நான் முதன் முதலா அமெரிக்கா வந்தது 2000மாவது ஆண்டு, வந்து ஒரு பிரபலமான கம்பெனில புரட்சி ஏற்படுத்தப்போற ஒரு தொழில் நுட்பத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன்.கார் ஓட்டக்கத்துக்கிட்டு ஒரு புது கார் வாங்கியாச்சு, கார் வாங்கி 3 மாசம் கழிச்சு, (2001 மார்ச்)இந்த டாட்காம் பபுள்னால வந்த பாதிப்பு டாட்காம்ல இல்லாத என்னையும் பாதிச்சிருச்சு.
எங்க கம்பெனில என்னை கூப்பிட்டு உன்னோட கார நாங்க பத்திரமா பாத்துக்கறோம், செலவ குறைக்கனும் நீ பெங்களூர் போ இங்க உனக்கு $1000 சம்பளம் தருகிறோம் அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாங்க, கார் லோன் $500 போக $500 மிச்சம்.
இந்தக்காட்சி இங்க இப்படி நடக்கும் முன்னாடியே, எங்க ஊருல உள்ள சில பொதுநல விரும்பிகள் குடுகுடுப்பைய இன்னும் திருப்பி அனுப்பலையா? எல்லாரையும் அனுப்பிட்டாங்களாம் அப்படின்னு விசாரனை ஓயவில்லையாம்.
பெங்களூர் போறதுக்கு முன்னாடி, ஊருக்கு கார் எடுத்துட்டு போய் இறங்கியாச்சு, பஸ்ல போயிருக்கலாம் ஆனா அமெரிக்க ரிட்டன் வேறல்ல, அதோட எங்க ஊருக்கு பஸ் எல்லாம் கெடயாது.
போய் ஒருவாரம் ஓய்வு, இந்த நாட்களில் ஒரு பொதுநல விரும்பி என்னோட நண்பர் ஒருவர்கிட்ட, என்ன உன் கூட்டாளிக்கு மொட்டை போட்டு அனுப்பிட்டாங்க போல, பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி போட்டுருப்பாங்க போலருக்கு, ஆனா நடையில ஒன்னும் வித்தியாசம் தெரியல கசையடியெல்லாம் இல்லை போலருக்கு, தன்னோட சந்தேகத்த சொல்லிருக்காரு.
ஆகா கொஞ்சம் முடிய ஒட்ட வெட்டனதுக்கு இப்படி ஒரு திரைக்கதை எழுதிட்டாங்களேன்னு நெனச்சி, சிரிச்சோம். அப்படியே ஒரு நன்னாளில் பெங்களூருக்கு வேலைக்கு போயாச்சு, அங்கே போயி ஒரு மாசம் ஆபிஸ் போயிட்டு வந்துட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் HR கூப்பிட்டு ஒரு புது புராஜக்ட் இன்னோரு பிரபலமான கம்பெனிலேந்து வந்திருக்கு உடனே டிக்கெட் கன்பார்ம் பண்ணிட்டு கெளம்ப சொல்லிட்டாரு, நானும் பெங்களூர்லேந்து சென்னை வந்து அடுத்த நாளே பிளைட் ஏறிட்டேன் கொஞ்சம் அழுக்குத்துணியோட.
நான் விமானம் ஏறுனதுக்கு அப்புரம், என்னை இப்ப வரவேண்டாம்னு சொல்லி போன் பண்ணாங்களாம்.அதுக்கு வாய்ப்பு இல்லை நீங்க குடுகுடுப்பையை இன்னைக்கு சாயங்காலம் சிகாகோ ஏர்போட்ல பிக்கப் பண்ணிக்கங்க அப்படின்னு சொல்லிட்டாங்களாம். அதற்கு பின் நிறைய வெற்றிகள் தோல்விகள்.ஆனால் வாழ்க்கைப்பயணம் தொடரத்தான் செய்கிறது.
இந்த வாய்ப்பை நான் இழந்திருந்தாலும் இன்னோரு முறை எனக்கு கிடைத்துதான் இருக்கும் அல்லது இந்தியாவில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்.
இந்தமுறை சற்றே கடினமான உலகப் பொருளாதார நெருக்கடிதான், ஆனாலும் ஒருநாள் கண்டிப்பாக மீண்டு வரும்,அதுவரை தாக்குப்பிடித்தல் மட்டுமே இன்றைய தேவை, அதுவும் நடக்கும்.யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே.
19 comments:
//யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே.//
ஆமா..ஆமா
//
யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே.
