Friday, January 11, 2013

கொண்டியார(ன்)கள்ளி.(2)

முன்குறிப்பு: ஒரு சிறு தொடர் எழுதும் முயற்சி, தொடரில் வரும் கதாபாத்திரங்களில் சில மிகவும் ஆபாசமான சொற்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் இக்கதைக்கு உள்ளது. என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் பெண் வாசகர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம். இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

கொண்டியார(ன்)கள்ளி.(1)

" பால் குடுக்க நேரமாச்சு, குடுத்துப்புட்டு அப்படியே அவன் கிட்டயே ஒரு டீய குடிச்சிட்டு வந்திருங்க"

"சரி "
------------------------
டீக்கடை:
--------------------
"என்ன கொண்டியாரே இவ்ளோ லேட்டாவா பால் கொண்டு வருவ, பால் இல்லாம எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டிருக்கோம்".

" எந்த வல்லார ஓழிப்பய வீட்டு மாடோ முட்டி ரவையில கண்ணுக்குட்டியை அறுத்துவிட்டிருச்சு, நடுச்சாமத்திலதான் புடிச்சி கட்டுனேன் அதுக்குள்ள அது நல்லா பால குடிச்சிருச்சிடா, அதான் கொஞ்சம் நேரம் கழிச்சி பால் பீச்ச வேண்டியதாப்போச்சு"

" என்னய்யா பால் இது , எருமைப்பால்னா ஒன்னுக்கு நாலு எட கட்டலாம், நீ மொட்டத்தண்ணியா குடுக்கிற, இடையவீட்ல வாங்குற பசும்பாலே கெட்டியா இருக்கு ஒன்னுக்கு மூனு எட கட்டுறேன், இப்படி தண்ணிய ஊத்தி தடியால அடிச்சு குடுத்தா, நீ பால் குடுக்கிறத நிப்பாட்டிக்க"

" தண்ணியெல்லாம் ஊத்தலடா, எடப்பய வீட்டைச்சுத்தி கள்ளி இருக்கு,அவன் எதுவும் கள்ளிப்பால கலந்து ஊத்துரானோ என்னமோ"

"இந்த எடக்குக்கு ஒன்னும் கொறச்ச இல்ல, சரி இந்தா உன் டீ, குடுக்கிற தண்ணிப்பாலுக்கு ஓசில டீ வேற"

கடையில் டீக்குடிக்க வந்த சிலரும் கொண்டியாரனிடம், அவரின் மகன்களின் திருமணம் குறித்து விசாரித்தனர்.

"என்னய்யா மூத்தாளுக்கு குடிக்காடு மாடி வீட்டுப்பொண்ணாம்ல, யோகந்தான்யா உனக்கு"

"மூத்தவன் பள்ளிக்கூடம் போனதுனால பொண்ணு அமைஞ்சி போச்சு, சந்திரனுக்குதான் நம்ம நாட்ல ஒருத்தனும் கொடுக்கலங்கிறான், மாட்டுத்தரவு ரெங்கன் மூலியமா கீழச்சீமைல பாக்கிறோம், ஒரு இடத்தில தரேன்னு சொல்றாங்க, கொஞ்சம் வசதியில்லாத இடம், இரண்டு ஏக்கர் நிலந்தான் இருக்காம், மாடு கண்ணெல்லாம் ஒன்னும் இல்லையாம், காய்கறி,கிழங்கு வெவசாயம் பண்ணி டவுன்ல வித்து பொழப்பு நடத்துறாங்களாம், கொஞ்சம் வசதியான இடமா பாக்கச்சொல்லிருக்கேன், ஒன்னும் அம்புடலன்னா இதையே முடிக்கவேண்டியதுதான்"

"என்னய்யா மாட்டுத்தரவுகாரன பொண்ணு பாக்க சொல்லிருக்க, கல்யாணத்தரகர் இருந்தா பாக்கவேண்டியதுதானே?"

"நீ வேற வெவரம் புரியாம, அதெல்லாம் டவுண்காரங்களுக்குதான் சரியா வரும், இவனுக்கு மாடு இருக்கிற வீடெல்லாம் தெரியும், அங்கே உள்ள பொட்டப்புள்ளைகளையும் தெரியும் , இவந்தான் நமக்கு சரியான ஆள்".

ரோட்டில் கொண்டியாரனின் மூன்றாவது மகன் பழனி உழவு மாடு கலப்பையோடு நடந்து போய்க்கொண்டிருக்கிறார், அவரை கொண்டியாரன் டீ குடிக்க அழைக்கிறார்.

