Thursday, November 19, 2009

தோதுமாது உத்திராபதியும் , மாதுதோது மருதனும்.

தோதுமாது உத்திராபதி, கிராமத்தின் வளர்ச்சியின் அக்கறை கொண்ட அந்தக்கால இளைஞன். அதுவும் தன் ஊர் பள்ளி வளர்ச்சி பெண்கள் கல்வியில் அக்கறை கொண்டவர். இவருக்கு தோதுமாது உத்திராபதி என்ற பெயர் வந்ததன் காரணம் அவருடைய சுருட்டுந்தந்தை, உரையாடிக்கொண்டிருக்கும் போது இந்தக்காரியத்தை இப்படி தோதுமாதா பண்ணினா நல்லபடியா நடக்கும் என்று அறிவுரை கூறியதால் தோதுமாது என்ற பட்டப்பெயரை பெற்றார், அவர் இறந்தவுடன், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்திய ஜனநாயகத்தின் சட்டப்படி அவர் மகனுக்கு தோதுமாது என்ற பெயர் கிடைத்தது.

மாதுதோது மருதன், பெயரே சொல்லும் காரணத்தை, இவர் ஒரு தமிழாசிரியர், தமிழ்ப்புலமையில் இவரை விஞ்ச அந்த வட்டாரத்தில் கண்டிப்பாக ஆசிரியர் கிடையாது, பாடம் நடத்தும் போது அத்தனை பேரையும் கட்டிப்போடும் வசீகரம், திருமணமான இளைஞன். இவர் பாடம் நடத்தினால் அதனைக்கேட்க பக்கத்து வகுப்பு மாணவர்களின் காது கூட இவர் வகுப்பில் இருக்கும்.

இவர் மாணவிகளிடம் குற்றாலக்குறவஞ்சி நடத்துவது போல் சற்றே அதிகமான குறுந்தொகை நகைச்சுவைகளைச்சொல்லி மாணவிகளை கணக்குப்பண்ண முயல்கிறார் என்று சிறிது சிறிதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இவைகள் அனைத்தும் மாணவிகளால் தோதுமாது உத்திராபதியிடம் பள்ளித்தலைமையையும் தாண்டி குற்றச்சாட்டாக சென்றது. ஆனாலும் தமிழாசிரியர் குறுந்தொகை நடத்தும்போது ஏதாவது தலைவன், தலைவி என்று சொல்லியிருப்பார், நீங்க தோதுமாதா நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார்.

ஆனாலும் கிராமத்துப்பெண்கள் அவரை பள்ளிக்கூடத்துக்கு வரச்சொல்லி அவரை விசாரிக்கச்சொல்லினர். தோதுமாது உத்திராபதியும் பள்ளித்தலைமைக்கு என்ன காரணத்திற்கு பள்ளிக்கு வந்திருக்கிறேன் என சொல்லாமல் சாதாரணமாக வந்து அவருடைய வகுப்பை கவனித்தார்.

வகுப்பில் தமிழாசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

தமிழ் எவ்வளவு செம்மையான மொழி பாருங்கள், ஒருவன் தமிழைத்தவறாகப்படித்தால் என்ன ஆகும் பாருங்கள்.

"சோலைக்குள் பாம்பு நுழைந்தது"

இதனைப்படிக்கும் போது சுப்பன் தவறி, சோலையில் உள்ள காலை மறந்து, சேலைக்குள் பாம்பு நுழைந்தது என்று படித்துவிட்டான், ஆசிரியர் உடனே சுப்பனிடம் சொன்னார் தவறாகப்படிக்கிறாய் மீண்டும் படி என்றார்.

சுப்பனும் இப்போது இப்படி படித்தான், பாம்பிற்கு கால் கிடையாது ஆனால் பாம்பு என்ற எழுத்தில் உள்ள பா விற்கு கால் உள்ளதை மறந்து

"சேலைக்குள்..