//
சரியான கருத்து....நன்மையாய் ஆரம்பிப்பது தீமையில் முடிகிறது...மீண்டும் சரியாகும்...
வாழ்க்கையே ஒரு சக்கரம் மாதிரித்தான். மேலே போவதும், கீழே வருவதுமாகத்தான் இருக்கும்.
மேலே போகும் போது கீழே போக வேண்டும் என்ற நினைவு இருந்தால், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டு இருக்கும்.
உள்ளேன்!
//அமெரிக்க ரிட்டனும் சிங்கப்பூர் மொட்டையும். //
இந்த முறை பழமைபேசியார் ஸ்பெல்லிங் மிஷ்டேக் கண்டு பிடிக்க முடியாதபடி தலைப்பைத் தப்பில்லாமல் எழுதிட குடுகுடுப்பையார் வாழ்க !!
நல்லா இருந்தது. இந்த தடவை ஊருக்குப் போனால் (போக வேண்டாம். இங்கேயே குடியும் குடித்தனமுமாக செட்டிலாக வாழ்த்துக்கள் ) கொஞ்சம் காலை சாய்ச்சு சாய்ச்சு நடந்து ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு ஒரு பதிவு போட்டுடுங்க!!
//போய் ஒருவாரம் ஓய்வு, இந்த நாட்களில் ஒரு பொதுநல விரும்பி என்னோட நண்பர் ஒருவர்கிட்ட, என்ன உன் கூட்டாளிக்கு மொட்டை போட்டு அனுப்பிட்டாங்க போல, பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி போட்டுருப்பாங்க போலருக்கு, ஆனா நடையில ஒன்னும் வித்தியாசம் தெரியல கசையடியெல்லாம் இல்லை போலருக்கு, தன்னோட சந்தேகத்த சொல்லிருக்காரு.//
கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், கொஞ்சம் வேதனை தரும் செய்தி!
\\இந்தமுறை சற்றே கடினமான உலகப் பொருளாதார நெருக்கடிதான், ஆனாலும் ஒருநாள் கண்டிப்பாக மீண்டு வரும்,அதுவரை தாக்குப்பிடித்தல் மட்டுமே இன்றைய தேவை, அதுவும் நடக்கும்.யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே. \\
மிகவும் உண்மையே!
அற்புதமா எழுதி இருக்கிறீங்க... அதுவும் உந்த வயித்தெரிச்சல் காரரார படற பாடு இருக்கே சொல்லி மாளாது.. மற்றாக்கள் உன்னைப்பற்றி என்ன நெக்கிறாங்கள் எங்கிறது உன்னோட பிரச்சனையில்லை எண்டு பெரியாக்கள் சொன்னாலும் மனசு கேக்கமாட்டேங்குது... இதாலயே நான் பல முயற்சிகள் எடுக்காமல் தள்ளிப்போட்டிருக்கிறன்... எங்கயாவது விழுந்தா சிரிக்கிறதுக்குன்னு ஒரு நாய்க்கூட்டம் இருக்கு... அதுகளை கல்லாலடிக்கவேணும்...
உங்கட பதிவுகள் என்னப்போல ஆக்களுக்கு மிகவும் பிரயோசனமானது... ஏனெண்டா நாங்களும் ஒரு காலத்தில அமெரிக்காவில.கொஞசம் காசு சேக்கிற ஐடியா விலதான் இருக்கம்..... மேலும் மேலும் உங்கட அமெரிக்க சவால்களைப்பற்றி எழுதுங்கொ!
பதிவு நல்லாருக்கு குடுகுடுப்பையார். கடுப்பான விஷயம் தானே..அந்த பொறாமைக்காரர் மேட்டர்..ஆனா அதையும் ஜாலியா சொல்லியிருக்கீங்க! நசரேயனும் நீங்களும் ஒரே மாதிரியான விஷயத்தைச் பத்திதான்னாலும் சொன்ன விதம் இரண்டு பதிவுகளிலேயும் கலக்கல்!
சக்கரத் தத்துவம் புரிஞ்சுட்டா வாழ்க்கையே சக்கரக் கட்டிதான் :)
இந்தப் பொதுநல விரும்பிகள் தொல்லை தாங்க முடியல குடுகுடுப்பையாரே :)
நானும் உள்ளேன்!
//இந்த வாய்ப்பை நான் இழந்திருந்தாலும் இன்னோரு முறை எனக்கு கிடைத்துதான் இருக்கும் அல்லது இந்தியாவில் ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன்.//
இந்த வரிகளில் உங்கள் தன்னம்பிக்கை தெரிகிறது...
வருகைக்கு நன்றி
நசரேயன்.
