Monday, March 30, 2009

பிரபல பதிவர்கள் இருவர் ஒரு மொக்கை அறிமுகம்.

ஹலோ நசரேயன் நாந்தான் குடுகுடுப்பை பேசறேன்.

நசரேயன்: சொல்லுங்க என்ன என்ன நடக்கு அங்க.

குடுகுடுப்பை : நான் சமீப காலமா படிக்க ஆரம்பிச்சிருக்கிற ரெண்டு பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

நசரேயன்: புதுமுகத்தைதானே அறிமுகப்படுத்துவாங்க, நீங்க பிரபலமான பதிவர்களை அறிமுகப்படுத்துறது கொஞ்சம் வேடிக்கையாவுள்ள இருக்கு.அதோட அறிமுகப்படுத்துறதுக்குன்னு ஒரு தகுதி வேணாமா ? அது உங்களுக்கு இருக்கா? சரி பரவாயில்லை யாரந்த அந்த பிரபலங்கள்.

குடுகுடுப்பை : ஆதாயம் இல்லாம ஆத்தைக்கட்டி இறைப்பமா நம்ம.அது புல்லட் பாண்டின்னு ஒரு யாழ்ப்பாணம் பதிவர். ரொம்ப பகடியா எழுதறாப்ள.

அதே சமயத்தில சமூக சிந்தனையோட யாழ்ப்பாணத்தை போருக்குப்பின் எப்படி மீள் கட்டமைப்பது பற்றியும் எழுதறாப்ள, .

திடீர்னு பறவை,விலங்குகள் மேல் காதல் கொள்கிறார், .

தன்னுடைய துறை சார்ந்தும் நல்லா எழுதுறார்.


பெண்கள்னா அவருக்கு கொஞ்சம் பயம் போல,அதுலேயும் ஈழப்பெண்கள் அவரு மேல பெரிய காண்டா இருக்காங்களாம், கல்யாணத்துக்கு பொண்ணு தேடிட்டு இருக்கீனம்.அதுனால தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க .

நசரேயன்: பாத்திரலாம் மாப்பிள்ளை எப்படி லெட்சணமா இருப்பாரா?

குடுகுடுப்பை : நல்லாதான் இருந்தாராம் ஆனா வில்லு படம் பாக்கப்போயி பல்லு போயிருசாம் இப்போ?

நசரேயன்: அது பரவாயில்லை, இவருக்கு ஏத்த பொண்ணு நெல்லைப்பெண்ணை டாவடிக்கும் வருகிற தின்னவேலி லெட்சுமிதான் இன்னும் கல்யாணம் ஆகலை அவங்களுக்கு நல்ல பொருத்தமா இருக்கும். இவ்ளோ பண்றோமே நமக்கு எதுனா கமிசன் உண்டா?

குடுகுடுப்பை : யாழ்ப்பாணம் கள்ளும், கருவாட்டுக்குழம்பும் வெச்சுத்தரேண்ணார். போதுமா?

நசரேயன் : அது போதுமே நமக்கு. அப்புரம் அந்த இன்னொருத்தர் யாரு?

குடுகுடுப்பை : அது லோக்கல் ஆளுதான், ரொம்ப பெரியவர்.சினிமா டைரக்டர். ஒருவர் வாழும் ஆலயம்னு நல்ல சினிமாவெல்லாம் எடுத்து இருக்கார். இப்போ பதிவுலகில் கலக்கிட்டு இருக்கார்.

இந்த முழுமை பதிவைப்பாருங்க எப்படி கலக்குறார்னு.


நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?

குடுகுடுப்பை : இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) படிச்சுப்பாருங்க, பாலச்சந்தரோட பிளம்கேக் ரேகா கணக்கில இளமை பொங்கி வழியுது.

