Sunday, November 22, 2009

கல்லூரி சாலை: முதல் ஆண்டு தேர்வு முடிவும், புதிய குடிகாரர்களின் உதயமும்.

கல்லூரி முதலாண்டு முடிந்து சீனியராகி, மூன்றாவது பருவத்தில் அடி எடுத்து வைத்தாயிற்று. ஒரு மாதம் கழித்துதான் இடி மாதிரி வந்து சேர்ந்தது முதலாண்டு முடிவுகள். முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி, சிலருக்கு எதிர்ப்பார்த்தவை, வெகு சிலருக்கு மகிழ்ச்சி. தெரிந்த சீனியர்கள் என்னடா ஆல் கிளீயரா, பூண்டாயிருசா, தருசாயிருச்சான்னு கேக்க ஆரம்பிச்சாட்டாங்க.

என்னடா சோகமா இருக்கே எத்தனை பேப்பர் போச்சு?

அஞ்சு?

அப்ப நீ இங்கிலீசும் , B1 உம் பாஸ் சரியா? இதில யாரும் பெயில் ஆகமாட்டாங்க.

இல்ல ஏழும் போனவனெல்லாம் இருக்கான்.

அது யாருடா அது, இதுலக்கூட பெயில் ஆனவங்க..

அந்த ரெண்டு பேரும் இங்கிலீஸ்ல எழுத பயந்து எந்தப்பரீட்சையும் எழுதல..

அடப்பாவிகளா, முத வருசமே ஸ்கூட் விட்டாங்களா? இங்கே முக்கால்வாசிப்பேர் தமிழ் மீடியம் தானடா பாஸோ /பெயிலோ பரீட்சை எழுதுங்கடா? கொஞ்ச நாள்ல் புரிஞ்சுடும் மீடியம் ஒரு மேட்டரே இல்லன்னு. நீயும் தமிழ் மீடியந்தானே, அஞ்சு போச்சுன்னு கவலைப்படாதே எனக்கும் அஞ்சுதான் போச்சு, இந்த செமஸ்டர்ல உங்காந்து படிச்சீன்னா எல்லாத்தையும் தூக்கிரலாம்.அப்படியே அந்த ரெண்டு பேரையும் பரீட்சை எழுத சொல்லுடா.

சரிங்க சொல்றேன்..

ஹாஸ்டலுக்கு வந்தோம்.

"பூண்டுதான் கப்புதான் தருசுதான்
பூண்டுதான் கப்புதான் தருசுதான்"
பாடல் சத்தம் காதை கிழித்தது.

சென்னையைச்சேர்ந்த நண்பன் ஒருவன், எல்லாம் நல்லாதாண்டா எழுதிருந்தேன் ஆனா பிஸிக்ஸ் எப்படியோ போச்சுடா, அதுவும் பதினாலு மார்க் போட்டிருக்கான், எனக்கு ஒன்னும் புரியலடா வாழ்க்கையிலே முதன் முதலா பெயிலாயிருக்கேன்,டவுணுக்கு போய் தண்ணி அடிக்கலாமாடா?

ஆமாண்டா போய் அடிப்போம், ஆறு பேப்பர் போச்சு அதுக்கு கூட கவலைப்படல, ஆனா computer science ல பாஸாயிட்டேன், அந்த மகிழ்ச்சியை கொண்டாட இன்னைக்கு ஊத்திர வேண்டியதுதான் என்றான் அறந்தாங்கியான்

சரிடா நீங்களெல்லாம் இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கீங்களா? நான் இதுவரை குடிச்சதில்லை சென்னைக்காரன்

நானும் குடிச்சதில்லைடா -குடுகுடுப்பை.

நான் இருக்கேண்டா கவலைப்படாதீங்க நானெல்லாம் அந்தக்காலத்திலேந்த ஊத்தப்போடுறவங்க - காரைக்குடியான்.

பேசிட்டே இருந்தா வேலைக்காவாது,சரக்க ஞாபகப்படித்தீட்டீங்க கிளம்பலாம் - தூத்துக்குடியான்.

ஒரு வழியா டவுணில் ஒரு பாரில் கொஞ்சம் பீர்,விஸ்கி வாங்கினோம். காரைக்குடியானின் பரிந்துரையில், எல்லாரும் முத தடவை குடிக்கிறீங்க பீர் குடிங்க இல்லாட்டி கொஞ்சமா விஸ்கி குடிங்க என்றான். அவனுக்கு மட்டும் ஓல்ட் காஸ்க் ரம் வாங்கிக்கொண்டான்.

