ஹலோ மாப்பிள்ளை நல்லாருக்கியா ,என்னமோ object oriented programming, OOPS methodology அப்படின்னு ஜல்லி அடிக்கிறாங்க எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது, தெரிஞ்சா கொஞ்சம் விளக்குடா மாப்பிள்ளை.
அது ஒன்னும் பெரிய விசயம் இல்லடா, நீ திங்கிர ஒரு குண்டான் பிரியாணி எப்படி பண்றது அப்படின்னு கத்துக்கிட்டாலே OOPS கத்துக்கலாம்டா.
பிரியாணியா இப்பவே பசிக்குதுடா, சரி சொல்லு உடனே பண்ணி சாப்பிட்டுருவோம்.
பிரியாணி அப்படிங்கறது ஒரு object. ஆனால் அதுல நிறைய object இருக்கு, அதாவது அரிசி,தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி,புதினா,நெய் உப்பு, கறி சிக்கன்/மட்டன்/முட்டை மற்றும் பிரியாணி மசாலான்னு இதெல்லாந்தான்.
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே.
எல்லாருக்கும் தெரிஞ்சதுதான், அதையே இங்கிலீஸ்ல ஜல்லி அடிச்சா பயமா இருக்கும் அவ்வளவுதான். இப்ப பிரியாணி எப்படி பண்றதுன்னு OOPS ரெசிப்பீ தரேன் அப்படியே பாலோ பண்ணு.
அரிசி, உப்பு, தக்காளி,வெங்காயம், பிரியாணி மசாலா, கறி,புதினா இதெல்லாம் தனித்தனி ஆப்ஜெக்ட், இதையெல்லாம் வெச்சி பிரியாணி பண்ணா அதுக்கு பேரு பிரியாணி ஆப்ஜெக்ட்.
புரியுது, எல்லா ஆப்ஜெக்டும் தனித்தனியா இருக்கு பிரியாணி மசாலான்னு ஒன்னு இருக்கே அதுல என்ன என்ன சாமான் (ஆப்ஜெக்டு) இருக்கு.
அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.
ஓ இப்ப புரியுது, சரி இப்ப ஊப்ஸ் பிரியாணிக்கு போகலாம்.
படத்தை கிளிக்கி பார்க்கவும்.
பொது அமைப்பு பிரியாணி{
அடுப்பு = அடுப்பு.நிரந்தர பயன் அடுப்பு().
அடுப்பு.பற்றவை();
அடுப்பு.தழல்(நடுத்தரதிற்கு மேல்)
சட்டி.நிரந்தர பயன் சட்டி().எடுசட்டி();
உதவி.வெட்டு(நீளம், 4, தக்காளி)
உதவி.வெட்டு(நீளம், 4, வெங்காயம்)
உதவி.அரை(இ.பூண்டு)
கொட்டுசட்டியில்(பொருள்)
சமை(5 நிமிடம்)
கலக்கு()
அரிசி(2);
தண்ணீர்(2 )
கறி()
சட்டு.மூடு()
சமை(30 நிமிடம்)
தழல்(மெதுவாக)
அடுப்பு.அனை();
}
இதுல பாத்தீங்கண்ணா என்ன கறி வேணும்னா போட்டுக்கலாம், அதுக்கு பேருதான் dependancy injection, இந்த spring framework மாதிரி. கறி போடலைன்னா வெஜ் பிரியாணி அவ்ளோதான்.
ஓ நம்ம ஆந்திராக்காரு வெச்சிருக்கிற மதுரை வீரமுனியாண்டில தக்காளி சாதத்துல என்ன பிரியாணி கேக்குறமோ அதுக்கு ஏத்த மாதிரி கறி வெக்கிறதுக்கு பேருதான் dependancy injection ஆ.
ஆமாம் மாப்பிள்ளை, சரி என்னா நான் சொன்ன படி பிரியாணி பண்ணியா எப்படி வந்திருக்கு.சட்டிய திறந்து பாத்து ஒரு வெட்டு வெட்ட வேண்டியதுதானே.
போச்சுடா, எல்லாம் அப்படியே இருக்கு, எதுவும் வதங்கல வேகல சும்மா மிக்ஸ் ஆகிப்போயி இருக்கு.
ஏன் என்ன ஆச்சு.
அடுப்ப ஆன் பண்ணேன் எல்லாம் பண்ணேன் ஆனா கரண்டு இல்லை மாப்பிள்ளை. இப்ப என்ன பண்றது.
நீ சென்னைல இருக்கங்கிற்தயே மற்ந்துட்டேன்,கரண்டு third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா.
ரியல் டைம் ஆப்ஜெக்ட மாடலா வெச்சு மென்பொருள் உருவாக்கினா நல்லா வருது, ஆனா மென்பொருள் ஆப்ஜெக்ட மாடல வெச்சு ரியல்டைம் பிரியாணி பண்ண பெயிலாடுது. ஆனாலும் இது third party interface failure தான் .சரி ஒரு work around பண்ணலாம்.