நசரேயன் : வழியுதா? அப்ப ஒகே ?நமக்கு சினிமாவில ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

குடுகுடுப்பை : அவரு நமக்கு ரொம்ப குளோஸ்ப்பா டெய்லி போன்ல பேசுவோம், இப்பக்கூட ஒரு படம் எடுக்கிறது சம்பந்தமா பேசினோம், நான் உனக்கு ரெகமண்ட் பண்ணி இருக்கேன். இப்ப அவரு எழுதற கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்) கதையில வர்ற கன்னிகா மாதிரி யாப்பிலக்கணம் தவறாத பெண்தான் ஹீரோயின்.அத தாங்கிற வெயிட்டான ஒரு அண்ணன் ரோல் தேவைப்படுது அது நீங்க பண்றீங்க, பாசமலர்ல சிவாஜிக்கு கிடைச்ச மாதிரி நல்ல பேரு கிடைக்கும். அண்ணனா இருந்தாலும் நீங்கதான் ஹீரோ ஆனா உங்களுக்கு ஜோடி கிடையாது. கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.

நசரேயன்: என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்

குடுகுடுப்பை : ஒரு தயாரிப்பாளர் தேடிட்டு இருக்கார், நான் உங்களைத்தான் சொல்லி இருக்கேன், நீங்க தயாரிச்சாதான் அந்த ரோல் உங்களுக்கு அதுதான் ஒரே ஒரு கண்டிசன்.

நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.

குடுகுடுப்பை : போட்டிரலாம் ஆனால் அவரு பேர "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.

நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?

குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.

பிடிச்சிருந்தா ஒரு ஓட்டுதான் போடுங்களேன்.

38 comments:

எம்.எம்.அப்துல்லா said...

//ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு //

:))

Mahesh said...

இப்பிடிக் கூட அறிமுகம் செய்யலாமா? நல்லா இருக்கே....

நசரேயன் said...

//கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.//

ஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க

நசரேயன் said...

புல்லட் நல்லா புல்லட் மாதிரி எழுதுவாரு.
சண்முகநாதன் ஐயாவின் அறிமுகம் நன்று

Suresh said...

:-))) arumaiyana arimugam

பழமைபேசி said...

//அறிமுகப்படுத்தி ஒரு பதிவு போடலாம்னு //

தர்மதுரை அங்க மன்னிச்சுட்டேன்னு சொல்ட்டு வந்து, இங்க அதே தப்பைச் செஞ்சா எப்பிடி? இருங்க, குறும்பன்கிட்ட பத்த வெக்கிறேன். இஃகிஃகி!!

Poornima Saravana kumar said...

என்னது ஜோடி இல்லையா? சரி பரவாயில்லை அடுத்த படத்தில பாத்துக்குவோம்.எப்ப சூட்டிங் ஆரம்பம்
//

அதானே பார்த்தேன்... இன்னும் ஏதும் கேட்கலையேன்னு....

அது சரி(18185106603874041862) said...

//
போட்டிரலாம் ஆனால் அவரு பேர "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.
//

சீக்கிரமா எழுதச் சொல்லுங்கப்பு... தேவா ஐயாக்கிட்ட சொல்லி மீஜிக் நான் அரேஞ்ச் பண்றேன்...ஆனா பாட்டு சும்மா "கொத்தவால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி..." ரேஞ்சுக்கு இருக்கணும்..

புதுமை ஏசி அண்ணே....ம்ம்ம்ம்...இன்னும் என்ன வேடிக்கை...எடுங்க உங்க பழைய பால்பாயிண்ட் பேனாவ!!

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
அப்துல்லா
தமிழ்ப்பிரியன்
மகேஷ்
நசரேயன்
சுரேஷ்
பழமைபேசி
பூர்ணிமா
மற்றும்
அது சரி

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
வருகைக்கு நன்றி
அப்துல்லா
தமிழ்ப்பிரியன்
மகேஷ்
நசரேயன்
சுரேஷ்
பழமைபேசி
பூர்ணிமா
மற்றும்
அது சரி

March 30, 2009 4:11 PM
//

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை அண்ணாச்சி....

ச்சே இது ஒங்க வீடா...:0))

நட்புடன் ஜமால் said...

மாப்பு

ஆப்பு

யாப்பு

தூள்

ARV Loshan said...

பிரமாதம் போங்க.. நல்ல அறிமுகங்கள்.. அறிமுகப்படுத்த வேண்டிய இருவரை வெளிக் கொண்டுவந்துள்ளீர்கள்..

புதியவன் said...

//நசரேயன்: படத்தில நல்ல பலன் கிடைக்குமா?

குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.//

ஹா...ஹா...ஹா...என்ன இதெல்லாம் சிரிக்க முடியலப்பா...

Unknown said...

அருமையான இரு பதிவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.

சந்தனமுல்லை said...

// "புதுமை ஏசி"ன்னு மாத்தி நல்ல குத்துப்பாட்டா போடச்சொல்லிருவோம்.//

:-)) பழமொழியை பாட்டா மாத்திடுவாரோ!

//ஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க//

இல்லை..இல்லவே இல்லை.. ”எட்டணா இருந்தா “ - இந்த பாடல் என் நினைவுக்கு வரவே இல்லை! :-))

குடுகுடுப்பை said...

பத்து வோட்டு வாங்கியும் தமிழிஸ்ல பாப்புலர் ஆக மாட்டேங்குது,செந்தழல் ரவியண்ணே எதாவது பாத்து செய்யுங்க

புல்லட் said...

ஏலேய்..... உங்கள சும்மா வுடமாட்டேன்லே!
என் டவுசரையா உருவுறீங்க... :)

(எனக்கு பிடித்த தமிழில்கர்ச்சித்திருக்கிறேன்:) ..)

எப்பிடி நெச்சு போட்டீங்களோ தெரியாது ..ஆனா இந்த பதிவு நமக்கு பப்ளிசிட்டிதான் ஹிஹி! ரொம்ப டாங்சுபா!

குடந்தை அன்புமணி said...

வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துகள்!

ராஜ நடராஜன் said...

இது மூளையக் கசக்கிப் போட்ட பதிவா அல்லது அப்படியே சரளமா கற்பனை பிரவாகம் எடுக்குதா:)

ராஜ நடராஜன் said...

வில்லுப்பார்க்கப் போய் பல்லுபோகப் பார்த்த கதை புல்லட் பாண்டி...

நலலா அறிமுகம் செய்றீங்க போங்க:)

ராஜ நடராஜன் said...

//நசரேயன்: சரி பண்ணிரலாம், அப்படியே பழமைபேசி அண்ண்னை பாடல் ஆசிரியரா போட்டிருங்க.//

சரியான தேர்வு:)படம் 101 நாள் நிச்சயம்.

ராஜ நடராஜன் said...

ஷண்முகப் பிரியன் அறிமுகத்திற்கு நன்றி.

வால்பையன் said...

இத பத்தியெல்லாம் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே குடுகுடுப்பை!

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
//கன்னிகா மாதிரி ஒரு பொண்ணுக்கு ஜோடியா ஒரு யூத் தேவைப்பட்டதால் என்னை நடிக்க சொல்லி இருக்கார்.கதைப்படி எட்டு டூயட் சாங் இருக்கு.//

ஒரு கனவு குத்து பாட்டாவது எனக்கு கொடுங்க

//

ஹா.ஹா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

ஷண்முகப்ரியன் said...

எனக்கே தெரியாமல் எனக்கு இவ்வளவு குஷியான அறிமுகமா? நன்றி.நன்றி.நன்றி,குடுகுடுப்பை சார்.

//நசரேயன் : வயசு 57ன்னு போட்டிருக்கு? ஒருவர் வாழும் ஆலயம் அப்படின்னு நல்ல படம் வேற எடுத்துருக்காருன்னு சொல்றீங்க,நமக்கு ஏத்த மாதிரி இளமையா படம் எடுப்பாரா?//

