பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.
ராத்திரி நேரத்துல தூக்கம் வராமல் இருக்க எதாவது சூடா குடிக்கனுமில்லையா, இந்த தண்ணிக்கட்டற கூட்டத்த கணக்கு பண்ணியே என்னோட பங்காளி ஒருத்தரு நடுராத்திரி ஒரு மணிக்கெல்லாம் டீக்கடை திறந்துருவாரு, அப்போ ஒரு லிட்டர் பால் வாங்கி பத்து லிட்டர் தண்ணி ஊத்தி சுடவைப்பாரு, அன்னைக்கு இரவு வரைக்கும் பால் குண்டான் குறையாம அப்பப்போ தண்ணீர் ஊத்திட்டே இருப்பாரு. அமெரிக்கா காரன் என்னமோ 1% பால் 2% பால் அப்படிங்கறான் இப்போ, இவரோட கடைல உள்ள பால் குண்டான்ல எந்த நேரத்துல எத்தனை % பால் இருக்குன்னு எவனாலயும் கண்டுபிடிக்க முடியாது.
ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி ஒரு சூடா போட்டுக்குடுப்பாரு, அது போல சக்கரையும் அளவில்லாம போட்டுக்குடுப்பாரு,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.
இஞ்சினியரிங் காலேஜ்ல சேந்தப்புரம் ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன், பெரிய படிப்பு படிக்கிற பந்தாவுல மம்பட்டிய ஸ்டைலா வெட்டினதுல, நேரா கால் பாதத்தில் விரல்கள் இணையும் இடத்தில வெட்டிருச்சு , கட்டை விரல் தவிர மீதி அனைத்து விரல்களையும் பாதிக்கற அளவுக்கு நீளமான வெட்டு, நல்லா ஆழமாகவும். உடனே தலைல கட்டிருந்த பச்சைத்துண்ட எடுத்து காலில் கட்டி, பங்காளி கடைக்கு வந்துட்டேன். இரத்தம் நிறைய போயிடுச்சு அப்பவே, டீத்தூள் வெச்சி கட்டினா இரத்தம் வருவது நின்னுரும்னு சொல்லி அவரு கடைல டீத்தூள்ங்கிற பேருல போடுற தூள வெச்சு கட்டுனார்.
அப்படியே பங்காளியோட பையனோடா சைக்கிள்ல டாக்டர் வீட்டுக்கு போயாச்சு, டாக்டருக்கு வயசு எழுபது தாண்டியாச்சு,அவரு நொடத்துக்கு கட்டுப்போடற மற்றும் ஹோமியோபதி டாக்டர், ஆனா உபயோகப்படுத்துற மருந்தெல்லாம் இங்கிலீசு மருந்துதான், ஊருல யாருக்காச்சும் காச்சல்னா ஒரு ஊசி போட்டு 3 ரூபா வசூல் பண்ணிப்பாரு. அவருகிட்டதான் காலைக்கொடுத்தேன்.
உடனே தையல் போடனும் இல்லாட்டி ஆறாது, என் பேரன் ராகவன யாராச்சும் பாத்தீங்களான்னு பக்கத்துல உள்ள எல்லாரையும் கேட்டாரு. இந்த ராகவன் அவரோட மகள் வயிற்று பேரன், அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு, இவருக்கு துணையா கட்டு போடறது, இந்த மாதிரி வெட்டுக்காயங்கள், தட்டுக்காயங்களுக்கு தையல் போடுறதெல்லாம் அவந்தான்.இதற்கிடையில் அவரோட மகன் வயித்து பேரன பத்தாவது பாஸ் பண்ண வைக்க முயற்சி பண்ணி முடியாம அவனும் இப்ப ஜூனியர் டாக்டர்.
நிரம்ப நேரம் தேடியும் கண்ணு தெரிந்த இளம் டாக்டர்கள் இருவரையும் காணவில்லை, என் பங்காளி கூட டெய்லருதான் அவரையே தையல் போட சொல்லிருக்கலாம் ஆனா அவரு பொங்களுக்கு சட்டை தைக்க குடுத்தா தீபாவளிக்குதான் தைச்சு தருவாரு. அதனால பெரிய டாக்டரே தையல் போட்டாரு, அப்புரம் ஒரு ஊசியும் போட்டாரு சுத்தமா வலிக்கவே இல்லை.
ஒரு வாரம் கழித்து தையல் பிரிக்க போனேன், ராகவன் இருந்தான், உங்க தாத்தா எங்கடான்னேன்.