என்னாது
நீதான் சும்மா அரிசியவே ஒரு படி திம்பியே , இப்ப தக்காளி வெங்காயம்லாம் போட்டு ஊறி வாசமா இருக்குமே சும்மா அப்படியே ஒரு காட்டு காட்டு.
இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு.
31 comments:
//இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு//
அது தான் சரி.
OOPS பிரியாணியிலே பின்னி படல் எடுக்குறீங்க,அப்படியே ஒரு OOPS மீன் குழம்பு போடுங்க
மீன் குழம்பெல்லாம் வெச்சா பகிர முடியாது நானே சாப்பிட்டிருவேன்
குடுகுடுப்பை.
விஷ்ணு. said...
//இல்லாட்டி பழைய முறைப்படி ஒரு மண்பானைல எல்லாத்தையும் கொட்டி நல்லா விறகு அடுப்புல வெச்சு பொங்கி சாப்பிடு//
அது தான் சரி.//
விஷ்ணுவே சொல்லியாச்சு.
குகு
//அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.//
இது எனக்கு தெரியாம போச்சே. இப்ப தெரிஞ்சுகிட்டேன்.
நல்லதொரு முயற்சி
oops என்று சொன்னாலே
oops! நமக்கு விளங்காதுப்பான்னு விளகிடுவேன் இப்போ கொஞ்சம் வாசம் வீசுது, வேக வச்சி பார்க்கனும், depending on third party (time ...)
நல்லா இருக்குங்க OOPS பிரியாணி...
கற்பனை என்றாலும் எதிர் காலத்தில் நம் பிரியாணிக்கு அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்கிப் பில் கேட்ஸுக்குப் பணம் கட்டித்தான் பிரியாணியை விண்டோஸ் வழி வாங்கிச் சாபிடுவோம் என்று நினைக்கிறேன்,குடுகுடுப்பை சார்.
இந்தப் ப்ரோகிராம் சூப்பர் கற்பனை.
T.V.Radhakrishnan said...
:-)))
நன்றி டிவீயார்
shirdi.saidasan@gmail.com said...
//அது உனக்கு தேவையில்லை, அதுக்கு பேருதான் டேட்டா என்காப்சுலேசன், இன்பர்மேசன் ஹைடிங், புரியிற மாதிரி சொன்னா தொழில் ரகசியம்.//
இது எனக்கு தெரியாம போச்சே. இப்ப தெரிஞ்சுகிட்டேன்.//
தொழில் ரகசியம்.
ஷண்முகப்ரியன் said...
கற்பனை என்றாலும் எதிர் காலத்தில் நம் பிரியாணிக்கு அமெரிக்கர்கள் காப்புரிமை வாங்கிப் பில் கேட்ஸுக்குப் பணம் கட்டித்தான் பிரியாணியை விண்டோஸ் வழி வாங்கிச் சாபிடுவோம் என்று நினைக்கிறேன்,குடுகுடுப்பை சார்.
இந்தப் ப்ரோகிராம் சூப்பர் கற்பனை.//
அப்பயும் நம்ம பிரியாணி பைரசி பண்ணி சாப்பிட மாட்டமா என்னா?
நன்றி
ஜமால், புதியவன்
OOPகொன்செப்டுகளை மிக எளிதாக விளக்கியுள்ளீர்கள்.. மிக்க நன்றி... ஆனாலும்”spring framework,third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா” போன்ற பிரயோகங்கள் எனக்கு விளங்கவில்லை.. புதிதாக இருக்கிறது.. சற்று விளக்க முடியுமா?
புல்லட் பாண்டி said...
OOPகொன்செப்டுகளை மிக எளிதாக விளக்கியுள்ளீர்கள்.. மிக்க நன்றி... ஆனாலும்”spring framework,third party interface இல்ல அடிக்கடி கட்டு இருக்கும் கிறது scope ல இல்லப்பா” போன்ற பிரயோகங்கள் எனக்கு விளங்கவில்லை.. புதிதாக இருக்கிறது.. சற்று விளக்க முடியுமா?//
பாண்டி இது சும்மா பகடிக்காக எழுதுனது,
கறி() அப்படிங்கற என்ன கறி போடனும்கிறது கடைசி நேரத்திலதான் முடிவாகும். பிரியாணிக்கு தெரியாது என்ன கறின்னு, spring framework la xml file வெச்சி interface based injection பண்ணுவாங்க.
<-கறி->
<-மட்டன்->
<-/கறி>
இந்த மட்டன் கிற விசயம் இங்க injection. பிரியாணி சட்டிய மாத்தாம , மட்டன சிக்கனாவோ முட்டையாவோ, வெஜிடேரியனாவோ மாத்திரலாம்.
