நான் படித்த கல்லூரி ஒரு வித்தியாசமான கல்லூரி, கல்லூரிக்குள்ளேயே நிறைய பனைமரங்கள் உண்டு, அதில் கள் இறக்கமாட்டார்கள் ஆனால் பதனீர் இறக்குவார்கள். பதனீர் காலையில் தான் இறக்குவார்கள், நானெல்லாம் காலை நேரம் என்ற ஒன்று இருப்பதே அறியாதவன்.சிலர் மாணவர்கள் காலையில் எழுந்து 75 பைசா கொடுத்துவிட்டு ஒரு டம்ளர் பதனீர் குடிப்பார்கள்.
எனக்கும் பதனீர் பிடிக்கும் ஆனால் குடிப்பதற்கான வாய்ப்பு ஒரு சில நாட்களே கிடைத்திருக்கிறது, ஆனால் கல்லூரியை சுற்றி அங்கீகரிக்கப்படாத கள்ளுக்கடைகள் நிறைய,கல்லூரி சென்று படித்த கலைப்பு நீங்க மாலை நேரங்களில் மதி மயங்க நாங்கள் தேர்த்தெடுக்கும் மதுபானம் கள், வெறும் பத்து ரூபாய்க்கு இரண்டு மட்டை கொடுப்பார்கள். இருக்கிற வசதிக்கேத்த மாதிரி வாழ்ந்துக்கனும் கிற விசயத்தை இந்தக்காலேஜ்லதான் நாங்க படிச்சோம். பொருளாதாரத்தில opportunity cost அப்படின்னு ஒன்னுசொல்வாங்க, மதி மயங்க தேவை போதை அதற்கு பாரின் சரக்கு அடிக்க தேவை பஸ்ஸுக்கு காசு , மேலும் குறைந்த பட்சம் ஒரு குவாட்டர் 50 ரூபாய் , குவார்ட்டர் எடுத்து வாந்தி எடுத்தால் லாட்ஜ்ல ரூம் போட்டு தங்க 100 ரூபாய் வேணும் , ஆனால் அதே போதையை 10 ரூபாய்க்கு பனைமரக் கள் தரும் இதுக்கு பேர் தான் opportunity cost. இஞ்சினியரிங் காலேஜ் படிச்சிட்டு கள்ளு குடிக்கிறோம்னு சொன்னா அது இழுக்கு இல்லையா அதுனாலா நாங்களும் ஸ்டைலா stoning அப்படின்னு இங்கிலீஸ் பேரு வெச்சிட்டோம்.
காலேஜ் சுத்தி பிரபலமா உள்ள ஸ்டோன் கடைகள்னா, முள்ளுவாடி சுருட்டண்ணன் கடை, மற்றும் பாட்டி கடை, சின்ன மாயாகுளம் பக்கம் போனா மரத்தடி கடை, இது ஹாஸ்டல் லேந்து 100 மீட்டர்தான். புது மாயாகுளம் இடுகாட்டுக்கடை மற்றும் தர்கா கடை. மரத்தடி கடைல பேண்ட் போட்டுட்டு போனா கள்ளு குடுக்கமாட்டாங்க , போலிஸ் கெடுபிடி ஜாஸ்தி அப்படின்னு விரட்டி விட்டிருவாங்க அதுனால லுங்கி கட்டிட்டுதான் போகனும், அங்கே விக்கிற பழைய மீன் குழம்ப சாப்பிட்டு கீழே கிடக்கிற எச்சித்தொன்னைல இரண்டு மட்டைய அடிச்சிட்டு ஹாஸ்டல் வந்து மட்டை ஆயிர வேண்டியதுதான்.பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.
சுருட்டண்ணன் கடைக்கு ஹாஸ்டல் மெஸ்லேந்து கூஜாவில சுண்டல் எடுத்துட்டு போய் நல்லா நேரம் எடுத்து குடிக்கலாம். அவரு கிட்ட என் கூட படிச்சவங்க சிலர் தின வாடிக்கையாளர்கள், சுருட்டண்ணன் கிட்டேயே ஓசில பீடி வாங்கி குடிக்கிற அளவுக்கு சிநேகம்.