கொஞ்சம் கொஞ்சமா குடிங்க இல்லாட்டி சரக்கு உள்ள போயி டகால்டி பண்ண ஆரம்பிச்சிரும் அப்புறம் நெஞ்சை அடைக்கும்.- காரைக்குடியான்.

ஆமாண்டா சிப் பண்ணிக்குடிங்க அப்பதான் சூப்பரா இருக்கும். தூத்துக்குடியான்.

நானும் காரைக்குடி, தூத்துக்குடி மாதிரி ஊர்ல பொறந்திருக்கலாம்டா குடி அனுபவம் உங்களுக்கு இருக்கு எனக்கு ஒன்னுமே இல்லடா - என பிஸிக்ஸ் போன சென்னைக்காரன் குடிக்கும் முன்னரே புலம்ப ஆரம்பித்துவிட்டான்.

எப்படியோ அந்த நாற்றத்தையும் சகித்துக்கொண்டு , நிறைய ஆம்லெட்டுடன் கொஞ்சமாக பீர், விஸ்கி என முதல்முறை குடிகாரர்கள் அனைவரும் குடித்திருப்போம்.

டேய் குடுகுடுப்பை, ஜெயின் @ ஜெயின் கெமிஸ்ட்ரி புத்தகத்தோடயோ திரிவ, கெமிஸ்ட்டரில எத்தனடா வாங்குன?

ஏதோ பத்துக்குள்ளதாண்டா , இந்த முறை மரியாதையா நோட்ஸ படிச்ச பாஸ் பண்ணிறவேண்டியதுதான்.

ஒரு வழியாக சோகத்தை பேசித்தீர்த்துக்கொண்டு மூன்றாவது செமஸ்டரில் எல்லாம் படித்து நான்காவது செமஸ்டர் செல்லும்போது ஆல் கிளியரா போகனும்டா, காசு செலவு பண்ணி கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க நாம இப்படி இருக்கக்கூடாது என உறுதிமொழியெல்லாம் எடுத்துக்கொண்டு சாப்ப்பிடுவதற்காக நகரில் பிரபலமான அபிராமி சைவ ஹோட்டலுக்குச்சென்றோம்.

ஆர்டர் பண்ணிய நெய் தோசை ஒன்று கூம்பு வடிவில் நிறுத்தி மேசை மேல் வைத்தார் அபிராமி ஊழியர், சென்னைக்காரன் உடனடியாக அதனை எடுத்து தன் தலையில் மாட்டிக்கொண்டு மாப்பிள்ளை நான் பிஸிக்ஸ்ல பெயிலா போனதுக்கு எனக்கு கிரீடம் கொடுத்துருக்காங்கடான்னா அழ ஆரம்பிச்சிட்டான், அப்படியே படியிறங்கி ரோட்டுக்கும் வந்து விட்டான். இதுல கொடுமை என்னான்னா அவன் பிஸிக்ஸ் மட்டும்தான் பெயிலு, மத்தவனுக்கெல்லாம் நாலுக்கு மேற்பட்ட நெய்தோசை வேணும் கிரீடம் வைக்க.

ஒருவழியாக சாப்பிட்டு பில் செட்டில் பண்ணி அபிராமியில் இருந்து படியிறங்கும்போது ஓல்ட் காஸ்க் , காரைக்குடியானின் வயிற்றில் டகால்டி வேலையைக்காண்பித்தது, படியிலேயே வாந்தி எடுத்தான், சுருண்டு விழுந்தான். பின்னர் வாடகைக்கார் எடுத்து அவனை ஹாஸ்டல் கொண்டு போய் சேர்த்த எண்ணிக்கை ஒன்றில் ஆரம்பம் ஆகியது இந்நன்னாளில்.

இந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்.இந்த பதிவில் அவன் குறிப்பிடப்படவும் இல்லை, ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனுக்கும் துணிச்சல் வரலாம்.

பி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வு பின்வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஜக்கம்மா இட்ட கட்டளையால் இந்த பதிவு.

17 comments:

பழமைபேசி said...

நாந்தான் முதல் இங்கயும்!

பித்தனின் வாக்கு said...

நல்ல நினைவுகள், நாங்க எல்லாம் பேர்வெல் பார்ட்டியில தான் குடிகாரர்கள் ஆனேம், ஆனா நீங்க முதல் வருடத்திலேயே ஆரம்பித்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் சீனியர்கள், சீனியர்கள் தாம். நல்ல பதிவு. ஆமா நீங்க வாங்குகன நெய் தோசை எவ்வளவு சொல்லவில்லை. நன்றி அய்யா.

கலகலப்ரியா said...

