கடந்த ஒரு மாத காலமாக நேரமின்மை காரணமாக பதிவெழுதாமல் இருந்த போதும் கூகிள் மூலமாக பலர் என்னுடைய பதிவைத் தேடி படித்தபடி இருந்தனர். நான் கூட நானும் பிரபலம் ஆயிட்டேன்னு நினைச்சேன் ஆனா பாருங்க எதைத்தேடி வந்திருக்காங்கன்னு.
முக்கியமாக டீச்சர், டியூசன் டீச்சர் என்று தேடி என்னுடைய குடுகுடுப்பை: டியூசன் டீச்சர் விமர்சனம் படித்து நொந்து போகிறார்கள்.
இன்னொரு வகையினர் கவிதை ஆர்வம் உள்ளவர்கள் புதுக்கவிதை என்று தேடி இந்தக்கவிதையை படித்து கவிதைக்கு ஒரு புது விளக்கம் இருப்பதை அறிந்து பரவசப்படுகிறார்கள்.
இது தான் அந்தப்புதுக்கவிதை
-----------------------------------
(புது) கவிதை
பேருந்து
கணினி
தொலைபேசி
அலைபேசி
புது பெயர்கள்
மட்டும் தான்
கண்டு பிடிப்போமா?
இல்லை இப்படி
கவிதையும்
எழுதுவோமா?
-------------------------------------------
என்னுடைய முந்திய பிரியாணிப்பதிவுக்கும் இனி நிறைய பேர் வரலாம் இன்பம் பெறலாம்.
---------------------------------------
நான் என்னோட எட்டு வருடமா உபயோகப்படுத்துற செல்போன் கம்பெனிய மாத்தலாம்கிற நோக்கத்தில் , இரண்டு வாரத்துக்கு முன்னாடி இரண்டு உலகத்தரம் வாய்ந்த ஓசி செல்போன் ஆர்டர் பண்ணி இருந்தேன். அதிலே ஒன்னு வீடு வந்து சேர்ந்தது, இன்னொன்னு வரலை. சரின்னு இன்னைக்கு இரண்டாவது முறையா கஷ்டமர் சர்வீஸுக்கு பேசினேன் 2 மணிநேர காத்திருத்தல் மட்டும் உரையாடல், கடைசில ரிபர்பிஸ்டு போன் வேணும்னா அனுப்புறோம் புதுசா ஓசி போன் இப்ப இல்லைன்னு சொன்னாங்க. என்னோட தற்போதைய போன் கம்பெனிகாரன் கொடுத்து வெச்சவன் போல, வீட்டிற்கு வந்த ஒரு போனையும் திருப்பி அனுப்ப போறேன்.இது எதுக்கு பதிவான்னு கேக்கறீங்க தானே , ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.
------------------------------------
கல்லூரி சாலை:
இஞ்சினியரிங் காலேஜ்ல சேர்ந்த வருடம், +2 ல ஒக்கேசனல் குரூப் எடுத்து படிச்ச பசங்களுக்கு அறிவியல் பாடங்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவார்கள் அதில் ஒரு மாணவர் கேட்ட சந்தேகம் இது.
கெமிஸ்ட்ரி ஆசிரியரிடம் கேட்ட சந்தேகம்.
சார் முழங்கையை முன்பக்கமா மடக்க முடியுது , ஏன் சார் பின் பக்கம் மடக்க முடியல?
இந்த கேள்வி நான் கேக்கலங்க ஏன்னா நான் +2 ல ஒக்கேசனல் குரூப் இல்லை. அப்புரம் எப்படித்தெரியும். எல்லாம் செவி வழிச்செய்திதான்.
--------------------------
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.
13 comments:
//
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை
//
இது கொலைவெறி கவுஜையா இல்ல படிக்கிறவங்களுக்கு கொலைவெறி வர வைக்கிற கவுஜையா??
எதுக்கும் நீங்க கொஞ்சம் பாதுகாப்பா இருக்கது நல்லது :)))
//கும்மி, கொலவெறி, தொவையல் //
யோவ் உம்ம குசும்புக்கு அளவு இல்லாம போச்சி
அஜால் குஜால் கதைக்கு எப்பவுமே தனி மவுசுதான்
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை. \\
இதுல எவ்வளவோ மேட்டர் அடங்கியிருக்குப்பா ...
//நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.//
சரியாத் தான் நினைத்திருக்கீங்க...
யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.//
இதுதான் குடுகுடுப்பை ஸ்பெஷல்!நன்றாகச் சிரித்தேன்.
//இது எதுக்கு பதிவான்னு கேக்கறீங்க தானே , ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.//
அவ்வ்வ்வ்வ்! //Blogger அது சரி said...
//
நான் எழுதிய முதல் கொலைவெறிக்கவுஜ
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை
//
இது கொலைவெறி கவுஜையா இல்ல படிக்கிறவங்களுக்கு கொலைவெறி வர வைக்கிற கவுஜையா??
எதுக்கும் நீங்க கொஞ்சம் பாதுகாப்பா இருக்கது நல்லது :)))//
ரிப்பீட்டு!
//நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.//
விமர்சிக்கப்பட்டாலும் கவிதை தானே!
//ரொம்ப கடுப்புல இருக்கேன் யாரையாவது அடிக்கனும் போல இருந்துச்சு அதான் டைப் அடிச்சிட்டேன்.
//
-:)
:)))))))
அனைவருக்கும் நன்றி
//கும்மி, கொலவெறி, தொவையல் //
கொலவெறியோடதான் படிக்கணும் போல இருக்கு :)
//
நான் எழுதியது
கவிதை என
நினைத்தேன்
விமர்சிக்கப்படும் வரை.
//
என்ன சொன்னாங்க நல்லாத்தான் இருக்கு!
Post a Comment