இவரு கடையில ஒருத்தர் சைடிஷ் ஆ கறி வித்துட்டு இருந்தார், வாங்கி சாப்பிட்டு பாத்தேன் ஜவ்வு மாதிரி இருந்தது , இது என்னா கறிங்க கேட்டதுக்கு ஆட்டின் மடிப்பகுதி கறி இதுக்கு பேரு சவாஸ்கறி அப்படின்னார். அடப்பாவிகளே சாப்பிடவே முடியாத ஜவ்வுக்கூட வியாபாரம் பண்றீங்களேன்னு நினைச்சிட்டிருக்கும்போதே அங்கே வந்த ஒல்லியன் சவாஸ்கறியை சாப்பிட்டு முடித்திருந்தான்.
இந்தக்கள்ளில் கூட, விஸ்கி,பிராந்தி , ரம் மாதிரி நிறைய வெரைட்டி இருக்குங்க, சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கள் மட்டும் குடிப்பார்கள், அது கூடுதலாக கசக்கும் அல்லது இனிக்கும் தினமும் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் குடிமக்கள் சொன்னது.
இன்னோரு வகை எல்லா மரத்திலேந்து இறக்கி மிக்ஸ் பண்ணி உடனே குடிக்கிறது, சிலர் புளித்த கள்தான் குடிப்பார்கள் கள் இறக்கி இரண்டு நாள் கழித்தோ ஒரு வாரம் கழித்தோ இது போதை அதிகம் தருமாம்.
கல்லூரி சாலைன்னு சொல்லிட்டு ஒரு கள்ளுசாலையைப்பத்தி எழுதிட்டிருகேன், கல்லூரில என்ன கத்துக்கிட்டோம் கிற ரொம்ப முக்கியமானது இல்லையா? அது என்னான்னா ஒரு புது தொழில்நுட்பம்
பாட்டி கடைல தெரிஞ்சுகிட்டது, இந்த பதநீர் இறக்குறாங்கள்ல அது சட்டப்படி குற்றமல்ல, பதநீர் காய்ச்சி கருப்பட்டி செய்யலாம் ஆனா அதுக்கு வேலை அதிகம் டிமாண்டும் கம்மி, அதுனால பதிநீர் இறக்கி(கள் பானையில் சுண்ணாம்பு தடவினால் மரத்தில் இருந்து கிடைப்பது பதநீர், போதை இருக்காது சுவையானது) அதுல மீண்டும் கொஞ்சம் கள் ஊற்றி உரை கட்டி இரண்டு நாள் புளிக்க வெச்சா மீண்டும் கள் ஆயிடுமாம். (பாலை தயிராக்குவது போன்று) இதுக்கு பேருதான் லீகலா பதிநீர் இறக்கி இல்லீகளா கள்ளாக்குறது.
இந்த மாதிரி புதிய தொழில் நுட்பங்களை நாங்க அறிந்துகொண்டோம்.
கதையின் நீதி என்னன்னா கள் குடிக்கிறவன் குடிச்சிட்டுதான் இருப்பான், ஏன்னா அவனோட பொருளாதார நிலைமை அப்படி, கிடைக்காட்டி வேலி முட்டியாவது வாங்கி குடிச்சிட்டு வேலிலதான் கிடப்பான். அதிகம் உடலுக்கு கேடு தராத கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.? இயறகையாய் கிடைக்கும் ஒரு பாணம் தானே அது. இலங்கையில் இருந்து பாட்டிலில் அடைத்து வெளிநாட்டில் விற்கிறார்கள், மலையாளிகள் அதை வாங்கி ஆப்பம் சுட்டு சாப்பிடுகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பனைமரங்கள் நிறைய கள் தருமே அதை நியாயமாக காசாக்களாமே ?
39 comments:
//
இந்த மாதிரி புதிய தொழில் நுட்பங்களை நாங்க அறிந்துகொண்டோம்.//
அவ்வ்வ்வ்வ்! என்ன ஒரு தொழில்நுட்பம்!! :-)
முதல்வருக்கு தந்தி அடிச்சி சொல்லலாமா ?
ஒட்டு போட்டாச்சு.
படிச்சிட்டு வாரேன் !!
ஆமாப்பா கள்ளு கடைக்கு அனுமதி கொடுக்கங்கப்பா சீக்கிரம்.
//பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.//
வீட்டுல இருந்து smoking ஃபீஸ் , scholership ஃபீஸ் வாங்குனா மாணவர்களுக்கு நடுவுல பெற்றோர்கள் காச சேமிக்க கள்ளு குடிச்சு ... அண்ணா உங்கள நெனச்ச பெருமையா இருக்குங் ணா
//
கல்லூரி சாலை: இதோ எந்தன் கள்ளுக்கடை
//
என்ன நடக்குது இங்கே :)
அருமையான 'கல்'லூரி பதிவு குடுகுடுப்பை.
