Wednesday, March 25, 2009

எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம்

முற்றுப்புள்ளி வைத்தேன்.
முதலில் முற்றுப்புள்ளி கூடாது
முற்றுப்புள்ளி மேல் மறைத்து கோடு போட்டேன்
கோட்டின் மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோடு தெரிந்தது
முற்றுப்புள்ளி தெரியவில்லை.

தனியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
முற்றுப்புள்ளி தெரிந்தது
ஆனால் ஏன் அந்த முற்றுப்புள்ளி
என புரியவில்லை
படித்து பார்த்தேன் கவிதை
போல் தெரிந்தது
ஆனால் புரியவில்லை

கவிதை படிப்பவனுக்கு
ஏதோ ஒன்றாக புரியும்.
அதனால் இதற்கு மேல்
இதற்கு விளக்கமில்லை.


எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.

முரண் தொடை: காதறுந்த ஊசியும்....

நல்லா போடுங்கப்பா தமிழ்மணத்தில எதிர் வோட்டு.

24 comments:

நசரேயன் said...

கொலைவெறி கவுஜையா

நசரேயன் said...

கோலம் போட்டதை கவுஜையா போட்டு விட்டீங்க

Mahesh said...

; : , . - ? !

பழமைபேசி said...

கேட்கத் தோன்றினாலும்
கேட்பது இல்லை!
கேட்காமல் விட்டாலும்
கேட்பது இல்லை; கேட்காமல்
கேட்கவில்லை என்ற தைரியத்தில்
கேட்கட்டும் பார்க்கலாம்
கேட்டதை வைத்து சொல்வோம்,
கேட்டால் கேட்கட்டும், கேட்காவிட்டால்
போகட்டும்!

ரவி said...

வாந்தி சரக்கடிப்பவனுக்கே சொந்தம்.
பூந்தி லட்டுக்கே சொந்தம்.
பிராந்தி பாருக்கே சொந்தம்.
சாந்தி அவ வீட்டுக்காரனுக்கே சொந்தம்.

அது சரி(18185106603874041862) said...

//
முற்றுப்புள்ளி வைத்தேன்.
முதலில் முற்றுப்புள்ளி கூடாது
முற்றுப்புள்ளி மேல் மறைத்து கோடு போட்டேன்
கோட்டின் மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோடு தெரிந்தது
முற்றுப்புள்ளி தெரியவில்லை.
//

முற்றுப்புள்ளியிலிருந்து தான் எல்லாம் ஆரம்பிக்கிறது...முதலில் தொடங்கிய அந்த புள்ளி நோக்கியே அத்தனை நகர்வும்...கோடென்று பார்ப்பதால் தான் கடைசி வரை புள்ளிகள் கண்ணுக்கு தெரிவதில்லை...கோடே புள்ளிகள் தான் என்று தெரிந்தால் அங்கு நகர்வேது???

அது சரி(18185106603874041862) said...

//
எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.

//

ரொம்ப டென்ஷனாயிட்டீங்க போல...நான் வேணும்னே சொல்லலீங்க...வாசிப்பவனுக்கு சொந்தம் என்றால், படிப்பவர்கள் அதை அவர்கள் விருப்பப்படி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள், அதை எழுதுபவன் கலைக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்...

அது சரி(18185106603874041862) said...

//
செந்தழல் ரவி said...
வாந்தி சரக்கடிப்பவனுக்கே சொந்தம்.
பூந்தி லட்டுக்கே சொந்தம்.
பிராந்தி பாருக்கே சொந்தம்.
சாந்தி அவ வீட்டுக்காரனுக்கே சொந்தம்.

March 25, 2009 4:14 PM
//

பிராந்தி பாருக்கே சொந்தம்...சாந்தி அவ வீட்டுக்காரனுக்கே சொந்தம்...கலக்கறீங்க ரவியண்ணே...:0))

ஆனா, பிராந்தி காசு குடுத்து வாங்குனவனுக்கு தான சொந்தம்?? உங்க கவிதைல பொருள் குற்றம் உள்ளது :0))

Anonymous said...

அது சரி said...

//
எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.