எதுக்கு மாப்பிளை, அவன தேடுற? நீ தையல் போட வந்தப்போ நான் பின்னாடி படுத்து தூங்கிட்டிருந்தேன் கிழப்பய எழுப்பல, சரி மாப்பிளை நான் தையல் பிரிக்கிறேன்.
உனக்கு தெரியுமாடா?
நீ வேற இப்ப நாந்தான் டாக்டரு , கிழவன் டம்மிதான். ஊரு காட்டுல உள்ள இழுத்துட்டு கெடக்கிற கெழங்கட்டையலுகெல்லாம் நாந்தான் மாப்பிளை சத்து ஊசி போடுறேன். ராசிக்காரன் நான் இப்போ சத்து ஊசி போட்டவுடன் கெழடெல்லாம் ஓட ஆரம்பிச்சிருது.
இங்க பாரு தையல் போடுறேன்னு கொதறி வெச்சிருக்கான்.என் தாத்தனுக்கு இப்பெல்லாம் கண்ணு சரியா தெரியறதில்லை. சரி மாப்பிளை அப்படியே ஒரு ஊசி போட்டிருவோம்
டேய் வலிக்குதுடா? உங்க தாத்தா ஊசி போட்டா வலிக்காதுடா?
அந்த ரகசியம் இது வரைக்கும் உனக்கு தெரியாதா? அவன் ஊசிய உடம்புலயே குத்த மாட்டான், சும்மா கிட்ட வெச்சு வலிக்குதா வலிக்குதா கேட்டுகிட்டே மருந்த வெளில விட்டிருவான். இது தெரியாம பெரிய டாக்டர் வலிக்காம ஊசி போடுவாருன்னு பல பேரு நெனச்சிட்டு இருக்காங்க.
எனக்குத் தெரிந்து இந்த மாதிரி டாக்டர்களிடம் ஊசி போட்டது அதுதான் கடைசி, இன்னமும் பாதத்தில் அந்த தையல் தடம் இருக்கிறது, அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். உடனே இதையே பதிவா போட்டாச்சு.
கால ஓட்டத்தில் தாத்தா டாக்டரும் பேரன்களுக்கு பயந்து எங்கோ சொல்லாமல் கொள்ளாமால் ஓடிவிட்டார். பேரன்களும் தாத்தா இல்லாமல் டாக்டர் தொழில் செய்ய முடியாமல் வேறு தொழிலுக்கு மாறிவிட்டனர். ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை. நல்லவேளை மத்திய தர மக்கள் அனைவரிடமும் மோட்டார் சைக்கிள் இருக்கும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவும் மனிதாபிமானமும் மிச்சமிருப்பதால் பக்கத்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளை அடைவது எளிதாகி உள்ளது.
எங்கள் பகுதியில் மருத்துவம் செய்த சகோதர டாக்டர்கள் பற்றி விரைவில் ஒரு பதிவு.
32 comments:
அங்க லஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு இங்க வந்து பதிவே போடறது... இதெல்லாம் நல்லால்ல... ஆமாம் :)
//ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//
என்ன கொடுமை இது..இப்படி ஷாக் கொடுக்கறீங்க!!
//
அந்த ரகசியம் இது வரைக்கும் உனக்கு தெரியாதா? அவன் ஊசிய உடம்புலயே குத்த மாட்டான், சும்மா கிட்ட வெச்சு வலிக்குதா வலிக்குதா கேட்டுகிட்டே மருந்த வெளில விட்டிருவான். இது தெரியாம பெரிய டாக்டர் வலிக்காம ஊசி போடுவாருன்னு பல பேரு நெனச்சிட்டு இருக்காங்க.//
!!!
//அவன் ஊசிய உடம்புலயே குத்த மாட்டான், சும்மா கிட்ட வெச்சு வலிக்குதா வலிக்குதா கேட்டுகிட்டே மருந்த வெளில விட்டிருவான். இது தெரியாம பெரிய டாக்டர் வலிக்காம ஊசி போடுவாருன்னு பல பேரு நெனச்சிட்டு இருக்காங்க.
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது தான் வலிக்காம ஊசி போடுற டெக்னிக்கா!
// கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//
எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது
முழு விபரம் அறிய http://www.payanangal.in/2008/04/three-levels-of-care-phc-gh-mc.html
108 க்கு கூப்பிட்டால் பிணியாளர் ஊர்தி வருகிறதா
நம்மூர்லே மகள் மெடிக்கல் கோலேஜுலே ச்சேர்ந்நால் எல்லாம் பறஞ்சுதரும் அம்மே உண்டு கேட்டோ.