உதாரணத்துக்கு 50 ஆயிரம் பேர கொலை பண்ணாலும் மறைக்கத்தெரிஞ்சா அவன் புத்தர்.
அடுப்புக்கு வரும் கரண்ட் மூன்றாவது நபர். பிரியாணிக்கு சம்பந்தமில்லை. ஆனால் இல்லாட்டி வேகாது. சென்னைல கரண்ட் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கட் ஆகும், அது நம்ம ஸ்கோப்ல இல்லை.
குட் திங்கிங் குடுகுடுப்பையாரே !!!!
ஓட்டும் குத்தியாச்சு
அட்ரா சக்கை அட்ரா சக்கை இதுக்கு மேல எவனாலயும் இவ்ளோ சிம்பிளா ஊப்ஸ் (OOPS) கான்செப்ட விளக்க முடியாது.. என்னோவோ போங்க .. பின்றீங்க
Guru
சூப்பரோ சூப்பர், இத விட இந்த கான்செப்ட சுலபமா விளக்கமுடியாது... -:)
புது கடை ஆரம்பிச்சிருக்கேன்.. வந்துட்டு போங்க.
http://maargalithingal.blogspot.com/
செந்தழல் ரவி said...
குட் திங்கிங் குடுகுடுப்பையாரே !!!!
//
நன்றி ரவி
Anonymous said...
அட்ரா சக்கை அட்ரா சக்கை இதுக்கு மேல எவனாலயும் இவ்ளோ சிம்பிளா ஊப்ஸ் (OOPS) கான்செப்ட விளக்க முடியாது.. என்னோவோ போங்க .. பின்றீங்க
Guru
நன்றி குரு
பித்தன் said...
சூப்பரோ சூப்பர், இத விட இந்த கான்செப்ட சுலபமா விளக்கமுடியாது... -:)
புது கடை ஆரம்பிச்சிருக்கேன்.. வந்துட்டு போங்க.
http://maargalithingal.blogspot.com/
நன்றி பித்தன்.
உங்கள் OOPS பிரியாணி சுவையோ சுவை ... Hibernate, JSF or Struts பற்றியும் சொல்லியிருந்தால் ஒரு முழு விருந்து கிடைத்திருக்கும் :)
Nundhaa said...
உங்கள் OOPS பிரியாணி சுவையோ சுவை ... Hibernate, JSF or Struts பற்றியும் சொல்லியிருந்தால் ஒரு முழு விருந்து கிடைத்திருக்கும் :)
//
technology தொடாமல் இன்னும் நிறைய சொல்ல ஸ்ஹோப் இருக்கு, நான் இத ரொம்ப சீரியஸா பண்ணல.இன்னும் நல்லவிதமா கொடுத்திருக்கலாம்.
படம் ஒண்ணியும் பிரியல...ஆனாக் கண்டி, பிரியாணி ரெசிப்பி நல்லாருக்கு...
ஹி ஹி எப்படி இப்படி ...
ரொம்ப oops மண்டையிலே ஏறிருச்சோ ?
நன்றி
அது சரி,
சூரியன்
oops concept வெச்சி பிரியாணியா? அட நீங்க ரொம்ப அறிவாளிங்க குடுகுடுப்பையாரே
அப்படியே ஒரு ப்ரோக்ராம் எழுதின திருப்தி கிடைச்சுதுங்கோ உங்க இடுகையை படிச்சிட்டு.
Third Party Controls சூப்பர்.
அது இல்லேன்னா Application சோபிக்காதே!
யோசிச்சாலும் யோசிச்சீங்க ரொம்ப வித்தியாசமான யோசிப்பு
உங்கள் யோசனைக்கு ஒரு சபாஷ் போட்டுக்கறேன் சார் :))
RAMYA said...
oops concept வெச்சி பிரியாணியா? அட நீங்க ரொம்ப அறிவாளிங்க குடுகுடுப்பையாரே
அப்படியே ஒரு ப்ரோக்ராம் எழுதின திருப்தி கிடைச்சுதுங்கோ உங்க இடுகையை படிச்சிட்டு.
Third Party Controls சூப்பர்.
அது இல்லேன்னா Application சோபிக்காதே!
யோசிச்சாலும் யோசிச்சீங்க ரொம்ப வித்தியாசமான யோசிப்பு
உங்கள் யோசனைக்கு ஒரு சபாஷ் போட்டுக்கறேன் சார் :))//
நன்றி ரம்யா
ஆஹா.....அண்ணே....முடியலனே...
எப்டினே...இப்டிலாம்.....(வேணா....அழுதுடுவேன்....)
ஊப்ஸ் பிரியாணி ஓஓஓஓப்ஸ்.....
உருப்படியான மொக்கைக்கு நன்றி அண்ணே....
வாழ்த்துக்கள் .......
namma number 101..........
ஆஹா இதுல இவளவு பெரிய திட்டம் இருக்கா !!!!!!!!!!!!!
Post a Comment