//

ரொம்ப டென்ஷனாயிட்டீங்க போல...நான் வேணும்னே சொல்லலீங்க...வாசிப்பவனுக்கு சொந்தம் என்றால், படிப்பவர்கள் அதை அவர்கள் விருப்பப்படி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள், அதை எழுதுபவன் கலைக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் தான் சொன்னேன்...
//


நானவது டென்சனாவது சும்மா ஒரு ஜாலிக்கவுஜதான் இது. அப்புரம் டென்சனாகி இன்னோரு கவுஜ எழுத வேண்டி வரும்

அ.மு.செய்யது said...

எல்லாத்துக்கும் என்னாச்சி..

அரிய கவுஜைகள் ?????

அ.மு.செய்யது said...

//நானவது டென்சனாவது சும்மா ஒரு ஜாலிக்கவுஜதான் இது. அப்புரம் டென்சனாகி இன்னோரு கவுஜ எழுத வேண்டி வரும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....

புதியவன் said...

//எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.//

வேண்டாம்...வேண்டாம்...வேண்டாம்...

ஷண்முகப்ரியன் said...

அருமையான பின்நவீனத்துவக் கவிதை சார்.என்ன,மீண்டும் இதுபோல் ஏதாவது எழுதும் போது முன்னாலேயே சொல்லி விடுங்கள்.

குடந்தை அன்புமணி said...

என்னமோ நடக்குது மர்மா இருக்குது...

வேத்தியன் said...

முற்றுப்புள்ளி வைத்தேன்.
முதலில் முற்றுப்புள்ளி கூடாது
முற்றுப்புள்ளி மேல் மறைத்து கோடு போட்டேன்
கோட்டின் மேல் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.
கோடு தெரிந்தது
முற்றுப்புள்ளி தெரியவில்லை.//

உஸ்ஸ்ஸ்ஸ்...
இப்பவே கண்ணைக்கட்டுதே...
புரிஞ்சா மாதிரியும் இருக்கு..
புரியாத மாதிரியும் இருக்குங்க...
:-)

வேத்தியன் said...

படித்து பார்த்தேன் கவிதை
போல் தெரிந்தது
ஆனால் புரியவில்லை//

உங்களுக்கே புரியலையா தல???
:-)

வால்பையன் said...

//கவிதை படிப்பவனுக்கு
ஏதோ ஒன்றாக புரியும்.
அதனால் இதற்கு மேல்
இதற்கு விளக்கமில்லை.//

அதையே தான் நானும் சொல்றேன்.

நட்புடன் ஜமால் said...

\\எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.\\

கவுஜ வாரமா!

ராஜ நடராஜன் said...

//எழுதிய பின் எழுத்து வாசிப்பவனுக்கே சொந்தம் என்ற அது சரி கருத்தை ஏற்று நான் எழுதியது. இனி உங்களுக்கே சொந்தம்.//

இப்படி நச்சுன்னு சொன்னாத்தானே குச்சி விளக்கு (ட்யூப் லைட்டாம் தமிழில்)எனக்குப் புரியும்:0

http://urupudaathathu.blogspot.com/ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்..

இங்கேயும் கவுஜையா??

வெற்றி-[க்]-கதிரவன் said...

செந்தழல் ரவிக்கே சொந்தம்

மாம்பழச்சாலை நசரேயன்கே சொந்தம்

உருப்புடாதது அணிமாக்கே சொந்தம்

குடுகுடுப்பை குடுகுடுப்பையார்க்கே சொந்தம்

RAMYA said...

என்னா ஆச்சு ?? படிச்சுட்டு நான் எங்கே இருக்கிறேன் என்று
சினிமா style கேட்டுகிட்டேன்.

மொத்தத்திலே நல்லா புள்ளி வச்சிருக்கீங்க :))

RAMYA said...

சொல்லணும் நினைக்கிறேன் ஆனால்
சொல்லத் தெரியலை
சொல்லாமல் இருந்தாலும்
சொல்லாமல் இருக்க முடியவில்லை
சொல்லத் தெரிந்த மாதிரி தெரிஞ்சாலும்
சொல்லாமல் இருப்பேனா?? உண்மையாவே
சொல்லத் தெரியலை

ஐயோ நான் எங்கே இருக்கேன்??
இந்த பதிவிற்கு வரும் வரை நல்லா தான் இருந்தேன் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

?????!!!!!