ரசித்தேன்.
நீங்கள் சொன்னது ...நூற்றுக்கு நூறு உண்மை... குறைந்த பட்சம், கீழ் மட்ட தொழிலாளிகள் / விவசாயிகள் பயன் பெறுவார்கள்...
//
நானெல்லாம் காலை நேரம் என்ற ஒன்று இருப்பதே அறியாதவன்
//
ஐயோ பாவம் அவ்வளவு தூக்கமோ?
நீல மலை said...
//பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.//
வீட்டுல இருந்து smoking ஃபீஸ் , scholership ஃபீஸ் வாங்குனா மாணவர்களுக்கு நடுவுல பெற்றோர்கள் காச சேமிக்க கள்ளு குடிச்சு ... அண்ணா உங்கள நெனச்ச பெருமையா இருக்குங் ணா
///
இதப்படிங்கண்ணா
குடுகுடுப்பை: கல்லூரி சாலை : ஸ்காலர்ஷிப் பணமும் பாரிஸ் வீட்டு விருந்தும்.
//
இஞ்சினியரிங் காலேஜ் படிச்சிட்டு கள்ளு குடிக்கிறோம்னு சொன்னா அது இழுக்கு இல்லையா அதுனாலா நாங்களும் ஸ்டைலா stoning அப்படின்னு இங்கிலீஸ் பேரு வெச்சிட்டோம்
//
நல்ல கருத்துச் செறிந்த கருத்து :))
//
காலேஜ் சுத்தி பிரபலமா உள்ள ஸ்டோன் கடைகள்னா, முள்ளுவாடி சுருட்டண்ணன் கடை, மற்றும் பாட்டி கடை, சின்ன மாயாகுளம் பக்கம் போனா மரத்தடி கடை, இது ஹாஸ்டல் லேந்து 100 மீட்டர்தான். புது மாயாகுளம் இடுகாட்டுக்கடை மற்றும் தர்கா கடை. மரத்தடி கடைல பேண்ட் போட்டுட்டு போனா கள்ளு குடுக்கமாட்டாங்க , போலிஸ் கெடுபிடி ஜாஸ்தி அப்படின்னு விரட்டி விட்டிருவாங்க அதுனால லுங்கி கட்டிட்டுதான் போகனும், அங்கே விக்கிற பழைய மீன் குழம்ப சாப்பிட்டு கீழே கிடக்கிற எச்சித்தொன்னைல இரண்டு மட்டைய அடிச்சிட்டு ஹாஸ்டல் வந்து மட்டை ஆயிர வேண்டியதுதான்.பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.
//
அனுபவம் + சகிப்புத்தன்மை இதுதான் குடுகுடுப்பையாரோட பிளஸ் :)
//
சுருட்டண்ணன் கடைக்கு ஹாஸ்டல் மெஸ்லேந்து கூஜாவில சுண்டல் எடுத்துட்டு போய் நல்லா நேரம் எடுத்து குடிக்கலாம். அவரு கிட்ட என் கூட படிச்சவங்க சிலர் தின வாடிக்கையாளர்கள், சுருட்டண்ணன் கிட்டேயே ஓசில பீடி வாங்கி குடிக்கிற அளவுக்கு சிநேகம்.
//
பாவம் சுருட்டண்ணன் நல்லா எமாந்தவரு போல :))
//
இவரு கடையில ஒருத்தர் சைடிஷ் ஆ கறி வித்துட்டு இருந்தார், வாங்கி சாப்பிட்டு பாத்தேன் ஜவ்வு மாதிரி இருந்தது , இது என்னா கறிங்க கேட்டதுக்கு ஆட்டின் மடிப்பகுதி கறி இதுக்கு பேரு சவாஸ்கறி அப்படின்னார். அடப்பாவிகளே சாப்பிடவே முடியாத ஜவ்வுக்கூட வியாபாரம் பண்றீங்களேன்னு நினைச்சிட்டிருக்கும்போதே அங்கே வந்த ஒல்லியன் சவாஸ்கறியை சாப்பிட்டு முடித்திருந்தான்
//
இதைத்தான் சொல்லுவாங்க "ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்ணா இருன்னு" அவரு வெவரம் தெரிஞ்சவரு, முடிச்சுட்டாரு
ஆமாப்பா கள்ளு கடைக்கு அனுமதி கொடுக்கங்கப்பா சீக்கிரம்
//
இந்தக்கள்ளில் கூட, விஸ்கி,பிராந்தி , ரம் மாதிரி நிறைய வெரைட்டி இருக்குங்க, சிலர் ஒரு குறிப்பிட்ட மரத்தின் கள் மட்டும் குடிப்பார்கள், அது கூடுதலாக கசக்கும் அல்லது இனிக்கும் தினமும் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் குடிமக்கள் சொன்னது.
