Monday, March 16, 2009

குடுகுடுப்பை சாப்ட்வேர் எஞ்சினியர் ஆன கதை.

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சு ஒரு லேத் பட்டறை ஆரம்பிச்சு டயர் வண்டி செஞ்சு பொழச்சுக்கலாம்னுதான் நெனச்சேன். ஆனால் நடந்ததோ வேற மாதிரியா போச்சு. அதற்கான ஆரம்ப அடித்தளம் கல்லூரி முதலாண்டிலேயெ போடப்பட்டது.

காலேஜ் முதல் வருசத்தில ஒரு கம்பியூட்டர் பேப்பர் இருந்துச்சு, கடம் போட்டு பாஸ் பண்ணும் கலை எனக்குத்தெரியவில்லை. இந்த பேப்பர நானும் அஞ்சாவது செமஸ்டர் வரைக்கும் எழுதினேன். எப்படியோ அஞ்சாவது செமஸ்ட்டர்ல ஒரு வழியா புரிஞ்சு பாஸ் பண்ணிட்டேன்.

யப்பாடா நமக்கு இனிமே கம்பியூட்டர் தொல்லை இல்லைன்னு நெனச்சப்போ ஆறாவது செமஸ்ட்டர்ல ஒரு கம்பியூட்டர் பேப்பர வெச்சிட்டாங்க. அது ஆறுல போச்சு,ஏழுலயும் போச்சு ஆனா எட்டுல விடமாட்டோம்ல தூக்கியாச்சு.

மெக்கானிக்கல் இஞ்சினியரிங் மாணவன் ஆன நான் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்க் பாடத்தை நான்கு ஆண்டும் படிக்க நேர்ந்தது பாடத்திட்டத்தின் தேவை, ஆனால் தொடர்ந்து நான்கு ஆண்டு இரண்டு கம்பியூட்டர் பேப்பரை படிக்க நேர்ந்ததுதான் விதியின் விளையாட்டு.

நிற்க ஆனா இந்த நான்கு ஆண்டில் எங்க காலேஜ்ல கம்பியூட்டர நான் பார்த்ததேயில்லை. எங்கள் கல்லூரி கம்பியூட்டர் லேப் வாசலில் செருப்பு கழட்டி கெடக்கும் அதுதான் நான் பார்த்திருக்கேன். மெக்கானிக்கல் பசங்கள உள்ள விடமாட்டாங்க மத்த பிராஞ்ச் காரங்கள உள்ள விடுவாங்களான்னு எதிர்கேள்வி கேட்டா என்கிட்ட பதில் இல்லை. மத்தபடி நான் கம்பியூட்டருன்னு நினைத்து பார்த்தது திருவள்ளுவர் பஸ்ஸ்டாண்டல ஒரு சொட்டையரு டிக்கெட் கொடுக்கிற மெசினத்தான்.

மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆயாச்சு ஆனா முழுசா செமஸ்ட்டர் பீஸ் கட்டல அதுனால மார்க் ஷீட் வாங்கமுடியாது.வீட்ல அந்தக்காச வாங்கி எட்டாவது செமஸ்ட்டரில் சுற்றுலா போயாச்சு. நண்பன் பாரிஸ்கிட்ட ஒரு 5000 கொடுடான்னு கேட்டேன் அவன் வீட்ல காலேஜ் முடிச்சதுக்கப்புரம் ஸ்காலர்ஷிப் வாங்கமுடியல.அதுனால அவன்கிட்டயும் காசு இல்லை.

அப்பாகிட்டேயே மீண்டும் வந்தேன் 5000 ரூபாய் காசு கட்டனும் காலேஜுக்கு அப்பதான் மார்க் சீட் வாங்கலாம் அப்படின்னேன். அவரும் கேள்வி கேட்காமல் கொடுத்தார்.