"நீ குடுக்கிற பாலுக்கு ரெண்டு டீ ஓசில குடிச்சா எப்படி , ரொம்ப அநியாயமா இருக்குய்யா ஒன்னோட" என்று புலம்பினான் டீக்கடைக்காரன், பிழைப்பு நடத்த வந்தவனால் புலம்ப மட்டுமே முடியும்.

--------
சில மாதங்கள் அலைந்தும், கடுமையான உழைப்பாளியாக இருந்தும் பள்ளிக்கூடம் போகாத சந்திரனுக்கு, கொண்டியாரனும் , கள்ளியும் எதிர்பார்த்தது போல் வசதியான வீட்டுப்பெண் அமையவில்லை,முடிவில் கீழைச்சீமை ஏழைப்பெண் வசந்தாவே முடிவானது, இரண்டு திருமணத்தால் வீட்டில் இட நெருக்கடி ஏற்படும் என்பதால், ரோட்டோரம் இருந்த மனையில் சிறிதாக ஒரு ஓட்டு வீடும் கட்டினார்கள். ஒரு நல்ல நாளில் ரவிக்கும், மாடி வீட்டு இந்திராவுக்கும், சந்திரனுக்கும் குச்சிவீட்டு வசந்தாவிற்கும் திருமணமும் ஒரே முகூர்த்தத்தில் நடந்தது.

கல்யாணத்துக்கு பின்னர்:
-------------------------------------------

"விடிஞ்சி வெயில் எரிக்க ஆரம்பிச்சிருச்சி, இன்னும் என்னடி பண்றீய வீட்டுக்குள்ள , இனிமே என் மவ சாணி அள்ளமாட்டா, நீங்க ரெண்டு பேருந்தான் அள்ளனும் " கொண்டியாரகள்ளி.

"எங்க வீட்ல நான் சாணியெல்லாம் அள்ளுனது இல்லை, வேலையாள்தான் செய்வாங்க, " ரவியின் மனைவி இந்திரா

"ம்க்கூம் நீ மாடி வீட்ல பொறந்தவ பெரிய இந்திராகாந்தியம்மா, அவ மாடே இல்லாத வீட்ல பொறந்தவ அவளும் அள்ள மாட்டா"

"யம்மா , சின்னப்பொண்ண இன்னைக்கு அள்ளிப்போடச்சொல்லு, அப்படியே இவங்களும் ஒத்தாசையா இருப்பாங்க, புதுசு பழக்கம் இல்லாதவங்க கொஞ்சம் கொஞ்சமா சரியாயிடும்"

"என் மவ இவளுகளுக்கு வேல பாக்க முடியாது, அவளுகதான் அள்ளனும், யோவ் என்னய்யா பொண்ணு பாத்த, ஒருத்தி மாடிவீட்ல பொறந்து வீட்டுக்குள்ளேயே உள் வேலை பாத்தாளாம், இன்னொருத்தி டவுண்ல கத்தரிக்காய் வித்துப்புட்டு கண்ட பயலயும் பாத்து பல்ல இளிச்சுப்புட்டு , மத்தியான சோத்துக்கு இல்லாம ,மரவல்லிக்கிழங்கை அவிச்சி தின்னுப்புட்டு மரவல்லிக்கிழங்கு வேல பாத்தாளாம், எங்குடி இப்படி குட்டுச்சாரா போச்சே"

"இந்தப்பாருங்க என்ன இப்படி அசிங்கமா பேசறீங்க." இந்திராவும் , வசந்தாவும்.


"ஆமாண்டி பத்தினி செத்துக்கெடந்தாளாம் கொட்டுக்கூடை XXX எழவுக்கு வந்துச்சாம்."


தொடரும்....


25 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//சில மிகவும் ஆபாசமான சொற்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் //

இனிமேல் நாங்களும் இப்படி போட்டுக்கொள்ளலாமா தல..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//XXX//

எங்களுக்கு தெரியும்ல்ல..,

குடுகுடுப்பை said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//XXX//

எங்களுக்கு தெரியும்ல்ல..,//
நீங்க டாக்குட்டரு ஆச்சே:)

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்து நடை.கதையும், கதாபாத்திரங்களும் அருமை.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

முகிலன் said...

கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..

கீழச்சீமைன்னா எந்த ஊருன்னு சொல்லலியே?

நசரேயன் said...

அருமை ...

குடுகுடுப்பை said...

முகிலன் said...

கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..

கீழச்சீமைன்னா எந்த ஊருன்னு சொல்லலியே?
//

இனி கீழச்சீமை தேவைப்படாது, அதனால ஊருக்கும் பெரிய பங்கில்லை.

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

அருமை ...//

டெம்பிளேட்.

குடுகுடுப்பை said...

துபாய் ராஜா said...

இயல்பான எழுத்து நடை.கதையும், கதாபாத்திரங்களும் அருமை.

