Friday, January 11, 2013

கொண்டியார(ன்)கள்ளி.(1)

முன்குறிப்பு: ஒரு சிறு தொடர் எழுதும் முயற்சி, தொடரில் வரும் கதாபாத்திரங்களில் சில மிகவும் ஆபாசமான சொற்களை பயன்படுத்தவேண்டிய அவசியம் இக்கதைக்கு உள்ளது. என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் பெண் வாசகர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம். இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.

இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் , கற்பனையே, ஆங்காங்கே கேட்ட/பார்த்த சொற்களை வைத்து ஒரு கற்பனைக்காவியம்(?).இக்காவியத்தில் திருப்பங்களெல்லாம் இருக்காது ஒரே நேராக செல்லும்.டைரக்டர் ஷண்முகப்பிரியன் சொன்னது போல் ரஷ்ய எழுத்தாளர்கள் திருப்பம் வைக்கமாட்டார்களாம் அது போலவே இருக்கும், ஏனென்றால் திருப்பம் வைத்தெல்லாம் எனக்கு எழுதத்தெரியாது. மற்றபடி எனக்கும் ரஷ்யாவிற்கும், மாஸ்கோவிற்கும் மன்னார்குடிக்கும் உள்ள சம்பந்தம் கூட கிடையாது.

கதாபாத்திரங்கள்: கொண்டியாரன், கொண்டியாரகள்ளி இவர்களின் நான்கு மகன்கள்(ரவி,சந்திரன்,பழனி,திருப்பதி) மற்றும் ஒரு மகள் மற்றும் அதனைச்சார்ந்த கதாபாத்திரங்கள்.

கொண்டியாரனும், கொண்டியாரகள்ளியும் ஜாடிக்கேத்த மூடி போன்ற வாழ்க்கைத்துணை, இருவருக்கும் பிறந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டுமே போதும் அவர்களின் பிணைப்பை உறுதிப்படுத்த. இவர்களின் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஒரு வயதுதான் வித்தியாசம். சொத்து சேர்ப்பதில் இருவரும் வல்லவர்கள், பணக்காரன் என்றும் சொல்லும் அளவிற்கு வசதியானவர்கள், தங்களுடைய உழைப்பை மட்டும் உரமாக்காமல், உச்சா, கக்கா கூட வயலிலேயே இட்டு உரமாக்கும் கெட்டிக்காரர்கள்.

மூத்தவன் ரவி கடுமையான பாட்டாளி, பத்தாவது வரை படித்துவிட்டு கொண்டியாரனுக்கு உதவியாக விவசாயம் செய்து வருகிறார்.நேர்மையானவர்/நல்லவர் என்ற பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கிறார், தனியாக தொழில் தொடங்கி முன்னேறவேண்டும் என்ற ஆசையுள்ளவர்.

இரண்டாமவன் சந்திரன் மிகக்கடுமையான பாட்டாளி, அவர்கள் வீட்டு உழவு மாடு, வண்டி மாடு இரண்டும் செய்யும் வேலைகளைவிட இவர் செய்யும் வேலை அதிகம், பள்ளிக்கூடத்தில் இரவில் படுத்து தூங்குவார், அதைத்தவிர வேறு காரணத்திற்கு பள்ளிக்கூடம் சென்றதில்லை.

மூன்றாமவர் பழனி துறுதுறுப்பான இளைஞர், கடுமையான பாட்டாளி, சற்றே குடிப்பழக்கமும் நிறைய சீட்டு ஆடும் பழக்கமும் உள்ள வாலிபர்.இவரும் பள்ளிக்கூடம் சென்றதில்லை, பகலில் வீட்டு வேலை இரவில் சீட்டாடும் இடத்தில் தூக்கம், அது கோவிலாகவோ,பள்ளிக்கூடமாகவோ,திருவிழாவாகவோ, கருமாதி வீடாகவோ இருக்கலாம்.

நான்காமவர் விடுகுட்டிப்பையன், வாத்தியார் திட்டுவார் என்று பயந்து மூன்றாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பனைமரம் ஏறி நொங்கு பறித்து உண்பது, விற்பது, ஓனான்,பாம்பு அடிப்பது, மீன் பிடிப்பது கூடுதலாக வயலுக்கு கஞ்சி கொண்டு செல்லுதல் , எருமை மாடு மேய்த்தலும் இவருடைய வேலை.

ஐந்தாமவர் பெண், இவர் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப்படவேயில்லை, இவரின் வேலை எருமை சாணி அள்ளுதல், கூட்டுதல், பாத்திரம் கழுவுதல், அனைவருக்கும் சமைத்தல் அண்ணன்களுக்கு பரிமாறுதல், தலை முடியை கருப்பாக வைத்திருக்க கரிசலாங்கன்னி முதல் அடுப்புக்கரி வரை அறைத்து தலையில் தேய்த்து குளித்தல் ஆகியன இவருடைய பிரதான பணி.

ஏங்க நம்ப சின்னப்பொண்ணே இருவது எருமை சாணிய அள்ள முடியுமா, பெரிய பயலுக்கும் , சந்திரனுக்கும் கல்யாணத்தை பண்ணிருவோம் குடும்பத்துக்கு ஒத்தாசையாவும் இருக்கும், அவங்களுக்கும் இருபது வயசு ஆயிருச்சு நல்ல வசதியான இடமா பாத்து பொண்ணு தெவச்சு வைங்க சீக்கிரம் இந்த தைக்குள்ள கல்யாணத்த முடிக்கனும்-- கொண்டியாரகள்ளி.

