சமீபத்தில் நாடோடிகள், பொக்கிஷம் மற்றுன் ஷ்ரேயாவின் சேவையில்
உருவான கந்தசாமி பார்த்தேன்.
நாடோடிகள்.
நாடோடிகள் படம் இயல்பான கிராமத்து சூழ்நிலைகளில் எடுக்கபபட்டிருந்தது, மொட்டைமாடியில் வெயில் வந்த பிறகும் துவைக்காத போர்வையின் மணத்தில் தூங்கும் வெட்டி கிராமத்து இளைஞர்கள், திருமணம் செய்ய ஆசைப்படும் ஒத்துக்கொள்ளக்கூடிய அளவில் உள்ள சினிமாத்தனமான குறும்புகள் கொண்ட சொந்தக்காரப்பெண், டிவி சீரியல் பார்வை பார்க்கும் சித்தி , உண்மையாகவே தவிக்கும் அப்பன் மற்றும் முதல் தாரத்தின் மகன். கொஞ்சம் அதிகம் சினிமாத்தனம் உள்ள, மகனின் காதலுக்கு உதவும் ஸ்கூட்டர் அப்பன்.
தன் காதலுக்கு உதவி தேடி ஊருக்கு வரும் நண்பனை கிணற்றில் இருந்து காப்பாற்றும் பெஞ்சு போட்டு தண்ணியை எடுக்கும் எங்கேயே பார்த்த அந்தக்கால நிகழ்வை படமாக்கியது. நண்பரின் காதலுக்கு உதவுவது, நண்பரின் நண்பனுக்கு உதவுவது எல்லாம் நன்று.
இதற்குப்பிறகு உச்சகட்ட ஹீரோத்தனம் பொண்ணு தூக்க காலை ஒடிச்சிக்கிறாங்க, காது செவுடாப்போகுது , கண்ணுக்குருடா போகுது, இதெல்லாம் பின்னால் இவர்களால் சேர்த்து வைக்கப்பட்ட காதலர்கள் கருத்து வேறுபாட்டால் பிரியப்போகிறார்கள் என்ற சொத்தைக்கதைக்கு சேர்க்கப்பட்ட ஓவர் பில்டப்.
கருத்து வேறுபட்டால் பிரிந்தவர்களை, நண்பர்கள் நாங்கள் காதலுக்காக (நட்பு அல்ல)சேர்த்து வெச்சோம் அதனாலே நீங்க சேர்ந்துதான் இருக்கனும் அப்படிங்கிறது எந்த விதத்தில நியாயம். கருத்து வேறுபாடு வந்தால் அந்தக்கருத்து வேறுபாட்டின் காரணம் கண்டு களைய நண்பர்கள், சமூகம் அறிவுரை கூறலாம், ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ்ந்தால் ஒத்துக்கொள்ளலாம், இல்லாவிட்டால் பிரித்து வைக்கவும் நண்பர்கள் உதவலாம் அது நட்பு.
காதல் புனிதமானது காதலிச்சா எவ்வளவு கருத்து வேறுபாடு வந்தாலும் சேர்ந்து வாழனும், யாரு காதலிச்சாலும் தெரியாதவனா இருந்தாலும் உதவனும், உதைவாங்கனும் அப்படிங்கிறது என்ன கலாச்சாரம், கருத்துடா இது, காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும்.
99 வருட குத்தைகை மாதிரி நாங்க சேத்து வெச்சா கடைசி வரைக்கும் சேர்ந்துதான் இருக்கனும்னு சொல்ற இந்தக்குப்பைக்கருத்தை சொல்லும் படத்தை என்னால ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
யாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.
படம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.
மொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.
பொக்கிஷம்.
எம்ஜியார் மாதிரி படுத்துக்கொண்டே பார்த்தேன், தியேட்டரில் சென்று பார்த்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன் படம் எப்படி என்று, அவன் லெட்டர் எழுதி,எழுதி அவன் கையெழுத்து நல்லா ஆயிடுச்சுன்னார். இனி படம் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.
