இது நடந்தது 5 வருடத்துக்கு முன்னால், சென்னையில் ஒரு வீடோ அல்லது இடமோ வாங்கலாம் என்ற நோக்கத்தில் நண்பர்கள் /உறவினர்கள் மூலம் சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளை பார்த்து சில இடங்களை பார்க்க சென்றோம்.
முதலில் ஒரு ஏஜெண்ட் வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு இடத்தை காட்டினார், விலை இவ்வளவு என்றார். ரொம்ப நல்ல இடம் சார் ரயில்வே டேசன் பக்கம் வாங்கிப்போடு சார்.
ஆமா நல்ல இடந்தான், இது CMDA அப்ரூவ்டா?
அன் அப்ரூவ்டுதான் சார் , அருமையான இடம் சார், சீக்கிரம் மூனு மடங்கா விலை போகும் சார்.
இங்கதான் கவனிக்கனும் "அன் அப்ரூவ்டுதான்" அன் சத்தம் மட்டும் வெளிய வராமல் ரொம்ப அருமையா பேசினார்.
வேண்டாம்னு சொல்லிட்டு இன்னொருத்தரை கூட்டிட்டு வேற இடம் பாத்தோம், சோலிங்கநல்லூர் அருகில் ரஜினிகாந்த ஆசிரமம் கட்ட வாங்கிப்போட்டிருக்கிற இடம் பக்கத்தில். அவர் நாந்தான் ரஜினிக்கு இந்த இடம் வாங்கிக்கொடுத்தேன், ரஜினி இப்படி, லதா அப்படின்னு பேசிட்டு வந்தார் நல்லா பொழுது போச்சு, ஆனா இடம் எனக்கு பிடிக்கலை.
மூன்றாவதா முகப்பேர் பக்கமா , ஒரு ரியல் எஸ்டேட் ஏஜெண்ட், அவர் கொஞ்சம் பிரபலமானவர் சுருக்கமா சொல்லப்போனா தல ஏஜெண்ட், நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும் நேரம் போக, மீதி நேரம் அவர் கடையில் இருக்கும் அனைத்து சாமி போட்டோக்களையும் வணங்கிய படியே இருந்தார்.இவரைப்பார்க்க நிறைய அல்லக்கை ஏஜெண்டுகளும் வந்தபடியே இருந்தனர்.
அதில் ஒருவர்
வணக்கம் சார், நல்லா இருக்கீங்களா? உங்கள இன்னைக்கு பாக்க முடிஞ்சதே பெரிய விசயம்..
ஆமாமா நீங்க எப்படி இருக்கீங்க , பிஸினெஸ் எல்லாம் எப்படி போகுது, நான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் ஒன்னு பண்றேன் அதுனால கொஞ்சம் பிஸிதான். என்ன விசயம் சொல்லுங்க.
நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன சார் கவலை.நாங்க மெக்காவுக்கு போறதுக்கு எப்படி ஒரு அமைப்பு அமையனுமோ , அது மாதிரி உங்களுக்கு ஒரு நல்ல அமைப்பு வந்திருக்கு அதான் கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ண முடியுது.
ஆமாம் அமைப்புதான் ரொம்ப முக்கியம். உங்களுக்கு சீக்கிரம் வரும் நீங்களும் மெக்கா சீக்கிரம் போவீங்க நானும் உங்களுக்காக முருகன்கிட்ட வேண்டிக்கிறேன். என்ன எதாவது இடம் இருக்கா?
ரொம்ப நல்லது, ஆமாம் ஒரு இடம் இருக்கு சார், அம்பத்தூர் பக்கத்தில ஒரு 10 கிரவுண்ட் வருது, அருமையான பீஸு, யாரவது வெளிநாட்டு பார்ட்டி இருந்தா சொல்லுங்க சார்.
வெளிநாட்டு பார்ட்டிக்கெல்லாம் நல்ல இடமா இருக்கனும்யா, அவங்களுக்கு வீடு கட்டத்தான் தேவைப்படும், அம்பத்தூர் இண்டஸ்டிரியல் ஏரியாவில இருக்கா வெளியவா?
இண்டஸ்டிரியல் ஏரியா ஒட்டிதான் இருக்கு, பழைய பில்டிங்கெல்லாம் இடிச்சிரலாம் , அருமையான உருப்படி சார் , கிரவுண்ட் அஞ்சு ரூவாக்கு முடிக்கலாம் சார்.
தல ஏஜெண்ட் என்னைப்பாத்து என்ன சார் சீப்பா பத்து கிரவுண்ட் வருது முடிச்சிரலாமா?
இல்லங்க எனக்கு ஒரே ஒரு கிரவுண்ட் வீடு கட்ட வேணும் இது ஒத்து வர மாதிரி தெரியல.
தம்பி வெளிநாட்டுல இருக்கியலா, அருமையான உருப்படி தம்பி
இல்லங்க எனக்கு வேணாம் நான் வரேன்.
22 comments:
ஏஜென்ட் வேலையே ஏமாத்துறது தானே
நல்ல உஷார் பார்ட்டி தான் நீங்க
www.Tamilers.com
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
ஹலோ உங்களை ஏமாற்ற பார்த்தாரா அந்த ஏஜென்ட்? எப்படி தப்பிச்சீங்க?