//இந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்.இந்த பதிவில் அவன் குறிப்பிடப்படவும் இல்லை, ஆனாலும் என்றாவது ஒருநாள் அவனுக்கும் துணிச்சல் வரலாம்.//

:-)... varattum..!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் பதிவு படிச்சிட்டீங்களா?

Mahesh said...

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...

குடுகுடுப்பை said...

பித்தனின் வாக்கு said...
நல்ல நினைவுகள், நாங்க எல்லாம் பேர்வெல் பார்ட்டியில தான் குடிகாரர்கள் ஆனேம், ஆனா நீங்க முதல் வருடத்திலேயே ஆரம்பித்து விட்டீர்கள். என்ன இருந்தாலும் சீனியர்கள், சீனியர்கள் தாம். நல்ல பதிவு. ஆமா நீங்க வாங்குகன நெய் தோசை எவ்வளவு சொல்லவில்லை. நன்றி அய்யா.

November 22, 2009 9:18 PM

இருந்தாலும் மரியாதை ரொம்ப ஓவரா இருக்கு சார்.

குடுகுடுப்பை said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்தப் பதிவு படிச்சிட்டீங்களா?

November 23, 2009 5:39 AM//

படிச்சிருவோம்

RAMYA said...

ம்ம்ம்... படிக்காமல் இருக்கிறது அப்புறம் தண்ணி அடிக்கறது... இதே வேலையோ??

வீட்டுக்கு தெரிஞ்சா என்னா ஆகும் நிலைமை?

அப்புறம் எப்படித்தான் படிச்சி முடிச்சீங்க :)

RAMYA said...

//
பி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை, இருந்தாலும் இந்த வரலாற்று நிகழ்வு பின்வரும் தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஜக்கம்மா இட்ட கட்டளையால் இந்த பதிவு.
//

இது வேறேயா ரொம்ப முக்கியம் :-)

அது சரி ஜக்கம்மா எங்கே இருக்காங்க :)

செ.சரவணக்குமார் said...

நண்பர்களின் பெயரைக் குறிப்பிடாமல் சென்னைக்காரன், காரைக்குடியான், தூத்துக்குடியான், அறந்தாங்கியான் என்று சொன்னது நல்லா இருக்கு நண்பா.

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி

அது சரி(18185106603874041862) said...

//
வெகு சிலருக்கு மகிழ்ச்சி.
//

ஆஹா...அங்கயும் இப்பிடித்தானா??

//
தெரிந்த சீனியர்கள் என்னடா ஆல் கிளீயரா, பூண்டாயிருசா, தருசாயிருச்சான்னு கேக்க ஆரம்பிச்சாட்டாங்க.
//

எங்க காலேஜ்ல "தொடைச்சிட்டானுங்களா"ன்னு கேப்பாங்க...

அது சரி(18185106603874041862) said...

//
நானும் குடிச்சதில்லைடா -குடுகுடுப்பை.
//

ஏன் இந்த பொய்யி?? பக்கத்துல யார்னா இருக்காங்களாக்கும்?? :0)))

அது சரி(18185106603874041862) said...

//
இந்த சம்பவத்தில் வந்த யாரும் வாழ்க்கையில் வழுக்கிவிடவில்லை, குடிகாரர்களாகவும் இல்லை. ஒருவனைத்தவிர, அவன் மிகவும் நல்லவன் ஆனால் சவால்களை சந்திக்க பயந்து தேர்வு எழுதவே எழுதாதவன். களவும் கற்று மற என்ற தமிழ்ப்பழமொழிக்கேற்ப அடி எடுத்து வைக்க துணிச்சல் இல்லாதவன் நடக்கமுடியாது, என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியவன்
//

அது!!!!

பாய்ஸனாருந்தாலும் எனக்கு ஒரு பங்குன்னு வாங்கி குடிச்சிடணும்...:0))))

அது சரி(18185106603874041862) said...

//
பி:கு: இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுயநினைவில் இல்லாத காரணத்தால் சரியாக ஆவணப்படுத்த முடியவில்லை,
//

உண்மையை சொன்னதால் நீங்கள் முன் சொன்ன பொய் மன்னிக்கப்படுகிறது :0)))

பித்தனின் வாக்கு said...

அய்யா நான் வாங்கின விருதினை, நான் மதிக்கும் உங்களுக்கும் தந்துள்ளேன். இந்த சிறியவனின் விருதை ஏற்றுச் சிறப்பிக்க வேண்டுகின்றேன். நன்றி.

வில்லன் said...

//பேசிட்டே இருந்தா வேலைக்காவாது,சரக்க ஞாபகப்படித்தீட்டீங்க கிளம்பலாம் - தூத்துக்குடியான்.//

யாரந்த தூத்துக்குடியான்??????????????????