அம்மமைக்கு ஜோலி எந்தா?
பிரசவம் பார்க்குன்ன புள்ளியா.
அச்சன் பார்பர் ஷாப் நடத்துன்னு.
இப்பக் கால் வலி உண்டா?
,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.\\
ஹா ஹா ஹா ...
அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு\\
ஓவர் குசும்பு தான்
(அதிகம் நசரேயனோடு கதைக்கிறீங்களோ)
கிராமங்களில இன்னிக்கும் இப்படி "டாக்டர்"கள் இருக்கிறார்கள். எனக்கு கூட இப்பிடி ஒரு அனுபவம் சமீபத்தில் வாய்த்தது. அதைக் கூட ஒரு பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..பார்ப்போம்.
நல்லா இருக்குது மருத்துவம்.. தொடருங்க
தெரியாத வேலையில ஈடுபட்டா இப்படித்தான்...
மண்வெட்டி வேலையில நீங்க அரைகுறை
அதனாலதான் அப்படிப்பட்ட டாக்டர் கிடைச்சுது.:-)))
என்னோட நெறியாளர், மாரியப்பன் டாக்டர் கிட்ட போயி எனக்கு அலர்ஜியா இருக்குனு சொல்லி, மாத்திரை கேட்டு வாங்கிட்டு வாங்கன்னார். சார், அவர் கிளினிக் எங்க இருக்கு, இது நானு. கிளினிக், ரயில் ஸ்டேஷன் எதுத்தாப்ல இருக்கு. பகல் நேரத்துல, நம்ம டிபர்ட்மென்ட் ஆபீஸ்ல தான் இருப்பாரு! மாரியப்பன் டாக்டர் குடுத்தது, டைக்லோபீனாக் சோடியம், அவர் படிச்சு இருக்குத MA. என்னோட நெறியாளர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்துல முனைவர் பட்டம் வாங்கிட்டு, நான் படிச்ச பல்கலை கழகத்துல தொழில் வேதியல் துறை பேராசிரியர்! இப்ப, அவர் தென் கொரியாவுல வேதியல் துறை பேராசிரியராக இருக்கார். இப்படி ஆட்கள் இருக்கம் போது படிக்காத, நல்ல மருத்துவர்கள்ட போக வசதி இல்லாத மக்களோட அறியாமை பத்தி பேசி என்ன பயன்?
Mahesh said...
அங்க லஞ்சிட்டு வந்து பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு இங்க வந்து பதிவே போடறது... இதெல்லாம் நல்லால்ல... ஆமாம் :)//
இது மூனு நாளைக்கு முன்னாடியே எழுதியாச்சுங்கோ, உங்க கடைக்குதான் வரேன்
புருனோ Bruno said...
// கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//
எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது
முழு விபரம் அறிய http://www.payanangal.in/2008/04/three-levels-of-care-phc-gh-mc.html
108 க்கு கூப்பிட்டால் பிணியாளர் ஊர்தி வருகிறதா//
கண்டிப்பாக முடியாது , ஆங்காங்கே இருக்கும் PHC மேம்படுத்தி மருத்துவர்கள் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். பொதுமக்களிடம் PHC க்குதான் செல்லவேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
சந்தனமுல்லை said...
//ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//
என்ன கொடுமை இது..இப்படி ஷாக் கொடுக்கறீங்க!!
///\\\
சிறிய கிராமங்கள் , நகரத்தில் இருந்து தூரத்தில் உள்ள கிராமங்களின் நிலை இதுதான்.
துளசி கோபால் said...
நம்மூர்லே மகள் மெடிக்கல் கோலேஜுலே ச்சேர்ந்நால் எல்லாம் பறஞ்சுதரும் அம்மே உண்டு கேட்டோ.
அம்மமைக்கு ஜோலி எந்தா?
பிரசவம் பார்க்குன்ன புள்ளியா.
அச்சன் பார்பர் ஷாப் நடத்துன்னு.
இப்பக் கால் வலி உண்டா?
வலியெல்லாம் டீச்சர், ஆனால் தழும்பு இருக்கிறது.
நட்புடன் ஜமால் said...
