Sunday, June 21, 2009

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு

அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய வசிப்பது தெரிந்ததே,அவர்களுக்கான இந்திய வகை உணவு மற்றும் கலாச்சாரத்தேவை மூலம் ஒரு மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது, நீங்களும் அந்த வணிகத்தில் பங்கெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

முதலில் நல்ல ஏற்றுமதி முகவர் ஒருவரை கண்டுபிடிக்கவேண்டும். மற்றவை மிகச்சுலபமான ஒன்றுதான்.

மிகவும் அதிகம் தேவையுள்ள குழம்பு பொடிகள்,தேங்காய் எண்ணெய், ஊறுகாய், சட்னி, பிஸ்கட், சாக்லேட்,குழந்தைகளுக்கு தேவையான பாலில் கலந்து கொடுப்பதற்கான சாக்லேட் கலந்த ஊக்க பானங்கள், டீ,காபி, நூடுள்ஸ் மற்றும் பல.

உங்களுடைய முதல் கவனம் expiry date ல் தான் இருக்கவேண்டும். மேலே சொல்லப்பட்ட பொருடகள் expiry date முடியும் தருவாயிலோ , அல்லது முடிந்து ஒரு ஐந்து வருடத்து முன்னரோ, டீத்தூள் போன்றவை expiry date முடிந்து பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொருட்களில் கவனம் தேவை அவைகள் expiry date முடியும் தருவாயிலோ அல்லது முடிந்து ஒரு வருடத்துக்குள் இருக்கவேண்டும், ஏனென்றால் பெற்றோர்கள் expiry date பார்ப்பார்கள் வேற வழி இல்லைன்னா ஒரு வருடம் வரை சமாதானம் செய்துகொள்வார்கள். இவைகளை குப்பையில் கொட்டப்போகும் முன்னர் மொத்தமாக வாங்கிவிடவேண்டும் , இந்தக்குப்பைகளை நீங்கள் வாங்கிக்கொள்ள உங்களுக்கு அந்த மண்டிக்காரரே காசு கொடுக்கும் வாய்ப்பு நிறைய, அதன் மூலமும் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

தவறியும் சாதாரண பிராண்டுகளை வாங்ககூடாது, expiry date முடிஞ்சு ஒரு வருடம் ஆனால் கூட பராவாயில்லை Name Brand பொருட்கள்தான் வாங்க வேண்டும். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் Name Brand பொருட்கள்தான் வாங்குவார்கள்.

வாங்கிய குப்பைகளை அந்த ஏஜெண்டிடம் கொடுத்து காசக்கிவிட வேண்டியதுதான் இரட்டை வருமானம், செலவு லாரி வாடகை மட்டும்தான் அதுவும் கூட மண்டிக்காரரிடம் பேரம் பேசி வாங்கிக்கொள்ளலாம்.

இன்னோரு வாய்ப்பும் உள்ளது வரவர நம்ம ஆட்கள் கொலஸ்டிரால்,saturated fat எல்லாம் பாத்துதான் சாமான் வாங்குராங்க, ஆனால் தேங்காய் சட்னியும் நெய்யும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதுக்கு என்ன பண்ணனுன்னா frozen தேங்காய்ப்பால், தேங்காய் துருவலில்
கொலஸ்டிரால் 0%,
saturated fat / trans fat 0% அப்படின்னு போட்டிரனும்.முடிஞ்சா முழுத்தேங்காயிலேயும் கொலஸ்டிரால் 0% ,saturated fat / trans fat 0% அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டுங்க.

நெய் பாட்டிலில் fat free நெய் அப்படின்னு அச்சடிச்சி ஒட்டிரனும், கொலஸ்டிரால் 0%,
saturated fat trans fat 0% அப்படின்னும் போட்டிரனும்.
வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.

டிஸ்கி: இவைகளை உண்மையாகவே செய்து FDAவில் மாட்டிக்கொண்டால் குடுகுடுப்பை பொறுப்பல்ல.
டிஸ்கி: expiry date பார்த்து வாங்குங்கள் என்று எச்சரிப்பதற்கான எண்ணத்தில் உருவான பதிவு.

ஏற்றுமதி செய்றீங்களே இல்லையோ பிடிச்சிருந்தா கருத்து சொல்லுங்க, ஓட்டு போடுங்க.

தந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து.

34 comments:

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்...

நட்புடன் ஜமால் said...

நல்லாயிருங்கப்பூ

குடுகுடுப்பை said...