பெரியவனுக்கு நம்ம நாட்டுலேயே ஒரு பொண்ணு தெவஞ்சிருக்கு, சந்திரனுக்கு ஒன்னும் தெவய மாட்டேங்குது கீழச்சீமையிலதான் பாக்கனும். என் தங்கச்சி மவள பழனிக்குதான் குடுப்பேன்னு சொல்லிட்டாங்க, கீழச்சீமையிலேயே தான் போய் பாக்கனும்.

கீழச்சீமையிலேயே பாரு அவங்கதான் வீட்டுக்கு நூறு எருமை வச்சிருப்பாங்க, சாணி சலைக்காம அள்ளுவாளுவ, அவளுகதான நமக்கும் தேவலாம்.

தொடரும்


21 comments:

முகிலன் said...

கதை ஆரம்பமே அமர்க்களமா இருக்கு..

தல, இந்த வசனங்களை எல்லாம் Quotesக்குள்ள போட்ட படிக்க வசதியா இருக்கும்..

துபாய் ராஜா said...

தொடர் ஆரம்பமே அருமை.

வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

//இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர்//

அப்ப நான் படிக்க ௬டாது

நசரேயன் said...

தொடரட்டும்..

KarthigaVasudevan said...

//கீழச்சீமையிலேயே பாரு அவங்கதான் வீட்டுக்கு நூறு எருமை வச்சிருப்பாங்க, சாணி சலைக்காம அள்ளுவாளுவ, அவளுகதான நமக்கும் தேவலாம்.//

:))) அலுங்காம நலுங்காம சொல்றிங்க.கீழைச்சீமைன்னா எந்தெந்த ஊர்களோ?!

குடுகுடுப்பை said...

முகிலன் said...

கதை ஆரம்பமே அமர்க்களமா இருக்கு..

தல, இந்த வசனங்களை எல்லாம் Quotesக்குள்ள போட்ட படிக்க வசதியா இருக்கும்..
//
உங்கள் ஆலோசனை ஏற்கப்பட்டுள்ளது.

குடுகுடுப்பை said...

துபாய் ராஜா said...

தொடர் ஆரம்பமே அருமை.

வாழ்த்துக்கள்.//

நன்றி துபாய் அரசரே

கலகலப்ரியா said...

super... bad words na bracket la vilakkam poatta porum.. =))

வில்லன் said...

//கொண்டியாரன், கொண்டியாரகள்ளி//

எங்கயா புடிசீறு இந்த பேரெல்லாம்?????????????????கொண்டியாரன் சுண்டியான்னுட்டு

வில்லன் said...

//அவர்களின் பிணைப்பை உறுதிப்படுத்த. இவர்களின் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு ஒரு வயதுதான் வித்தியாசம். //

எப்படி????? அஞ்சு வருசத்துல ஆறு புள்ளயா????????????????????

வில்லன் said...

//இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.//

அட என்னவே மருந்துக்கு கூட ஒரு "அந்த மாதிரி" வார்த்தைய காணும்..... சும்மா ஈயாடுற கட நல்லா வியாபாரம் ஆகனும்னு இந்தமாதிரி ஒரு "பில்ட் அப்" ஆ

நசரேயன் said...

//வில்லன் said...

//இக்கதை ஆபாசமானதல்ல,இயல்பில் பேசப்படும்/பேசப்பட்ட வார்த்தைகளே அவைகள், இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் இப்படிப்பட்ட ஆபாச வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தயவு செய்து படிக்கவேண்டாம்.//

இது கேள்வி தலைவரே ..

அட என்னவே மருந்துக்கு கூட ஒரு "அந்த மாதிரி" வார்த்தைய காணும்..... சும்மா ஈயாடுற கட நல்லா வியாபாரம் ஆகனும்னு இந்தமாதிரி ஒரு "பில்ட் அப்" ஆ
//

நட்புடன் ஜமால் said...

தெவஞ்சிருக்கு]]


நெம்ப நாள் ஆச்சி இந்த வார்த்தைய கேட்டு/படிச்சி ...

---------------

அது இருக்கட்டும், அப்பறம் --- சரி விடுங்க அத ஏன் ...

சந்தனமுல்லை said...

நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள்! சீக்கிரம் இந்தக் கதைத்தொடர் 'கொண்டியார(ன்) கள்ளி இதிகாசத்' தொகுப்பாக வர வாழ்த்துகிறேன்.


சுவாரசியமாக் இருக்கிறது கதையும் வட்டார வழக்கும்! :-)

சந்தனமுல்லை said...

/நசரேயன் said...

//இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டோர்//

அப்ப நான் படிக்க ௬டாது/

எதுக்கு இந்த விளம்பரம்!! அவ்வ்வ்வ்! :-)))

Vidhoosh said...

கள்ளிக்காட்டு எருமைகளின் இதிகாசமோ.. இலக்கிய நடை எள்ளுகிறது - i mean - துள்ளுகிறது. தொடருங்க. :))

வானம்பாடிகள் said...

கலக்கல் ஆரம்பம்.:)

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி!

ராஜ நடராஜன் said...

வில்லன் உண்மை பேசறத முதல் தடவையா பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

தலைப்புல ஏதாவது வட்டார வழக்கு ஒளிஞ்சிருக்குதோ.அதனால இடுகை வயசுக்கு வந்துடுச்சா!!

ராஜ நடராஜன் said...

அய்!அப்பவும் நாந்தான் கடைசி,இப்பவும் நானே.