Thursday, June 25, 2009

தொடர் பதிவுகளை எப்படி நிறுத்துவது என்று ஒரு தொடர்பதிவு.

வலை உலக வலைமாமணிகளே, பட்டாம்பூச்சிகளே,கரப்பான் பூச்சிகளே, 32 கேள்விக்கும் உண்மையை பதிலாக சொன்ன வலை உலக புலிகளே. சமீப காலத்தில் இந்த 32 கேள்வி தொடர்பதிவினால் ,யார் பதிவை படித்தாலும் ஒரே மாதிரியாக இருந்தது எனக்கு,அதனால் நசரேயனின் அழைப்பை ஏற்கமுடியவில்லை.

ஆனால் அதற்கு பதிலாக, இந்த தொடர்பதிவுகளை எப்படி நிறுத்துவது என்று நீண்ட நேரம் உருண்டு புரண்டு யோசித்தேன். இதையே ஏன் ஒரு தொடர்பதிவாக்கி ஆலோசனை கேட்ககூடாது என்று எண்ணி நான் அழைக்கும் நபர்

சோம்பேறி

இவரை அழைக்க காரணம் அவர் தன்னுடைய சோம்பேறி வலைப்பதிவின்

"ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது..."

இந்த caption தான், அதனை அவர் கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்று கருதி இந்த பதிவை தொடர அழைக்கிறேன்.

14 comments:

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது..."
//

நாளை மறுநாள்தான் போஸ்ட் போடுவாரோ....

நாமக்கல் சிபி said...

//
நாளை மறுநாள்தான் போஸ்ட் போடுவாரோ....//

அல்லது அதையேதான் தினமும் சொல்வாரா?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இதென்ன கலாட்டா..,

வேத்தியன் said...

இதனால தான் ஒன்னு ரெண்டு பதிவுகள் வந்துகிட்டு இருந்துச்சு..
அதையும் நிறுத்தினா எப்பிடிண்ணாத்தே???
:-)

சந்தனமுல்லை said...

//இதையே ஏன் ஒரு தொடர்பதிவாக்கி ஆலோசனை கேட்ககூடாது என்று எண்ணி//

அவ்வ்வ்வ்வ்!

ஷங்கி said...

நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, பதிவுலகுக்கு! ட்ட்டுடுடுடுடுடுடுராய்ங்க்! ஜக்கம்மா சொல்றா!! நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, பதிவுலகுக்கு! ட்ட்டுடுடுடுடுடுடுராய்ங்க்!, சோம்பேறி ஐடியா ப்ளீஸ், Quick, Quick!!!

குடுகுடுப்பை said...

நாமக்கல் சிபி said...

//
நாளை மறுநாள்தான் போஸ்ட் போடுவாரோ....//

அல்லது அதையேதான் தினமும் சொல்வாரா?
//

அதெல்லாம் சொல்லமாட்டார் எழுதி போடுல போட்டார்ல அதுக்கு மேல வேற சொல்லனுமா.

தமிழ் அமுதன் said...

இந்த பதிவு குறித்து நிறைய மாறுபட்ட கருத்துகள் உண்டு!
சொல்ல ஆரம்பித்தால் நெறைய சொல்ல வேண்டி வரும்!


அதை ஏன் இன்னிக்கு சொல்லணும்? நாளை ,நாளை மறுநாள் இருக்கும்போது ;;))

வால்பையன் said...

//"ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது..."//

ஏன் இப்போ சாப்பிடனும் அடுத்தவேளை இருக்கும் போது!

குடுகுடுப்பை said...

Blogger ஜீவன் said...

இந்த பதிவு குறித்து நிறைய மாறுபட்ட கருத்துகள் உண்டு!
சொல்ல ஆரம்பித்தால் நெறைய சொல்ல வேண்டி வரும்!


அதை ஏன் இன்னிக்கு சொல்லணும்? நாளை ,நாளை மறுநாள் இருக்கும்போது ;;))//

:)))))))

குடுகுடுப்பை said...

எங்கப்பா சோம்பேறி ஒரு கமெண்டு போடுவாருன்னு காத்திட்டு இருக்கேன் ஆளையே காணோம்

kicha said...

"நாளை என்ப‌து இன்றிர‌வே தொட‌ங்குகிற‌து" என்ற‌ ஷ்யாம் பென‌க‌ல், "ஏன் இன்றைய பணிகளை நாளை செய்ய வேண்டும்? நாளை மறுநாள் இருக்கும் போது..." என்ப‌தை ப‌டித்துவிட்டு என்ன‌ நினைப்பாருன்னு நீங்க‌ ஒரு பின்னூட்ட‌ம் போடுங்க‌!

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கும் அவருடய கேப்சன் பிடிக்கும்..

குடுகுடுப்பை said...

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கும் அவருடய கேப்சன் பிடிக்கும்..
//

எனக்கு அப்படி இருக்கவும் பிடிக்கும்