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்.

நன்றி

சந்தனமுல்லை said...

//முடிஞ்சா முழுத்தேங்காயிலேயும் கொலஸ்டிரால் 0% ,saturated fat / trans fat 0% அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டுங்க.
//

அவ்வ்வ்வ்வ்வ்!!

நல்லதொரு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கும் குஜமுக வாழ்க! :-)

Anonymous said...

தல,

அடுத்தவாட்டி உங்க வீட்டுக்குப் பக்கத்திலிருக்கிற கடைக்குப் போகும்போது ஹார்லிக்ஸ் பாட்டில எடுத்துப் பாருங்க.
போஷாக்காக வளரும் குழந்தைகளுக்கான 27 ஊட்ட சத்து லிஸ்ட் மேல ஸ்டிக்கர் ஒட்டி இருப்பாங்க.

இந்தியாவில இருக்கறவன் எல்லாம் மஞ்ச மாக்கணுண்னு தெளிவா விளக்கியிருப்பாங்க.

Anonymous said...

good

மதிபாலா said...

hihihi

இளைய கவி said...

நல்ல ஐடியா மக்கா !!

தமிழ் அமுதன் said...

நான்கூட நிஜம்னு நெனைச்சு நம்பிட்டேன்!!

பழமைபேசி said...

இஃகி நல்லா இருக்கு!

மருதநாயகம் said...

//டிஸ்கி: expiry date பார்த்து வாங்குங்கள் என்று எச்சரிப்பதற்கான எண்ணத்தில் உருவான பதிவு//

எங்களுக்கு இந்த அனுபவம் உண்டு

நசரேயன் said...

பட்டய கிளப்புது

குடுகுடுப்பை said...

ஜீவன் said...

நான்கூட நிஜம்னு நெனைச்சு நம்பிட்டேன்!!

//

இது வெறும் மொக்கை மட்டுமல்ல

குடுகுடுப்பை said...

நன்றி
ஜமால்,
சந்தனமுல்லை,
அனானி,
மதிபாலா,
இளைய கவி

ராஜ நடராஜன் said...

//வரவர நம்ம ஆட்கள் கொலஸ்டிரால்,saturated fat எல்லாம் பாத்துதான் சாமான் வாங்குராங்க, ஆனால் தேங்காய் சட்னியும் நெய்யும் சாப்பிடாமல் இருக்க முடியாது. அதுக்கு என்ன பண்ணனுன்னா frozen தேங்காய்ப்பால், தேங்காய் துருவலில்
கொலஸ்டிரால் 0%,
saturated fat / trans fat 0% அப்படின்னு போட்டிரனும்.முடிஞ்சா முழுத்தேங்காயிலேயும் கொலஸ்டிரால் 0% ,saturated fat / trans fat 0% அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டுங்க.//

இதென்ன புதுக்கதையா இருக்குதேன்னு பார்த்துகிட்டே வந்தா FDA வரி வந்து பதிவைக் காப்பாத்திடுச்சு:)

சாக்கிரதையா இருக்கனும்ல

குடுகுடுப்பை said...

Blogger மருதநாயகம் said...

//டிஸ்கி: expiry date பார்த்து வாங்குங்கள் என்று எச்சரிப்பதற்கான எண்ணத்தில் உருவான பதிவு//

எங்களுக்கு இந்த அனுபவம் உண்டு//

விக்கிறதலெயா?

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

பட்டய கிளப்புது//

பட்டை 15 வருசம் பழசு, கெளப்பாம?

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

இஃகி நல்லா இருக்கு!
//

நன்றிங்க பழமை

RAMYA said...

இது நிஜமாவா??

RAMYA said...

//
அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய வசிப்பது தெரிந்ததே,அவர்களுக்கான இந்திய வகை உணவு மற்றும் கலாச்சாரத்தேவை மூலம் ஒரு மிகப்பெரிய வணிக வாய்ப்பு உள்ளது, நீங்களும் அந்த வணிகத்தில் பங்கெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.
//

எவ்வளவு நல்ல மனசோட சொல்லி இருக்கீங்க,

இதுலே உள்குத்து ஒன்னும் இல்லையே?

முயற்சி பண்ணலாமா?

RAMYA said...

//முடிஞ்சா முழுத்தேங்காயிலேயும் கொலஸ்டிரால் 0% ,saturated fat / trans fat 0% அப்படின்னு ஸ்டிக்கர் ஒட்டுங்க.
//

நம்பளே போய் உள்ளே உக்காந்துக்க வேண்டியதுதான் :)

வேறே எதுக்கு கம்பி எண்ணத்தான் :)

RAMYA said...