இளமையைப் பற்றிப் படிக்கும் போது எனக்கு பழைய நினைவு ஒன்று வருவதை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் ஈரோடு காகித ஆலையில் பணியில் சேர்ந்த புதிதில் அங்கு இருந்த மனமகிழ் மன்றத்தின் சார்பில் ஒரு நாடகப் போட்டி நடந்தது. எனக்கு வயது அப்போது இருபதோ இருபத்தொன்றோ இருக்கும். நண்பர்களின் விளையாட்டான வேண்டுகோளுக்கு இணங்க நான் எனது முதல் எழுத்தாக 'விளிம்பு' என்ற நாடகத்தை எழுதி இயக்கவும் செய்தேன்.அதற்குத் தலைமை தாங்க வந்த திரைப் பட நடிகர் திரு.ஷ்ரிகாந்த் அவர்கள் என்னை ஒரே வாரத்தில் சென்னைக்கு அழைத்தார்.சின்னப் பையனாகத் திரு திருவென்று முழித்தபடியே சென்னை சென்ட்ரலுக்கு வந்திறங்கிய என்னை அவரது காரிலேயே அழைத்துச் சென்று இயக்குநர்கள் தேவராஜ்-மோஹனிடம் அறிமுகப் படுத்தினார்.அதுதான் நான் கதை வசனம் எழுதிய எனது முதல் திரைப் படமான 'உறவாடும் நெஞ்சம்'முதல் கதையே திரைப் படம் ஆன விந்தை கூடப் புரியாத வயது எனக்கு.அதுவும் திருவாளர்கள் சிவகுமார்,எஸ்.வி.சுப்பையா,
ஷ்ரிகாநத் ,தேவராஜ்-மோஹன்,இளையராஜா போன்ற முன்னனணிக் கலைஞர்களுடன் பண்யாற்ற வேண்டிய சூழல்.
கதையைக் கேட்ட எஸ்.வி சுப்பையா அவர்கள் கதையின்,காட்சிகளின் புதுமையில் லயித்து 'யாருப்பா ஆசிர்ய்ர்?'என்று கேட்க(அன்றைய நடிகர்கள் கதாசிரியரை 'ஆசிரியர்'என்றுதான் மரியாதையுடன் அழைப்பார்கள்.)
'அண்ணே இவன்தாண்ணே நீங்க கேட்ட 'ஆசிரியர்''என்று சிவகுமார் அண்ணன் என்னைக் கொண்டு போய் எஸ்.வி.சுப்பையா முன்னால் நிறுத்தினார்.ஒருகணம் நம்ப முடியாமல் அவரது 'பாரதி'பார்வையில் என்னைப் பார்த்த அந்த முதிர்ந்த நடிகர் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டு 'வாழ்க, வாழ்க ' என்றார்,உண்ர்ச்சிவயப் பட்டு.
எதற்கு இந்த நிகழ்ச்சியைச் சொல்கிறேன் என்றால் எனது இளமை முழுதும் என்னை விட மூத்தவர்களிடமும் ,இப்போது எனது முதிர்ந்த வயதில் என்னை விட இளைய முப்பது வயதை ஒட்டிய நண்பர்களிடமுமே பழகுகிற வாழ்க்கை எனக்கு.ஆம்.இன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.
Like this year Oscar nominated movie,in one way,I am 'a peculiar case of Benjamin Button'!

இளமையும்,முதுமையும் மனதிலும் ,சூழ்நிலையிலுமே உள்ளது என்பதற்கு நானே உதாரணம்.
பொறுமை காத்த அனைவருக்கும் எனது தாழ்மையான வண்க்கங்கள்.
ONCE AGAIN THANK YOU KUTUKUTUPPAIYAARAE,TO GIVE ME THIS OPPURTUNITY OF SHARING MY MEMORIES.

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி, அப்படியே அவர்களது தளங்களையும் படியுங்கள்.

நசரேயன் said...

//குடுகுடுப்பை said...

பத்து வோட்டு வாங்கியும் தமிழிஸ்ல பாப்புலர் ஆக மாட்டேங்குது,செந்தழல் ரவியண்ணே எதாவது பாத்து செய்யுங்க
//

ஆமா.. எனக்கு 15 ஓட்டு தேவை படுது

குடுகுடுப்பை said...

ராஜ நடராஜன் said...

இது மூளையக் கசக்கிப் போட்ட பதிவா அல்லது அப்படியே சரளமா கற்பனை பிரவாகம் எடுக்குதா:)/

இருந்தாதானே கசக்க,

நான் எழுதறது சும்மா எந்தக்கட்டுப்பாடும் (தரம் உட்பட) இல்லாமல் தோன்றுவதை கிறுக்குவது

குடுகுடுப்பை said...

புல்லட் பாண்டி said...

ஏலேய்..... உங்கள சும்மா வுடமாட்டேன்லே!
என் டவுசரையா உருவுறீங்க... :)

(எனக்கு பிடித்த தமிழில்கர்ச்சித்திருக்கிறேன்:) ..)

