உலகியல் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளின் இன்றைய நிலைமையை கூர்ந்து நோக்குகையில் சமூகமானது ஒரு வல்லின கட்டமைப்பாகவே நமக்குப்படுகிறது. இந்த நிலைமையை நாம் சாதாரணமாக ஒரு சராசரி மத்திய வர்க்க நிலை மனிதனாக இருந்து நோக்கினால் அது அவனின் அறிவுக்கண்களுக்கு புலப்படாதவாறு ஒரு வல்லிய வலை இந்த அறிவு ஜீவிகளால் பின்னப்பட்டிருப்பதை அறியமுடியும், ஆனால் இதனை உணரும் நோக்கில் வேகம் சார்ந்த மனிதனின் வாழ்வியல் சூழ்நிலை அவனைக்கட்டிப்போடுகிறது, இதனை நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே உள்ளோம். இந்த வல்லிய வலையை நீக்கிவிட்டு ஊடாடிப்பார்க்கும் மனப்பக்குவம் எம்மைப்போல பின்நவீனத்துவ கூறுபாடுகள் கொண்ட சிலருக்கு உண்டு, அதை நாம் அடிக்கடி இந்த மத்தியதர மக்களுக்கு சொல்லியபடியே இருந்து வருகிறோம்.மத்திய வர்க்கம் பொய்யினால் கட்டமைக்கப்பட்ட வர்க்கம், இவர்களின் உழைப்பு என்பது இழப்பின் பிரதியாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது, இவர்களால் எதையும் குந்தி ரசிக்கமுடியாமையின் காரணம் என்ன, இவர்கள் குந்தாமல் தேவையில்லாமல் உழைப்பதுதான், இவர்களால் ஒரு நவீன கால இலக்கியங்களைப் பற்றிப் பேசமுடியாத எல்லாம் இழந்தவர்கள் என்றே நாம் நோக்கவேண்டியுள்ளது. வளர்ச்சியென்னும் இது மாயவுலகம் வட்டிகளால் கட்டமைக்கபட்டது மத்தியவர்க்கம் தான் நேரடியாக உழைக்கமுடியாத துறையில் முதலீடு என்ற பெயரால் பணம் கொடுத்து கட்டமைக்கபட்டது தானே இந்த வலையும் அதைச்சார்ந்த இந்த உலகமும், வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.
15 comments:
வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.]]
மிகச்சரி
இப்போ எங்கனா வெட்டியா உட்காரத்தேவையில்லை
கணினியும் கூகிளும் போதும்
இந்த வல்லிய வலையை நீக்கிவிட்டு ஊடாடிப்பார்க்கும் மனப்பக்குவம் எம்மைப்போல பின்நவீனத்துவ கூறுபாடுகள் கொண்ட சிலருக்கு உண்டு,]]
அட அட அடா
நட்புடன் ஜமால் said...
வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.]]
மிகச்சரி
இப்போ எங்கனா வெட்டியா உட்காரத்தேவையில்லை
கணினியும் கூகிளும் போது//
உங்களுக்கு பின்நவீனத்துவ புரிதல போதவில்லையோ என்று நாம் அச்சப்படவேண்டியுள்ளது அதிரையாரே
உங்களுக்கு பின்நவீனத்துவ புரிதல போதவில்லையோ என்று நாம் அச்சப்படவேண்டியுள்ளது அதிரையாரே]]
நீங்கள் அச்சப்படுவதே தப்பு
எனக்கு அதெல்லாம் சுத்தமா விளங்காது.
நாலு கமல் பேட்டியை ஒண்ணா பாத்தாமாதிரியும் பத்து கலகலப்ரியா கவிதை படிச்சா மாதிரியும் இருக்கு. வீக் எண்ட் வரட்டும் ரெண்டு பெக் போட்டுட்டு படிப்போம்
முகிலன் said...
நாலு கமல் பேட்டியை ஒண்ணா பாத்தாமாதிரியும் பத்து கலகலப்ரியா கவிதை படிச்சா மாதிரியும் இருக்கு. வீக் எண்ட் வரட்டும் ரெண்டு பெக் போட்டுட்டு படிப்போம்//
அப்போ புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க
//அப்போ புரிஞ்சா எனக்கும் சொல்லுங்க
//
சொல்லிட்டாப் போச்சி.
ஆமா, வருங்கால முதல்வர்ல விருதுநகர் மாவட்டத்தப் பத்தி தொடர்ந்து வரலையே? அனுமதி குடுத்தா நான் எழுதத் தயாரா இருக்கேன்.(விருதுநகர் மாவட்டத்துல இருந்து வந்தவன் அப்படிங்கிற உரிமைல)
முகிலன் மெயில் அனுப்புங்க.
இதுதான் என் மெயில்
kudukuduppai@gmail.com
avv..சத்தியமா புரியலை!! ஹ்ம்ம்
எத்தனாவது ரவுண்ட்ல எழுதினது இது??
:0))
அது சரி said...
எத்தனாவது ரவுண்ட்ல எழுதினது இது??
:0))//
சரியான நேரத்தில ஞாபகப்படுத்தினீர். முதுகுப்பிடிப்பு மருந்து அடிக்கனும்
அய்யய்யோ நல்லாதானே இருந்தீங்க, கொஞ்சம் புரிஞ்சிது ஆனா ரொம்ப புரியல:)
//
வலையுலகம் இல்லாவிட்டாலும் நாம் எங்காவது உக்காந்து வெட்டியாக உளறிக்கொண்டுதானே இருப்போம்.
//
அது என்னவோ உணமைதான் குடுகுடு!
மிகச் சரியாக சொன்ன மாதிரிதான் தோணுது!
:-))
Post a Comment