எழுபதுகளில் நடந்தவை என்பதால் அந்தக்காலத்துக்கு சென்று பார்ப்பது சற்று சிரமமே, எழுபதாம் ஆண்டில் 25 வயது இளைஞன் இன்றைக்கு 65 வயது ஆகியிருக்கும், அதற்காக 65 வயது ஆளையேவா நடிக்கசொல்றது, அய்யா சேரன் உங்களைப்பார்த்தா ஏதோ ஒரு படத்திலே அம்மா நான் காலேஜ் போயிட்டு வரேன்னு எம்ஜியார் சொன்னதுதான் ஞாபகம் வருது. உங்க படத்துல பிரபலமான ஹீரோக்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு புரியுது , இந்தப்படத்தில் நீங்க என்னை ஹீரோவா போட்டிருக்கலாம், லெட்டர் எழுதி கையெழுத்தாவது எனக்கு நல்லா ஆகிருக்கும் , படம் பார்த்தவர்களும் இளைஞனின் வசீகரத்தை ஹீரோயினோடு சேர்த்து ரசித்திருப்பார்கள். கேரக்டரோட நானும் ஒன்றிப்போய் நல்லா பண்ணிருப்பேன். மற்றபடி கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து உட்காரவும் வைக்கிறது படம், ஏதோ ஒரு கொரியப்படத்தில் இருந்து சுட்ட கதையாமே இது அப்படியா? கொஞ்சம் நீளம் குறைப்பு நிஜமாகவே ஒரு இளைஞன் நடித்திருந்தால் சேரன் என்ற நடிகருக்காக செய்யப்பட்ட சமாதானங்கள் இல்லாமல் இன்னும் நன்றாக படத்தை எடுத்திருக்கலாம்,நன்றாக ஓடியிருக்கக்கூடும்.
படத்தில் நான்/ என்னைப்போன்றவர் மட்டும் ரசிக்கக்கூடிய ஒன்று உண்டு, அதற்காக இன்னொரு முறை படுத்துக்கொண்டே பார்க்கலாம் என்றிருக்கிறேன்.
கந்தசாமி
இந்தப்படத்தை இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, ஷ்ரேயாவை அரைகுறையாய் ஆங்காங்கே பார்த்ததோடு சரி, அல்லேக்ரா என்ற பாடல் என் மகளுக்கு பிடித்துப்போனதால் , திரும்பத்திரும்ப அதேபாடல்தான் ஓடுகிறது, அந்தப்பாடலின் இறுதியில் 'ஷேக் யுவர் பூட்டி' என்று தொடர்ந்தாற்போல் வருகிறது, இதையே 'ஆட்டு உன் சூத்தை' என்று தமிழில் பாடலாக எழுதியிருந்தால் சென்சார் அனுமதித்திருக்குமா? இதுக்கு பேருதான் ஆங்கில மறை காயாக சொல்வதா?
பி:கு: உண்மைத்தமிழன் மாதிரி நெடிய பதிவு எழுதும் முயற்சி இது.
23 comments:
நாடேடிகளின் பட விமர்சனம் உங்களுக்கு வயது ஆவதைக் குறிக்கின்றது. கொஞ்சம் யூத்தாக பார்க்கவும். அவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.
மற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.
Naadodigal Nalla illaiya..??
Appa entha mathiriyana cinemavai-than parppinga..!!
-Senthil
உ.தவின் பாதி கிணறை தாண்டியிருக்கிறீர்கள்..:)
நாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.
சில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார்த்தால் கருத்தே மாறும்.
எல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...
ஷண்முகப்ரியன் said...
நாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.
சில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார்த்தால் கருத்தே மாறும்.
//
ஒரு வெற்றிபடத்துக்கு தேவையான எல்லா விசயங்களும் படத்தில் இருக்கிறது, ஆனால் காதல் என்ற இரு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுக்கு சமுகமே காவல் காப்பது, யாரோ காதலிக்க அவங்களுக்கு உதவ சம்பந்தமே இல்லாத யாரோ "காதல்" அத்னால் உதவறேன் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
பேநா மூடி said...
எல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்..