//
யப்பா அனுபவத் திலகங்களே !
உண்மைதான் எல்லாரும் அப்படித்தான் பேசிகிட்டாங்க.
உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு :)
//
வருங்கால முதல்வர் said...
ரம்யா மேடம் பிரியாணி பதிவு ஒன்னு ஒருக்கு படிச்சிருங்க
//
இதே முடிச்சுட்டு அதுதான் படிப்பேன் முதல்வரே :)
அது ஒரு கனாக் காலம் said...
நீங்கள் சொன்னது ...நூற்றுக்கு நூறு உண்மை... குறைந்த பட்சம், கீழ் மட்ட தொழிலாளிகள் / விவசாயிகள் பயன் பெறுவார்கள்...
//
ஆமாங்க
//
இன்னோரு வகை எல்லா மரத்திலேந்து இறக்கி மிக்ஸ் பண்ணி உடனே குடிக்கிறது, சிலர் புளித்த கள்தான் குடிப்பார்கள் கள் இறக்கி இரண்டு நாள் கழித்தோ ஒரு வாரம் கழித்தோ இது போதை அதிகம் தருமாம்.
//
அலசி ஆராயிஞ்சிருக்காங்க. அறிவுக் கலங்சியம்தான் போங்க :)
RAMYA said...
//
வருங்கால முதல்வர் said...
ரம்யா மேடம் பிரியாணி பதிவு ஒன்னு ஒருக்கு படிச்சிருங்க
//
இதே முடிச்சுட்டு அதுதான் படிப்பேன் முதல்வரே :)
//
ஆமாம் கள்ளு குடிச்சிட்டு பிரியாணி சாப்டா நல்லாதான் இருக்கும்
//
கல்லூரி சாலைன்னு சொல்லிட்டு ஒரு கள்ளுசாலையைப்பத்தி எழுதிட்டிருகேன், கல்லூரில என்ன கத்துக்கிட்டோம் கிற ரொம்ப முக்கியமானது இல்லையா? அது என்னான்னா ஒரு புது தொழில்நுட்பம்
//
தொழில் நுட்பம் அதான் இவ்வளவு நேரம் படிச்சோமே இன்னும் பாக்கி இருக்கா :-) அது சரி!
என்னமோ நடத்துங்க நடத்துங்க :)
//
வருங்கால முதல்வர் said...
RAMYA said...
//
வருங்கால முதல்வர் said...
ரம்யா மேடம் பிரியாணி பதிவு ஒன்னு ஒருக்கு படிச்சிருங்க
//
இதே முடிச்சுட்டு அதுதான் படிப்பேன் முதல்வரே :)
//
ஆமாம் கள்ளு குடிச்சிட்டு பிரியாணி சாப்டா நல்லாதான் இருக்கும்
//
ஹையோ ஹையோ இதைபத்தி திருவாளர்.நசரேயன் கிட்டே கேளுங்க
அருமையா விளக்குவாரு :)
//
கதையின் நீதி என்னன்னா கள் குடிக்கிறவன் குடிச்சிட்டுதான் இருப்பான், ஏன்னா அவனோட பொருளாதார நிலைமை அப்படி, கிடைக்காட்டி வேலி முட்டியாவது வாங்கி குடிச்சிட்டு வேலிலதான் கிடப்பான். அதிகம் உடலுக்கு கேடு தராத கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.? இயறகையாய் கிடைக்கும் ஒரு பாணம் தானே அது. இலங்கையில் இருந்து பாட்டிலில் அடைத்து வெளிநாட்டில் விற்கிறார்கள், மலையாளிகள் அதை வாங்கி ஆப்பம் சுட்டு சாப்பிடுகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள பனைமரங்கள் நிறைய கள் தருமே அதை நியாயமாக காசாக்களாமே ?
//
சமுதாயச் சிந்தனையோடு, தமிழ்நாட்டோட பொருளாதார மேம்பாட்டைப் பத்தி கடைசியா கொளுத்திப் போட்டு இருக்கீங்க. யாராவது முக்கியமானவங்க படிச்சு ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்தால் நலமே. நான் சொல்றது சரிதானே?
