Wednesday, June 24, 2009

ஈனப்பொழப்பு.

கண்டக்டர் முருகேசன் தனது ஆறாவது வருட கண்டக்டர் வாழ்க்கையில் மூன்றாவது முறையாக வேலை மாறி புது பஸ்ஸில் வேலைக்கு சேர்ந்தான்.

புது வேலையில் முதல் நாள் தஞ்சாவூரிலிருந்து பூவத்தூர் செல்லும் பஸ்ஸில் வேலை.

டிக்கட், டிக்கட்

யாருங்க அது உள்ள வாங்க சீட்டுதான் காலியா இருக்குள்ள ஏன் படில நிக்கறீங்க வந்து உட்காருங்க

எங்களுக்கு தெரியாதா பஸ்ஸு காலியா இருக்குன்னு,சும்மா கவர்மெண்டு பஸ்ஸுல கை நீட்டி சம்பளம் வாங்குற கண்டக்டர் பயலுக்கே இவளோ திமிருன்னா சொந்தமா வெவசாயம் பண்ணி மார்க்கெட்ல வாலைக்காய் வித்திட்டு வர்ற எனக்கு எவ்ளோ திமிரு இருக்கும். இந்தா கோயீலூருக்கு ஒரு டிக்கட்ட குடு.

என் நேரம் உங்கிட்ட திட்டு வாங்கனும்னு இருக்கு, அப்புரம் இது கவருமெண்டு பஸ்ஸூ இல்லை , தனியார் வண்டிதான் ஓனரு வந்தா பிரிச்சி மேஞ்சுருவாரு உன்னை, இந்தா டிக்கெட்ட பிடி, அப்படி போயி உட்காரு, ம்ஹீம் நாத்தம் தாங்கல , வாழைக்காய் வித்த காசுக்கு எல்லாத்துக்கும் குடிச்சிட்டியா?

ம்ஹ்ம், நான் சொந்தமா உலைச்சி வித்து குடிக்கிறேன், தனியார் வண்டில பிச்சைக்காரத்தனமா கை நீட்டி சம்பளம் வாங்கி ஈனப்பொலப்பு நடத்துற நீயெல்லாம் பேசப்படாது.

ஒழுங்கா வேட்டிய கட்டிட்டு உட்காரு, இல்லாட்டி இறக்கி விட்டிருவேன்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே வாழைக்காய் விவசாயி, கண்டக்டர் முருகேசனின் கன்னத்தில் பளார் என்று அறைகிறார், அச்சேற்ற முடியாத வார்த்தைகளை உபயோகித்தபடி. பதில் மரியாதையாய் ஏகப்பட்ட அடிகளை வாங்கிக்கொண்டு இறக்கிவிடப்படுகிறார் வாழைக்காய் விவசாயி.

நாளைக்கு இந்த பக்கமாதானடா வண்டி ஓட்டனும் , கோயிலூர்ல இருக்குடா உனக்கு, உன் சங்க அறுக்காம விட மாட்டண்டா ழேஏய்ய்ய்ய்ய்ய்..

முதல் நாள் அதுவுமே குடிகாரன் தொல்லை தாங்க முடியலையே என்னடா ரூட்டு இது என்று மனதிற்குள்ளேயே புலம்பிக்கொண்டான் முருகேசன். அடுத்த ஸ்டாப் வந்தது, கூட்டமாக நூற்றுக்கு மேலானவர்கள் பஸ்ஸில் ஏற காத்திருந்தனர்.

என்னா கூட்டமா ஊரே கிளம்பிட்டீங்க எங்க போறீங்க.

குடிக்காட்டுல ஒரு எலவு ,அதான் எல்லாரும் போறோம்.

யப்பா நாத்தம் தாங்கமுடியலேயே, ஏம்பா எழவு வீட்டுக்குமா குடிச்சிட்டு போவீங்க.

அட நீ வேற 90 வயசுல கெலவன் செத்துப்போனா துக்கப்படவா முடியும், ஒறமுறையான் வீடு போயிதான் ஆகனும், போனமா சீட்டு வெளாண்டமா , அங்க போய் மாமன்,மச்சாங்களோட சேந்து கெலவன எரிக்கிற வரைக்கும் குடிச்சமான்னு இருக்கனும்.

ம்ம் நடத்துங்க நடத்துங்க.