ஒருநாள் வேலைதேடி சென்னை வந்தேன், மேற்கு மாம்பலத்தில் சில நண்பர்கள் உதவியுடன் ஒரு பேச்சுலர்ஸ் வீட்டில் தங்கினேன்.அம்பத்தூர்ல உள்ள நிறைய கம்பெனிகளுக்கு ரெஸ்யூம் அனுப்பிச்சேன் ஒன்றும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் ECE படிச்ச நாநா எதோ கம்பியூட்டர் படிச்சு வேலை பார்க்கிரதா கேள்விப்பட்டேன். ஒருநாள் அவனையும் பார்த்தேன் தண்ணி அடிச்சிட்டு இங்கிலீஸ்ல பேச முயற்சி பண்ணிட்டு இருந்தான் என்னையும் கம்பியூட்டர் படிக்க சொன்னான்.மெக்கானிக்கல்காரன் கம்பியூட்டர் படிச்சா வேலை கிடைக்குமாடான்னேன், அதெல்லாம் கிடைக்கும் அப்படின்னான்.ஆமா இவனுக்கே ஒருத்தன் வேலை கொடுத்தப்போ நமக்கு கிடைக்காதான்னு எனக்கும் தோனுச்சு.

ஒருவழியா கம்பியூட்டர் கிளாஸ் சேர திரும்பவும் அப்பாகிட்ட காசு கேட்டேன், வழக்கம்போல் அவரும் கொடுத்தார்.திநகர் SSI யில் ஆரக்கிள் சேந்தாச்சு. முதநாள் கிளாஸ் அப்பதான் கம்பியூட்டர (மானிட்டர்)கிட்ட பார்க்கிறேன். .அதுவும் கருப்பு கலர்ல unix dummy work station

வாத்தியார் வந்தாரு எல்லாரும் usename : password உருவாக்குங்க அப்படின்னார்

எனக்கு இந்த ரெண்டு வார்த்தையுமே புதுசு, பக்கத்தில இருந்தவருகிட்ட கேட்டேன், உங்க பேரு என்னன்னு கேட்டார்,
நான் : குடுகுடுப்பை

உங்க usename குடுகுடுப்பை பாஸ்வோடு: குடுகுடுப்பை123 அப்படின்னார். அவரு அந்த மெசின்ல எனக்கு அடிச்சும் கொடுத்தாரு. ஒரு மணி நேரம் ஆச்சு. நான் ஒன்னும் பண்ணாம முழிச்சிட்டே உக்காந்திருந்தேன்.

ஒரு மணி நேரம் ஆன பின்னர் வாத்தியார் வந்தாரு.
"other than current batch please logout" அப்படின்னாரு.

எனக்கு ஒன்னும் புரியல,ஆனா out அப்படின்னா வெளியே போகச்சொல்றாரு அப்படின்னு நினைத்து அப்படியே எந்திருச்சி வெளில வந்துட்டேன்.

மீண்டும் லாகின் பண்ணுவோம்.

44 comments:

நட்புடன் ஜமால் said...

சும்மா கதை உடாதிங்கோ ...

நட்புடன் ஜமால் said...

\\மீண்டும் லாகின் பண்ணுவோம்.\\

தூள் அண்ணே ...

குடந்தை அன்புமணி said...

//அப்பாகிட்டேயே மீண்டும் வந்தேன் 5000 ரூபாய் காசு கட்டனும் காலேஜுக்கு அப்பதான் மார்க் சீட் வாங்கலாம் அப்படின்னேன். அவரும் கேள்வி கேட்காமல் கொடுத்தார்.//

பிள்ளை மேல அவ்வளவு நம்பிக்கை!

குடந்தை அன்புமணி said...

//எனக்கு ஒன்னும் புரியல,ஆனா out அப்படின்னா வெளியே போகச்சொல்றாரு அப்படின்னு நினைத்து அப்படியே எந்திருச்சி வெளில வந்துட்டேன்.//

அப்புறம் எப்படி...? (இதற்கு பல அர்த்தங்கள்)

குடந்தை அன்புமணி said...

இதே மாதிரி 'ஐநோ'க்கு அர்த்தம் புரியாம சின்ன வயசில நான்பட்டபாடு தனிக்கதைங்க...

அ.மு.செய்யது said...

//ஒருவழியா கம்பியூட்டர் கிளாஸ் சேர திரும்பவும் அப்பாகிட்ட காசு கேட்டேன், வழக்கம்போல் அவரும் கொடுத்தார்.திநகர் SSI யில் ஆரக்கிள் சேந்தாச்சு. முதநாள் கிளாஸ் அப்பதான் கம்பியூட்டர (மானிட்டர்)கிட்ட பார்க்கிறேன். .அதுவும் கருப்பு கலர்ல unix dummy work staடிஒன்//

நீங்களும் நம்மாளு தானா..