அதுசரி
//
யாரோ செய்த தவறுக்கு நாம் பாதிக்கப்படுகிறோம், யாரோ சிலர் செய்த நன்மையினால்தான் இந்த வாய்ப்புகள் பெற்றோம் என்பதும் உண்மைதானே.
//
சரியான கருத்து....நன்மையாய் ஆரம்பிப்பது தீமையில் முடிகிறது...மீண்டும் சரியாகும்...//
பல தவறான முடிவுகள் தெரிந்தே கொள்ளை அடிக்க செய்யப்பட்டது.அவைகளை இனம் கண்டு சரி செய்ய வேண்டும்
இராகவன் நைஜிரியா said...
வாழ்க்கையே ஒரு சக்கரம் மாதிரித்தான். மேலே போவதும், கீழே வருவதுமாகத்தான் இருக்கும்.
மேலே போகும் போது கீழே போக வேண்டும் என்ற நினைவு இருந்தால், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டு இருக்கும்.//
இதற்கு தயார் நிலையில் நாம் இருக்கவேண்டும்
Seemachu said...
//அமெரிக்க ரிட்டனும் சிங்கப்பூர் மொட்டையும். //
இந்த முறை பழமைபேசியார் ஸ்பெல்லிங் மிஷ்டேக் கண்டு பிடிக்க முடியாதபடி தலைப்பைத் தப்பில்லாமல் எழுதிட குடுகுடுப்பையார் வாழ்க !!
நல்லா இருந்தது. இந்த தடவை ஊருக்குப் போனால் (போக வேண்டாம். இங்கேயே குடியும் குடித்தனமுமாக செட்டிலாக வாழ்த்துக்கள் ) கொஞ்சம் காலை சாய்ச்சு சாய்ச்சு நடந்து ஊர்ல என்ன பேசிக்கிறாங்கன்னு ஒரு பதிவு போட்டுடுங்க!!
//
நன்றி சீமாச்சு,பழமைபேசி
ஜோதிபாரதி said...
//போய் ஒருவாரம் ஓய்வு, இந்த நாட்களில் ஒரு பொதுநல விரும்பி என்னோட நண்பர் ஒருவர்கிட்ட, என்ன உன் கூட்டாளிக்கு மொட்டை போட்டு அனுப்பிட்டாங்க போல, பத்து பதினைஞ்சு நாளைக்கு முன்னாடி போட்டுருப்பாங்க போலருக்கு, ஆனா நடையில ஒன்னும் வித்தியாசம் தெரியல கசையடியெல்லாம் இல்லை போலருக்கு, தன்னோட சந்தேகத்த சொல்லிருக்காரு.//
கேட்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், கொஞ்சம் வேதனை தரும் செய்தி!//
நகைச்சுவையா எடுத்துக்க வேண்டியதுதான்
வருகைக்கு நன்றி
ஜமால்,
புல்லட் பாண்டி,
சந்தனமுல்லை,
தஞ்சாவூரான்,
அணிமா,
புதியவன்
ஹய்யோ.. நீங்க உங்க பழைய கதைய சொல்றீங்க...கடந்து வந்த பாதைய திரும்பி பார்கறீங்க....நான் இப்போ அனுபவிக்கறேன்..... இந்த வீணாப்போன அமெரிக்க எகானமில என் வேலையும் போச்சு. இன்னும் பதினைந்து நாள்ல வேலை வாங்கலைன்னா ஊருக்குதான் போகணும். புதுசா வாங்கின ஹோண்டா சிவிக்கை விக்கணும்..இந்தியால எனக்கு வேலையும் இல்ல.. அங்கேயும் மார்க்கெட் டல்.. ஆண்டவா காப்பாத்து...
Prakash CM said...
ஹய்யோ.. நீங்க உங்க பழைய கதைய சொல்றீங்க...கடந்து வந்த பாதைய திரும்பி பார்கறீங்க....நான் இப்போ அனுபவிக்கறேன்..... இந்த வீணாப்போன அமெரிக்க எகானமில என் வேலையும் போச்சு. இன்னும் பதினைந்து நாள்ல வேலை வாங்கலைன்னா ஊருக்குதான் போகணும். புதுசா வாங்கின ஹோண்டா சிவிக்கை விக்கணும்..இந்தியால எனக்கு வேலையும் இல்ல.. அங்கேயும் மார்க்கெட் டல்.. //
கண்டிப்பா மீண்டும் வேலை கிடைக்கும் நண்பரே. இது இப்படித்தான் எதிர்பாத்துதான் இருக்கனும்.
Post a Comment