Saturday, January 19, 2013

கொண்டியார(ன்)கள்ளி.(3)


காலைக்கடனை அப்பனின் ஆனைப்படி சொந்த வயலில் முடித்துவிட்டு , ஊரான் வீட்டு வேப்ப மரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்கிவிட்டு குளத்திற்கு குளிக்க வந்திருந்தான் பழனி, குளக்கரையில் ஊர்க்காரர்கள் அவனிடம் பேச்சுக்கொடுத்தார்கள்.

”என்னடா பழனி உங்கண்ணங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி, உனக்குன்னே பொறந்த ங்கொத்தை மவ வேற சமைஞ்சி இருக்கா அடுத்து உனக்குத்தான் கால்கட்டு போடப்போறாங்க, கொஞ்சம் சாராயம், சீட்டாட்டத்தையெல்லாம் குறைச்சிக்கடா , சூதாடிப்பயன்னு பொண்ணு கொடுக்க முடியாதுன்னு சொல்லிருவாங்க”

”அட நீங்க வேற அவள நான் கோடி ரூபா கொடுத்தாலும் கட்டமாட்டேன், இவங்க என்னா என்னை சூதாடிப்பயன்னு சொல்றது”

”ஏண்டா, அவ ஆளு கலரா தளுக்கு, புளுக்குன்னுதானட இருக்கா”

” அவ ஒரு கன்னத்த அறுத்து நம்மூருக்கு விருந்து வெச்சிரலாம், இன்னொரு கன்னத்தை அறுத்து அவங்க ஊருக்கும் விருந்து வெச்சு மிஞ்சி போயிரும்”

”என்னமோ போடா நாலு எழுத்து படிச்சிருக்கா, நீ வேண்டாம்கிற”

”படிச்சி என்ன பண்றது, வாசல்ல கலர் கலரா கோலம் போடலாம்.”

இப்படியாக குளக்கரை பேச்சு ஓடிக்கொண்டிருக்கையில், அரக்க பரக்க ஓடிவந்தான் கடைக்குட்டி எருமை திருப்பதி. வந்த வேகத்தில் அண்ணனிடம் வீட்டில் அம்மாவுக்கும், அண்ணிகளுக்கும் நடக்கும் சண்டையைச் சொன்னான். இருவருமாக உடனடியாக வீட்டுக்குத் திரும்பினர்.

சின்னப்பொண்ணு தன் அம்மாவிடம் தானே சாணி அள்ளுகிறேன், என்று சொல்லிவிட்டாள், அண்ணிகளும் தாங்களும் ஒத்தாசையாக இருக்க ஒத்துக்கொண்டதால் பிரச்சினை அப்போதைக்கு ஓய்ந்திருந்தது. அந்த நேரத்தில் நடுவீட்டு முனியன் அங்கே வந்தான், தன் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு ஒத்திக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டான்.

முனியனின் நிலம் இவர்களின் நிலத்தோடு ஒட்டியது, முனியன் அடகு வைத்துவிட்டு திருப்பும் தகுதியிம் மிகக்குறைவு என்பதை நன்கறிந்த கொண்டியாரகள்ளியும்/ கொண்டியாரனும் சேர்ந்து பணம் நாங்க இன்னும் இரண்டு வாரத்தில் தர்றோம் என்று முனியனிடம் வாக்கு கொடுத்தனர்.

”பணம் குடுக்குறமுன்னு சொல்லியாச்சு, வீட்ல முப்பது ரூபாய் இருக்கு இன்னும் எழுபது ரூபாய் பிரட்டனும் ” -- கொண்டியாரன்

“ பணம் இல்லாம எப்படி கொடுக்க முடியும், ஏன் அவசரப்பட்டு வாக்கு குடுத்த ” மூத்தவன் ரவி.

” உன் பொண்டாட்டி நகைய வாங்கி அம்பது ரூபாய்க்கு அடகு வெச்சு திருப்பலாமேடா” கள்ளி

“ என் கிட்ட நேத்தைக்கு நாட்டுத்திருவிழால சீட்டாட்டத்தில செயிச்ச இருபது ரூபா இருக்கு அதை நான் தரேன், நிலத்தை இப்ப ஒத்திப்புடிச்சா அவன் கண்டிப்பா வித்திருவான்” --- பழனி

“ ஒரு நாளைக்கு இருபது ரூபா செயிக்கலாமாடா, அப்ப இன்னைக்கு திருவிழால ஆடி அம்பது ரூபா செயிச்சா பணம் குடுத்துரலாம்டா”-கள்ளி

”யம்மா இது வெட்டாட்டம் இருபது பணத்த வெச்சி அம்பதெல்லாம் செயிக்கமுடியாது” பழனி

“வீட்ல இருக்கிற முப்பதையும் எடுத்துட்டுப் போடா , உன் தம்பியவும் கூட்டிக்க சீட்டு கீட்டு பாத்து சொல்லுவான், எப்படியாச்சும் நாளைக்கு லட்ச ரூவாயோட வாடா ” கொண்டியாரன்

“ என்ன பேசறீங்க எல்லாம் , இப்படி சூதாடி அந்த நிலத்தை வாங்கனுமா? இருக்கிற காசும் சூதுல போச்சுன்னா என்ன பண்ணுவீங்க” ரவி

“ நீ படிச்சவன் இப்படிதான் பேசுவ , நான் பல வருசமா சீட்டாடுறேன், சொந்தமா டோக்கன் விட்டெல்லாம் காசு பாத்திருக்கேன், யப்பா நீ பணத்தைக்கொடு நான் ஒரு லட்ச ரூபாய் காசோட வரேன், திருப்பதி , அந்த குருதுக்குள்ள பத்து டிசைன்ல டோக்கன் வெச்சிருக்கேன் அதை எடுத்துக்கிட்டு என் கூட வா, களத்துல என்ன கலர்/டிசைன் டோக்கன் போடுறாங்கண்ணு பாத்து, நம்மகிட்ட அதே டோக்கன் இருந்தா இறக்குவோம், பணமே இல்லாம ஜெயிப்போம்” என்றான் பழனி

தொடரும்...