அவனை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க படாத பாடு பட்டு முடியாம அவனையும் டாக்டர் ஆக்கிட்டாரு\\
ஓவர் குசும்பு தான்
(அதிகம் நசரேயனோடு கதைக்கிறீங்களோ)//
நல்லவேளை நானும் நசரேயனும் ஒரே ஆளுன்னு சொல்லாம விட்டீங்களே
முகிலன் said...
கிராமங்களில இன்னிக்கும் இப்படி "டாக்டர்"கள் இருக்கிறார்கள். எனக்கு கூட இப்பிடி ஒரு அனுபவம் சமீபத்தில் வாய்த்தது. அதைக் கூட ஒரு பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்..பார்ப்போம்.//
எழுதுங்க, அப்படியே தமிழ்மணத்துல இணையுங்கள்
kicha said...
என்னோட நெறியாளர், மாரியப்பன் டாக்டர் கிட்ட போயி எனக்கு அலர்ஜியா இருக்குனு சொல்லி, மாத்திரை கேட்டு வாங்கிட்டு வாங்கன்னார். சார், அவர் கிளினிக் எங்க இருக்கு, இது நானு. கிளினிக், ரயில் ஸ்டேஷன் எதுத்தாப்ல இருக்கு. பகல் நேரத்துல, நம்ம டிபர்ட்மென்ட் ஆபீஸ்ல தான் இருப்பாரு! மாரியப்பன் டாக்டர் குடுத்தது, டைக்லோபீனாக் சோடியம், அவர் படிச்சு இருக்குத MA. என்னோட நெறியாளர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்துல முனைவர் பட்டம் வாங்கிட்டு, நான் படிச்ச பல்கலை கழகத்துல தொழில் வேதியல் துறை பேராசிரியர்! இப்ப, அவர் தென் கொரியாவுல வேதியல் துறை பேராசிரியராக இருக்கார். இப்படி ஆட்கள் இருக்கம் போது
//படிக்காத, நல்ல மருத்துவர்கள்ட போக வசதி இல்லாத மக்களோட அறியாமை பத்தி பேசி என்ன பயன்?//
நான் படிக்காதவன்னு ஒரு முடிவே பண்ணீட்டீங்களா கிச்சா?
மம்பட்டியா அது எங்க ஊருப்பக்கம் மம்முட்டி:)
////ஆனால் இன்னமும் எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவசரத்திற்கு மருத்துவ வசதி இருக்குமா என்றால் இல்லை//
//
இதுக்குத்தான் அன்புமணி மருத்துவப் படிப்பு படிக்கிறவங்க சில வருடங்கள் கிராமப்புறப் பக்கம் பணிபுரிய வேண்டும் என்று சொன்னது.
//எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது//
மருத்துவர் புருனோவின் இந்தக் கருத்து அனுபவ ரீதியா சரியாக இருக்கலாம்.ஆனால் கொள்கை ரீதியாக மருத்துவம்,சாலைகள்,வீடுகள்,மின்சாரம்,நீர் போன்ற அடிப்படை கட்டமைப்புக்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தராமல் பாதுகாப்பு என்ற கொள்கையில் வருமானத்தையெல்லாம் இராணுவத்துறைக்கு தாரை வார்த்ததன் காரணமாக உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று இந்தியா,பாகிஸ்தான் நாடுகள் இன்னும் ஏழை நாடுகளாகவே இருக்கிறது.
கவுரவமான வேலை,ஊதியம் என இருப்பதால் இந்திய நர்ஸ்கள் எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.அவசியமான மனிதவளத்தையெல்லாம் கூட தாரை வார்க்கும் போது நடைமுறை சாத்தியம் என்பது இல்லாமலே போகிறது:(
ஹோமியோபதி டாக்டர்கள் ஓரளவுக்கு கிராமங்களுக்கான காலியிடத்தை நிரப்ப முடியும்.ஆனால் தொலைக்காட்சி ஹோமியோபதிகள் அடிக்கும் லூட்டி தாங்க முடியல.
//நான் படிக்காதவன்னு ஒரு முடிவே பண்ணீட்டீங்களா கிச்சா?//
ஒரு விளையாட்டல்லாத (http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp) என்னுடைய கருத்தை நகைச்சுவையாக மாற்றியமைக்கு நன்றி!
//ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன்//
கவுண்டர் : அட்ரா அட்ரா...
குறை ஒன்றும் இல்லை !!! said...
//ஒரு நாள் பங்காளி கடைல ஒரு மதிய நேரம் ஒரு சுடுதண்ணிய குடிச்சிட்டு மடைகட்ட போனேன்//
கவுண்டர் : அட்ரா அட்ரா...//
செந்தில்: ஏண்ணே ஏண்ணே
ராஜ நடராஜன் said...
