்லையா? 1970, 1980களில் கூலியாட்களை சவுக்கால் அடிப்பது தினம் நடக்கும் ஒரு நிகழ்வு என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்... (அப்போது நான் பிறக்கவே இல்லை என்பதால் எல்லாம் படித்து/கேட்டது தான்...பார்த்ததில்லை)

ஆனால், இன்றைக்கு அப்படியெல்லாம் அவ்வளவு எளிதில் அடித்து விட முடியாது...நடக்கவே இல்லை என்று சொல்ல வரவில்லை...ஆனால், 1970/80களை ஒப்பிடும் போது குறைந்திருக்கிறது...

இது அந்த பகுதிகளில் கம்யூனிஸம் வளர்ந்ததால் வந்த மாற்றம் அல்ல...இன்றைய நிலையில் விவசாய கூலிகள் கிடைப்பதே அரிது..."போடாங்க்...நீயும் ஆச்சு...உன் வயலும் ஆச்சு" என்று (சரியாக) வேறு வேலை தேடிக்க் கொள்ளும் நிலை இருக்கிறது...இந்த வேலை வாய்ப்பு என்பது கம்யூனிஸத்தால் வரவில்லை!

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
கலப்பைய உடைச்சாலும் வியாவாரந்தான்னா இது கார்ப்போரேட் சிந்தனையில்லையா? முதலாளித்துவ அடிவருடல் இல்லையான்னு கேப்பாங்களே. ஆமாம், பாய் நசுங்குன சொம்பெல்லாம் வாங்குவாரா தலைவரே:))
//

மண்டைய உடைச்சாலும் அதுக்கு மருந்து போட்டு அப்படியே சூடா மெடிக்கல் விளம்பரமோ இல்லாட்டி ஹாஸ்பிட்டல் வெளம்பரமோ எடுக்கறது தான் பாஸ் கேப்பிடலிசம் :))

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
//ஆமாம், பாய் நசுங்குன சொம்பெல்லாம் வாங்குவாரா தலைவரே:))//

நார்வேக்குப் போனா அங்க நிறைய கிடைக்குதாம்.

//

ம்ம்க்கும்...நசுங்கின சொம்புக்கு நார்வேக்கு வேற போணுமாக்கும்?? யோவ், நார்வேக்கே நம்மூர்ல இருந்து தான் ஏற்றுமதியாவுதுங்கிறேன்...நீங்க வேற...

ஏழர said...

அது சரி..
இந்த பதிவுக்கும் முதலாளித்துவத்துக்கும் for that matter கம்யுனிசத்துக்குமோ சம்பந்தமே இல்ல (leave alone புரட்சி) இதுதான் என் கருத்து. காரணம்

1) விவாசயம் முதலாளித்துமில்லை - இங்கே குறிப்பிட்டிருக்கும் விவசாய முறைக்கு நேர் எதிரானது முதலாளித்துவம்.
2) அதிக கூலி கேட்பது மட்டும் கம்யூனிசமில்லை - , அதிமுக, திமுக கூட தொழிற்சங்கம் வைத்துள்ளது என்பதை நினைவில் கொள்க

நீங்கள் சொன்னது போல சானிப்பாலும் இன்று இல்லை, ஆனால் அது மறக்க முடியாத வரலாறு ... அது தானாய் அங்கேயிருந்து மறைய வில்லை அங்கே கம்யூனிஸ்டு கட்சி துவங்கி வேலை செய்து விவாசாயிகளை ஒன்றினைக்கும் வரை கூலியில்லா கொத்தடிமை உழைப்பைத்தான் விவசாயக்கூலிகள் செய்துவந்தனர். கம்யூனிஸ்டு இயக்க போராட்டங்களே கூலிகளின் உரிமையை மீட்டுத்தந்தது... இதற்கு ஆதாரங்கள் உண்டு... போய் விவசாயிகளிடத்தில் பழகிப்பார்க்கவும்

ஆனால் விவாசயம் செய்யாமலேயே கூலி கேட்கிறார்கள் என்பது எதார்த்த நிலை என்பது மிகவும் தவறான உண்மைக்கும் சற்றும் பொருந்தாத, விவசாயிகளை அவமானப் படுத்தும் ஒரு கருத்து. நமக்கு சோறு போடும் விவாசாயியை கேவலப்படுத்துவதை உங்களால் எப்படி ஏற்க முடிகிறது? கீழ் வெண்மணியை போல ஒரு வக்கிர சிந்தனை இது.

இன்றைக்கு இந்தியாவில் லட்சக்கணக்கில் விவாசாயிகள் தற்கொலை செய்து கொண்டு சாகிறார்கள், சிறுவிவாசாயி, கூலி விவசாயியெல்லாம் விவசாயம் ஆகாத தொழில் என மூட்டை கட்டி வைத்துவிட்டு ரோடு போடுவது, கட்டிடம் கட்டுவது, பனியன் கம்பெனி (வேலை வாய்ப்பு?) என கிராமத்தை விட்டு போய்விட்டனர். இதற்கு காரணமாக இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் கூட எழுதுவது உலகமயமாக்கத்தைதான். ஹிண்டு எடிட்டர் பி.சாய்நாத்தின் கட்டுரைகளை படித்து இன்றைய விவசாயிகளின் நிலையை புரிந்து கொள்ளுங்கள்

அப்புறம்

முதலாளித்துவமா கம்யூனிசமா என்ற விவாதத்தை உங்களுடன் செய்ய வேண்டுமெனில் நீங்கள் கொடுத்திருக்கும் உதாரணங்கள் போல பல உதாரணங்களை முதலாளித்துவத்திற்கு எதிராக முதலாளித்துவ அறிஞர்களே எழுதி வருகின்றனர். எனவே அப்படி அதை நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியாது.. அப்புறம் ரிலையன்ஸ் அம்பானியும் முதலாளி, பெட்டிகடை பெருமாளும் முதலாளி என்ற முடிவுக்குத்தான் வரமுடியும்.. தயவு செய்து ஊன்றிப்படித்து இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்று அறிந்து கொள்ளுங்கள்... வேறு இடத்தில் வேறொரு சந்தர்ப்த்தில் உங்களுடன் உரையாடுகிறேன்.

ஏழர said...
This comment has been removed by the author.
ஏழர said...
This comment has been removed by the author.
ஏழர said...

இரண்டு முறை பதிந்து விட்டதால் கொமெண்டை டெலிட் செய்தேன்

குடுகுடுப்பை said...

ஏழரை அவர்களே நேரமின்மை
காரணமாக பதில் தரவில்லை,விரைவில் தனிப்பதிவாக என் மனதில் தோன்றுவதை எந்த புத்தகத்திலும் படிக்காமல் தருகிறேன்

Ravichandran Somu said...

//Responsible capitallism may yield results
Communism won't take you anywhere//

Well said குடுகுப்பையாரே!

Look at what happened to communist countries except China. The success of China is Open Economy based on capitalism not due to communism.

அது சரி - You explained very well.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Renga said...

Exactly right....

USELESS COMMUNISTS are ruining the society & developments..