தொடருங்கள்.தொடர்கிறோம்.//

நன்றி.

அக்பர் said...

இயல்பான கிராமத்து வழக்கில் அழகான கதை.

எழுத்து நடை அருமை.

நீங்க மேல டிஸ்கி போடலைன்னா அந்த நெனப்பு கூட வந்திருக்காது.

நசரேயன் said...

//குடுகுடுப்பை said...

நசரேயன் said...

அருமை ...//

டெம்பிளேட்.
//

யோவ் .. நம்புயா உண்மையத்தான் சொன்னேன்..

நட்புடன் ஜமால் said...

interesting ...

(not template)

அது சரி said...

நல்லா இருக்கு தலீவரே...

//
"ஆமாண்டி பத்தினி செத்துக்கெடந்தாளாம் கொட்டுக்கூடை XXX எழவுக்கு வந்துச்சாம்."
//

ஆனா, எனக்கு இந்த XXX என்னன்னு தெரிஞ்சாகனும்....

சந்தனமுல்லை said...

ஆகா...என்ன..இப்படி ஒரே இடுகையிலே எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க...அவ்வ்வ்!

/"மூத்தவன் பள்ளிக்கூடம் போனதுனால பொண்ணு அமைஞ்சி போச்சு,/

நிஜமாவா...தூங்கறதுக்குதான் போனதா சொல்லியிருந்தீங்க...என்ன கொடும குடுகுடுப்பையார் இது?!!

சந்தனமுல்லை said...

ஹ்ம்ம்..மாமியார்-மருமகள் சண்டை ஆரம்பிச்சிடுச்சா...ஐயோ..யாராவது சீரியல் இயக்குநர் கண்லே பட்டா ..அவ்வ்வ்..பயமா இருக்கு! :-))

Vidhoosh said...

no template available

வானம்பாடிகள் said...

இதென்ன அநியாயம் நல்லாருக்குன்னா டெம்ப்ளேட்டா..இல்லாட்டி 2 வாட்டி சொல்ல வைக்கிற சதியா? :))..தொடரட்டும்

kudukuduppai said...

அனைவருக்கும் நன்றி.

முல்லை நீங்க பப்புகிட்ட டியூசன் படிக்கனும் மறதி அதிகமாயிடுச்சு உங்களுக்கு.

வில்லன் said...

//சந்திரனுக்குதான் நம்ம நாட்ல ஒருத்தனும் கொடுக்கலங்கிறான்//

அப்ப சந்திரனுக்கு சீமைல பொண்ணா????? அடிச்சுது யோகம்... எங்க அமெரிக்க வெள்ளையம்மாவா இல்ல லண்டன் வெள்ளையம்மாவா?

வில்லன் said...

//நசரேயன் said...


அருமை ...//
அதென்னையா எருமைய பத்தி பேசுறப்ப அருமைனு????????

ஊரோடு ஒத்து (XXX இல்ல) வாழ்........
குலம் தெரிஞ்சு சாமியாடவும்....

வில்லன் said...

/"என் மவ இவளுகளுக்கு வேல பாக்க முடியாது, அவளுகதான் அள்ளனும், யோவ் என்னய்யா பொண்ணு பாத்த, ஒருத்தி மாடிவீட்ல பொறந்து வீட்டுக்குள்ளேயே உள் வேலை பாத்தாளாம், இன்னொருத்தி டவுண்ல கத்தரிக்காய் வித்துப்புட்டு கண்ட பயலயும் பாத்து பல்ல இளிச்சுப்புட்டு , மத்தியான சோத்துக்கு இல்லாம ,மரவல்லிக்கிழங்கை அவிச்சி தின்னுப்புட்டு மரவல்லிக்கிழங்கு வேல பாத்தாளாம், எங்குடி இப்படி குட்டுச்சாரா போச்சே"//

கடைசில சாணிய அல்லுனான்களா இல்லையா??????? சப்ப மேட்டர் சாணிக்கு இதனை அலும்பா?????

Vidhoosh said...

தொடர் பதிவெழுத அழைக்கிறேன்.
சாலையோரம் - தொடர் இடுகை
http://vidhoosh.blogspot.com/2010/01/blog-post_22.html

சமயம் கிடைக்கும் போது பதிவிடுங்கள். இடாவிட்டாலும் பரவாயில்லை.
:)
வித்யா

SanjaiGandhi™ said...

XXX


இதை டிகோட் செய்யும் மென்பொருள் எங்க கெடைக்கும் சாமி? :)

ராஜ நடராஜன் said...

எழுத்தோட சரளத்துடன் வில்லனும் சிரிக்க வைக்கிறார்:)

முட்டா நைனா said...

சோக்கா கீதுபா... வாய்த்துக்கள்பா...