//எல்லா கிராமங்களிலும் அவசர மருத்துவ வசதி ஏற்படுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது//
மருத்துவர் புருனோவின் இந்தக் கருத்து அனுபவ ரீதியா சரியாக இருக்கலாம்.ஆனால் கொள்கை ரீதியாக மருத்துவம்,சாலைகள்,வீடுகள்,மின்சாரம்,நீர் போன்ற அடிப்படை கட்டமைப்புக்களுக்கு இந்தியா முக்கியத்துவம் தராமல் பாதுகாப்பு என்ற கொள்கையில் வருமானத்தையெல்லாம் இராணுவத்துறைக்கு தாரை வார்த்ததன் காரணமாக உன்னாலே நான் கெட்டேன் என்னால நீ கெட்டாய் என்று இந்தியா,பாகிஸ்தான் நாடுகள் இன்னும் ஏழை நாடுகளாகவே இருக்கிறது.
கவுரவமான வேலை,ஊதியம் என இருப்பதால் இந்திய நர்ஸ்கள் எல்லாம் மத்திய கிழக்கு நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.அவசியமான மனிதவளத்தையெல்லாம் கூட தாரை வார்க்கும் போது நடைமுறை சாத்தியம் என்பது இல்லாமலே போகிறது:(//
இந்த சிந்தனையில் நான் ஒரு பதிவு எழுத ஆவலாக உள்ளேன், ஆனா அதுக்கு நிறைய படிக்கனும், அங்கதான் இடுக்கிது
அவ்வளவு நக்கலா இருந்தது அதான்.. தவறாக எண்ண வேண்டாம் அண்ணே..
//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.//
அப்ப அடுத்தவன் வயலுக்கு பாயுற தண்ணிய உங்க வயலுக்கு திருப்பி விடுறது யாரோட வேலை
//பள்ளிக்கூடம் படிக்கிற வரைக்கும் ராத்திரி பகலா அப்பாவுக்கு உதவியா தண்ணிக்கட்டப்போறது உண்டு, அந்த நேரங்களில் என்னோட வேலை பொதுவா மடை கட்டுறது, வேற யாராவது தண்ணிய திறந்து அவங்க வயலுக்கு எடுத்துட்டு போகாம காவல் காக்கிறது இதுதான் என்னோட வேலை.//
அப்ப அடுத்தவன் வயலுக்கு பாயுற தண்ணிய உங்க வயலுக்கு திருப்பி விடுறது யாரோட வேலை
//ஆனா இவரோட டீயில என்ன மகிமைன்னா , சூடுன்னு அப்படி ஒரு சூடா போட்டுக்குடுப்பாரு, அது போல சக்கரையும் அளவில்லாம போட்டுக்குடுப்பாரு,அதுனால டீயில பால் இல்லாத விசயம் அடிபட்டுப்போயிரும்.//
டீ என்ன வெல..... அம்பது பைசாவா இல்ல ஒரு ரூபாயா.......அதுக்கு an தா மாதிரி தான் கோளிட்டி தார முடியும். அவன் ஒன்னும் அப்படி வித்து கோட்டை கட்ட போறது கெடையாது. மிஞ்சி போனா மூணு வேலை ஒழுங்கா சாப்பிடுவான் அவளவுதான். அதாவது கொள்ளை அடிக்கவில்லை என்பது என்னோட விவாதம்...
இத படிச்சா எனக்கு எங்க ஊருல உள்ள இன்னொரு டாக்டர் நெனப்பு வருது. அவரு ரெண்டாம் கிளாஸ் பாஸ். எப்படி தெரியும்னா எங்க அப்பாகிட்ட LIC போட்டாரு. AGE PROOF சர்டிபிகேட் கேட்டா இல்ல. அப்பத்தான் அவரு சொன்னாரு 5STD incomplete. ஆனா கொம்பவுன்டார வேல பாத்த அனுபவத்த வச்சு ஊசி எல்லாம் போடுவாரு. நேரையபேறு பரலோகம் பொய் செந்தவங்களும் உண்டு லிஸ்ட்ல....
படிக்கும் போது சிரிப்பா இருந்தாலும், இன்னும் மருத்துவ வசதிகள் வராம இருக்கும் கிராமங்களை நினைக்கும்போது மனசு பதறுகிறது.
Post a Comment