சூரியன் said...
ஆமாப்பா கள்ளு கடைக்கு அனுமதி கொடுக்கங்கப்பா சீக்கிரம்
சூரியனே சொல்லியாச்சு அப்புரம் என்ன
வர வர உங்க பதிவுல நேட்டிவிட்டி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு
மருதநாயகம் said...
வர வர உங்க பதிவுல நேட்டிவிட்டி ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு
//
நெகட்டிவிட்டி ஜாஸ்தி ஆகலைல்ல
பனைமரமே இல்லாம, பதநீர் உருவாக்குற தொழில்நுட்பம் வந்து ரொம்ப நாள் ஆகுது. இப்ப இது தான் பேமஸ். காரணம், பதநீர் இறக்க மரத்துல ஏறுற பனையேரிய "கள்ளு" எறக்க மரம் ஏறுனதா சொல்லி, நம்ம காவல்த்துறை கைது பண்ணுனதுனால, இப்ப மரம் ஏறவே ஆள் இல்லாம, எங்க மரம் எல்லாம் சும்மா கிடக்கு. அமெரிக்கா காரனோ அல்லது யாரோ "காப்புரிமை" வாங்குனதுக்கு அப்புறம் தான் நம்ம அலறுவோம்!
தமிழ்நாட்டில் உள்ள பனைமரங்கள் நிறைய கள் தருமே அதை நியாயமாக காசாக்களாமே ? //
பனைமரங்கள் வைத்திருக்கும் விவசாயிகள், பாட்டில் தொழிலதிபரகள் கொடுக்கும் தொகைக்கு மேலே கொடுப்பாரகளா?
கொள்கைகளைத் தீர்மானிப்பதெல்லாம் காசுதானே சார்.
நான் படித்த கல்லூரி ஒரு வித்தியாசமான கல்லூரி\\
கல்லூரியின் பெயரை
தாங்கள் சொல்றீங்களா
இல்லாங்காட்டி
நான் சொல்லி போடவா!
அப்புறம் கோல்டன் மிடாஸ்க்கு யாரு பதில் சொல்லுறது?
//நான் படித்த கல்லூரி ஒரு வித்தியாசமான கல்லூரி, கல்லூரிக்குள்ளேயே நிறைய பனைமரங்கள் உண்டு,//
அப்ப உங்கள் கல்லூரியை கள்ளூரின்னு சொல்லலாமா...?
இதுக்கு பேருதான் லீகலா பதிநீர் இறக்கி இல்லீகளா கள்ளாக்குறது.
இந்த மாதிரி புதிய தொழில் நுட்பங்களை நாங்க அறிந்துகொண்டோம்.//
அனுபவம் அனுபவம்....
என்னா ஒரு அனுபவம்...
:-)))
அந்த கடைசி பந்தியைத் தான் நான் நிறைய காலமா சொல்லனும்ன்னு நெனைச்சுட்டு இருந்தேன்..
நீங்களே சொல்லீட்டீங்க..
நன்றிங்ண்ணா...
வாழ்க ஜனநாயகம்..
வாழ்க கள்ளுக்கடை...
ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.?
//
கள்ளு கடை திறக்க அனுமதி கொடுத்தா டாஸ்மக்குல வியாபாரம் டல்லடிக்கும் னு கணக்கு போடுகின்றார்கள் என்று நான் நினைக்கிறேன்.
//பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.//
:)-
நல்ல பாம்ல இருக்குரமாதறி தெரியுது... நடத்துங்கோ நடத்துங்கோ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
//
அதிகம் உடலுக்கு கேடு தராத கள் ஏன் தடை செய்யப்பட்டுள்ளது?ஏன் கள்ளுக்கடைய திறக்கக்கூடாது அதில் என்ன தவறு.?
//
இதற்கான விடை ரொம்ப ஈஸி...கள்ளுக்கடையால் அரசியல்வியாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரிய லாபமில்லை...அவ்வளவு தான்..
//பெற்றோர்கள் காச சேமிக்க இந்த மாதிரி சிரமங்களையெல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டோம்.//
அது சரி... :)
இது கிட்டத்தட்ட என் அனுபவம் மாதிரிதான் இருக்கு. என்ன, கல்லூரி வேறு!!
நானும் கள்ளுக்கடை மீண்டும் திறப்பதை ஆதரிக்கிறேன்.
Post a Comment