கண்டக்டரு தம்பி , நாங்க எலவுல அலுவுறதே இந்த கம்னாட்டி பயலுவ குடிச்சிட்டு பண்ணுற அலும்ப பாத்துதான்.- ஒரு அரை கிழவி

டேய் கண்டக்டர் பயலே என்னடா, என் பொண்டாட்டிய இடிக்கிற. - ஒரு முழு குடிகாரன்.

'ஹலோ நான் எங்க' அப்படின்னு சொல்லி முடிக்குமுன் குடிகாரர்கள் தரும அடி கொடுத்து முடித்திருந்தார்கள் கண்டக்டர் முருகேசனுக்கு.

குடிக்காடு பஸ் ஸ்டாப் வந்தது எல்லாரும் இறங்கிக்கொண்டிருந்தனர். இழவு வீட்டில் மைக் செட்டில் கிழவிகள் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தார்கள்

எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே எலந்த பட்டை சாராயம் காச்சுறது
எப்படியம்மா ஒத்து ஒழக்கிறது
நம்ம நாட்டிலே வேப்பம் பட்டை சாராயம் காச்சுறது

அடி வாங்கின வேதனையிலும் கண்டக்டர் முருகேசன் நினைத்துக்கொண்டான் குடிக்காடுன்னு ஊருக்கு காரணமாதான் பேரு வெச்சிருக்காங்க.

வேலை முடித்து வீட்டுக்கு வந்த முருகேசன் தன் அப்பாவிடம், நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.

அப்பரம் வேற என்ன பண்ண போற

திருவள்ளுவர் பைனான்ஸ்ல 5000 ரூபாய் டெய்லி வட்டிக்கு வாங்கிட்டு வந்திருக்கேன், பாய் கடைல சாராய சக்கரை கடன் தரேன்னு சொல்லிருக்கான், நான் போய் சாமான் வாங்கிட்டு வரேன் நாளைக்கு நல்ல நாள்,நம்ம காட்டு கொல்லைல ஊறல் போடப்போறேன், நீ போயி விறவு வெட்டி காய வை அடுத்த வாரம் எரியல் இருக்கு.

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

41 comments:

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் முதல் போனி

http://urupudaathathu.blogspot.com/ said...

நச் “சுன்னு இருக்கு முடிவு..

நசரேயன் said...

கதை அருமை

http://urupudaathathu.blogspot.com/ said...

குடிகாரன்கிட்ட அடி வாங்குனதுக்கு அவன் எடுத்த முடிவு ..
நல்லவே இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ said...

ஓட்டு போட்டாச்சு

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

அது சரி(18185106603874041862) said...

//
நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.
//

ஆஹா...தொழிலதிபருங்க இப்படி தான் உருவாகிறாங்களா?? :0))

அது சரி(18185106603874041862) said...

போட்டிக் கதைகளை விமர்சிக்க கூடாதுன்னு எல்லாரும் சேந்து "பொடா" போட்டுட்டதுனால விமர்சிக்க முடியலை...ஆனா சுருக்கமா சொல்லிக்கிறேன்...கதை நல்லாருக்கு...(இதையாவது சொல்லலாமா கூடாதா??)

Unknown said...

கதை சூப்பரு. குடிகாரங்க தொல்லை தாங்காம இன்னும் பல குடிகாரங்களை உருவாக்கி விடுற உன்னதமான தொழில் தொடங்கராரு

குடுகுடுப்பை said...

அது சரி said...

போட்டிக் கதைகளை விமர்சிக்க கூடாதுன்னு எல்லாரும் சேந்து "பொடா" போட்டுட்டதுனால விமர்சிக்க முடியலை...ஆனா சுருக்கமா சொல்லிக்கிறேன்...கதை நல்லாருக்கு...(இதையாவது சொல்லலாமா கூடாதா??)
//

அப்படியா என்ன மார்க்தான் போடக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டாங்க, உங்க கருத்தை நீங்க அள்ளித்தெளிங்க.

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அப்படியா என்ன மார்க்தான் போடக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டாங்க, உங்க கருத்தை நீங்க அள்ளித்தெளிங்க.

June 24, 2009 3:07 PM
//

அதுவும் அப்படியா?? நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்...

ஆனாலும் நானும் (கூட) போட்டில இருக்கறதுனால விமர்சிக்கறது சரியாப் படலை...#

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

ஜெயிச்சா பட்டை சரக்கும் நண்டு வறுவலும் உண்டுல்ல??