எப்பிடி நெச்சு போட்டீங்களோ தெரியாது ..ஆனா இந்த பதிவு நமக்கு பப்ளிசிட்டிதான் ஹிஹி! ரொம்ப டாங்சுபா!//

பொண்ணு புடிச்சிருக்கா?

மனுநீதி said...

//குடுகுடுப்பை :ம்ம் கிடைக்கும் எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு.//

குடுகுடுபையாரே இது சூப்பர்

shanmughapriyan சார், நீங்க கடந்து வந்த பாதைகள் பத்தி ஒரு தொடர் எழுதினா நல்லா இருக்கும்.

வில்லன் said...

மொத்ததுல ரெண்டு வேலை இல்லாத வெட்டி பயலுங்க முப்பது நிமிடமா மொக்கை போன்ல போட்டு போன் பில் மட்டும் ஏறினதுதான் மிச்சம்னு சொல்லுங்க!!!!!!!!!! அப்படிதானா????????

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

//தமிழ்நாட்ல ஒரு பொண்ணு பாக்க சொல்லி இருக்கார்.திருநெல்வேலிப்பக்கம் எதுனா பொண்ணு இருந்தா சொல்லுங்க//

நசரேயன் ஊருலயா]!!!!!!!!!!!!!!!! ஐயோ!!! ஏங்க இப்படி ஒரு காண்டு புல்லட் பாண்டி மேல. பாத்தா வாய் இல்லா பூச்சி மாதிரி இருக்காரு. ஆனா திருநெல்வேலி காரங்களுக்கு ரெண்டு வாய் ஆசே (வயாடின்னு பெறேடுதவங்க).... எப்படி சமாளிப்பார்.....

பின் குறிப்பு : நசரேயன் ஊரு பொண்ணுங்க எல்லாம் அவரோட கலருல பொட்டி போடுறவங்கள இல்ல இருபாங்க.

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

எனக்கு யாப்பு உங்களுக்கு ஆப்பு

சபாஸ் சரியான பஞ்ச்!!!!!!!!!!!!!!!!!!!!

வில்லன் விமர்சன குழு

வில்லன் said...

வில்லன் கேரக்டர் இருந்தா எனக்கு சிபாரிசு பண்ணுவிங்களா.... ஏன்னா, வில்லனுக்கு தான் நல்லா சான்ஸ் கெடைக்கும் ஹீரோவ விட. ஹீரோக்கள் எப்பவுமே தியாகிகள் தான்.

வில்லன் விமர்சன குழு

குடுகுடுப்பை said...

உம்மை சேக்கலாம்னுதான் இருந்தேன், படத்துல கன்னிகாவோட டூயட் எனக்கு மட்டும்தான் இருக்கனும்கிறதால நோ வில்லன்.

வில்லன் said...

//ஷண்முகப்ரியன் said...

இன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.//

அப்படின்னு யாரு சொன்னா... அநேகமா எல்லாருமே உங்க வயசுதான். நம்ம ஊரு நடிகை மாதிரி ......தலைக்கு டையும் வயச கொறச்சி போட்டும் இருகாங்க படுபாவிங்க. நசரேயன் எல்லாம் பேரன் பேதி கண்டவரு... ஏன்னா மூணு வயசுலேயே காதலிச்சு அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணினவரு.

ஷண்முகப்ரியன் said...

ஷண்முகப்ரியன் said...

இன்று நான் பழகும் நண்பர்களில் ஒருவர் கூட என் வயதை ஒத்தவர்கள் இல்லை.//

அப்படின்னு யாரு சொன்னா... அநேகமா எல்லாருமே உங்க வயசுதான். நம்ம ஊரு நடிகை மாதிரி ......தலைக்கு டையும் வயச கொறச்சி போட்டும் இருகாங்க படுபாவிங்க. நசரேயன் எல்லாம் பேரன் பேதி கண்டவரு... ஏன்னா மூணு வயசுலேயே காதலிச்சு அஞ்சு வயசுல கல்யாணம் பண்ணினவரு.//

:))):))):))):)))!