நானும் இசிஇ படிச்சிட்டு உங்கள மாதிரி தாங்க ஓரக்கிள் யுனிக்ஸ்னு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன்.

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டுக்கலாமுன்னு ஓடி வந்தா நிறைய கூட்டம் சேர்ந்துடுச்சு.அப்புறமா வாரேன்.

குடுகுடுப்பை said...

குடந்தைஅன்புமணி said...

//எனக்கு ஒன்னும் புரியல,ஆனா out அப்படின்னா வெளியே போகச்சொல்றாரு அப்படின்னு நினைத்து அப்படியே எந்திருச்சி வெளில வந்துட்டேன்.//

அப்புறம் எப்படி...? (இதற்கு பல அர்த்தங்கள்)//

என்னாதுப்பா இது

நசரேயன் said...

படிப்புல உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்லை பெயரை தவிர.. நீங்க முடிங்க நான் அப்புறமா எழுதுறேன்

Poornima Saravana kumar said...

//மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சு ஒரு லேத் பட்டறை ஆரம்பிச்சு டயர் வண்டி செஞ்சு பொழச்சுக்கலாம்னுதான் நெனச்சேன்//

எல்லாமே நாம நினைப்பதோடு சரினு நால்லா தெரியுது!

KarthigaVasudevan said...

இது கதையல்ல நிஜமா ? நிஜமல்ல கதையா? மற்றபடி இன்று பிறந்த நாள் காணும் அண்ணன் குடுகுடுப்பைக்கு இந்தியாவின் அனைத்துக் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்கள்...அடிபொடிகள் சார்பாகவும் வாழ்த்துக்களையும்..வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு வணங்கி விடை பெறுகிறோம் வருங்கால முதவர் ஆச்சே

வெட்டிப்பயல் said...

Kalakal...

waiting for the next part...

appadiye freshersku konjam tips kodutha nalla irukum :)

குடுகுடுப்பை said...

நட்புடன் ஜமால் said...

சும்மா கதை உடாதிங்கோ ..

//

கதையும் விடுறோம்.

மணிகண்டன் said...

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பேப்பர் எல்லாம் உடனே முடிச்சுட்டா மாதிரி ஒரு பிம்பத்த உருவாக்க முயற்சி பண்ணி இருக்கீங்க. நாங்க ஏமாற மாட்டோம்.

ஹி ஹி ஹி

குடுகுடுப்பை said...

மணிகண்டன் said...

மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பேப்பர் எல்லாம் உடனே முடிச்சுட்டா மாதிரி ஒரு பிம்பத்த உருவாக்க முயற்சி பண்ணி இருக்கீங்க. நாங்க ஏமாற மாட்டோம்.

ஹி ஹி ஹி
//

சரியான ஆளதான்யா நீரு

பழமைபேசி said...

//எனக்கு ஒன்னும் புரியல,ஆனா out அப்படின்னா வெளியே போகச்சொல்றாரு அப்படின்னு நினைத்து அப்படியே எந்திருச்சி வெளில வந்துட்டேன்.//

அண்ணே, அண்ணே, தூள் அண்ணே!!

மணிகண்டன் said...

சார், சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா ? மன்னிச்சுக்கோங்க.

குடுகுடுப்பை said...

மணிகண்டன் said...

சார், சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா ? மன்னிச்சுக்கோங்க.
//

நான் ஏன் சீரியஸ எடுத்தக்கறேன்.மன்னிக்கலன்னா நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க
இதபோய் பாருங்க.
குடுகுடுப்பை: கல்லூரி சாலை:புளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வும் நானும்

மணிகண்டன் said...

ஹா ஹா ஹா ! விடாம சிரிச்சேங்க அந்த லிங்க் படிச்சுட்டு. ஆனாலும் நீங்க தெலுங்கு ("ங்" உண்டா கிடையாதா ?) டப்பிங் படத்துக்கு தான் போயி இருக்கணும்.

மணிகண்டன் said...

***
மன்னிக்கலன்னா நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க
***

இப்படி சொன்னா எப்படி ? மன்னிச்சுடீங்களா இல்லையா ? சொல்லுங்க இப்போ.