என்று முடிக்குமுன் தோதுமாது உள்ளே நுழைந்து மருதனை நான்கு வாங்கு வாங்கியிருந்தார். இன்றோடு பள்ளியை விட்டு ஓடிப்போய்விடு என்று மீண்டும் மீண்டும் வெறி வந்தவாறு அடித்து துரத்திவிட்டார்.

அதன் பின்னர் தமிழாசிரியர் மருதனும் வேறு எங்கோ மாற்றலாகி சென்றுவிட்டார், தோதுமாது என்று பெயர் இருந்தாலும் தோதுமாதாக இருக்கத்தெரியாத உத்திராபதியும் ஏதோ ஒரு காரணத்திற்காக விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மருதனும் அளவுக்கு மீறிய மதுவினால் ஐந்து வருடத்திற்குள் மாண்டு போனார். இந்த இரண்டு பேரும் திறமைசாலிகளே, இந்த தமிழாசிரியரிடம் படிக்காவிடினும் அவர் புகழ் மற்ற மாணவர்கள் பேச நிறையக்கேட்டிருக்கிறேன். சாதித்திருக்கவேண்டியவர்கள், இருவரும் தத்தம் துறையில் இன்னும் பேசப்படக்கூடிய அளவுக்கு இருக்கவேண்டியவர்கள். ஆளுக்கு ஒரு பலவீனம், இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது.

11 comments:

அது சரி(18185106603874041862) said...

தோது மாது, மாது தோது...நல்லா வச்சாங்கப்பா பேரு...

ஆமா, தமிழய்யா குறுந்தொகை மட்டும் தான் நடத்துவாரா?? அகநானூறுல்ல இன்னும் தோதா நிறைய வருமே...:0))))

அது சரி(18185106603874041862) said...

me the firstoooooooo :0))))

அது சரி(18185106603874041862) said...

கட்சிக்காக வேண்டி, இந்த இடுகைய தமிழ்மணத்துல நானே சேர்த்துட்டேன்...ஓட்டும் போட்டுட்டேன்...

இதுக்காக வேண்டி நான் உங்க கோஷ்டில சேந்துட்டதா நினைக்க வேண்டாம்...நான் எப்பவும் தளபதி கோஷ்டி தான் :0))))

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள், மனிதனின் பலவீனங்கள் அவனுக்கு என்ன எல்லாம் இழுக்கை தேடித் தரும் என்பதற்க்கு இந்த கதை ஒரு உதாரணம். நன்றி.

Mahesh said...

தோதுமாது... மாதுதோதுன்னு ஒரே கோக்குமாக்கா இருக்கே...:)))

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை..பேருதான் :-))

/இந்தப்பலவீனங்கள் கண்டிப்பாக திருத்திக்கொள்ள கூடியனவே, ஆனாலும் இவைகள் இவர்களை உயிர்களை இடையிலேயே பறித்ததுவிட்டது./

:((

தாரணி பிரியா said...

:) இப்படி ஆரம்பிச்சு :( இப்படி முடிஞ்சு போச்சு

குடுகுடுப்பை said...

சந்தனமுல்லை said...
நல்ல இடுகை..பேருதான் :-))//

தோதுமாது நிஜமாவே உள்ள பேருதான், மாதுதோது தேத்துனது. கொஞ்சம் கொஞ்சமா இனி நசரேயனுக்கு போட்டியா நானும் புல் பார்முக்கு வரேன்.

அன்புசிவம்(Anbusivam) said...

நல்ல பேரு வச்சிருகீங்க... கதை தான் பாதியிலேயே முடிஞ்சா மாதிரி இருக்குது...

நசரேயன் said...

நான் என்னவோ எதுன்னு நினைச்சேன் தலைப்பை பார்த்திட்டு

RAMYA said...

இதெல்லாம் வேறேயா அது சரி:)

நீங்களும் கீதத்துக்கு மாத்தா எழுத ஆரம்பிச்சிட்டீங்களா:)

பேரே அட்டகாசம் போங்க!