நீங்கள் உங்களின் நண்பனின் காதல் திருமணத்துக்கு உதவுகிறீர்கள், அவர்களுக்குள் நிறைய பிரச்சினை, நீங்கள் பிரச்சினை அறிந்து கருத்து வேற்றுமை களைந்து சேர்த்து வைப்பீர்கள் அது நியாயமானது, நீங்கள் சேர்த்து வாய்த்த ஒரே காரணத்துக்காக அவர்களை சேர்ந்து வாழ சொன்னால் என்னால் ஏொள்ள முடியாது. //
Your comments on Nadodigal perfectly matched my opinion. I think they got the benefit of having Sashikumar as a lead and reaped the benefits..
Sen22 said...
Naadodigal Nalla illaiya..??
Appa entha mathiriyana cinemavai-than parppinga..!!
-Senthil//
எனக்கு படத்தில் சொல்லப்பட்ட கருத்து திணிப்பின் மேல் உடன்பாடில்லை. இருவருக்குள் ஏற்படும் பிரச்சினையின் மூலத்தை காரணமாக வைத்து அறிவுரை இல்லை. ஒட்டு மொத்த காதல் என்கிற பிளாங்கெட் அறிவுரை.காதலிச்சு திருமணம் பின்னாடி எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சேர்ந்தே இருக்கனும் என்கிற அறிவுரை எனக்கு ஒப்புதல் இல்லை.
மற்றபடி எல்லா சினிமாவும் பார்ப்பேன்
குருவியே பாத்துட்டேன்.
பேநா மூடி said...
எல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...
//
உங்களுக்கும் எனக்கும் வேறு வேறு கருத்து இருக்கிறது. எதையும் வலுக்கட்டாயமாக யார் மேலும் திணிக்கமுடியாது நமது முரண்பாடே உதாரணம்.
பித்தனின் வாக்கு said...
நாடேடிகளின் பட விமர்சனம் உங்களுக்கு வயது ஆவதைக் குறிக்கின்றது. கொஞ்சம் யூத்தாக பார்க்கவும். அவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.
மற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.
//
யாரோ தெரியாதவனுக்கு காதல்ங்கிற ஒரு காரணத்துகாக நீங்க உதவ போவிங்களா?
Cable Sankar said...
உ.தவின் பாதி கிணறை தாண்டியிருக்கிறீர்கள்..:)
//
நன்றி கேபிள் சங்கர்
ம்ம்ம்ம்.
அப்போ நாடோடிகள் பார்க்கலாமா வேண்டாமா?
நடக்கட்டும் நடக்கட்டும்..
ஆதவன் பாத்திங்களா?
அய்யா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த காரணம் நாங்கள் என் நண்பர் ஒருவனின் தம்பியின் காதலுக்காக அந்தப் பெண்ணை கடத்தியதுதான். இருவரும் வேறு வேறு சாதிகள். அதிலும் முட்டிக்கொள்ளும் சாதிகள்.
என் நண்பன் தம்பி கூறியவுடன் போய்ப் பொழப்பை பாருடா என்று திட்டினேன், ஆனால் அந்த பெண் நாளை காலைக்குள் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியில்லாமல் தூக்கி வந்தேம். வேனில் முன்னப் பின்ன தெரியாத பதினேரு நண்பர்களுடன் சென்றது. கல் குவாரி உரிமையாளரான பெண்ணின் தந்தை பத்துப் பதினைந்து அடியாள்களுடன் எங்களை துரத்தியதும் நல்ல நினைவுகள். ஆனால் யாராலும் எங்கள் வேன் ஓட்டுனருக்கு இணையாக ஓட்ட முடியவில்லை. காற்றாய் பறந்து தப்பித்தேம். கடைசியில் எங்கள் பகுதியில் ஒரு அமைச்சரின் தலையீட்டால் தப்பித்தேம். நன்றி.
இன்று அந்தப் பையனும் பெண்ணும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் வாழ்கின்றார்கள்.
இப்படி விமர்சனம் பண்ணா எந்த படமும் தேறாது போலிருக்கே!! :))) நீங்க முதல்வரானால் .. இந்த மாதிரி படங்களோட கதி!! :))))
//
யாரோ தெரியாதவனுக்கு காதலுக்காக உதவி செய்யப்போகிறேன் என்று கிளம்பினால் என் பார்வையில் அது முட்டாள்தனம். நட்பு என்பது நண்பர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கும், அவர்களின் தேவை எதுவோ அதற்குத்தான் உதவுவார்கள் அது சேர்த்தலோ, அறிவுரையோ, பிரிதலோ எதுவாகவும் இருக்கலாம் என் கருத்து.
படம் முடியும்போது சசிகுமார், யாரோ தெரியாதவரின் காதலுக்காக இருங்க நாங்களும் வரோம் என்று சொல்வார், இவர் நிஜமாக போகவேண்டிய இடம் மனநல மருத்துவமனைக்கு.
மொத்ததில் நல்லகளத்தில் சொல்லப்பட்ட குப்பைக்கருத்து.
//
நச்...!!!
இவங்க லவ்வை சேத்து வைப்பாங்களாம்...அதனால எப்பவும் சேர்ந்து தான் வாழணுமாம்...அப்ப ஒரு வேளை இவங்களுக்கு பிடிக்காட்டி பிரிஞ்சிடணும்னு சொல்வாய்ங்களோ???
எதார்த்தமா படம் எடுக்கிறேன்னு எந்த எதார்த்தமும் இல்லாம படம் எடுக்க இங்க தான் முடியும்....அதுக்கு ஆஹோ ஓஹோன்னு விமர்சனம் வேற...
சரியான குப்பை படம்!
//
பித்தனின் வாக்கு said...
அவர்களின் மெர்ச்சூரிட்டி இல்லாத காதலை அவர்களுக்குப் புரிய வைக்கின்றார்கள். படத்தின் இறுதியில் அழும் அவளின் அருகில் ஆறுதலாய் செல்லும் காதலன் காட்சி இல்லை என்றால் நானும் உங்களைப் போலத்தான் சொல்லியிருப்பேன். ஆனால் அந்தக் காட்சி அவர்கள் இருவரையும் மீண்டும் ஸேர்த்து வைத்தது போல் உள்ளதால் உங்களின் விமர்சனம் அடிபடுகின்றது. அவர்களின் தவறுகளைப் புரிய வைக்கின்றார்கள். நல்ல விமர்சனம்.
மற்ற இரண்டு படங்களையும் நான் பார்க்க வில்லை. நன்றி.
//
அதாவது, சசிகுமார் கடைசி காட்சியில் திட்டியதும் அவர்களுக்கு மீண்டும் காதல் வந்து விட்டது?? :0)))
//
ஷண்முகப்ரியன் said...
நாடோடிகள் படம் இங்கு நன்றாக ஓடித் தெலுங்கிலும் ரீமேக் ஆகிக் கொண்டிருக்கிறது,சார்.
சில விஷயங்களைக் கருத்தாகக் கேட்டால் நன்றாக இருக்காது.படமாகப் பார்த்தால் கருத்தே மாறும்.
//
நாடோடிகள் நன்றாக் ஓடுவது உண்மை தான்...குடுகுடுப்பை படம் நன்றாக இல்லை என்றோ, போரடிக்கிறது என்றோ சொல்லவில்லை...
ஆனால், படத்தில் வரும் நிகழ்வுகள் சினிமாத்தனமானவை...இதற்கு எதார்த்தமான படம் என்று பில்லிங் வேறு...அதே போல படம் சொல்லும் கருத்தும் குப்பையானது...
இந்த படம் ஒரு தலை ராகம், ரயில் பயணங்களில் வரிசையில் 1970களில் வந்திருக்க வேண்டியது....இப்பொழுது பார்க்க எரிச்சலாகத் தான் இருந்தது!
//
பேநா மூடி said...
எல்லா விசயங்களையும் negative-ah பார்க்க முடியும் அதற்க்கு உங்கள் நாடோடிகள் விமர்சனம் ஒரு உதாரணம்...
//
எந்த விஷயத்தையும் பாஸிட்டிவ்வாக தான் பார்க்க வேண்டும் என்பது என்ன சட்டமா??
எந்த விஷயத்தையும் எதிர் கோணத்திலும் பார்ப்பது நல்லது :0)))
//
பித்தனின் வாக்கு said...