நட்புடன் ஜமால் said...

குடிகாட்ல கண்டக்டர் வேலை தான் பார்க்க இயலாது ...


அவிங்களுக்கு தோதான வேலை பார்க்கலாம் தானோ ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

த்னியாரிடம் வேலை செய்வதை சாடும்போதே நினைத்தேன்

நாயகன் சுயதொழில்தான் செய்வான் என்று..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
பி:கு: எழுத்துப்பிழைகள் பேச்சுத்தமிழுக்காக சேர்க்கப்பட்டது. //

அட நல்லாயிருக்கே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழீஷில் 6வது ஓட்டு, தமிழ்மணத்தில் எட்டாவது ஓட்டு என்னுது..,

VIKNESHWARAN ADAKKALAM said...

நகைச்சுவை வேகத்தோடு கதை நல்ல வேகமாக இருக்கிறது. கொஞ்சமாக நடகத் தன்மையும் ஒட்டியுள்ளது.

சாராயம் காய்ச்சு கௌரவமாக வாழலாம்னு சொல்லவைங்களா? :)) அதுவும் சுயதொழில் தானே... ஓகே..

குடுகுடுப்பை said...

VIKNESHWARAN said...

நகைச்சுவை வேகத்தோடு கதை நல்ல வேகமாக இருக்கிறது. கொஞ்சமாக நடகத் தன்மையும் ஒட்டியுள்ளது.

சாராயம் காய்ச்சு கௌரவமாக வாழலாம்னு சொல்லவைங்களா? :)) அதுவும் சுயதொழில் தானே... ஓகே..
//

இதில் வரும் எதுவும் , சரி தவறு என்று நான் நிர்ணயம் செய்யவில்லை.

நாடகத்தன்மை அனுபவமின்மையால் இருக்கலாம்.

மதிபாலா said...

சமூக அக்கறையுடனான கதை.

வாழ்த்துக்கள்..

எரியல் போன்ற வார்த்தைகள் எமக்கு பரிச்சயமில்லாதவைகளாக இருந்தாலும் போக்கில் படிப்பதால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஷண்முகப்ரியன் said...

கதை உண்மையிலேயே அருமை,குடுகுடுப்பை சார்.
வாழ்த்துகள்.

தமிழ் அமுதன் said...

கலக்கல்! ரசித்தேன்!!

வால்பையன் said...

//எழுத்துப்பிழைகள் பேச்சுத்தமிழுக்காக சேர்க்கப்பட்டது. //

அதுக்காக எங்க படிப்பு தமிழ் என்னாவுறது!
கதை ஒகே
உங்க பிழை லாஜிக் தான் சகிக்கல!

குடுகுடுப்பை said...

வால்பையன் said...

//எழுத்துப்பிழைகள் பேச்சுத்தமிழுக்காக சேர்க்கப்பட்டது. //

அதுக்காக எங்க படிப்பு தமிழ் என்னாவுறது!
கதை ஒகே
உங்க பிழை லாஜிக் தான் சகிக்கல!
//

நன்றி வால்

ஒருவர் வாழைக்காய் சொல்கிறார், இன்னொருவர் வாலைக்காய் என்கிறார், அதே போல் எலவு, இழவு அதனால்தான் அந்த பின்குறிப்பு. பின்குறிப்பு தேவையில்லையோ?

வால்பையன் said...

//ஒருவர் வாழைக்காய் சொல்கிறார், இன்னொருவர் வாலைக்காய் என்கிறார்,/

பேச்சுதமிழில்
வாழைக்காய்
வாழக்காய் ஆகும் வாலைக்காய் ஆகாது!
சென்னை ஸ்லாங்குனா ”வாயக்காய்”,
பேச்சு தமிழ் என்று எழுதும் போது மாற்றினால் சில சொற்களின் அர்த்தமே மாறிவிடும்.

கன்னி-கண்ணி

ஒருவன் கண்ணிவெடி வச்சிருக்கான், நண்பனிடம் வா டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு அழைக்கிறான், பேச்சு தமிழில் இப்படி அழைப்போமா!

”டே, கன்னி ஒன்னு இருக்கு வர்றியா இன்னைக்கு நைட்டு டெஸ்ட் பண்ணு பாக்கலாம்.

ஒகேவா!

குடுகுடுப்பை said...