வெவரம் தெரியாத சிலர் மாட்டிக்கறாங்க!
வெவரம் தெரியாம வாங்கப் போறவங்களுக்கு உங்க இடுகை முன்னெச்சரிக்கையாக இருக்கும்.
நல்ல வேலைப் பிழைத்துக் கொண்டீர்கள். வாங்காமல் விட்டீர்களே. அன் அப்ரூவ்ட் - இடம் வாங்காமல் இருப்பதுதான் என்றுமே நல்லது.
குஜமுக தலைவர்கிட்டயேவா?? தலீவரா கொக்கான்னேன்!
அது சரி said...
குஜமுக தலைவர்கிட்டயேவா?? தலீவரா கொக்கான்னேன்!//
நான் பொதுச்செயலாலர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.தலைவர் சொன்னால் தலைவரையும் , ஏன் என்னையும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் படைத்தவன்.
5 வருடம் கழித்து இந்த நினைவூட்டத்திற்கு என்ன காரணம்,குடுகுடுப்பை,சார்?
ஷண்முகப்ரியன் said...
5 வருடம் கழித்து இந்த நினைவூட்டத்திற்கு என்ன காரணம்,குடுகுடுப்பை,சார்?
//
ஒன்னுமில்லை, பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சு,திடீர்னு தோன்றியதை எழுதினேன்.
Blogger உடன்பிறப்பு said...
நல்ல உஷார் பார்ட்டி தான் நீங்க//
அதுக்குதான் அரசியல் எழுதறதில்லை.
RAMYA said...
வெவரம் தெரியாம வாங்கப் போறவங்களுக்கு உங்க இடுகை முன்னெச்சரிக்கையாக இருக்கும்.//
நிறைய பேருக்கு பின் எச்சரிக்கையா கூட இருக்கும்
குஜமுக - நல்லா போகுது போல.. அதான் பதிவுப் பக்கமெல்லாம் வர டைம் இல்லையா? நம்ம கடைப் பக்கமும் எட்டிப்பாக்கறது...
வேளச்சேரில இடம் பாத்துக்கிட்டு இருக்கும்போது எல்லாரும் கிரவுண்டு 30லகரம் 40 லகர்ம் சொல்லும்போது ஒரு ஆள் மட்டும் கிரவுண்டு 18லகரம், உடனே வாங்க முடிக்கலாம்னான். அரக்கப் பரக்க ஓடுனா..... அது 120 அடிக்கு 20 அடி அகல ப்ளாட்டு. டேய்... எதோ ஒரு முட்டுச் சந்தை என் தலைல கட்றயேன்னு போட்டுக் காச்சிட்டு வந்துட்டேன்.
ஈ - படமோன்னு நினைச்சேன்
நல்ல விழிப்புணர்வு
(லேட்டா சொன்னாலும் - மேட்டர் இப்பவும் லேட்டஸ்ட்டு தான்)
இப்போவெல்லாம் அப்ருவ்டு மனைகளிலும் சில சிக்கல்கள் வருது! நீங்க தப்பிச்சது
சரிதான் ஆனா இப்போ நெறைய பேர் மாட்டி இருக்காங்க! ஏஜெண்டுகளில் பேச்சில் அப்டியே மயங்கிடுறாங்க! என்ன செய்றது?
-:)
குடுகுடுப்பையார் பேக் டு தி ப்போம் -:)
இராகவன் நைஜிரியா said...
நல்ல வேலைப் பிழைத்துக் கொண்டீர்கள். வாங்காமல் விட்டீர்களே. அன் அப்ரூவ்ட் - இடம் வாங்காமல் இருப்பதுதான் என்றுமே நல்லது.//
நன்றி ராகவன்.
Mahesh said...
குஜமுக - நல்லா போகுது போல.. அதான் பதிவுப் பக்கமெல்லாம் வர டைம் இல்லையா? நம்ம கடைப் பக்கமும் எட்டிப்பாக்கறது...
வேளச்சேரில இடம் பாத்துக்கிட்டு இருக்கும்போது எல்லாரும் கிரவுண்டு 30லகரம் 40 லகர்ம் சொல்லும்போது ஒரு ஆள் மட்டும் கிரவுண்டு 18லகரம், உடனே வாங்க முடிக்கலாம்னான். அரக்கப் பரக்க ஓடுனா..... அது 120 அடிக்கு 20 அடி அகல ப்ளாட்டு. டேய்... எதோ ஒரு முட்டுச் சந்தை என் தலைல கட்றயேன்னு போட்டுக் காச்சிட்டு வந்துட்டேன்.//
கண்டிப்பா வரேன் சார். கட்சிப்பணி தீவிரமா இருக்கேன். அதான் வரமுடியல.
நன்றி
ஜமால்
ஜீவன்
பித்தன்.
கலையரசன் said...
உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் முதல்பக்கத்தில்
வெளிவந்துள்ளது... வாழ்த்துகள்!
http://youthful.vikatan.com/youth/index.asp
//
தகவலுக்கு நன்றி.
தப்பிச்சிட்டீங்க குடுகுடுப்பையாரே :)
Poornima Saravana kumar said...
தப்பிச்சிட்டீங்க குடுகுடுப்பையாரே :
//
நன்றி Poornima Saravana kumar
Post a Comment