19 comments:

முகிலன் said...

(கொண்டியார)கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி போகுது..

குடுகுடுப்பை said...

அஞ்சு பாகத்துல முடிக்கனும்னு நினைச்சேன். கண்டிப்பா முடியாது போல இருக்கு, இனி மணிரத்தினம் பட டயலாக் மாதிரி சுருக்கவேண்டியதுதான்

முகிலன் said...

//குடுகுடுப்பை said...
அஞ்சு பாகத்துல முடிக்கனும்னு நினைச்சேன். கண்டிப்பா முடியாது போல இருக்கு, இனி மணிரத்தினம் பட டயலாக் மாதிரி சுருக்கவேண்டியதுதான்
//

அப்பிடியெல்லாம் சுருக்கிறாதீங்க தல. அப்புறம் சுவாரசியம் கொறஞ்சிரும்..

அது என்ன அஞ்சு பாகத்துல முடிக்கிறது? விலா(நோக சிரிக்கிற) வாரியா எழுதுங்க..

பித்தனின் வாக்கு said...

கதை அருமை(எருமை). நல்ல சொல்லாடல்,கிராமிய மணத்துடன் திகழ்கின்றது. நன்றி அய்யா.

வானம்பாடிகள் said...

அது பாகம் போனா பரவாயில்லைங்க. கதைக்கு உயிரோட்டம் பேச்சு நடை எழுத்து. வசனத்தை குறைக்காதீங்க. :)

எம்.எம்.அப்துல்லா said...

:)

தாரணி பிரியா said...

இடம் வாங்குவாங்களா இல்லையா

சந்தனமுல்லை said...

:-))

/அவ ஒரு கன்னத்த அறுத்து நம்மூருக்கு விருந்து வெச்சிரலாம், இன்னொரு கன்னத்தை அறுத்து அவங்க ஊருக்கும் விருந்து வெச்சு மிஞ்சி போயிரும்”/ஏன் இத்தனை டெரர்!!!

கலகலப்ரியா said...

ஐயையோ... சஸ்பென்ஸ் தாங்க முடியலையே... அநேகமா அந்த பணத்த தொலைச்சிடுவாங்க சீட்டாட்டத்ள.. :-? பார்ப்போம்..

Vidhoosh said...

suspense.... :(

நசரேயன் said...

சுவாரசியம் தலைவரே.. எதையும் சுருக்க வேண்டாம்.. போகிற வரைக்கு போகட்டும்

குடுகுடுப்பை said...

nandri

வில்லன் said...

//“ என்ன பேசறீங்க எல்லாம் , இப்படி சூதாடி அந்த நிலத்தை வாங்கனுமா? இருக்கிற காசும் சூதுல போச்சுன்னா என்ன பண்ணுவீங்க” //

சூதுல வர்ற காசு வந்த மாதிரியே போயிடும்ல????????

வில்லன் said...

//“ என்ன பேசறீங்க எல்லாம் , இப்படி சூதாடி அந்த நிலத்தை வாங்கனுமா? இருக்கிற காசும் சூதுல போச்சுன்னா என்ன பண்ணுவீங்க” //

சூதுல வர்ற காசு வந்த மாதிரியே போயிடும்ல????????

வில்லன் said...

/ முகிலன் said...


(கொண்டியார)கள்ளிக்காட்டு இதிகாசம் மாதிரி போகுது..//

அண்ணாச்சி ஒரு முடிவோட தான் இருக்காரு........ "கொண்டியார(ன்)கள்ளி தினத்தந்தி சிந்துபாத் மதிரிபோகும்...... மெகா தொடர்...

ராஜ நடராஜன் said...

பாதி சீட்டு ஜெயிச்சிட்டோமில்ல:)

தஞ்சாவூரான் said...

கலக்குறீங்க! இப்பத்தான் பாகம் 2 பாத்துட்டு, ஒரே மூச்சுல மூணும் முடிச்சாச்சு. சுருக்காதீங்க. ரெண்டு பாகம் கூட கொறச்ச வந்தாலும் பரவால்ல. அருமையா போவுது!!

river livejobs said...

தமிழ் இணையதளம், ஆன்மிகம், சித்தர்கள் கதை, மருத்துவ குறிப்புகள், குறுங்கதைகள், சமையல் குறிப்புகள் - பற்றிய மனிதனுக்கு தேவையான
அனைத்தும் ஒரே இணையத்தில்....
www.tamilkadal.com

river livejobs said...

போலி சாமியார்கள் – கோரக்கர்
துறவியப்போல் வேடம் இட்டு காம இச்சைக் கொண்டு அலைவார்களாம். யந்திர தகடுகளை பரப்பி மேலிட்டு தபசியை போல் பாசாங்கு செய்வார்களாம். எப்போதும் பெண்கள் பக்கம் பார்த்து பெண்னாசை பிடித்து அலைவார்களாம்,அவர்களை பேயர்கள் என்கிறார். பூரணம் என்றால் என்ன என்று கேட்டால் வாயில் வந்தபடியெல்லாம் பேசி மக்களை ஏமாற்றி மயக்கிடுவார்களாம்.
இவ்வாறு கோரக்கர் பல்லாயிரம் அண்டுகளுக்கு முன்னரே போலி சாமியார்களை பற்றி கூறிவிட்டார்
http://www.tamilkadal.com/?p=1144