கன்னி-கண்ணி

ஒருவன் கண்ணிவெடி வச்சிருக்கான், நண்பனிடம் வா டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு அழைக்கிறான், பேச்சு தமிழில் இப்படி அழைப்போமா!

”டே, கன்னி ஒன்னு இருக்கு வர்றியா இன்னைக்கு நைட்டு டெஸ்ட் பண்ணு பாக்கலாம்.//

இரண்டுல எத டெஸ்ட் பண்ணாலும் கம்பி உறுதிதான்:))

குடந்தை அன்புமணி said...

கோவணம் கட்டாத ஊரில கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்னு சொல்லுவாங்கங்கிறது சரியாத்தான் இருக்கு... வெற்றிபெற வாழ்த்துகள்!

குடந்தை அன்புமணி said...

//உருப்புடாதது_அணிமா said...
நான் தான் முதல் போனி//

பதிவுக்கா... இல்ல...(ஹி...ஹி...)

வேத்தியன் said...

நன்னாருக்கு...

S.A. நவாஸுதீன் said...

கதைல சரக்கு இருக்குங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள்

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்! //நான் போய் சாமான் வாங்கிட்டு வரேன் நாளைக்கு நல்ல நாள்,நம்ம காட்டு கொல்லைல ஊறல் போடப்போறேன், நீ போயி விறவு வெட்டி காய வை அடுத்த வாரம் எரியல் இருக்கு.//

அவ்வ்வ்வ்! இப்படிதான் அரசியல்வாதிங்க உருவாகறாங்களா!! :-)

Sanjai Gandhi said...

இந்த மேட்டர் நல்லா இருக்கே.. :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹா, இப்படி ஒரு பொழப்பா........

கதை நல்லா இருக்கு.

Mahesh said...

/அது சரி said...
//
நான் இனிமேல் இந்த வேலைக்கு போகல பெரிய ஈனப்பொழப்பா இருக்கு, குடிகாரப்பயகிட்டயெல்லாம் அடி வாங்க வேண்டியிருக்கு.
//

ஆஹா...தொழிலதிபருங்க இப்படி தான் உருவாகிறாங்களா?? :0))

//

ர்ரிப்பீட்டேய்ய்

ராஜ நடராஜன் said...

போட்டிக்கதைய விமர்சிக்க கூடாதாமே!

களப்பிரர் - jp said...

முருகேசன் திருவாதூரில் 1930 வாக்கில் பிறந்திருந்தால் தமிழக முதல்வராயிருப்பார் !!! கதை அருமை .

Anonymous said...

'comedy' ilaiyoda neengha yeluthina style super...Yerkanve sila potti kadhaigala padichu bayandhu pona yenaku romba aarudhala irundhadhu ungha kadhai...UM.Krish

T.V.ராதாகிருஷ்ணன் said...

எப்படி விமரிசிப்பதுன்னு தெரியலே..ஆனாலும் ..வாழ்த்துக்கள் ன்னு போட்டுடறேன்

குடுகுடுப்பை said...

கருத்துரைத்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

குடுகுடுப்பை

RAMYA said...

உங்கள் கதை நல்லா இருக்கு. தமாஷா இருக்கு.

போட்டியில் வெல்ல எனது வாழ்த்துக்கள் !!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு குடு!

நம்ம ஊரு சமாச்சாரமாச்சே!

நம்ம சொந்தங்கள் எல்லாம் குடிக்காட்டுளையும், அத்திவெட்டியிளையும் தானே இருக்கு.

வட்டார வழக்கில் எழுதியிருக்கிறீர்கள்!

இதையும் ரசித்தேன்!
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

குடுகுடுப்பை said...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு குடு!

நம்ம ஊரு சமாச்சாரமாச்சே!

நம்ம சொந்தங்கள் எல்லாம் குடிக்காட்டுளையும், அத்திவெட்டியிளையும் தானே இருக்கு.

வட்டார வழக்கில் எழுதியிருக்கிறீர்கள்!

இதையும் ரசித்தேன்!
சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது//

கடைசில கவுத்திட்டீங்களே

அஹோரி said...

தலைப்ப பார்த்ததும் 'புதுசா ஸ்பெக்ட்ரம் ல அடிச்ச' 60,000 கோடியபத்தியோ என்னமோ ன்னு நினைச்சேன். ம்ம் ம்ம்ம் ம்ம் .....