நசரேயன் said...

//மணிகண்டன் said...

சார், சீரியஸா எடுத்துக்கிட்டீங்களா ? மன்னிச்சுக்கோங்க.
//

ஆட்டோ வந்தாலும் அண்ணன் அசரமட்டார்

குடுகுடுப்பை said...

மணிகண்டன் said...

***
மன்னிக்கலன்னா நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க
***

இப்படி சொன்னா எப்படி ? மன்னிச்சுடீங்களா இல்லையா ? சொல்லுங்க இப்போ.
//

மன்னிச்சிட்டேன், இல்லாட்டி நான் ஏதோ அரசியல்வாதின்னு நெனச்சிருவீங்க.

Anonymous said...

தல! நீ இஸ்கூல் பக்கம் எல்லாம் போனீயா! உண்மையா தல? அண்ணனுக்கு பொய் சொன்னா பிடிக்காது. தெரியுமில்ல. யாரப்பா உன் மனசைக் கெடுத்து பொய் சொல்ல வச்சாங்கா?

புள்ளிராஜா

குடுகுடுப்பை said...

Anonymous said...

தல! நீ இஸ்கூல் பக்கம் எல்லாம் போனீயா! உண்மையா தல? அண்ணனுக்கு பொய் சொன்னா பிடிக்காது. தெரியுமில்ல. யாரப்பா உன் மனசைக் கெடுத்து பொய் சொல்ல வச்சாங்கா?

புள்ளிராஜா//

இஸ்கூல் பக்கம் போனதா நான் எப்ப சொன்னேன்.

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

//ஒருவழியா கம்பியூட்டர் கிளாஸ் சேர திரும்பவும் அப்பாகிட்ட காசு கேட்டேன், வழக்கம்போல் அவரும் கொடுத்தார்.திநகர் SSI யில் ஆரக்கிள் சேந்தாச்சு. முதநாள் கிளாஸ் அப்பதான் கம்பியூட்டர (மானிட்டர்)கிட்ட பார்க்கிறேன். .அதுவும் கருப்பு கலர்ல unix dummy work staடிஒன்//

நீங்களும் நம்மாளு தானா..


நானும் இசிஇ படிச்சிட்டு உங்கள மாதிரி தாங்க ஓரக்கிள் யுனிக்ஸ்னு பொழப்ப ஓட்டிட்டு இருக்கேன்.
//

இப்ப நான் எல்லா வேலையும் பார்க்கிறேன்.

வில்லன் said...

குடுகுடுப்பை. மீண்டும் வந்துட்டேன். ஊருக்கு போலாம்னு பாத்தா அனுப்ப மாட்டக்காங்கா. அதனால டாலஸ் வந்துட்டேன் குடும்பத்தோட. எனிமேல் அடிகடி சந்திக்கலாம் பதிவில.

வில்லன் said...

சரி இப்பவாவது ஒழுங்கா வேல பாக்க தெரியுதா இல்ல சும்மா படம் தானா!!!!!!

வில்லன் said...

இத படிச்சா எனக்கு ஒரு பட்டு ஞபகம் வருது

மனிதன் நினைப்பது ஒன்று வாழ்வில் நடப்பதொன்னு. இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.

அது சரி(18185106603874041862) said...

//
மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆயாச்சு
//

நெசமாவா சொல்றீங்க? :0))

குடுகுடுப்பை said...

வில்லன் said...

குடுகுடுப்பை. மீண்டும் வந்துட்டேன். ஊருக்கு போலாம்னு பாத்தா அனுப்ப மாட்டக்காங்கா. அதனால டாலஸ் வந்துட்டேன் குடும்பத்தோட. எனிமேல் அடிகடி சந்திக்கலாம் பதிவில.
//

மெயில் அனுப்புங்க போன் நம்பர. நானும் டாலஸ்தான்.

ஷண்முகப்ரியன் said...

Hilariously told.nice.(lazy to change into unicode.execuse my english.)

குடுகுடுப்பை said...

அது சரி said...

//
மெக்கானிக்கல் எஞ்சினியர் ஆயாச்சு
//

நெசமாவா சொல்றீங்க? :0))

பாஸ் பண்ணியாச்சு அப்படின்னு இருந்தது, வேணும்னே கமெண்டுக்காக மாத்தினதுதான்

Unknown said...