அய்யா இந்த படம் எனக்கு மிகவும் பிடித்த காரணம் நாங்கள் என் நண்பர் ஒருவனின் தம்பியின் காதலுக்காக அந்தப் பெண்ணை கடத்தியதுதான். இருவரும் வேறு வேறு சாதிகள். அதிலும் முட்டிக்கொள்ளும் சாதிகள்.
என் நண்பன் தம்பி கூறியவுடன் போய்ப் பொழப்பை பாருடா என்று திட்டினேன், ஆனால் அந்த பெண் நாளை காலைக்குள் நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறியதால், வேறு வழியில்லாமல் தூக்கி வந்தேம். வேனில் முன்னப் பின்ன தெரியாத பதினேரு நண்பர்களுடன் சென்றது. கல் குவாரி உரிமையாளரான பெண்ணின் தந்தை பத்துப் பதினைந்து அடியாள்களுடன் எங்களை துரத்தியதும் நல்ல நினைவுகள். ஆனால் யாராலும் எங்கள் வேன் ஓட்டுனருக்கு இணையாக ஓட்ட முடியவில்லை. காற்றாய் பறந்து தப்பித்தேம். கடைசியில் எங்கள் பகுதியில் ஒரு அமைச்சரின் தலையீட்டால் தப்பித்தேம். நன்றி.
இன்று அந்தப் பையனும் பெண்ணும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுடன் வாழ்கின்றார்கள்.
//
இது தான் இந்த படத்தின் வெற்றி....காதலிக்காதவர்கள் என்று யாரும் இல்லை...அவர்களின் பழைய நினைவுகளை கிளறி விடுவது மட்டுமே இந்த படத்தின் நோக்கம்...
அது கூட பிரச்சினை இல்லை....ஆனால், "ஏய்...நாங்க சேத்து வச்சோமில்ல...அப்ப எங்களுக்கு பிடிக்கிற வரைக்கும் நீங்க ஒண்ணாதான் வாழணும்" என்பது மற்றவர்களின் தனிமனித விவகாரத்தில் தலையிடுவது...
அதுவும் கடைசி காட்சியில் சசிகுமார் & கோ மற்றொரு காதலுக்கு நாங்களும் வர்றோம் என்று கிளம்புவது எரிச்சலை தான் ஏற்படுத்துகிறது...
ஒரு வேளை 1970களில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கக் கூடும்....
//"காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்ட இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் சேர்த்து வைத்தவர்கள் தீர்மானிக்கமுடியாது, அதை அந்த இருவர் மட்டுமே அவர்கள் வாழும்/சார்ந்த சூழ்நிலை, சமூக கலாச்சார அழுத்தங்களை வைத்து தீர்மானிக்கமுடியும். //
குடுகுடுப்பை ....
உங்கள் நாடோடிகள் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.......
இரண்டு பேருக்கும் பிடிக்கறதும்,பிடிக்காம போறதும் அவங்க இஷ்டம். ஆனா காதலிக்கிறதுக்கு முன்னாலேயே அவங்க முடிவு செஞ்சுறணும் கல்யாணமா இல்ல ஆசையான்னு. படத்துல சொல்லுற மாதிரி முடிவு பண்ணி, ஆசைனா ரெண்டு நாள் ரூம் போட்டு முடிசுட்டு நீ யாரோ நான் யாரோன்னு போய்டலாம். அதுக்காக நண்பர்கள் கைய காலை இழக்க வேண்டாம். அட்லீஸ்ட் தர்ம அடி பட வேண்டாம். என்ன நான் சொல்லுறது. படத்துல அந்த பொறம்போக்கு சொல்லுற மாதிரி அவ இல்லாம நான் வாழ முடியத் அப்படி இப்படின்னு டயலாக் விட்டுட்டு அப்புறம் ரெண்டு வாரத்துல பிரிஞ்சி போறோம்னா எவனுக்கு தான் கோபம் வராது. அதுவும் அவ்ளவோ கஷ்டம் பட்டு அவங்க ஏற்பாடு பண்ணின வீட்டுல இருக்கும் போதே சொலுங்க!!!!!
Post a Comment