Monday, July 13, 2009

தங்கமணி ஸ்பெசல் டீ

என்னங்க 6:30 மணியாச்சு எந்திரிங்க...
டீ வேணுமா , காபியா.

டீயே போடு , காபி வடியறதுக்கு ரொம்ப நேரம் ஆகுது.

சரி டீயே போடுறேன், நீங்க கொஞ்சம் இந்த டீ போடுற பாத்திரத்தை எடுத்து கொடுங்க

காலையிலேயே என்ன கம்பியூட்டர்ல, சீக்கிரம் வாங்க

ம்ம்ம்
எடுத்துட்டீங்களாஅப்படியே கொஞ்சம் அடுப்ப ஆன் பண்ணி ஒரு டம்ளர் தண்ணி சுட வைங்க..

வெச்சிட்டேன்.இன்னைக்கி மார்க்கெட் என்ன ஆகப்போகுதோ..

அது இருக்கட்டும், அந்த கப்ப எடுத்து மைக்ரோவேவ்ல 2% பால் 1:45 நிமிடம் வைங்க, நான் பாப்பாவை எழுப்புறேன்.

வெச்சிட்டேன்.

ரெண்டு ஸ்பூன் டீத்தூள் எடுத்து அந்த சில்வர் பாத்திரத்தில போட்டு அந்த வெண்ணீர எடுத்து ஊத்தி வைங்க நான் வரேன்.

ம்ம்ம்ம்

பால் எவ்ளொ நேரம் சூடு பண்ணீங்க்

2 நிமிடம்.

1:45 நிமிடம் தான வைக்க சொன்னேன், அது பொங்கி ஊத்தி போச்சு, யாரு தொடக்கிறது.

சரி விடு. எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

உங்களுக்கு தெரியாது, அந்த சில்வர் டம்ளரையும் டீ பில்டரையும் எடுங்க..

எனக்கு டீ கொஞ்சம் ஸ்டாராங்கா வேணும்.

டீ ஸ்டாராங்கா இருந்தா கசக்கும், நான் சரியா கலந்து தரேன். அப்படியே சக்கரையை எடுங்க..

ரெண்டு ஸ்பூன் சக்கரை போடுங்க..

மெதுவா கீழ கொட்டாம..

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு

பி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு

24 comments:

சந்தனமுல்லை said...

:-)))

மணிகண்டன் said...

***
நான் சரியா கலந்து தரேன்
***

சார் அருமை. இந்த லைன் படிச்சுட்டு விடாம சிரிச்சேன்.

முனைவர் இரா.குணசீலன் said...

எனக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாது...........

இன்றைக்கு தெரிந்து கொண்டேன்..

Mahesh said...

ஐ.,.. அங்கியும் அப்பிடித்தானா? :)))) டீ நெஜமாவே நல்லா இருந்துருக்குமே?

S.A. நவாஸுதீன் said...

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

அதானே நீங்க போட்ட டீ-க்கு நீங்களே அப்ரிசியேட் பண்ணலேன்னா எப்படி?

RAMYA said...

அது சரி :-))

வெற்றி-[க்]-கதிரவன் said...

//என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு
//
-:)))))))))))))))))))))))))


எல்லாத்து வீட்டுலையும் இப்படித்தான் நடக்குதா ?

வால்பையன் said...

நான் டீ போட கற்று கொண்டேன்

நசரேயன் said...

அங்கியும் அப்பிடித்தானா?

Jackiesekar said...

ம்ம்ம்

டீ நல்லா இருக்கா

ம்ம்ம்

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே... வாயத்தொறந்து சொன்னாதான் என்ன.

நல்லா இருக்கு//

நல்ல பதிவு எல்ாவீட்டிலியும் இந்த தங்க மணிங்க மணிங்கதான் போங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

மீள் பதிவிற்கும் attendance கொடுத்தாச்சு

குடுகுடுப்பை said...

மணிகண்டன் said...