//
உங்களுடைய முதல் கவனம் expiry date ல் தான் இருக்கவேண்டும்.
//

YES BOSS :)

RAMYA said...

//
நெய் பாட்டிலில் fat free நெய் அப்படின்னு அச்சடிச்சி ஒட்டிரனும், கொலஸ்டிரால் 0%,
saturated fat trans fat 0% அப்படின்னும் போட்டிரனும்.
வியாபாரம் பிச்சிக்கிட்டு போகும்.
//

கொலஸ்டிரால் கொஞ்சம் அதிகம்னு சொல்ல மாட்டாங்க :)

RAMYA said...

//
டிஸ்கி: இவைகளை உண்மையாகவே செய்து FDAவில் மாட்டிக்கொண்டால் குடுகுடுப்பை பொறுப்பல்ல.
டிஸ்கி: expiry date பார்த்து வாங்குங்கள் என்று எச்சரிப்பதற்கான எண்ணத்தில் உருவான பதிவு.

//

தப்பிச்சீங்க இல்லேன்னா ஆட்டோ வந்திருக்கும்..........:-)

ஜானி வாக்கர் said...

யப்பா, பொளைக்க வழி சொல்லுநா குடும்பத்தோட கும்மி அடிக்க வழி சொல்லுற. அட போப்பா ! இது எல்லாம் எப்பிடி யோசனை பண்ணுற? பாதி தூக்கத்துல இருக்கைலய??

அது சரி(18185106603874041862) said...

தலைவரே,

இந்த ஐடியாவெல்லாம் ஃபாலோ பண்ணி நீங்க சீக்கிரம் தொழிலதிபராவோ இல்ல வியாபார காந்தமாவோ ஆகுங்க... மீதிய எஃப்டிஏ பாத்துக்கும்....நானும் எவ்வளவு நாள் தான் குஜமுக தொண்டனாவே இருக்குறது? :0))

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்.

:-)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

தலைவரே,

இந்த ஐடியாவெல்லாம் ஃபாலோ பண்ணி நீங்க சீக்கிரம் தொழிலதிபராவோ இல்ல வியாபார காந்தமாவோ ஆகுங்க... மீதிய எஃப்டிஏ பாத்துக்கும்....நானும் எவ்வளவு நாள் தான் குஜமுக தொண்டனாவே இருக்குறது? :0))//

என்னது குஜமுக தொண்டரா? எனக்கே தெரியாம என்கட்சில ஒரு உறுப்பினரா?

குடுகுடுப்பை said...

ஜானி வாக்கர் said...

யப்பா, பொளைக்க வழி சொல்லுநா குடும்பத்தோட கும்மி அடிக்க வழி சொல்லுற. அட போப்பா ! இது எல்லாம் எப்பிடி யோசனை பண்ணுற? பாதி தூக்கத்துல இருக்கைலய??

//

என்னால முடிஞ்சது அதுதான்

குடுகுடுப்பை said...

நன்றி டிவீயார்

அது சரி(18185106603874041862) said...

//
வருங்கால முதல்வர் said...

என்னது குஜமுக தொண்டரா? எனக்கே தெரியாம என்கட்சில ஒரு உறுப்பினரா?

June 22, 2009 3:16 PM
//

அப்ப எனக்கு குடுத்த உறுப்பினர் அட்டை போலியா?? ஆஹா...தொழிலை ஏற்கனவே ஆரம்பிச்சிட்டாங்களா??

:0))

S.A. நவாஸுதீன் said...

ஏதோ "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது"ன்னு நாடு ராத்திரியில சத்தம் கேட்டுச்சேன்னு விடிஞ்சு ஏற்றுமதி பிசினஸ் பண்ணலாம்னு பார்த்தா ஆரம்பிக்கிறது முன்னாடியே எக்ஸ்பயர் ஆயிடுச்சே!

குடுகுடுப்பை said...

S.A. நவாஸுதீன் said...

ஏதோ "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது"ன்னு நாடு ராத்திரியில சத்தம் கேட்டுச்சேன்னு விடிஞ்சு ஏற்றுமதி பிசினஸ் பண்ணலாம்னு பார்த்தா ஆரம்பிக்கிறது முன்னாடியே எக்ஸ்பயர் ஆயிடுச்சே!//

அது யானை.