நம்ம கதை அப்பிடியே தலை கீழ் பாஸூ. எம்.சி.ஏ படிச்ச மூணு வருசத்துல யுனிக்ஸையும் நெட்வொர்க்கிங்கையும் கரைச்சி குடிச்சி நல்ல ஒரு சிஸ்டம் புரோக்ராம்மர் ஆகணும்னு கனவு கண்டு, கடைசியில கருப்பு ஸ்கிரீன்ல பச்ச எழுத்த (அது தாங்க மெயின்ஃப்ரேம்) பாத்துக்கிட்டு காலத்த ஓட்டுறேன். GUI அப்பிடின்னா என்னன்னே மறந்து போச்சு :-(

சந்தனமுல்லை said...

:-))) கலக்கலா இருக்கு குடுகுடுப்பையார்!! நீங்களும் நசரேயனும் ஒரு முடிவில தான் இருக்கீங்க போல!!


//உங்க usename குடுகுடுப்பை பாஸ்வோடு: குடுகுடுப்பை123 அப்படின்னார். //

அல்டிமேட் !!


//ஒரு மணி நேரம் ஆச்சு. நான் ஒன்னும் பண்ணாம முழிச்சிட்டே உக்காந்திருந்தேன்.
//

முதல் unix க்ளாஸ் இப்படிதான் போச்சு எனக்கும். பைலை சேவ் பண்ணி, ரைட் பர்மிஷன் கொடுத்து இபப்டில்லாம் எ.கா இருந்துச்சு..ஆனா அது என்னா பைலுன்னுதான் தெரியலை! lol!!

Unknown said...

காமெடியா சொல்லிருந்தாலும் ஏதோ ஒரு கஷ்டம் இருந்தது அண்ணா.. :(( Take care.. :)

புல்லட் said...

அவையடக்கம் அவசியம்தான் .. அதுக்காக வாசிக்கிறவன் காதெல்லாம் பிஞ்சு தொங்கறமாதிரியா பூவைக்கிறது?

என்ன பாஸ் நீங்க...

கொஞ்சம் றியாலிட்டியா எழுதுங்க... நம்பி அவலோட வாசிக்க வந்த வடிவேலு சழுன் காட்டுறீங்க..

அடுத்த பதிவில உண்மைய எழுதலேன்ன வீண் பிரச்சன வரும் சொல்லிபுட்டேன் ஆமா!

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆஹ்ஹா

வஞ்சனையே வெக்காம பதிவு நெடுகிலும் சிரிக்க வெச்சீங்க

அதுவும், அந்த லாக் ஆஃப்.
அப்புறம் ஸ்காலர்ஷிப். சூப்பர்

வால்பையன் said...

இப்போ பிடுங்கறதுக்கு ஆணி இருக்கா இல்லையா?

புதியவன் said...

//நிற்க ஆனா இந்த நான்கு ஆண்டில் எங்க காலேஜ்ல கம்பியூட்டர நான் பார்த்ததேயில்லை. எங்கள் கல்லூரி கம்பியூட்டர் லேப் வாசலில் செருப்பு கழட்டி கெடக்கும் அதுதான் நான் பார்த்திருக்கேன்.//

இது என்னங்க கொடுமை...?

http://urupudaathathu.blogspot.com/ said...

haa haa haa

http://urupudaathathu.blogspot.com/ said...

//மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சு ஒரு லேத் பட்டறை ஆரம்பிச்சு டயர் வண்டி செஞ்சு பொழச்சுக்கலாம்னுதான் நெனச்சேன்///

விதி வலியது..

Parathesi said...

eppadio elutha kathukitta

Anonymous said...

உங்கள மாதிரி ஆட்டிட்டு (குடுகுடுப்பய) இருந்தவங்களுக்கு எல்லாம் சாப்ட்வேர் வேல கிடச்சத தால தான் என்ன மாதிரி நல்லா படிச்சவனுக்கு எல்லாம் ஒரு வேலையும் கிடைக்கல... வைத்தெரிச்சல கொட்டிகாதய குடுகுடுப்ப................

முத்தரசன் said...

உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி