Wednesday, March 4, 2009

சாப்ட்வேர் வேலை தேடிய மதுரைக்காரன்.

நடேசனும் தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்பியூட்டர் இஞ்சினியரிங் படிப்பை வெற்றிகரமாக முடித்தான். அவனுடைய கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வீவ் எல்லாம் கிடையாது. மென்பொருள் வேலை என்றால் அது தமிழகத்தில் சென்னையில் மட்டுமே கிடைக்கும் ஆகையால் அருப்புக்கோட்டையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தான். மதுரையிலேயே சாப்ட்வேர் கம்பெனியெல்லாம் இருந்தா நல்லாருக்கும், நம்ம ஏரியா சும்மா லந்தக்கொடுக்கலாம்.சென்னைக்கு இப்பதான் முதன் முறையா போறோம் என்ன ஆகும்னு தெரியலேயேங்கற கவலையோடு சென்னையை வந்தடைந்தான்.நண்பர்களின் உதவியோடு திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சனில் மாதம் 1000 ரூபாய் வாடகைக்கு தங்கினான்.

அங்கே இங்கே கேட்டு எப்படியோ ரெஸ்யூம் எல்லாம் பிரிப்பேர் பண்ணிட்டான். நண்பர்கள் சொன்னபடி consultancy முகவரி எல்லாம் எப்படியோ நண்பர்கள் வைத்திருந்த விசிட்டிங் கார்டு மூலம் சேகரிச்சு எல்லாருக்கும் ரெஸ்யூம் அனுப்பி வெச்சான்.

நடேசன்: மாப்பிள்ளை என்னடா ஒருத்தனும் கூப்பிடலை.

ராகவன்: ஒருத்தன் கூடவா கூப்பிடலை.

நடேசன்: ஒருத்தன் மட்டும் கூப்பிட்டான் இஸ்மாயில் ஹார்ட்வேர்ஸ் கன்சல்ட்டண்சிங்கற கம்பெனிலேந்து, ஆனா ஏன் பழைய இரும்பு கடைக்கு(காயிலாங்கடைக்கு) கம்பியூட்டர் பயோடேட்டாவா அனுப்பிச்சீங்கன்னு கேட்டாருடா.

ராகவன்: டேய் கூபே, அது நம்ம காயல்பட்டிணம் கீமியோடா சொந்தக்காரன் பழைய இரும்புக்கடை விசிட்டிங் கார்டுடா அதுக்குமா ரெஸ்யூம் அனுப்பி வைச்ச.

நடேசன்: கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன். சரி விடு ரொம்ப கடுப்பா இருக்கு உட்லண்ட்ஸ்ல விஜயகாந்த படம் போட்டிருக்கான் போயி சிரிச்சிட்டு வருவோம்.

ராகவன் : சரிடா, போவோம் டேய் அப்படியே ஜாவா கிளாஸ் போடா, ஜாவாவுக்கு நிறைய ஓப்பனிங் இருக்கு, ரெஸ்யூம்ல ஜாவா தெரியும்னு போடுறா. அப்படியே ஹிண்டு பேப்பர பாத்து ஜாவா கேக்கிறவனுக்கெல்லாம் அனுப்பி வைடா.

நடேசன்: சரிடா படிக்கிறேன்.மாப்பிள்ளை இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல ஒரே மாட்டுத்தொட்டி வாடை வருது.

ராகவன் : அதெல்லாம் சகிச்சிட்டு போடா மேன்சன் வாழ்க்கை அப்படிதான்.காசு இல்லாட்டி பொறி, வாழைப்பழம் சிகரெட், ஆனா வந்த நோக்கம் தவறக்கூடாது.
.................................

சில மாதங்கள் கழித்து.

நடேசன் : மாப்பிள்ளை நீ சொன்ன மாதிரி நிறைய ஓப்பனிங்ஸ் இருக்குடா ஹிண்டு பேப்பர்ல எல்லாத்துக்கும் அனுப்பிட்டேன்.மேட்ரிமோனியல் செக்சன்ல பெண்ணுக்கு ஜாவா தெரியும் அமெரிக்காவில் உள்ள மாப்பிள்ளை தேவைன்னு ஒரு விளம்பரம் இருந்தது அது தவிர ஜாவன்னு வந்த எல்லா விளம்பரத்துக்கும் இமெயில் அனுப்பிட்டேன்ண்டா.

ராகவன்: கவலைப்படாத வேலை கெடச்சிரும்.

............................

நடேசனை ஒரு பிரபலமான கம்பெனி நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர் அங்கே

ஹச்சார்: வாங்க நடேசன் உங்க ஸ்டெரெத் வீக்னஸ் என்ன?

நடேசன்: (மனசுக்குள்ளே) ஆந்திரா மெஸ்ல அடிச்சி வெரட்டுற வரைக்கும் சாப்பிடுவேன்னா சொல்லமுடியும். நான் நல்லா டீம்ல வேலை பாப்பேன். வீக்னெஸ்னா அடிக்கடி விஜயகாந்த படம் பாப்பேன்.

ஹச்சார்: உங்க மார்க்சீட் பாத்தேன் நீங்க நிறைய அரியர் வெச்சு பாஸ் பண்ணி இருக்கீங்க எங்க கம்பெனி பாலிஸி படி எங்களுக்கு கன்ஸிஸ்டண்ட் பெர்பார்மர்தான் தேவை.

நடேசன்: நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.

ஹச்சார்: ஆனா எட்டாவது செமஸ்ட்டர்ல எல்லாத்தையும் பாஸ் பண்ணி உங்க கண்ஸிஸ்டண்ஸி போச்சு, நீங்க போகலாம்.(மனசினுள்)வந்துட்டானுங்க மதுரைலேந்து.
-----------------------

திருவல்லிக்கேனி மேன்சன்:

ராகவன்: இண்டர்வியூ என்னடா ஆச்சு.

நடேசன்: கண்ஸிஸ்ட்டண்ட் பெர்மார்மன்ஸ் இல்லன்னு போக சொல்லிட்டாங்கடா.

ராகவன்: டேய் கவலைப்படாத நீ ஜாவால நல்லாதான் பண்றே, நல்ல திறமை இருக்கு உனக்கு எங்க கம்பெனில ஜாவா ஓப்பனிங்க் இருக்கு உன்னை ரெபர் பண்ணிருக்கேன் கெடச்சிடும், அதுக்கு அப்புறம் அடிச்சு ஆடுறா.

நடேசன்: மதுரைக்காரங்க தோத்துருவமா என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.

51 comments:

பழமைபேசி said...

//ராகவன்: டேய் கவலைப்படாத நீ ஜாவால நல்லாதான் பண்றே, நல்ல திறமை இருக்கு உனக்கு எங்க கம்பெனில ஜாவா ஓப்பனிங்க் இருக்கு உன்னை ரெபர் பண்ணிருக்கேன் கெடச்சிடும், அதுக்கு அப்புறம் அடிச்சு ஆடுறா.
//

இராகவன் வாழ்க!

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டுக்கலாமுன்னு ஓடி வந்தா பழமை முந்திகிட்டாரு:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.//

ஆடிருவோம்

ராஜ நடராஜன் said...

//இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல//

ஏனுங்க வியாபார ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்றீங்க!

Thamiz Priyan said...

மதுரக்காரன்னா என்ன இழப்பமா? இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

குடுகுடுப்பை said...

தமிழ் பிரியன் said...

மதுரக்காரன்னா என்ன இழப்பமா? இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

நான் மிகவும் மதிக்கும் ஊர்/ மக்கள் மதுரை.

மதுரைக்காரங்க தோத்துருவாம என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.

அ.மு.செய்யது said...

நடேசன்: நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.//

ஹா ஹா...ரசித்தேன்
குடுகுடுப்பையாரே !!!!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
இதெல்லாம் நல்லா இல்லை. என் பேரக்கெடுக்க கிளம்பிட்டாங்களா?
//

இதை நாங்க நேற்றைக்கே செய்தமே? நீங்கதான் வரலை....இஃகிஃகி!!

http://maniyinpakkam.blogspot.com/2009/03/03032009.html

Poornima Saravana kumar said...

//ஒருத்தன் மட்டும் கூப்பிட்டான் இஸ்மாயில் ஹார்ட்வேர்ஸ் கன்சல்ட்டண்சிங்கற கம்பெனிலேந்து, ஆனா ஏன் பழைய இரும்பு கடைக்கு(காயிலாங்கடைக்கு) கம்பியூட்டர் பயோடேட்டாவா அனுப்பிச்சீங்கன்னு கேட்டாருடா.
//

:)))

Poornima Saravana kumar said...

//கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன். சரி விடு ரொம்ப கடுப்பா இருக்கு உட்லண்ட்ஸ்ல விஜயகாந்த படம் போட்டிருக்கான் போயி சிரிச்சிட்டு வருவோம்.
//

ஹா ஹா....
நல்லா எழுதி இருக்கீங்க:)))

ஷண்முகப்ரியன் said...

//ஹச்சார்: ஆனா எட்டாவது செமஸ்ட்டர்ல எல்லாத்தையும் பாஸ் பண்ணி உங்க கண்ஸிஸ்டண்ஸி போச்சு, நீங்க போகலாம்.(மனசினுள்)வந்துட்டானுங்க மதுரைலேந்து.//

இந்த black humour எனக்குப் பிடித்தது.ஆனால் அந்தப் பையனுடைய நிலைமை? என்று தணியுமோ இந்தத் துயர்ம்?

குடுகுடுப்பை said...

வாங்க பழமையாரே.
ஆக்சுவலா ராகவன் தான் ஹீரோ. நம்ம நைஜீரியா ராகவன் அண்ணனுக்காக நடேசன ஹீரோவா மாத்திட்டேன்.

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

துண்டு போட்டுக்கலாமுன்னு ஓடி வந்தா பழமை முந்திகிட்டாரு:)

நன்றி

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

//கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.//

ஆடிருவோம்

இனிமே கொஞ்சம் சுறுசுறுப்பா ஆடனும்

குடுகுடுப்பை said...

அ.மு.செய்யது said...

நடேசன்: நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.//

ஹா ஹா...ரசித்தேன்
குடுகுடுப்பையாரே !!!!

நன்றி செய்யது.

யாத்ரீகன் said...

>>> பெண்ணுக்கு ஜாவா தெரியும் அமெரிக்காவில் உள்ள மாப்பிள்ளை தேவைன்னு ஒரு விளம்பரம் <<<

:-))))))))))))))))

குடுகுடுப்பை said...

Poornima Saravana kumar said...

//கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன். சரி விடு ரொம்ப கடுப்பா இருக்கு உட்லண்ட்ஸ்ல விஜயகாந்த படம் போட்டிருக்கான் போயி சிரிச்சிட்டு வருவோம்.
//

ஹா ஹா....
நல்லா எழுதி இருக்கீங்க:)))

நன்றி Poornima Saravana kumar

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

//ஹச்சார்: ஆனா எட்டாவது செமஸ்ட்டர்ல எல்லாத்தையும் பாஸ் பண்ணி உங்க கண்ஸிஸ்டண்ஸி போச்சு, நீங்க போகலாம்.(மனசினுள்)வந்துட்டானுங்க மதுரைலேந்து.//

இந்த black humour எனக்குப் பிடித்தது.ஆனால் அந்தப் பையனுடைய நிலைமை? என்று தணியுமோ இந்தத் துயர்ம்?//

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
நன்றி ஷண்முகப்ரியன்

இராகவன் நைஜிரியா said...

படிக்கும் போதே நினைச்சேன்...

ரொம்ப நாளைக்கு முன்னாடி, நம்மள வச்சு கதை எழுதறேன்னு சொன்னாரே, இப்ப எழுதிட்டாருன்னு.

//கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன்.//

அதானே கன்சல்டன்சின்னு போட்டு இருந்தா அனுப்பாம என்ன பண்ணுவாரு.

// நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.//

சூப்பர் பெர்பாமன்ஸ்...

இராகவன் நைஜிரியா said...

// பழமைபேசி said...

//ராகவன்: டேய் கவலைப்படாத நீ ஜாவால நல்லாதான் பண்றே, நல்ல திறமை இருக்கு உனக்கு எங்க கம்பெனில ஜாவா ஓப்பனிங்க் இருக்கு உன்னை ரெபர் பண்ணிருக்கேன் கெடச்சிடும், அதுக்கு அப்புறம் அடிச்சு ஆடுறா.
//

இராகவன் வாழ்க!//

நன்றி பழமைபேசி..

SPIDEY said...

haaa same blood here.

இராகவன் நைஜிரியா said...

//ராஜ நடராஜன் said...

//இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல//

ஏனுங்க வியாபார ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்றீங்க!//

வியாபரம் எல்லாம் நல்லா நடக்குதுங்களாப்பு........

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...

தமிழ் பிரியன் said...

மதுரக்காரன்னா என்ன இழப்பமா? இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.//

நான் மிகவும் மதிக்கும் ஊர்/ மக்கள் மதுரை.

மதுரைக்காரங்க தோத்துருவாம என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.//

அப்பு.. மதுரைகாரங்கள பாத்து கிண்டல் பண்ணுங்கப்பு... தங்ஸ் மதுரை... நீங்க அடிக்கிற கூத்துல என்னால அடிவாங்க முடியாது...

ஆமாம் சொல்லிபுட்டேன்

இராகவன் நைஜிரியா said...

// மேட்ரிமோனியல் செக்சன்ல பெண்ணுக்கு ஜாவா தெரியும் //

நல்ல வேலை... மாப்பிளைக்கு புல்லட் தெரியும் அப்படின்னு சொல்லாம விட்டீங்களே...

இராகவன் நைஜிரியா said...

// குடுகுடுப்பை said...

வாங்க பழமையாரே.
ஆக்சுவலா ராகவன் தான் ஹீரோ. நம்ம நைஜீரியா ராகவன் அண்ணனுக்காக நடேசன ஹீரோவா மாத்திட்டேன். //

ராகவன வில்லனா மாத்தாம விட்டீங்களே...

அதுக்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக.

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா.. நாமதான் 25 வது பின்னூட்டம்...

அது சரி(18185106603874041862) said...

//
நடேசன்: மதுரைக்காரங்க தோத்துருவாம என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்
//

அதான, மருதக்காரய்ங்களுக்கு அடிச்சி ஆட சொல்லியா தரணும்? ஆனா பாத்துப்பு...நாங்கெல்லாம் ரொம்ப அடி வாங்கிட்டோம்...அழுதுருவோம் :0))

குடுகுடுப்பை said...

யாத்ரீகன் said...

>>> பெண்ணுக்கு ஜாவா தெரியும் அமெரிக்காவில் உள்ள மாப்பிள்ளை தேவைன்னு ஒரு விளம்பரம் <<<

:-))))))))))))))))
March 4, 2009 12:20 PM /

நன்றி யாத்ரீகன்

புதியவன் said...

//நடேசன்: நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...

நட்புடன் ஜமால் said...

அந்த காயிலாங்கடை மேட்டரு நல்லா இரசித்து சிரித்தேன்

முரளிகண்ணன் said...

குடுகுடுப்பை மிக அருமை.

கலக்கிட்டீங்க

புல்லட் said...

செம காமெடி... ஆனா இன்னும் கொஞ“சம் எழுதி இருந்திருக்கலாம்...
வாழ்த்துக்கள்...

சந்தனமுல்லை said...

ROTFL!!

இதுக்கு அடுத்த பாகம் இருக்கா?!

ஷாஜி said...

/கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன்.//

-செம.. செம...

SK said...

பிரமாதம். ஆனா சட்டுனு முடிச்சா மாதிரி இருக்கு

Unknown said...

// நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்.. //

ரசித்தேன்..

Raju said...

\\வந்துட்டானுக மதுரலேர்ந்து\\
இதெல்லாம் நல்லா இல்ல பாசு!
மதுரக்காரன் Software வேலைக்கு வரக் கூடாதா?(மதுரக் காரன் என்ற முறையில்...)

ராஜ நடராஜன் said...

////இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல//

ஏனுங்க வியாபார ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்றீங்க!//

வியாபரம் எல்லாம் நல்லா நடக்குதுங்களாப்பு........//

ஏன் எதிர்த்தாப்புல கோரத்தேங்கா சட்னி கடை போடறுதுக்கா:)

வேத்தியன் said...

ஒரு புது பதிவு போட்டுள்ளேன்...
வந்து பார்க்கவும்...

நவநீதன் said...

// மதுரைக்காரங்க தோத்துருவமா என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம். //
எங்க ஊருகாரங்க தோத்துருவாங்களா... கண்டிப்பா அடிச்சி ஆடுவோம்.

மங்களூர் சிவா said...

//ஒருத்தன் மட்டும் கூப்பிட்டான் இஸ்மாயில் ஹார்ட்வேர்ஸ் கன்சல்ட்டண்சிங்கற கம்பெனிலேந்து, ஆனா ஏன் பழைய இரும்பு கடைக்கு(காயிலாங்கடைக்கு) கம்பியூட்டர் பயோடேட்டாவா அனுப்பிச்சீங்கன்னு கேட்டாருடா.
//

:)))

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் நன்றி

குப்பன்.யாஹூ said...

me the 43 rd

நசரேயன் said...

me the 44 th

RAMYA said...

//ராகவன்: டேய் கவலைப்படாத நீ ஜாவால நல்லாதான் பண்றே, நல்ல திறமை இருக்கு உனக்கு எங்க கம்பெனில ஜாவா ஓப்பனிங்க் இருக்கு உன்னை ரெபர் பண்ணிருக்கேன் கெடச்சிடும், அதுக்கு அப்புறம் அடிச்சு ஆடுறா.
//

அடிச்சு ஆடறதா அதுவும் ஜாவா???
நல்ல இருங்கப்பு !!!

RAMYA said...

//இன்னைக்கு சாப்பிட்ட அந்தக்கடைல இனிமே சாப்பிடக்கூடாதுடா, தேங்காய்ப்புண்ணாக்குல சட்னி அரைப்பான் போல//

அந்த சட்டினியை சாப்பிட்டு கொம்பு முளைச்சிடுச்சா எப்படி கண்டு பிடிச்சீங்க??

தொட்டி வாசனை எல்லாம் வச்சு கண்டு பிடிச்சதா சொல்லக் கூடாது.

RAMYA said...

//
//ஒருத்தன் மட்டும் கூப்பிட்டான் இஸ்மாயில் ஹார்ட்வேர்ஸ் கன்சல்ட்டண்சிங்கற கம்பெனிலேந்து, ஆனா ஏன் பழைய இரும்பு கடைக்கு(காயிலாங்கடைக்கு) கம்பியூட்டர் பயோடேட்டாவா அனுப்பிச்சீங்கன்னு கேட்டாருடா.
//

இது ரொம்ப ஓவர் குடுக்டுப்பையாரே
நண்பர் ஒன்னும் சரி இல்லை

RAMYA said...

//கன்சல்ட்டண்சின்னு போட்டிருந்துச்சு அதான் அனுப்பிட்டேன். சரி விடு ரொம்ப கடுப்பா இருக்கு உட்லண்ட்ஸ்ல விஜயகாந்த படம் போட்டிருக்கான் போயி சிரிச்சிட்டு வருவோம்.
//

காமெடி வராதுன்னு யாரோ சொன்னாங்களாம்.

ஆனா பிச்சி உதரராங்கப்பா, சிரிச்ச்சி சிரிச்சி ஒரே வயிறு வழிதான் மிச்சம்.

சூப்பர் அருமையா எழுதி இருக்கீங்க குடுகுடுப்பையாரே !!!

RAMYA said...

// நானும் கண்ஸிஸ்டண்ட் பெர்பாமர்தான், எட்டாவது செமஸ்டர் வரைக்கும் 7 அரியர் கண்ஸிஸ்டண்டா கேரி பண்ணிருக்கேன்..
//

இது போல் உண்மையை ஒத்துக் கொள்ள தனி தைரியம் வேணும்!!

RAMYA said...

//
// குடுகுடுப்பை said...

வாங்க பழமையாரே.
ஆக்சுவலா ராகவன் தான் ஹீரோ. நம்ம நைஜீரியா ராகவன் அண்ணனுக்காக நடேசன ஹீரோவா மாத்திட்டேன். //

ராகவன வில்லனா மாத்தாம விட்டீங்களே...

அதுக்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகுக.

//

நான் ஆரம்பிச்சு வைத்த பிரச்சனை இன்னும் தொடருதா ??

ஹா ஹா ஹா !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

//மதுரைக்காரங்க தோத்துருவமா என்னா? கண்டிப்பா அடிச்சி ஆடிருவோம்.//

அப்படி சொல்லுங்க நண்பா.. நம்ம ஊருக்காரப் பயலப் பத்தி எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..