***
நான் சரியா கலந்து தரேன்
***

சார் அருமை. இந்த லைன் படிச்சுட்டு விடாம சிரிச்சேன்.//

ஏன் சார்?

குடுகுடுப்பை said...

முனைவர்.இரா.குணசீலன் said...

எனக்கு மொக்கைன்னா என்னான்னு தெரியாது...........

இன்றைக்கு தெரிந்து கொண்டேன்..//

எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியாது நகைச்சுவை அப்படின்னு நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

Unknown said...

பாஸூ நீங்க ரொம்ப மோசம் எங்க வூட்டுல டெய்லி நடக்கிறத எப்ப வந்து பாத்திங்க? இன்னும் இந்த மோர் குழம்பு வச்சு தந்தது அப்புறம் நூடுல்ஸ் போட்டு குடுத்ததையெல்லாம் எப்ப எழுதுவிங்க?

அது சரி(18185106603874041862) said...

//
பி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு
//

இந்த இடுகை போன வருஷமே வந்துதே...திருப்பி வருதுன்னா....வாழ்க்கை இன்னமும் அப்பிடியே போகுதா? :0)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
பி:கு: தினமும் டீ குடிப்பதால் மீள் பதிவு
//

இந்த இடுகை போன வருஷமே வந்துதே...திருப்பி வருதுன்னா....வாழ்க்கை இன்னமும் அப்பிடியே போகுதா? :0)))//

உமக்கு எப்படி தினமும் பீர் குடிப்பதோ அதே மாதிரிதான் நான் ஸ்பெசல் டீ குடிப்பது.

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

இந்தாங்க சுட்டி...

Anonymous said...

இதுதான் தினமும் நடக்குதுன்னா , ஏன் தினமும் தங்கமணியை டீ போட சொல்லணும். நீங்களே போட்டு தங்கமணிக்கும் ஒரு கப் குடுக்கலாம்ல. அப்பறம் பாருங்க . எப்படி அப்ரீஷியேட் பண்ணறாங்கன்னு. :)
(எங்க வீட்டுல இப்படித்தான் நடக்குதான்னு கேக்கக்கூடாது)

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...

இதுதான் தினமும் நடக்குதுன்னா , ஏன் தினமும் தங்கமணியை டீ போட சொல்லணும். நீங்களே போட்டு தங்கமணிக்கும் ஒரு கப் குடுக்கலாம்ல. அப்பறம் பாருங்க . எப்படி அப்ரீஷியேட் பண்ணறாங்கன்னு. :)
(எங்க வீட்டுல இப்படித்தான் நடக்குதான்னு கேக்கக்கூடாது)//

அத வேற நான் பொது இடத்துல சொல்லனுமா?

நட்புடன் ஜமால் said...

என்ன பண்ணாலும் ஒரு அப்பிரிசியேசனே கெடயாதே.\\


ஹா ஹா ஹா

இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நாங்க அப்பிரிஷியேட் செய்றோம் சார்

குடந்தை அன்புமணி said...

சிங்கிள் டீக்கே இந்த ஆர்ப்பாட்டமா...

நாங்கள்லாம், பால மோராக்கி, மோர தயிராக்கி, தயிரை வெண்ணையாக்கி... அடச் சே... (சமீபத்தில பழனி படம் டீவியில பார்த்தேன் அதான்... நீங்க வேற ஒன்றும் கற்பனை பண்ணிக்காதீங்க.)

அமிர்தவர்ஷினி அம்மா said...

அப்படியே அந்த சும்மா குழம்பு பதிவையும் மீள் பதிவா போடுங்க சார்
:)-

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்லாருக்கு. தினமும் டீய ரொம்ப ரசிச்சு குடிக்குறீங்க போல. :))))

வில்லன் said...

இதுதான் மொக்கை என்பதோ.....உங்க வீட்டுலயாவது பரவாஇல்லை எங்க வீட்டுல நோ கமெண்டரி. நூறு சதவிகிதம் டீ போடுறது என்னோட உழைப்பே......... எங்க வைதெரிசல கேளப்புரிங்க